Wellness

டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் : அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

Swathi Subramanian  |  Jun 14, 2019
டெங்கு காய்ச்சலால் ஏற்படும் பாதிப்புகள் : அறிகுறிகள் மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்!

 

D (Dengue) காய்ச்சல் என்பது ஒரு வகையான வைரஸ் காய்ச்சலாகும். டென் -1, டென் -2, டென் -3, டென் -4 டெங்கு என டெங்குவில் நான்கு வகைகள் உள்ளது. இந்த வைரஸ் டெங்கு கொசுக்களால் பரப்பப்படுகிறது. இந்த கொசுக்கள் பெரும்பாலும் நல்ல தண்ணீரில் தான் உருவாகிறது. உலகில் ஆண்டுதோறும் 6 கோடி பேர் டெங்கு (Dengue) கொசுவால் பாதிக்கப்படுகின்றனர். சுமார் 100 நாடுகளில் டெங்கு காய்ச்சல் பாதிப்பு உள்ளது. ஆனால் ஒரு முறை டெங்கு காய்ச்சல் வந்தவர்களுக்கு பொதுவாக அதே ஆண்டு மீண்டும் வராது என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் சிறியவர்கள்களை டெங்கு காய்ச்சல் எளிதாக தாக்குகிறது. தேசிய அளவிலான அபெக்ஸ் கமிட்டி ஒப்புதல் இதுவரை பெறப்படாத நிலையில் டெங்கு (Dengue) தடுப்பூசி இந்தியாவில் இதுவரை அனுமதிக்கப்படவில்லை.

gifskey, pexels, pixabay, Youtube

டெங்கு காய்ச்சலுக்கான காரணங்கள் (Causes Of Dengue Fever )

வீடுகளில் சரியாக மூடப்படாத டிரம்கள், உபயோகமற்ற பொருட்கள், மூடப்படாத தொட்டிகள் ஆகிவற்றால் தேங்கி கிடைக்கும் தண்ணீரில் ஏடிஸ் கொசு உருவாகிறது. இந்த கொசுவால் தான் பெரும்பாலும் டெங்கு (Dengue) காய்ச்சல் பரவுகிறது. பாதிக்கப்பட்டோரை கடித்து விட்டு மற்றவரை இந்த கொசு கடிக்கும் போது அவர்களுக்கும் டெங்கு (Dengue) காய்ச்சல் பரவுகிறது. ஏடிஸ் கொசு மூன்று வாரங்களுக்கு மேல் உயிர்வாழ்கிறது. இந்த கொசு பெரும்பாலும் பகல் நேரத்தில் மனிதர்களை கடிக்கிறது. மேலும் கருவுற்ற தாய்க்கு பாதிப்பு இருந்தால், குழந்தைக்கும் ஏற்படும் வாய்ப்பு உள்ளது. உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையிலும் டெங்கு (Dengue) காய்ச்சல் பரவுகிறது. கொசுக்கள் மூலம் ஒரு நோயாளியிடம் இருந்து மற்றவர்க்கு நேரடியாக பரவுகிறது.மற்றபடி டெங்கு காய்ச்சல் உள்ளவர் தொடுவதாலோ, காற்றிலோ இந்த காய்ச்சல் பரவுவது கிடையாது.

டெங்கு காய்ச்சலின் அறிகுறிகள் (Symptoms Of Dengue Fever)

தசைகளில் கடுமையான வலி (Muscle Pain)

D (Dengue) காய்ச்சல் வந்தால் உடலில் வலி ஏற்படும். தசைகளால் கடுமையான வலி ஏற்பட்டால் உடனடியாக மருத்துவரை அணுக வேண்டும். இதனால் எந்த சிறிய பொருட்களை கூட தூக்க முடியாத நிலை ஏற்படும். இந்த வலியானது இரண்டு முதல் ஏழு நாட்கள் வரை நீடிக்கும்.

காய்ச்சல் (Fever)

முதல் அறிகுறியாக காய்ச்சல் ஏற்படும். சாதாரண காய்ச்சல் என்று அலட்சியமாக இருக்க கூடாது. முதலில் லேசாக தோன்றும் காய்ச்சலானது படிப்படியாக அதிகரித்து 104 டிகிரி வரை அதிகரிக்கும். மேலும் இருமல் மற்றும் தும்மல் பாதிப்புகள் இருக்கும். காய்ச்சல் தொடர்ந்து மூன்று நாட்கள் நீடித்தால் மருத்துவமனைக்கு செல்ல வேண்டும்.

தலைவலி (Headache)

கடுமையான தலைவலி ஏற்படும். தலை மற்றும் கண்ணின் பின் பகுதியில் தொடர்ந்து அதிக வலி இருக்கும். மேலும் மூக்கடைப்புடன் கூடிய தலைவலி ஏற்பட்டால் டெங்கு (Dengue) பாதிப்பு உள்ளதாக சந்தேகிக்கலாம்.

லேசான ரத்தக்கசிவு (Mild Bleeding)

பல் ஈறுகள் மற்றும் காதில் இருந்து ரத்தக்கசிவு ஏற்படும். இருமல் வரும் போது சளியுடன் ரத்தக்கசிவு இருக்கும். D (Dengue) காய்ச்சலின் தாக்கம் அதிகரித்தால் நுரையீரல், வயிறு, சீறுநீர்ப்பை உள்ளிட்ட பகுதிகளில் ரத்தக்கசிவு ஏற்படும். ரத்தக் கசிவால் நோயாளியின் ரத்த அழுத்தம் குறைந்த தாழ்வு நிலையை அடைந்துவிடும்.

தோல் வெடிப்பு (Skin Rash)

தோலில் சிவப்பு நிற தடிப்புகள் ஏற்படும். ரத்த நாளத்தில் உள்ள நுண்ணிய குழாய்களில் பிளாஸ்மா வெளியேறுவதால் தோல் வெடிப்பு ஏற்படும். சிலருக்கு உடல் முழுவதும் சிவப்பு நிறத்தில் தடித்து காணப்படும்.

gifskey, pexels, pixabay, Youtube

முதுகு வலி (Back Pain)

முதுகு வலி கடுமையாக இருக்கும். இந்த வலியானது தொடர்ந்து கை விரல் மூட்டு, மணிக்கட்டில், முழங்கை கால் விரல் மூட்டுகளை தாக்கும். முதுகு எலும்பை முறித்து போட்டது போல் கடுமையான வலி இருக்கும்.

வாந்தி (Vomit)

D (Dengue) காய்ச்சல் இருத்தால் ஆரம்பகட்ட அறிகுறியாக வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். தொடர்ந்து காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்க அதிகரிக்க கருப்பு நிறத்தில் வாந்திவரும்.

சுவாச கோளாறு (Breathing Problem)

D (Dengue) காய்ச்சல் வந்தால் கடுமையான சுவாச கோளாறு ஏற்படும். மூச்சு திணறல் ஏற்படுவதால் பாதிக்கப்பட்டவர்கள் கடுமையாக பாதிக்கப்படுவர். டெங்கு காய்ச்சலின் இரண்டாம் கட்ட பதிப்பாக சுவாச கோளாறுகள் ஏற்படுகிறது. இதனால் குழந்தைகள் கடுமையாக பாதிக்கப்படுவர்.

டெங்கு காய்ச்சலுக்கான மருத்துவம் (Treatment For Dengue Fever)

D (Dengue) காய்ச்சல் என்று சந்தேகித்தவுடன் உடனடியாக மருத்துவரை அணிகுவது நல்லது. காய்ச்சல் இருப்பது உறுதி செய்யப்பட்டால் அதற்கான மருந்துகள் கொடுக்கப்படும். ஆரம்பக்கட்டமாக இருந்தால் காய்ச்சல் குறைவதற்கான மாத்திரைகள் மற்றும் ஊசிகள் போடப்படும். தீவிர நிலையை டெங்கு காய்ச்சல் அடைந்திருந்தால் ரத்தத்தில் தட்டணுக்களின் எண்ணிக்கை குறைந்திருக்கும். இத்தகைய கட்டத்தில் தட்டணுக்கள் எண்ணிக்கை அதிகமுள்ள ரத்தம் உடலில் செலுத்தப்படும்.

டெங்கு (Dengue) காய்ச்சலை உடனடியாக உறுதி செய்ய முடியாது காய்ச்சல் மூன்று நாட்களுக்கு மேல் நீடித்தால் உணடியாக மருத்துவமனைக்கு சென்று என்.எஸ் 1 ஆண்டிஜன் அல்லது டெங்கு ஐ.ஜி.எம் ரத்த பரிசோதனை எடுக்க வேண்டும். பொதுவாக ஒரு மனிதருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை சுமார் மூன்று லட்சம் வரை இருக்கும். ஆனால் டெங்கு (Dengue) காய்ச்சல் பாதிக்கப்பட்டவருக்கு தட்டணுக்களின் எண்ணிக்கை 20 ஆயிரத்திற்கும் குறையும் நிலை ஏற்படலாம். எனவே ரத்த பரிசோதனைக்கு பின்னர் பிளேட்லெட் எனும் ரத்த அணுக்களின் எண்ணிக்கை மற்றும் ரத்தத்தின் நீர்ப்பளவு சோதனைகளை மருத்துவர்கள் ஆலோசனையின் படி செய்ய வேண்டும்.

அதிக நீர்ச்சத்து நிறைந்த உணவுகளை உட்கொள்ள வேண்டும் போதுமான அளவு தண்ணீர் மற்றும் பால், பழச்சாறு, கஞ்சி ஆகியவற்றை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும் உரிய சிகிச்சை முறையும் முறையான கவனிப்பும் இருந்தால் டெங்கு (Dengue) காய்ச்சலை குணப்படுத்தலாம் காய்ச்சல் குறைந்தாலும் மூன்று நாட்களுக்கு கவனமாக இருக்க வேண்டும் பசி எடுக்கவில்லை என்றாலோ மிகவும் சோர்வாக இருந்தாலோ உடனடியாக மருத்த ுவரை அணுக வேண்டும் உரிய மருத்துவம் இல்லையென்றால் உயிரிழப்பு நடைபெற வாய்ப்புள்ளது.

கிராம்பு உணவில் அடிக்கடி சேர்த்துக் கொள்வதால் ஏற்படும் நன்மை தீமைகள்!

வீட்டில் இருக்கும் பொருட்களை கொண்டு டெங்குவை விரட்டலாம் (Home Remedy For Dengue)

பப்பாளி இலை (Papaya Leaves)

பப்பாளி இலையில் இருக்கும் வேதிப்பொருள் டெங்கு (Dengue) பாக்டீரியாகளை அழிக்கும் சக்தி உள்ளது. புதிதாக பப்பாளி இலைகளை பரித்த அதில் உள்ள காம்புகளை அகற்ற வேண்டும் அதனுடன் தண்ணீர் ஊற்றி அரைத்து சாற்றை வடிகட்ட வேண்டும் இந்த சாற்றை நாளுக்கு 10 மில்லி லிட்டர் வீதம் தினமும் அருந்த வேண்டும் இந்த சாறு ரத்த தட்ட அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கிறது பப்பாளி இலையில் வைட்டமின் ஏ, பி, ஈ இருப்பதால் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கிறது.

வெந்தயம் (Fenugreek Seeds)

வெந்தயத்தின் இலையை நீரில் ஊறவைத்து அந்த நீரை குடிக்கலாம் அல்லது வெந்தயத்தை பொடி செய்து சாப்பிட்டு வர டெங்கு (Dengue) காய்ச்சல் குணமாகும்.

அமிழ்தவள்ளி ஜூஸ் (Giloy Juice)

D (Dengue) காய்ச்சல் பாதிப்பு தென்பட்டால் அமிழ்தவள்ளி ஜூஸை தினமும் காலையில் அருந்த வேண்டும். இருமல் இருந்தால் அமிழ்தவள்ளி சாற்றை கஷாயம் செய்து அருந்தி வந்தால் நல்ல பலன் கிடைக்கும். தினமும் இந்த கஷாயத்தை 2 ஸ்பூன் வீதம் அருந்தி வந்தால் டெங்கு (Dengue) பாதிப்பு படிப்படியாக குறையும்.

அமிழ்தவள்ளி கசாயம் செய்முறை
தேவையானவை
அமிழ்தவல்லி வேர்கள்: 4 முதல் 5
துளசி இலைகள்: சிறிது
தண்ணீர்: தேவையான அளவு

இரவில் அமிழ்தவள்ளி வேரை தண்ணீரில் ஊற வைக்க வேண்டும் மறுநாள் காலை அந்த நீருடன் துளசி இலைகளை போட்டு அதனுடன் மேலும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும் நீரின் அளவு பாதியாக வரும் வரை கொதிக்க விட வேண்டும் பின்னர் இந்த நீரை குளிர வைத்து ஒரு நாளுக்கு 2 முதல் 3 முறை குடிக்க வேண்டும் இந்த நீரை குடிப்பதால் ரத்தத்தில் தொற்றுகள் பரவுவது தடுக்கப்படும்.

துளசி சாறு (Basil Leaves)

துளசியுடன், அருகம்புல் வேர் மற்றும் தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்க வேண்டும். இந்த நீரை வடிகட்டி தேன் மற்றும் பனங்கற்கண்டு சேர்த்து குடிக்க வேண்டும். D (Dengue) காய்ச்சல் இருக்கும் போது தினமும் இரண்டு வேலை 500 முதல் 1000 மில்லி லிட்டர் எடுத்து குடித்தால் காய்ச்சல் குணமாகும். துளசி இலையுடன் சிறுது உப்பு சேர்த்து காய்ச்சி இளஞ்சூட்டுடன் சாப்பிட்டு வர காய்ச்சலின் தீவிரம் குறையும்.

ஆரஞ்சு ஜூஸ் (Orange Juice)

D (Dengue) காய்ச்சல் வந்தால் ஆரஞ்சு, சாத்துக்குடி எலுமிச்சை நெல்லி ஆகிய சிட்ரிக் அமிலம் உள்ள பழங்களை உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். ஜூஸ் செய்தும் அருந்தலாம். சளி பிடிக்கும் என நினைத்தால் சர்க்கரைக்கு பதிலாக உப்பு சேர்த்து அருந்தலாம்.

வேப்பிலை(Neem Leaves)

வேப்பிலையை குடிநீரில் போட்டு நன்கு கொதிக்க வைத்து குடிக்கலாம். ரத்தத்தில் எதிர்ப்பு சக்தியை தரும். D (Dengue) காய்ச்சல் தீவிரத்தை குறைக்க நிலவேம்பு கஷாயம் செய்து அருந்தலாம் அல்லது நிலவேம்பு சூரணம் சாப்பிடலாம். இந்த சூரணத்தில் நிலவேம்பு, வெட்டி வேர், விலாமிச்சு வேர், பேய்புடல், மிளகு, சுக்கு, கோரைக்கிழங்கு, பற்பாடகம், சந்தனம் ஆகிய ஒன்பது பொருட்கள் அடங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது. இந்த பொருட்கள் உடலின் வெப்பத்தை அகற்றி காய்ச்சலை போக்கும் தன்மை கொண்டது.

பார்லி (Barley)

D (Dengue) காய்ச்சலால் அவதிப்படுபவர்கள் பார்லி அரிசியை வாங்கி தண்ணீர் சேர்த்து சாதம் பொங்குவது போல் வேகவைத்து சாப்பிடலாம். பெரும்பாலும் காய்ச்சல் ஏற்பட்டால் நாக்கில் ருசி தெரியாது. எப்போதும் கசப்பாக இருப்பது போன்ற உணர்வு இருக்கும். அப்படி இருக்கும் சமயங்களில் பார்லியை பாலில் ஊற வைத்து நாட்டு சர்க்கரை சேர்த்து சாப்பிடலாம்.

தண்ணீர் (Water)

D (Dengue) காய்ச்சலின் போது அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும். குறைந்தது 3 லிட்டர் தண்ணீர் தினமும் குடிக்க வேண்டும். காய்ச்சலால் உடல் வறட்சி ஏற்படும். அதனை தவிர்க்க பழச்சாறு, தண்ணீர் அடிக்கடி அருந்த வேண்டும்.

டெங்குவில் இருந்து பாதுகாத்து கொள்வது எப்படி (Dengue Prevention Tips)

தனிப்பட்ட பாதுகாப்பு (Personal Protection)

முதலில் நமது உடலை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வியர்வை மற்றும் துர்நாற்றத்திற்கு கொசுக்களின் ஈர்ப்பு அதிகமாக இருக்கும் என்பதால் இரண்டு முறை குளித்து தூய்மையாக இருந்தல் வேண்டும். மற்றவர்களிடம் இருந்து ரத்தம் ஏற்றும் போது ஆய்வு செய்த பிறகே ஏற்ற வேண்டும். கை, கால்களை மறைக்கும் பருத்தி உடைகளை அணிய வேண்டும் வெளியில் செல்லும் போது கொசு தடுப்பு மருந்துகளை உடலில் பூசி செல்ல வேண்டும் வெளியில் சென்று விட்டு வரும் போது கை, கால்களை கழுவி விட்டு வீட்டிற்குள் வருவது நல்லது.

 

கேரட்டை பயன்படுத்தி பளபளப்பான சருமத்தை பெறுவதற்கான சிம்பிள் டிப்ஸ்கள்!

நீரை தேங்க விடக்கூடாது (Clear Stagnant Water)

வீட்டை சுற்றி தண்ணீர் தேங்காமல் பார்த்து கொள்ள வேண்டும். மழை காலத்தில் தேங்கி இருக்கும் நீரை உடனடியாக அப்புறப்படுத்த வேண்டும். அல்லது தேங்கியுள்ள நீரில் கொசுவின் லார்வாவை ஒழிக்கும். மருந்துகளை தெளிக்க வேண்டும். வீட்டின் மீது டி.டி.டி மருந்து தெளித்தால் கொசுக்கள் ஒழியும். தண்ணீர் வடியாத பகுதியில் அவற்றை அப்புறப்படுத்த வேண்டும். தண்ணீர் தொட்டிகளை அடிக்கடி ப்ளீச்சிங் பவுடர் போட்டு சுத்தம் செய்ய வேண்டும்.

gifskey, pexels, pixabay, Youtube

கொசு உற்பத்தியை தடுக்க வேண்டும் (Use Mosquito Repellents)

டெங்கு காய்ச்சல் வராமல் தடுக்க முதலில் கொசுவை ஒழிக்க வேண்டும். ஏனெனில் கொசுக்கள் மூலமாக தான் டெங்கு (Dengue) காய்ச்சல் அதிகமாக பரவுகிறது. வாசலில் நீண்ட திரைசீலையை பயன்படுத்த வேண்டும். ஏடிஸ் கொசு உருவாகுவதை ஆரம்பக்கட்டத்திலேயே தடுக்க வேண்டும். ஏடிஸ் கொசு தண்ணீரில் முட்டையிட்டு கொசுப்புழு, கூட்டுப்புழு பருவம் வரை வளர ஏழு முதல் பத்து நாட்களாகும். அதற்குள் கொசு வளர்ச்சியை தடுக்க வேண்டும். சுற்றுப்புறங்களை சுத்தமாக வைத்து கொள்ள வேண்டும். வீடுகளில் கொசு வராதவாறு ஜன்னல்களில் கொசு வலையை பொறுத்த வேண்டும். உடல் முழுவதும் மூடும் வகையில் உடைகளை அணிய வேண்டும். வேப்பிலையை வீட்டின் முன்பு மற்றும் கொல்லைப்புற நிலைகளில் கட்டி தொங்கவிட வேண்டும்.நொச்சி இலையை நிழலில் காய வைத்து அதனை நெருப்பில் போட்டு புகை வர வைத்தால் கொசுவை உள்ளே வராமல் விரட்டி அடிக்கும். டெங்கு காய்ச்சல் பரவுவதை தடுக்க பொதுமக்களிடையே போதிய விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும்.

FAQs

1. டெங்கு அறிகுறிகள் என்ன?

காய்ச்சலுடன் கூடிய தலைவலி மற்றும் கண் பின்புற வலி இருக்கும். உடலில் ஆங்காங்கே தடித்து அல்லது சிவப்பு நிறத்தில் காணப்படும். உடல் சோர்வாக காணப்படும். எலும்புகள் மற்றும் கை, கால் முட்டிகளில் கடுமையான வலி ஏற்படும். காய்ச்சல் படிப்படியாக உயர்ந்து வாந்தியுடன் கூடிய மயக்கம் ஏற்படும்.

மஞ்சள் தேநீர் – பல நற்பலன்களை கொண்ட ஓர் அற்புத பானம்

2. டெங்கு காய்ச்சலை குணப்படுத்த முடியுமா?

D (Dengue) காய்ச்சலை ஆரம்ப கட்டத்திலேயே கண்டறிந்து உரிய சிகிச்சை அளித்தால் குணப்படுத்த முடியும். காய்ச்சல் இரண்டு நாட்களுக்கு மேல் நீடித்தால் மருத்துவரை சந்தித்து ஆலோசனை பெற வேண்டும். ஏனென்றால் மருத்தவ பரிசோதனையில் தான் டெங்கு (Dengue) பாதிப்பு உறுதி செய்யப்படும். டெங்கு இருப்பது உறுதியான பிறகு அதற்கான சிகிச்சை அளிக்கப்படும்.

3. டெங்கு காய்ச்சலின் போது என்ன சாப்பிட வேண்டும்?

அரிசி அல்லது தானியத்தில் செய்த சுடு கஞ்சி, பழச்சாறுகள், பப்பாளி மற்றும் நிலவேம்பு கஷாயம் ஆகியவற்றை சாப்பிடலாம். இனிப்பு சுவையுள்ள உணவுகளை குறைத்து பாகற்காய் போற்ற கசப்பு நிறைந்த உணவுகளை சாப்பிட வேண்டும். காரம் சாப்பிட விரும்புபவர்கள் மிளகாய்க்கு பதிளாக மிளகை பயன்படுதலாம். அன்னாசி பூ சேர்த்து தயாரித்த தேநீர், திரிகடுகம் காபி ஆகியவற்றை குடிக்கலாம். காய்ச்சல் இருக்கும் போது உடலில் நீர் சத்து இருப்பது நல்லது. அடிக்கடி தண்ணீர், பழச்சாறை அருந்துவது நல்லது.

குழந்தைகளுக்கு டெங்கு (Dengue) காய்ச்சல் ஏற்பட்டால் சோர்வடையாமல் இருக்க ஒரு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 4 கிளாஸ் அளவுக்கு நீர்ச்சத்தும், ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு நாளொன்றுக்கு 5 முதல் 7 கிளாஸ் நீர்ச்சத்தும் கொடுக்க வேண்டும். இதனை மருத்துவரின் அறிவுரைக்கு பின்னரே வழங்க வேண்டும்.

4. டெங்குவில் இருந்து மீள எவ்வளவு நாட்கள் ஆகும்?

டெங்கு காய்ச்சல் இருப்பது பெரும்பாலும் 3 அல்லது 4 வது நாளில் தான் தெரிய வரும். முதலில் சாதாரண காய்ச்சலாக தோன்றும். தொடர்ந்து மூன்று நாட்களுக்கு காணப்படும் இந்த காய்ச்சலானது, 4 வது நாள் சற்று குறைந்ததாக தோன்றும். ஆனால் அதன் பிறகு தான் டெங்கு (Dengue) காய்ச்சலின் தீவிரம் அதிகரிக்க ஆரம்பிக்கும். 5, 6 நாட்களில் வாந்தியுடன் கூடிய காய்ச்சல் ஏற்படும். 104 டிகிரி வரை கூட வெப்பநிலை உயரலாம். ஆரம்ப கட்டத்தில் கண்டறிந்தால் 3 நாட்களுக்குள் டெங்கு (Dengue) காய்ச்சலை முழுமையாக குணப்படுத்தலாம். ஆனால் காய்ச்சல் தீவிர நிலையை அடைந்தால் 7 முதல் 10 நாட்கள் வரை ஆகலாம்.

gifskey, pexels, pixabay, Youtube

5. பப்பாளி இலை ரத்த தட்டையணுக்களை அதிகரிக்குமா?

பப்பாளி இலையில் ரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் சக்தி உள்ளது. பப்பாளி சாற்றில் ஏழு வகையான பீனால் சேர்மங்கள் உள்ளன. இதில் உள்ள குவர்செட்டின் எனும் வேதிப்பொருள் டெங்கு (Dengue) வைரஸ்களின் புரத மூலக்கூறுகளை அழிக்க வல்லது என கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. தேவையான அளவு பப்பாளி இலையை எடுத்து அதனை தண்ணீர் சேர்த்து இடித்து சாறு எடுக்க வேண்டும் இந்த சாற்றை இரண்டு வேலை அருந்தி வர ரத்த தட்டையணுக்களின் எண்ணிக்கை தொடர்ந்து உயரும் கசப்பு பிடிக்காதவர்கள் இந்த சாற்றுடன் தேனை கலந்து குடிக்கலாம் அனால் கசப்பே மருந்து என்பதை மறந்து விட வேண்டாம்.

செய்தி செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறுபெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும்.

அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும்

Read More From Wellness