தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் : படப்பிடிப்பு பூஜைகள் தொடங்கியது!

தளபதி 64 படத்தில் விஜய்க்கு ஜோடியாகும் மாளவிகா மோகனன் : படப்பிடிப்பு பூஜைகள் தொடங்கியது!

‘தளபதி 64’ படத்தில் மலையாள நடிகை மாளவிகா மோகனன் இணைந்திருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த 2013ம் ஆண்டில் பட்டம் ரோல் என்ற மலையாள படத்தில் அறிமுகமானவர் நடிகை மாளவிகா மோகனன். 

இதனை தொடர்ந்து மலையாள படங்களில் நடித்து வந்த இவர் உலகப் புகழ்பெற்ற இயக்குநரான மஜித் மஜிதி இயக்கியிருந்த பியாண்ட் தி கிளவுட்ஸ் படத்தில் நடித்தார்.இதன் மூலம் மேலும் புகழ்பெற்ற இவர் பேட்ட படத்தில் ரஜினிகாந்துடன் நடித்திருந்தார். 

twitter

இந்நிலையில் தற்போது தளபதி 64 படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். 'பிகில்' படத்திற்குப் பிறகு விஜய் நடிக்க உள்ள அவருடைய 64வது படத்தை 'மாநகரம், கைதி' படங்களின் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார். 

திருமணத்திற்கு பின் ஆல்யா எப்படி இருக்கிறார் தெரியுமா! இன்ஸ்டாக்ராமை கலக்கும் ஆல்யா!

இப்படத்தின் அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் கடந்த சில தினங்களாக வெளியாகி வருகின்றன. முதலில் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக அறிவித்தார்கள். அவர் படத்தில் வில்லனா அல்லது மற்றொரு கதாநாயகனா என்பது குறித்த அறிவிப்பு வெளியாகவில்லை. 

இந்த நிலையில், மலையாள நடிகர் ஆண்டனி வர்கீஸ், சாந்தனு ஆகியோரும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக தொடர்ச்சியான அறிவிப்புகள் வந்தது. இந்த படத்திற்கு சத்யன் சூரியன் ஒளிப்பதிவு செய்ய அனிருத் இசையமைக்கிறார். இந்நிலையில் தற்போது நடிகை மாளவிகா மோகனன் தளபதி 64 படத்தில் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியானது.

 
 
 
View this post on Instagram
 
 

#thalapathy64🔥

A post shared by Malavika Mohanan (@malavikamohanan_) on

தளபதி 64 படத்தில் பாலிவுட் நடிகை கியாரா அத்வானி தான் ஹீரோயினாக நடிப்பதாக இருந்தது. முதலில் டேட்ஸை அட்ஜஸ்ட் செய்கிறேன் என்றவர் பின்னர் முடியாது என்று கூறிவிட்டார் என தகவல் வெளியாகியுள்ளது. விஜய் ஜோடியாக ஹிந்தி முன்னணி நடிகைகள் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்பட்டது.  

 

 

twitter

ஆனால் தமிழில் இதற்கு முன் ஒரே ஒரு படத்தில் சிறிய கதாபாத்திரத்தில் நடித்த ஒருவர் விஜய் ஜோடியாக நடிக்க உள்ளது முன்னணி நடிகைகள் பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. பேட்ட படத்தில் சசிகுமார் ஜோடியாக நடித்திருத்த இவர், அந்தப் படத்திலேயே ஒரு சில காட்சிகளில் தான் நடித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இந்நிலையில் தளபதி 64 படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியுள்ளது. பூஜையில் விஜய், விஜய் சேதுபதி, சாந்தனு பாக்யராஜ், நடிகை மாளவிகா மோகனன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படத்தை தயாரிப்பு நிறுவனம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. 

இரண்டாவது குழந்தைக்கு காத்திருக்கும் புன்னகை அரசி சினேகா : வளைகாப்பு புகைப்படங்கள்!

அந்த புகைப்படத்தை விஜய் ரசிகர்கள் அதிக அளவில் ஷேர் செய்து கொண்டிருக்கிறார்கள். தளபதி 64 படத்தில் விஜய்யும், விஜய் சேதுபதியும் இணைந்துள்ளதால் ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கிறார்கள்.விஜய்க்கு ஜோடியாக நடிக்க இருப்பதால் மாளவிகா மகிழ்ச்சியில் திளைத்துக்கொண்டிருக்கிறார். 

 

 

instagram

தளபதி 64 படத்தில் விஜய்யுடன் இணைந்து நடிப்பது மிகுந்த உற்சாகம் அளிப்பதாகவும், படத்தின் இயக்குநர் லோகஷ் கனகராஜுக்கு நன்றி தெரிவித்தும் தனது சமூக வலைதளப்பக்கத்தில் மாளவிகா மோகனன் தெரிவித்துள்ளார்.

இருபது வயதிலேயே திருமணம் - நீலிமா ராணியின் வெளிவராத குடும்ப புகைப்படங்கள் உங்களுக்காக !

முன்னதாக தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் புகைப்படத்தை வெளியிட்டிருந்த மாளவிகா மோகன் உடுத்தியிருந்த உடையை சிலர் விமர்சித்திருந்தனர். அதில் இதுபோன்ற ஆடையை அணிவதற்கு நீங்கள் ஆடை எதுவும் அணியாமல் இருக்கலாம் என்று நெட்டிசன்கள் கூறி இருந்தனர். 

இதனையடுத்து விமர்சனம் செய்வோருக்கு பதிலளிக்கும் விதமாக அதேபோன்ற மற்றொரு புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். மேலும் தனது பதிவில் ஒரு பெண் எப்படி ஆடை அணிய வேண்டும் என்று நிறைய அட்வைஸ்கள் வந்து கொண்டிருக்கின்றன. எனக்கு பிடித்த உடையை நான் அணிந்துள்ளேன் என்று கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது.  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!