Beauty

பளிச்சென்ற கண்களுக்கு ஐ-லாஷ் கர்லர்ஸ்! சரியாக பயன்படுத்துகிறீர்களா?

Nithya Lakshmi  |  Jan 2, 2020
பளிச்சென்ற கண்களுக்கு ஐ-லாஷ் கர்லர்ஸ்! சரியாக பயன்படுத்துகிறீர்களா?

கண்கள் நன்றாக திறந்தவாறு, மேலும் அழகாக காண்பிக்கும் ஒரு சின்ன மேக்கப் யுக்திதான் – இமை முடிகளை வளைப்பது. ஆனால், வளைக்கும் விதம் மேல் நோக்கி இருக்க வேண்டுமா? மஸ்காரா போட்டபின் வளைக்க வேண்டுமா? அல்லது வளைத்த பின் மஸ்காரா போட வேண்டுமா? தினமும் இமை முடிகளை வளைத்தால் என்னவாகும்? போன்ற சந்தேகங்கள் எழுந்தாலும், அவரவருக்கு தோன்றிய விதங்களில் மேக்கப் செய்து கொள்கிறார்கள். நீங்கள் செய்வது சரியா, தவறா என்று தெரிந்துகொள்ள மேலும் படிக்கவும்.

1. முதல் படியாக கண் இமைகளை வளைப்பது

Instagram

கண்களுக்கு கீழே போடும் கன்சீலர் போன்ற மேக்கப் செய்தபின் இமைகளை வளைக்க வேண்டும். எடுத்தவுடன் இமைகளை வளைத்து விட்டால், கண்களுக்கு கீழே போடும் மேக்கப் இமை முடிகளில் படும், முடிகள் அங்கும் இங்கும் சென்றுவிடும். முகத்திற்கு போட வேண்டிய மேக்கப், மற்றும் கண்களைச் சுற்றி போடுகின்ற மேக்கப்  எல்லாவற்றையும் போட்ட பின் இமை முடிகளை வளைக்க வேண்டும்.

2. ஏதாவதொரு கர்லர்(curler) போதுமே!

நல்ல தரமான கர்லர்(eyelash curler) வாங்கிக் கொள்ளுங்கள். இல்லையேல் உங்கள் இமை சருமத்தை பதம் பார்த்துவிடும். தரமான கர்லர், உங்கள் கண் இமை முடிகளுக்கு ஏற்றவாறு ஒரு பேட் வைத்து கட்சிதமாக செய்யப்பட்டிருக்கும். மேலும், இமை முடிகள் முழுவதையும் ஒரே நேரத்தில் வளைக்குமாறு அகலமான கர்லர் வாங்கிக்கொள்ளுங்கள். இரண்டு முறை செய்வது போல சிறியதாக இருந்தால், இமை முடிகளை அழகாக வளைக்க முடியாது.

POPxo பரிந்துரைப்பது வேகா ஃபேஸ் கேர் பிரீமியம் கண் இமை கர்லர் (ரூ 190)

3.மஸ்காரா போட்டபின் இமை முடிகளை வளைப்பது

Instagram

மஸ்காரா போட்டால் இமை முடிகள் இறுகிவிடும். அதன்பின் கர்லர் பயன்படுத்தினால், இமை முடிகள் உடையும் அபாயம் இருக்கிறது. எப்போதும் இமை முடிகளை (ஐ-லாஷ்) வளைத்தபின் மஸ்காரா போட வேண்டும். இல்லையென்றால், மஸ்காரா களைந்து போகும். மேலும், இமை முடிகளும் தனித்தனியாக இருக்கும், மஸ்காராவும் அழகாக போட முடியும். 

4. நன்றாக அழுத்தமாக வளைப்பது

வளைவு அதிகமாகத் தோன்ற நன்றாக அழுத்தம் கொடுத்து வளைப்பதனால், இமை முடிகள் இயல்பாக வளைந்ததுபோல் இல்லாமல் செயற்கையாகத் தோன்றும். இமையில் உள்ள சருமத்தை விட்டு, சரியான இடத்தில் கர்லரை வைத்து, சிறிது நேரம் கர்லரை மூடியவாறு பிடித்துக்கொள்ளுங்கள். பிறகு மெதுவாக திறந்து, இமை முடி நடுவில் மீண்டும் கர்லரை மூடி சிறிது நேரம் களித்து திறந்து இமை முடி நுனிவரை கொண்டுவாருங்கள். 

5. கர்லரை அடிக்கடி பயன்படுத்த வேண்டுமா?

Instagram

கர்லரை அடிக்கடி பயன்படுத்தினால்தான் இமையில் உள்ள முடிகள் அழகாக வளைந்து பார்க்க நன்றாக இருக்கும் என்பது ஒரு தவறான கருத்து. அடிக்கடி கர்லரை கொண்டு இமை முடிகளை வளைத்துக்கொண்டிருந்தால், இமை முடிகள் உதிர ஆரம்பிக்கலாம். அவ்வப்போது, இமை முடிகளை இயற்கையாக விட்டுவிடுவது நல்லது. 

6. கர்லரை சுத்தம் செய்வது

மஸ்காரா போடுவதற்கு முன்னரே கர்லர் பயன்படுத்துகிறீர்கள் என்றாலும், வாரத்திற்கு ஒரு முறை கர்லரை சுத்தம் செய்ய வேண்டும். ஏன்னெனில், ஐலைனர், ஐஷேடோ, பாக்டீரியா, தூசுகள் போன்றவை கர்லரை அசுத்தம் செய்திருக்கும். ஒரு சின்ன காட்டன் பேட் எடுத்துக்கொள்ளுங்கள். ஸ்பிரிட் கொண்டு கர்லரை நன்றாக சுத்தம் செய்து கொள்ளுங்கள். பின்னர் கர்லரை காய விடுங்கள். ஈரமாக இருக்கும்போது பயன்படுத்தாதீர்கள். 

மேலும் படிக்க – பிரகாசமான கண்களுக்கு 7 சிறந்த ஐ ஜெல் மாஸ்க்ஸ்!

7. கர்லரில் உள்ள பேட்களை மாற்றக்கூடாது

Instagram

மேலும், கர்லரில் உள்ள பேட்களை நீக்கிவிட்டு புதிதாக ஒன்று வாங்கி மாட்டி விடுங்கள். நாளடைவில் அந்த மருதுவான பேட்கள் கிலிந்துபோய் இருக்கும். அதோடு இமைகளை வளைக்க முயற்சித்தால், இமைகள் அழகாக இருக்காது. 

8. கர்லரை சூடாக்கத் தேவை இல்லை

கர்லரை சூடாக்கி பயன் படுத்தவேண்டும் என்று கேள்விப்படாலும், தேவையில்லை என்று நிராகரித்துவிடுகிறோம். கர்லரை சூடாக்கி பயன்படுத்தினால், இமை முடிகள் நீண்ட நேரம் வளைந்து இருக்கும். ஒரு ப்ளோ ட்ரையர் பயன்படுத்தி சிறிது நேரம் கர்லரை அதன் அருகில் பிடித்துகொண்டால் போதும், விரைவில் கர்லர் சூடாகிவிடும். இதற்கு நீங்கள் ஒரு உலோக கர்லரைதான்(metal curler) பயன்படுத்த வேண்டும் என்பதை மறந்துவிடாதீர்கள். பிளாஸ்டிக் கர்லரை சூடாக்கினால் உருகி விடும்.

பளிச்சென்ற கண்கள் வேண்டுமென்றால் கர்லரை பயன்படுத்துவதை தவிர்க்க முடியாது. அப்படி பயன்படுத்துவதை சரியாக பயன்படுத்தினால்தான் இமை முடிகளுக்கு பாதிப்பு இருக்காது. இந்த பயனுள்ள குறிப்புகள் உங்கள் குழப்பங்களுக்கு நல்ல தீர்வாக அமைந்திருக்கும் என்று நம்புகிறோம். இனி சரியான முறையில் இமை முடிகளை சீராக்கி பிரமாதமாக தோன்றுங்கள்.

மேலும் படிக்க – ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்

பட ஆதாரம்  – Shutterstock 

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Beauty