Dad

லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபிக்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

Deepa Lakshmi  |  Jul 4, 2019
லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! அசத்தலான செல்ஃபிக்கான சில கேப்ஷன்கள் மற்றும் மேற்கோள்கள்!

இது டிஜிட்டல் யுகம். இங்கே எல்லாமே மாறியிருக்கிறது. முன்பெல்லாம் உணர்வுகளை மற்றவரிடம் கடத்த நாம் எழுத்து முறையை கையாண்டோம். கடிதங்கள் எழுதினோம். அது சென்று சேரும்வரை காத்திருந்தோம். அதன் பின்னர் பதில் வந்து நம்மிடம் கிடைக்கும்வரை நமது உணர்வுகள் சரியான முறையில் புரிந்து கொள்ளப்படுமா என பதட்டத்துடன் காத்திருந்தோம். 

இதற்கு ஒரு மிகப் பெரிய காலம் தேவைப்பட்டது. அதன் பின்னர் ஈமெயில்கள் வந்தது. அங்கும் எழுத்துக்கள் ஆதிக்கம் செய்தன. ஆனால் மிக குறுகிய காலத்திற்குள் தகவல்கள் சென்றடைந்து பதில்கள் கிடைத்தன. எப்போதும் இன்ஸ்டன்ட் பதில்களை எதிர்பார்க்கும் ஒரு அவசர யுகத்தில் வாழ்ந்து வந்த நமக்கு அதைவிடவும் சுலபமாக குறுஞ்செய்திகள் வாட்ஸ் அப் போன்றவை கிடைக்கவே அதனைப் பயன்படுத்தினோம். 

இப்போதெல்லாம் இன்ஸ்டன்டில் உள்ள பாதியான இன்ஸ்டாவில் தான் இன்றைய தலைமுறைகள் இருக்கின்றனர். எதனையும் சொல்ல மொழி ஒரு அவசியம் இல்லை காட்சி மட்டுமே போதும் என்கின்றனர். இதுவும் ஒருவகையில் நன்மைதான். ஏனென்றால் மொழி என்பது குறிப்பிட்ட ஒரு சமூகத்திற்கு மட்டுமே ஆனது. ஆனால் காட்சிப்படுத்துதல் என்பது எல்லா மொழியினருக்கும் புரிகிற ஒன்று. 

உலகின் இண்டு இடுக்குகளில் புகுந்து புறப்பட்டு பயணித்துக் கொண்டிருக்கிறது நட்பு. ஆகவே எந்த மொழி பேசுபவருக்கும் புரியும் வகையில் இப்போதெல்லாம் செல்ஃபி மொழி (selfie langugae) உருவாகி இருக்கிறது. நாம் சந்தோஷமாக இருக்கிறோம் , சோகமாக இருக்கிறோம், தனிமையாக இருக்கிறோம் , குழுவோடு இருக்கிறோம் என்பதை வெளிக்காட்ட இந்த செல்ஃபி மொழி உதவுகிறது.

என்னதான் மொழியின் உதவி இல்லாமல் செல்ஃபி எடுத்து போட்டாலும் அதற்கான கேப்ஷன் என்பது இப்போதைய இளைஞர்களுக்கு மிகவும் சவாலான செயல். உங்கள் அம்மாவோடு எடுக்கும் செல்ஃபிக்கு என்ன பெயர்  சூட்ட வேண்டும் நண்பிகளோடு இருக்கும் சமயம் என்ன பெயர் சூட்ட வேண்டும் என்பதை நீங்கள் உடனடியாக யோசித்து விட முடியாது. அதற்கான சிறிய ஐடியா பகிர்தலே இந்த செல்ஃபி கேப்ஷன் (selfie caption) கட்டுரை.  

லாஸ்லியா மற்றும் திவ்யா – ஆறு வித்யாசங்கள் !

youtube

எப்படி செல்ஃபி எடுப்பது

செல்ஃபி எடுப்பதெற்கெல்லாமா க்ளாஸ் எடுப்பீர்கள் என்று நீங்கள் வியக்கலாம். அப்படி அல்ல. ஆனால் செல்பி எடுப்பது என்பதும் ஒருவிதமான கலைதான். அவரவர் எண்ணங்களுக்கேற்ப அதன் வடிவங்கள் மாறுபடும். ஆனாலும் சில அடிப்படை விஷயங்களை அறிந்து கொண்டால் உங்கள் செல்ஃபிக்களுக்கு புது அர்த்தம் தர முடியும். அதற்கான விளக்கம்தான் தர போகிறேன்.

பின்னணி

பின்னணி எப்போதும் முக்கியமானது. நமது சரித்திரத்துக்கு மட்டுமல்ல.. செல்ஃபிகளுக்கும் பின்னணி என்பது மிக முக்கியமானது. எதை பின்னணியில் உங்கள் செல்ஃபி இருந்தால் நன்றாக இருக்கும் என்பதை யோசித்து முடிவு செய்யுங்கள். 

உங்கள் பார்வையாளர்கள் யார்

அது உங்கள் செல்ஃபிதான். உங்களுக்கு விருப்பனமான புகைப்படத்தை எடுத்து போடப்போகிறீர்கள்தான். ஆனாலும் உங்கள் பார்வையாளர்கள் யார் என்பதை பொறுத்து உங்கள் புகைப்படம் எடுக்கும் தன்மை மாறுபடலாம். அவர்கள் விரும்புவதை நீங்கள் வழங்குவது உங்கள் விருப்பமே

எமோஜிக்கள்

ஸ்மைலிக்கள் ஹார்டின்கள் போன்ற எமோஜிக்களை சரியான இடங்களில் நீங்கள் பொருத்தும்போது உங்கள் செல்ஃபியின் தரம் உயர்கிறது. மற்றவரின் கவனத்தை ஈர்த்து உடனடியாக பார்க்க வைக்கிறது.

மேற்கோள்கள்

நாம் எடுக்கும் செல்ஃபிக்கு ஏற்ப நீங்கள் சரியான மேற்கோள்களை காட்டினால் அது நீங்கள் சொல்ல வந்ததை இன்னும் தெளிவாக்கும். மேற்கோள்கள் என்பது எத்தனையோ பேரின் வாழ்க்கைத்தரத்தையே மாற்றி அமைக்கிறது. சரியான மேற்கோள் கொண்ட செல்ஃபி நீண்ட நாள் விருப்பக்குறிகளை பெற்றபடி இருக்கும். 

தலைப்பு (Captions)

மக்கள் எப்போதுமே கொஞ்சம் தகவல்கள் வேண்டும் என்கிற மனநிலை கொண்டவர்கள். உங்கள் செல்ஃபிக்கு மேல் சரியான தலைப்பை சில தகவல்களுடன் கொடுத்தால் அவர்கள் மகிழ்வார்கள். 

பிரேமுக்குள் அர்த்தம்

நீங்கள் எடுக்கும் பிரேம் அர்த்தம் நிறைந்ததாக இருந்தால் அதை விட சிறந்த செல்ஃபி வேறு எதுவுமே இல்லை. இப்படிப்பட்ட செல்ஃபிக்கு தலைப்போ மேற்கோளோ எதுவுமே தேவைப்படாது. அவர்களே புரிந்து கொண்டு வியப்பார்கள்.

அவசியமான தலைப்பு

மற்றவருக்கு தேவையான தகவல்களை போரடிக்காமல் கொடுக்க வேண்டும். அதே சமயம் அது க்ரிஸ்பியாக இருந்தால் சென்று சேரும் என்பதால் அப்படி தேர்ந்தெடுங்கள். சில சமயம் கதை சொல்லும் செல்ஃபி என்றால் அதற்கான கதையை சுருக்கமாக குறிப்பிடலாம். அந்த செல்ஃபி எடுக்கும் முன்னர் என்ன நடந்தது என்பது கூட சுவாரஸ்யமான தகவல்தான்.

Twitter

சரியான கேப்ஷன் போடுவதற்கான சில டிப்ஸ்

நல்ல செல்ஃபிக்கள் என்பது நாம் பேசாமலே மற்றவர்களை பேச வைக்கும் ஒன்று. அதனையும் தாண்டி நீங்கள் அதன் மூலம் என்ன சொல்ல வருகிறீர்கள் என்பதை நீங்கள் குறிப்பிட்டால் ஒரு செல்ஃபிக்கான அர்த்தம் உங்கள் மனதை நிறைக்கும். ஆகவே முடிந்த வரை குறுகிய வார்த்தைகள் அழகிய அர்த்தங்கள் என எழுதுவது சிறந்தது. மற்றவர் மனதை மலர வைத்தால் நீங்கள் வெற்றி பெற்றவர் என்பது அர்த்தம்

” காலேஜ் டேஸ் : கல்லூரிக்கு செல்வோருக்கு
தேவையான 6 சிறந்த ட்ரெண்டி பைகள் “

twitter

உங்கள் ஆத்ம தோழமையுடன் எடுக்கும்போது (BFF)

1. நண்பர்கள் பிறக்கிறார்கள் உருவாவது இல்லை 

2. உண்மையான தோழமை மிகப்பெரிய ஆசிர்வாதம் 

3. உன்னோடு இருக்கும்போதெல்லாம் நான் மகிழ்வாக இருக்கிறேன் 

4. சந்தோஷமா இருக்கும்போது ஒரு செல்ஃபி கூட இல்லைன்னா எப்படி 

5. பழைய தோழியை சந்திப்பதும் எங்களுக்குள் எதுவும் மாறவில்லை என்பதும் எத்தனை சந்தோஷமானது.

6. என்  வாழ்க்கை நட்பால் ஆனது 

7. எப்போதும் என்னோடிருக்கும் என் உயிர் நீதான் 

8. வாழ்க்கை மிகவும் சிறியது 

9. நாங்கள் ஒருவரை ஒருவர் விடாமல் நேசிப்பவர்கள்

டீனேஜ் பெண்களுக்கான வித்தியாச ஹேர்ஸ்டைல்கள் ! திரும்பி பார்க்க வைக்கும் அழகை பெறுங்கள் !

youtube

உங்கள் ஆண் நண்பனுடன் எடுக்கும்போது (Boyfriend)

1. என்னுடைய சரிபாதி நீதான் 


2. நிலவுக்கு சென்று திரும்பியபோது 


3. நீ மற்றும் நான் = காதல் 


4. என் பாதைகளின் வரைபடம் உன்னிடம்தான் 


5. நமக்கான பொழுதுகள் நலமாகும் உன்னால் 


6. பிரியாத வரம் வேண்டும் 


7.வேர்கள் ஆழமாக இருந்தால் காற்றைப் பற்றி கவலைப்பட வேண்டியதில்லை 


8.வித்யாசமாக இருப்பதென்பது தவறானது என்று அர்த்தம் அல்ல 


9. நீ என் வாழ்நாளை அதிகமாக்க வந்த தேவதூதன் 


10.நாம் இருவர்.. நமக்குள் ஒருவர் 

 

instagram

குடும்பத்துடனான செல்ஃபிக்களுக்கு

1. என் குடும்பம் என் பெருமை 


2. என்ன நடந்தாலும் என்னோடு ஒரு குடும்பம் இருக்கிறது 

3. என்னோடு விளையாடுவதில் பங்கெடுக்கும் குடும்பம் என்னோடு கடைசி வரைக்கும் நிலையாக இருக்கும் 

4. சந்தோஷம் தேடி அதிகம் பயணிக்க வேண்டிய அவசியம் எனக்கில்லை. என் குடும்பம் அதனை தருகிறது. 

5. ஆண்கள் மீதான நம்பிக்கைக்கு காரணம் என் அப்பா 

6. என்னை பற்றியே யோசிக்கும் என் பெற்றோர் எனது மிகப்பெரிய பலம் 

7. உள்ளத்தில் விஷம் வைத்து வெளியே கொஞ்சி பேச தெரியாத ஒரே உறவு பெற்றோர் 

8. கோபத்திற்கு பின்னால் இருக்கும் அன்பை உணர்வது குடும்பத்தை புரிய வைக்கும் 

9. உங்களை சுமந்தவர்களை நீங்கள் சுமப்பதே மரியாதை 

10. எப்போதும் என் குடும்பம் எனக்காக காத்திருக்கிறது.

instagram

திரைப்பட பாடல்களில் செல்ஃபி கேப்ஷன்

1. லெட்ஸ் டேக் எ செல்ஃபி புள்ள ! 


2. உனக்கென நான் எனக்கென நீ நினைக்கையில் இனிக்குதே 


3. நீயும் நானும் சேர்ந்தே செல்லும் நேரமே 


4. உன்னோடு வாழாத வாழ்வென்ன வாழ்வு என் உள்நெஞ்சம் கேட்கின்றதே


5. காதலே காதலே தனிப்பெரும் துணையே.. கூட வா கூட வா போதும் போதும் 


6. ஒரு நாளைக்குள் எத்தனை கனவு 


7. ஒளியிலே தெரிவது தேவதையா 


8 .பிறை தேடும் இரவிலே உயிரே எதை தேடி அலைகிறாய் 


9. என் பிரெண்ட போல யாரு மச்சான் 


10. யாரும் இன்றி யாரும் இங்கில்லை.. இந்த உலகில் தன்னந்தனி உயிர்கள் எங்குமில்லை 

youtube

வேடிக்கையான செல்ஃபி கேப்ஷன்ஸ்

1. தினம் ஒரு செல்ஃபி.. உடல் நலத்துக்கு குல்ஃபி..

2. நான் ஒரு இடியட் பட் இதான் என் கேரக்டர் 

3. காதலை விடுங்க.. அத விட சாக்லேட் மேல இருக்கற லவ் வேற லெவல் லவ்..

4. டியர் கடவுளே.. உங்க சாஃப்ட்வேர்ல ஒரு பக் இருக்கு.. அதுக்கு பேரு மண்டே !

5. நான் சோம்பேறில்லாம் இல்லப்பா .. சும்மா இருக்கறவங்கள ஊக்கப்படுத்தறவ அவ்ளோதான் !

6. உங்க கூட போட்டோ எடுத்துக்கலாமா.. எனக்கு பேரிடர்களோட போட்டோ எடுக்க ரொம்ப பிடிக்கும் !

7. எச்சரிக்கை இது தேவதைகள் உருவாகும் இடம் !

instagram

க்யூட் செல்ஃபி கேப்ஷன்ஸ்

1. பிடிச்சவங்க கிட்ட கோபப்பட்டா கடைசில கண்ணீர்தான் நிக்குது 


2. தயவு பண்ணி உன் மூடுக்கு ஏத்தாப்ல லவ் பண்ணாத.


3. ஒரு பெண் தன்னை பற்றி பேசாமலே புரிந்து கொள்பவன் கிடைத்தால் அவள்தான் அதிர்ஷ்டசாலி.


4. ஒரு பொண்ணு ஒருத்தனுக்காக அழறான்னா.. அது லவ்னால இல்லை.. அவனோட அவ  வாழ ஆரம்பிச்சுட்டானு அர்த்தம் 


5. நேற்றிலிருந்து கற்றுக் கொள் இன்றைக்கு வாழ்ந்து விடு நாளைக்கான நம்பிக்கை பிறக்கும் 


6. காற்றோடு கலந்த வாசனை போல உன்னோடான என் நேசம் பிரிக்க முடியாதது 


7. பாசம் தேடி அலைவதால் பாதி வாழ்க்கை தொலைகிறது பாசம் வைத்து அழுவதில் மீதி வாழ்க்கை முடிகிறது 

instagram

உங்கள் டிபிக்கான செல்ஃபி வார்த்தைகள்

1. தன்னை புகைப்படம் எடுக்க யாருமற்ற நிலையே செல்ஃபி என்று அழைக்கப்படுகிறது 


2. எப்போதும் என் சூரியன் மறைவதில்லை 


3. பேரழகாய் இருப்பது குற்றம் என்றால் என்னை கைது செய்யுங்கள் 


4. ஏமாற்றங்கள் என் வானில் நட்சத்திரங்களாக மின்னுகின்றன 


5. ஏமாற்றுபவர்கள் புன்னகைக்கின்றனர். ஏமாறுபவர்கள் இறந்து கொண்டே வாழ்கின்றனர்.


6. உனக்காக யாருமில்லை என்பதை விடவும் யாருக்கும் நீ பாரமில்லை என்பதில் மகிழ்ந்திரு 


7. என்னை தவிர்ப்பதில் மகிழ்கிறாய் நீ உன் பிரிவை நினைத்து தவிக்கிறேன் நான் 

instagram

அளவான கேப்ஷன் வேண்டுபவருக்கு

1. எளிமையாக இரு ஆனால் அர்த்தமுடையவனாக இரு 


2. உன் தகுதியை நீ உணர்ந்து விட்டால் விலகுவதால் உனக்கு வலி இருக்காது.


3. மறக்க தவிக்கும் நீ.. மறக்க முடியாமல் நான்.


4. நேர்த்தியாக இருப்பதுதான் நிலையான அழகு 


5. தொலைதூரம் தொலைவதில் என்னை கண்டடைகிறேன்.


6. மலிவான எதுவும் மதிப்பானதல்ல.. இலவசமாக அன்பு செய்தாலும் அப்படித்தான் 


7. நீ என்னை நேசிக்க மறந்தது எனக்கு பிரச்னையில்லை.. நான் இன்னும் உன்னை நேசிப்பதுதான் என் பிரச்னை 

instagram

கண்ணாடி செல்ஃபி வார்த்தைகள்

1. முகமூடி அணிகின்ற உலகிது உன் முகமென்று ஒன்றிங்கு என்னது 


2. எனக்கு நீ உனக்கு நான் அவ்வளவுதான் நம் வாழ்க்கை 


3. என்னை பற்றி உனக்கு தெரியும் அளவிற்கு கூட வேறுயாருக்கும் தெரிவதில்லை 


4. என் பிம்பம் நீ காட்டுகிறாய்.. உன் நிஜத்தை நான் பிரதிபலிக்கிறேன்..


5. நான் நானாக இருக்க விரும்புகிறேன் 


6. எது நீ எது நான்.. பிம்பங்களில் மயங்குகிறேன் நான்.


7. அழகு கண்களை ஈர்க்கலாம் ஆனால் குணம்தான் நெஞ்சத்தை ஈர்க்க முடியும்.

instagram

வித்யாசமான செல்ஃபி கேப்ஷன்கள்

1. நாம் நாமாக இருப்போம் 


2. நல்லதில் கவனம் வையுங்கள் 


3. தெரபியை விட மலிவானது ஐஸ்க்ரீம் 


4. சாதாரண நாளை சிறப்பாக்குங்கள் 


5. சிண்ட்ரெல்லா எப்போதும் ராஜகுமாரனை தேடி ஏங்கவில்லை 


6. என்னில் சிறந்தது இனிமேல்தான் வெளிப்படும் 


7. உடைந்த உங்கள் பாகங்களில் இருந்து அமைதியை பெறுங்கள் 


8. சொர்க்கத்தில் ஒரு செல்ஃபி 


9. ஒரு வருடத்தில் இத்தனை மாற்றங்களா 


10. கொஞ்சம் கொஞ்சமாக மாறி கொண்டிருக்கிறேன் 

instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Dad