Beauty

கெட் தி லுக் : எளிமையான காக்டெய்ல் பார்ட்டி மேக்கப் லுக்கை எவ்வாறு பெறலாம்?

Nithya Lakshmi  |  Aug 22, 2019
கெட் தி லுக் : எளிமையான காக்டெய்ல் பார்ட்டி மேக்கப்  லுக்கை  எவ்வாறு பெறலாம்?

பார்ட்டிகளில் அழகாக உடை அணிவதையும் பிரகாசமாக இருப்பதையும் நாம் அனைவரும் எப்பொழுதும் விரும்புவோம். அதுவும் ஆண்டு முழுவதும் நடக்கும் காக்டெய்ல் பார்ட்டிகள் (cocktail party) என்றால் இதற்கான அசத்தலான தோற்றத்தில் (makeup) செல்வதே நமக்குள் இருக்கும் நம்பிக்கையை முன் வைக்க உதவும். இத்தகைய தோற்றத்தை உங்கள் முக அமைப்பிற்கு ஏற்றதுபோல் ஒத்திகையின் மூலமாகவே அடையமுடியும்.

ஒரு ஒப்பனை கலைஞரை போல் எவ்வாறு அடைவது என்று யோசிக்கிறீர்களா? அதை சரியாக பெறுவதற்கான எளிதான வழிகளை கொண்டு படிப்படியான விளக்கங்களுடன் சில உதாரணங்களையும் கொண்டு நாங்கள் இங்கே தொகுத்துள்ளோம்.

காக்டெய்ல் பார்ட்டி லுக்கை எவ்வாறு பெறுவது?

கன்னங்கள்

  1. எப்போதும் போல முதலில் உங்கள் முகத்திற்கு ஏற்ற ப்ரைமர், ஃபவுண்டேஷன் மற்றும் கன்சீலரை தடவிக்கொண்டு பிரஷால் பெளண்ட் செயுங்கள். 
  2. அடுத்து, ஒரு லூஸ் பௌடரை பிரஷால் எடுத்து இதன் மேல் செட் செயுங்கள். 
  3. அடுத்து, முகத்தை தேவைக்கேற்ப மாற்றி ஒரு மெலிந்த வடிவம் அளிக்க கன்ஸீலிங் மற்றும் கோண்டூரிங் (concealing and contouring) செயுங்கள்.  

கண்கள்

  1. கண்களுக்கு முதலில் ஒரு பேஸ் கோட் அவசியம். 
  2. அடுத்து, கோஹ்ல் (kohl) காஜல் பென்சிலை வைத்து கண்களின் ஓரங்களில்  ‘ > ‘ இந்த வடிவத்தில் வரைந்து , ஒரு ப்ளெண்டிங் பிரஷால் அதை ஸ்மாட்ஜ் செயுங்கள். இதற்கு எந்த ஒரு வடிவமும் தேவை இல்லை. 
  3. இதற்கு மேல், கருப்பு நிற அல்லது ஏதேனும் ஒரு அடர் நிற ஐ ஷாடோவை ( உங்கள் ஆடையுடன் மேட்ச் செய்து ) கண்களின் மடிப்பு வரை அடித்து இதற்கு ஒரு இலகுவான ஸ்மோக்கி தோற்றத்தை குடிக்கலாம். 
  4. இதற்கு மேல், உங்களுக்கு பிடித்த ஒரு நிறத்தை முழு கண்களிலும் அடித்து , அதன் மேல் , உள்ளிருந்து வெளியில் வரும்படி ஒரு கோல்டன் நிறத்தை அடியுங்கள். 
  5. இதற்கு மேல், தேவை பட்டால் ஒரு ஷிம்மர் சில்வர் நிறத்தை அடிக்கலாம். 
  6. கண்களின் கீழ் இமைகளை அழகாகவும் பெரிதாகவும்  காட்ட, கோஹ்ல பென்சிலால் அழுத்தமாக வரையுங்கள். 
  7. மஸ்காரா மற்றும் ஐ பிரௌ கரெக்ட்டர் (eye brow corrector) உடன் , கண்களின் ஒப்பனை முடிந்தது.

உதடு

  1. லிப் பாம் ஒன்றை தடவி கொண்டு, உங்கள் உதட்டு சாயத்தை  தடவுங்கள். 
  2. பார்ட்டி லுக் என்றதால், பளிச்சிடும் நிறங்கள் ஏற்றதாகும். உங்கள் கண்களின் நிறங்கள் மற்றும் ஆடையின் நிறங்களுடன் மேட்ச் செய்து லிஸ்டிக்கை தேர்ந்தெடுங்கள். 
  3. செட்டிங் ஸ்பிரே உடன் உங்கள் ஒப்பனையை முடித்து விடலாம்! 

இதற்க்கு நாங்கள் பரிந்துரைக்கும் தயாரிப்புகளை கீழ் காணலாம் 

  1. M.A.C டெக்னோ கோல் லைனர் கிராப் பிளேக் (ரூ 1,300)  
  2. மேபெலின் நியூயார்க் தி நியூட்ஸ் ஐஷேடோ பாலெட் (ரூ 899)
  3. நிக்கா கே பெர்பெக்ட் 9 கலர் ஐஷேடோ (ரூ 273)
  4. M.A.C ஆம்ப்ளிஃபயிட் லிப்ஸ்டிக் (ரூ 1500)
  5. பாபி பிரவுன் க்ரஷ்ட் உதடு நிறம் – சன்செட் (ரூ 1800)

 

காக்டெய்ல் மேக்கப் லுக்கை அடைய சில உதாரணங்கள்

1. பி போல்ட் லுக்

Instagram

2. மினுக்கும் கண்கள்

Instagram

3. வண்ணமிக்க கண்கள்

Instagram

ஒப்பனை சம்பந்தப்பட்ட விஷயங்களை தெரிந்து கொள்ள இதை படிக்க நீங்கள் விரும்பலாம்

பட ஆதாரம் –  இன்ஸ்டாகிராம் 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.

Read More From Beauty