Dad

உங்கள் செல்ல மகளுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசனையா! இந்தப் பொருட்கள் அவர்களுக்கானவை!

Deepa Lakshmi  |  Aug 20, 2019
உங்கள் செல்ல மகளுக்கு என்ன பரிசளிக்கலாம் என்று யோசனையா! இந்தப் பொருட்கள் அவர்களுக்கானவை!

உறவுகளில் சிறந்த உறவு என்கிற கேள்விக்கே இடம் இல்லாமல் ஒரு சிறப்பான உறவு முறைக்குள் வருவது மகள் எனும் உறவு முறைதான். மகள் எனும் போது உங்கள் பொறுப்புகள் கூடுகின்றன. அவள் வளர வளர உங்கள் சந்தோஷங்கள் அதிகரிக்கின்றன. 


சிறு இளவரசியாக உங்கள் சாம்ராஜ்யத்தில் வளர்ந்து வரும் அவளுக்கு என்ன பரிசுகள் அளித்தால் நன்றாக இருக்கும் என்கிற யோசனை வரலாம். அடிக்கடி அவளது திறமைகளை பாராட்டி ஊக்குவிப்பது பெற்றோராகிய உங்கள் கடமை. என்ன வாங்கினால் அவளுக்கு உபயோகமாக இருக்கும் என நீங்கள் யோசிக்கலாம். அதற்கான சில பரிசு பொருள்களை இப்போது பார்க்கலாம். 

Youtube

மகள்கள் தினத்திற்கான பரிசுப்பொருள்கள்

மகள்கள் தினம் (daughters day) என்பது பெண்ணைப் பெற்றவர்களுக்கு சிறந்த தினம். தன்னுடைய செல்ல மகளுக்கு என்ன மாதிரியான பரிசுகளை தந்தால் அவர்கள் மகிழ்வார்கள் என்பது பலருக்கு புரியாத புதிராக இருக்கும். அவர்களுக்காகவே சில ஸ்பெஷல் பரிசு பொருள்கள் 

Also Read : உங்கள் காதலனுக்கான பரிசு யோசனைகள்

pixabay

கிரீட்டிங் கார்ட்

முதலில் உங்கள் மகளுக்கு என்ன விதமான பரிசுகளைக் கொடுத்தாலும் அதனுடன் ஒரு கிரீட்டிங் கார்ட் வைப்பதை வழக்கமாக வைத்துக் கொள்ளுங்கள். அது உங்கள் மகளுக்கு நீங்கள் அவள் மேல் எவ்வளவு பிரியமாக இருக்கிறீர்கள் என்பதை தெளிவாக உணர்த்தும். 

சாக்லேட்

உங்கள் மகள்தான் கடவுள் உங்களுக்கு கொடுத்த ஆக சிறந்த பரிசு. ஆகவே அவர்களைக் கொண்டாடுவதும் பாராட்டுவதும் அவசியம் ஆகும், மகள்கள் தினத்தன்று உங்கள் மகளுக்குப் பிடித்தமான சாக்லேட் கொடுத்து அசத்துங்கள். சாக்லேட்டுகளைப் போலவே உங்கள் உறவும் இனிமையாக தொடரும்.

காஸ்மெட்டிக் ஸ்டாண்ட்

உங்கள் மகள் பதின் பருவ வயதை அடைந்திருந்தால் மகள்கள் தினத்தன்று நீங்கள் அவளுக்கு இந்த காஸ்மெட்டிக் ஸ்டாண்ட் பரிசாகக் கொடுக்கலாம். அது அவருக்கு உபயோகமாக இருக்கும். பல்வேறு விதமான அழகுப் பொருள்களை அங்குமிங்கும் சிதற விடாமல் ஒரே இடத்தில் வைத்துப் பயன்படுத்தும் ஒழுங்குமுறை அவர்களுக்கு வசப்படும்.

ஸ்பா கிப்ட்

படிப்பு நண்பர்கள் என பல்வேறு விஷயங்களில் உங்கள் மகள் ஈடுபட்டிருக்கும் சமயம் அவர்களை ரிலாக்ஸ் செய்ய நீங்கள் அவர்களுக்கு ஸ்பா கிப்ட் கூப்பன் ஒன்றை பரிசளியுங்கள். நிச்சயம் அவர்களுக்கு அது தேவைப்படுகிற ஒன்றுதான். அவர்களை மனநிம்மதியுடன் வைத்திருப்பதும் உங்கள் கடமைகளில் ஒன்றுதான் இல்லையா !

ஷூக்கள்

உங்கள் செல்ல குழந்தைக்கு வயது ஐந்து அல்லது ஆறு என்றால் அவளுக்கு நீங்கள் இந்த வித்யாசமான ஷூக்களை பரிசாகக் கொடுங்கள். வண்ணமயமாக இருக்கும் இந்த ஷூக்கள் அவள் வாழ்வின் பாதையிலும் அதே வண்ணங்களைத் துவட்டும்.

கிப்ட் ஹாம்பர்

உங்கள் மகள் உங்களை அன்றாடம் நினைவு கூறும் வகையில் ஒரு பரிசினை அளிப்பது என்பது உங்கள் அறிவினை அகலப்படுத்துவதோடு உங்கள் மீதான உங்கள் மகளின் பாசமும் மேம்படுகிறது. ஆகவே அமேசானின் இந்த கிப்ட் ஹாம்பர் அதற்கு உதவுகிறது. தலையணை, காஃபி கப் மற்றும் கீ செயின் கூடவே ஒரு கிரீட்டிங் உங்கள் மகள் உங்களுக்கு ஸ்பெஷலானவர் என்பதை அவருக்கு உணர்த்தும்.

படிப்புக்கான உதவி

உங்கள் மகளுக்கு சமூகப் பொறுப்புகளை சொல்லித் தர வேண்டிய வயது வந்து விட்டது என்று நீங்கள் நினைத்தால் அவர் பெயரில் ஒரு குழந்தையின் படிப்புக்கான உதவியை செய்யுங்கள். ஹைதராபாத்தில் உள்ள ஒரு NGO நிறுவனம் இதற்கான விஷயங்களை முன்னெடுக்கிறது. 

உங்கள் மகள் பெயரில் நீங்கள் அனுப்பும் தொகை எந்த சிறுமியின் படிப்புக்கு உதவுகிறதா அதே சிறுமி தனது கைப்பட எழுதிய அல்லது உருவாக்கிய பரிசு ஒன்று உங்கள் மகளை வந்தடையும். இதுதான் உங்கள் மகளுக்கு நீங்கள் தரும் உலகின் மிக முக்கியமான பரிசாக இருக்க முடியும்

புத்தகம்

உங்கள் செல்ல மகளுக்காக நீங்கள் நிச்சயம் தர வேண்டிய பரிசுகளில் ஒன்றுதான் புத்தகம். உங்களை மாற்றிய புத்தகங்களை உங்கள் மகளுக்குத் தேவையான புத்தகங்களை நீங்கள் அவருக்குப் பரிசாக வழங்குங்கள். நம்மால் சொல்லித் தர முடியாததை புத்தகங்கள் சொல்லிக் கொடுக்கும். 

டெடி

உங்கள் மகளுக்கு இந்த டெடியைத் தவிர சிறந்த பரிசு எதையும் கொடுத்து விட முடியாது. அவர்களை சந்தோஷத்தின் உச்சிக்கு கொண்டு செல்வதை யாராலும் தடுக்கவே முடியாது. அந்த அளவிற்கு வயது வித்யாசம் பாராமல் மகள்கள் ஒவ்வொருவருக்கும் இந்த டெடி பொம்மைகள் மீது தீராப்ரியம் கொண்டுள்ளார்கள்.

அம்மாக்கள் தங்கள் மகள்களுக்குத் தரவேண்டிய அன்பு பரிசுகள்

அம்மா மகள் உறவென்பது காலம் காலமாக இருந்து வரும் உறவு. இதன் வலிமை என்ன என்பது சங்க காலம் தொடங்கி இந்தக் காலம் வரைக்கும் நாம் பார்த்துக் கொண்டேதான் வருகிறோம். அம்மாவுக்கும் மகளுக்குமான உறவு என்பது மிகவும் நெருக்கம் வாய்ந்த ஒன்று. அவளது உடல் மாற்றம் முதல் எல்லாவற்றையும் கவனித்து அவளுக்கு பாதுகாவலனாக மாறுபவள் அம்மா. அம்மாவின் அன்பு பரிசு எப்படிப்பட்டதாக இருக்கலாம் என்று பார்க்கலாம். 

அலங்கார பர்ஸ்

 

பெண்ணாகிய அம்மாவிற்குத்தான் இன்னொரு பெண்ணாகிய மகளின் உணர்வுகள் நன்றாக புரியும். ஆகவே தனக்கு எவையெல்லாம் பிடிக்குமே பயப்படாமல் அவைகளை மகளுக்கும் பரிசளிக்கலாம். அலங்கார வடிவமைப்பு கொண்ட ஒரு பர்ஸ் உங்கள் மகளது ஷாப்பிங் நேரங்களை பெருமைப்படுத்தும்.

கண்ணாடி

கண்ணாடி பார்க்கப் பிடிக்காத பெண்கள் இருக்க முடியுமா? உங்கள் மகளுக்கு வித்யாசமான கண்ணாடி ஒன்றை பரிசளியுங்கள். பார்ப்பதற்கு போட்டோ ஸ்டாண்ட் போல இருந்தாலும் ஒரு பட்டனை அழுத்தினால் உங்கள் மகளின் நிஜ பிம்பம் தெரியும் வண்ணம் இதில் கண்ணாடி அமைக்கப்பட்டிருக்கிறது. நிச்சயம் உங்கள் மகளுக்கு இது பிடிக்கும்.

பிரேஸ்லெட்

உங்கள் மகளுக்கு என்ன பிடிக்கும் என்பது உங்களை விட வேறு யாருக்கு அதிகமாக தெரிந்து விடப் போகிறது. உங்கள் மகள் தன்னை அலங்கரித்துக் கொள்ள வாகாக இந்த பலவண்ணம் கொண்ட பீட்ஸ் பிரேஸ்லெட் பரிசளியுங்கள். 

பட்டாம்பூச்சி தோடு

உங்கள் மகளின் சுட்டித்தனத்தை நீங்கள் ரசிக்கிறீர்கள் என்பதைக் காட்ட அவர்களுக்கு அழகிய பட்டாம்பூச்சி தோடுகளை பரிசளிக்கலாம். பட்டாம்பூச்சி பிடிக்காத பெண் இந்த உலகில் இருக்கவே முடியாது.

அழகு பொருள்கள்

உங்கள் மகளுக்கு நீங்கள் தர வேண்டிய பரிசுகளில் ஒன்றுதான் இந்த கிப்ட் ஹாம்பர். உங்கள் மகளுக்கு பிடித்த பிங்க் நிறத்திலான பல அவசியமான அழகு பொருள்கள் இதில் இருக்கின்றன. பார்த்த உடனே உங்களை தேடி வந்து கட்டி அணைத்து முத்தமிடும் வண்ணம் இந்த கிப்ட் உங்கள் மகளை கொள்ளை கொள்ளும்.

ஜூவல்லரி

உங்கள் மகளுக்கு ஜூவல்லரி பரிசுகளை அறிமுகப்படுத்த வேண்டியது உங்கள் கடைமைதான் இல்லையா. அதனை இந்த மாதிரியான கிப்ட் கூப்பன்களை கொடுப்பதில் இருந்து ஆரம்பியுங்கள். தங்களுடைய சொந்த சேமிப்பு பணத்தை அவர்கள் நகைகளில் முதலீடு செய்ய நீங்கள் அறிவுறுத்த இதுவே நல்ல தருணம்.

வளையல்

உங்கள் மகளின் வளைக்கரங்களுக்கு விலை மதிப்பில்லாத அழகு இருக்கிறது என்பதை அவர்களுக்கு எடுத்துரைக்க இந்த வகையான வளையல்களை அவர்களுக்கு பரிசளியுங்கள். பாரம்பரியத்தின் வேர்களைக் காப்பாற்ற வேண்டியதும் அம்மாவாகிய உங்கள் பொறுப்புதான் என்பதை உணருங்கள்.

புத்தகங்கள்

வாழ்கைக்குத் தேவையான அடிப்படை விஷயங்களை நீங்கள் வாய் வார்த்தையாக எல்லாம் கற்றுத் தர முடியாது. அவர்களை புத்தகம் படிக்கப் பழக்குவது ஒரு அம்மாவாகிய உங்களுக்கு முக்கியமான கடமையாகும்.  புத்தகங்கள் ஒருவரை அற்புதமானவராக மாற்றக் கூடியவை. உங்கள் மகளுக்கு வாழ்க்கைக்கு தேவையான அறத்தினை கற்றுக் கொடுங்கள்.

பழங்கால பரிசுகள்

பழங்கால பொருள்களின் மகிமையை உங்கள் மகள்களுக்கு உணர்த்த இது போன்ற ஆன்ட்டிக் பொருள்களை பரிசாகக் கொடுக்கலாம். அவர்கள் வாழும் காலம் வரை உங்களை எப்போதும் நினைத்துக் கொண்டிருக்கும் வண்ணம் இந்தப் பழங்கால பரிசுகள் அமையும்.

லெட்டர் பாக்ஸ் கிப்ட்

உங்களுக்கும் உங்கள் மகளுக்குமான நெருக்கத்தை நீங்கள் அதிகரிக்க நினைத்தால் இந்த லெட்டர் பாக்ஸ் கிப்ட்டை உங்கள் மகளுக்கு கொடுங்கள். அதன் பின்னர் உங்கள் இருவருக்கும் இடையே எந்த ரகசியமும் இல்லாமல் வெளிப்படையான ஒரு உறவாக இது மாறி விடும். 

மகள்களைப் பெற்ற அப்பாக்களுக்காக !

தந்தை மகள் இடையேயான உறவு என்பது எப்போதுமே கொண்டாடப்படுகிற ஒரு உறவு. அம்மா மனைவிக்கு மேல் தன்னுடைய பாசத்தை அதிகமாக காட்டக் கூடிய உறவு என்பதுதான் தந்தை உறவு. ஒரு நல்ல தந்தை தனது மகளுக்கு நல்ல வழிகாட்டியாக இருக்கிறார். உங்கள் செல்ல மகளுக்கு நீங்கள் தரும் பரிசுகள் அவர்கள் வாழ்வை வளமாக்கட்டும்.

campaign india

டெய்ரி மில்க்

உங்கள் மகள்தான் உங்கள் உலகம் என்பதால் உங்கள் உலகை உங்கள் மகள் எவ்வளவு இனிப்பாக மாற்றியிருக்கிறார் என்று அவருக்குத் தெரியப்படுத்த இந்த சாக்லேட் பாக்ஸை பரிசாக அளியுங்கள். டெய்ரி மில்க் பிடிக்காத மகள்கள் இந்த உலகத்தில் இல்லவே இல்லை.

மகளின் வாசனை

உங்கள் மகளின் வாசனை உங்கள் வாழ்வை எத்தனை சுகமாக மாற்றி இருக்கிறது என்பதை உங்கள் அன்பு மகளுக்கு புரிய வைக்க இந்த வாழ்த்து அட்டையுடனான வாசனை திரவியத்தை பரிசளியுங்கள். நெஞ்சம் நெகிழ்ந்து போய் உங்களை விட்டு விலகாமல் உங்கள் மகள் இருக்க இந்த பரிசு உதவி செய்யும்.

வாட்டர் பாட்டில்

உங்கள் அண்மையை உங்கள் மகள் ஒருபோதும் இழக்காதபடி இருக்க நீங்கள் விரும்பலாம். பள்ளிக்கூட நேரங்களிலும் அவர்கள் அருகில் நீங்கள் இருக்க விரும்பினால் இது போன்ற வாட்டர் பாட்டில் பரிசை கொடுங்கள். அதில் உள்ள எழுத்துக்கள் உங்கள் மகளின் தன்னம்பிக்கை கெடாமல் காப்பாற்றும்.

புத்தகங்கள்

உங்கள் செல்ல மகளுக்கு நீங்கள் தந்தே ஆக வேண்டிய சிறந்த பரிசு புத்தகங்கள் மட்டுமே. அதுதான் அவர்களை பக்குமாக்கும். உங்களால் சொல்லித் தர முடியாத பல வாழ்க்கைப் பாடங்களை புத்தகங்கள் உங்கள் மகளுக்கு எடுத்துரைக்கும். ஆகவே எந்த ஒரு விசேஷ நாட்களிலும் புத்தகங்களை பரிசளிப்பதை வழக்கமாக்கிக் கொள்ளுங்கள்

புடவை

உங்கள் அழகிய மகள் வளர்ந்து கொண்டே வருகிறாள். அவளுக்கு அவசியமா ஆடைகளில் ஒன்றாக புடவையை நீங்கள் அறிமுகப்படுத்தி வையுங்கள். அது அவளின் ஆசைகளை நீட்டிக்கும். பாரம்பரியத்தின் வேர்களைக் காப்பது தகப்பனாகிய உங்கள் கடமையும்தான்.

அலங்கார நெக்லஸ்

உங்கள் மகளை இசையின் ரசிகையாக்க இந்த மாதிரியான அலங்கார நெக்லஸை பரிசளியுங்கள். தன்னை அலங்கரித்துக் கொள்ள விரும்பாத பெண்கள் இந்த உலகில் இல்லை. ஆகவே உங்கள் மகளை இந்தப் பரிசு நிச்சயமாக மனம் மகிழ செய்யும்.

ஆடை

உங்கள் மகளுக்கும் உங்களுக்குமான நெருக்கத்தை அதிகரிக்க இப்படி ஒரே மாதிரி எழுதப்பட்ட உடைகள் நிச்சயமாக உதவி செய்யும். உங்கள் மகளின் வயதுக்கேற்ப நீங்கள் ஆடைகளைத் தேர்ந்தெடுக்க முடியும்.

கப்

உங்கள் மகளை அசத்துவதற்கும் அவர் மீதான உங்கள் பிரியத்தை உணர்த்தவும் இந்த கப் வகை பரிசுகள் உதவி செய்கின்றன. உங்கள் மகள் அன்றாடம் எழுந்திருக்கும் போதும் உங்கள் நினைவோடு தனது நாளை ஆரம்பிக்க இந்த வகைப் பரிசுகள் உதவி செய்யும்.

செடி

உங்கள் மகளுக்கு இயற்கையோடு இயைந்து வாழும் வாழ்க்கையை கற்றுக் கொடுங்கள். அதற்காக இந்த வகையான செடிகளை அவர்களுக்கு பரிசளியுங்கள். உலகத்தை காக்க வேண்டிய பொறுப்பு ஒவ்வொரு உயிர்களுக்கும் இருக்கிறது என்பதை உங்கள் மகள் உணர இதுவே சரியான பரிசு.

பயணம்

உங்கள் மகள் வாழ்வில் தனது பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் தனியாக ஒரு பயணத்தை அவர் தொடங்க நீங்கள் ஆசிர்வதித்து அனுப்புங்கள். 100 புத்தகங்கள் சொல்லித் தர வேண்டிய பாடங்களை  ஒரு பயணம் அவருக்கு சொல்லிக் கொடுத்து விடும். ஒரு தகப்பனாக உங்கள் மகளுக்கான சுதந்திர பயணத்தை நீங்கள் தந்தாக வேண்டிய நிமிடம் இதுதான்.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                                                  

அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிற வரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.                                                                                                               

Read More From Dad