பிரகாசமான கண்களுக்கு 7 சிறந்த ஐ ஜெல் மாஸ்க்ஸ்!

பிரகாசமான கண்களுக்கு 7 சிறந்த ஐ ஜெல் மாஸ்க்ஸ்!

பெண்களாகிய நாம் நம் கண்களை பாதுகாக்க பல்வேறு வீட்டு வைத்தியம் மற்றும் கடைகளில் விற்கும் பொருட்களை உபயோகித்து, கணங்களை பளிச்சென்று காட்ட முயற்சி செய்து கொண்டுதான் வருகிறோம் . இந்த கோடை காலத்தில் முக்கியமாக கண்களில் எரிச்சல் மற்றும் தூசியினால் அரிப்பு போன்ற தொந்தரவுகள் வரக்கூடும் . உங்கள் கண்களை சுற்றி மேலும் கருவளையங்கள், சுருக்கங்கள் , வேலையினால் வரும் அழுத்தம், இவை அனைத்திற்கும் நாங்கள் ஒரு சரியான தீர்வை இங்கு அளிக்க உள்ளோம் . கீழ் கூறியிருக்கும் ஐ ஜெல் மாஸ்க்குகளை பயன்படுத்தி புத்துணர்ச்சி ஊட்டும் கண்களை எளிதில் பெறுங்கள் !


1. பெஸ் ஷாப் பிரைட் ஐஸ் ஜெல் பேக் (Face Shop Bright Eyes Gel Pack)


2


பேஸ் ஷாப் மிகச்சிறந்த உயர்தர அழகு சாதன பொருட்களை கொண்ட தென்கொரியாவை சேர்ந்த ஒரு அழகு சாதன நிறுவனம் ஆகும். இந்த பிராண்டில் வரும் ஐ ஜெல் மாஸ்க்குகள் உங்கள் கண்களை மென்மையாக்கி, சுருக்கங்களை நீக்கி, சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதை மேலும் பிரகாசமாக்க உதவுகிறது!


நன்மை : எளிதில் உபயோகிக்கலாம்


குறைபாடு : சருமத்தை டயிட் சேயும் என்று கூறினாலும் அது உங்கள் வயதை பொறுத்து உள்ளது


ரூ 300


இதை இங்கு வாங்கலாம்


2. லோரியல் பாரிஸ் ஹைட்ரா பிரெஷ் ஐ ஜெல் (L'Oreal Paris Hydro Fresh Eye Gel)


3


லோரியல் பாரிஸ் பெண்களின் அழகு சாதனப் பொருட்களில் இருக்கும் முக்கிய பிராணிகளில் முன்னணியில் இருக்கும் ஒரு பிராண்ட் ஆகும். இதில் வரும் இந்த மாஸ்க் பிசுபிசுப்பு தன்மை இல்லாத ஒரு ஜெல் அமைப்பை கொண்டு இருக்கிறது. இதை நீங்கள் உங்கள் விரல் நுனிகளில் எடுத்து, முகத்தை கழுவிவிட்டு, கண்களை சுற்றி பூசி கொண்டு இரவில் தூங்கலாம் அல்லது இதை காலையில் பூசிக் கொள்ளலாம். இதில் இருக்கும் கிரேப் ஸீட் மற்றும் ஆன்டிஆக்சிடென்ட் அம்சங்கள் உங்கள் கண்களை சுற்றியுள்ள சுருக்கங்கள் மற்றும் மந்தமான சருமத்தை அகற்றி வெகுவிரைவில் பிரகாசமான கண்களை அளிக்க உள்ளது.


நன்மை : பிசுபிசுப்பு தன்மை அற்றது, சருமம் இதை எளிதில் உறிஞ்சி விடியும்


குறைபாடு : எல்லா வகையான சருமத்திற்கும் இது பொருந்தும் என்றாலு உணர்திறன் கொண்ட சருமத்தில் இதை கவனமாக பூசுங்கள் 


ரூ 374


இதை இங்கு வாங்கலாம்


3.போரெஸ்ட் எஸ்சேஞ்சியல்ஸ் லைட் ஹைட்ரேடிங் ஹைட்ரா ஐ ஜெல் (Forest Essentials Hydro Eye Gel) 


4


நீங்கள் ஒரு வேலை மூலிகைகளைக் கொண்ட மற்றும் பல இயற்கையான பொருட்களைக் கொண்டு வரும் ஐ ஜெல் மஸ்குகளை தேடிக்கொண்டிருந்தாள் இந்த போரெஸ்ட் எஸ்சேஞ்சியல்ஸ் லைட் ஹைட்ரேடிங் ஜெல் உங்களுக்கு பயனளிக்கும். இதில் இருக்கும் வெள்ளரிக்காய், ரோஸ் , அலோ வேற, கட்டக் இவை அனைத்தும் உங்கள் கண்களை சுற்றி இருக்கும் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து அதை மென்மையாக்கி மிருதுவாக்கி கரு வளையங்களை நீக்க உதவுகிறது. மேலும் உங்கள் கண்களை குளிர்ச்சியாக வைத்துக்கொள்ள இது ஒரு சிறந்த ஐ ஜெல் .


நன்மை : இயற்கை பொருட்கள் அடங்கி உள்ளது


குறைபாடு : விலை அதிகம்


ரூ 1050


இதை இங்கு வாங்கலாம்


4. பையோட்டிக் பயோ சி வீட்ரீ வைடலைசிங் ஐ ஜெல் (Biotique Bio Seaweed Vitalizing Eye Gel)


5


உங்கள் கண்களை சுற்றி இருக்கும் மிகவும் மந்தமான சருமம், கருவளையங்கள், சுருக்கங்கள் மேலும் மன அழுத்தத்தால் வரும் சருமத்தின் நிறம் மாற்றங்கள் இவை அனைத்தையும் எளிதில் சரி செய்யக் கூடிய ஒரு சிறந்த ஐ மாஸ்க் இதுவே ! பயோடெக் பிராண்ட் நன்கு ஆராய்ச்சி செய்த ஆயுர்வேத உத்திகளை கொண்ட பொருட்களை சருமத்திற்கும் கூந்தலுக்கும் தயாரித்து வருகிறார்கள். மேலும் இதில் இருக்கும் கடற்பாசி அனைத்து வைட்டமின்கள், கனிமங்கள் மற்றும் பல ஊட்டச்சத்து மிக்க அம்சங்கள் நிறைந்த ஒன்றாகும். இத்துடன் தென், வெள்ளரிக்காய் போன்ற பொருட்கள் உடன் இந்த ஜெல் உங்கள் கண்களின் குறைபாடுகளை சரிசெய்து புத்துணர்ச்சி அளிக்க உதவுகிறது!!


நன்மை : மலிவான விலை , எளிதில் கருவளையம் நீங்கும்


குறைபாடு : இதில் வரும் இயற்கையான மூலிகையின் மனம் அனைவருக்கும் பிடிக்காது


ரூ 195


இதை இங்கு வாங்கலாம்


5. கிறீன் பெர்ரி ஆர்கானிக் பயோ ஆக்ட்டிவ் அண்டர் ஐ ஜெல் (Greenberry Organic Bioactive Under Eye Gel)


6


உங்கள் கண்களை சுற்றி இருக்கும் வீக்கம், கருவளையங்களை நீக்க, மேலும் அதை குளிர்ச்சி ஆக்க இதில் இருக்கும் வைட்டமின் இ மற்றும் அலோவேரா அம்சங்கள் உதவுகிறது. மேலும் அதை பிரகாசமாக்கி சுருக்கங்களை சரி செய்து சருமத்தை புதுப்பொலிவுடன் காட்ட தேவையான அணைத்து இயற்கை அம்சங்களும் இதில் இருக்கிறது. இதில் சல்பெட் மற்றும் பாரபீந் கிடையாது. வெப்பத்தை சமாளித்து உங்கள் கண்களை குளிர வைக்க சிறந்த இது ஒரு சிறந்த ஐ ஜெல் .


நன்மை : எளிதில் பயன்படுத்த பம்ப் பாட்டில் , ஆயுர்வேத பொருட்கள் கொண்டது


குறைபாடு : இந்த விலையில், இதன் அளவு குறைவாக இருக்கலாம்


ரூ 799


இதை இங்கு வாங்கலாம்


6. செயின்ட் பொட்டானிக்கா பியூர் ரெடியன்ஸ் அண்டர் ஐ கிரீம்  (St.Botanica Pure Radiance Under Eye Gel Mask)


7


மற்றுமொரு சிறந்த ஐ ஜெல் மஸ்குகளில் ஒன்றுதான் இந்த செயின்ட் பொட்டானிக்கா பியூர் ரெடியான்ஸ் அண்டர் ஐ கிரீம். இதில் இருக்கும் அனைத்து பொருட்களும் அதாவது வெள்ளரிக்காய், வைட்டமின் A ,E, ஜஜோபா எண்ணெய் ,ஆர்கான் எண்ணெய் அனைத்தும் கண்களை சுற்றி உள்ள சருமம் சம்பந்தப்பட்ட அனைத்து வித குறைபாடுகளை சரிசெய்ய சிறந்த முறையில் பயன்படுகிறது. இதை நீங்கள் சிறிதளவு எடுத்து உங்கள் கண்களை சுற்றியுள்ள பகுதிகளில் தடவிக் கொண்டு இதற்கு மேல் உங்கள் ஒப்பனையை பூசிக்கொள்ளலாம். இதன் லயிட் வெயிட் பார்முலா பிசுபிசுப்புத்தன்மை அற்றது . மேலும் இது உங்களுக்கு தேவையான பிரகாசமான கண்களை விரைவில் நிச்சயம் அளிக்கும்!


நன்மை : உடனடியாக கண்களுக்கு குளிர்ச்சி அளித்து , புத்துணர்ச்சி அளிக்கிறது .
உதடுகள், முகம், கழுத்து பகுதிகளிலும் இதை பயன்படுத்தலாம்


குறைபாடு : இது பயத்திற்கு ஏற்ற பேக் கிடையாது


ரூ 899


இதை இங்கு வாங்கலாம்


7. ஜேஜூன் கிறீன் டீ ஐ ஜெல் பாட்ச் (Jaujun Green Tea Gel Patch) 


8


கிறீன் டியின் அனைத்து நற்குணங்களை கொண்ட இந்த ஜேஜூன் கிரீன் டீ ஜெல் மாஸ்க் உங்கள் கண்களை சுற்றி இருக்கும் கருவளையம், வயதான தோற்றம், வீங்கிய கண்கள், சுருக்கங்கள் இவை அனைத்தையும் சரி செய்து தேவையான ஊட்டச்சத்தை அளித்து ஒரு பிரகாசமான கண்களுக்கு தேவையான அனைத்து பயன்களை அளிக்கிறது. இந்த மாஸ்க் மாதத்திற்கு தேவையான மொத்தம் 60 பேச்சுகள் கொண்ட பாக்கில் வருகிறது. உங்கள் சருமத்தில் மிக மென்மையான இடமான கண்களை சுற்றி இருக்கும் சருமத்தை மிக எளிதில் சரிசெய்ய இதுவே ஒரு சிறந்த மாஸ்க் ஆகும்.


நன்மை : இது தோலை இறுக்கமாகி , பிரகாசமாக்கி வயதான தோற்றத்தை அகற்ற பயன்படுகிறது


குறைபாடு : விலை அதிகம்


ரூ 1,999


இதை இங்கு வாங்கலாம்


மேலும் படிக்க - ஐ ஷாடோவை எவ்வாறு தடவுவது? படிப்படியான விளக்கங்கள் உடன் சில உத்திகள்


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.