உங்கள்  ஒப்பனை நீண்ட நேரம்  நீடிக்கவில்லையா?  நாள் முழுவதும் ஜொலிக்க 6 சிறந்த மேக்கப் செட்டிங் ஸ்பிரேக்கள்!

உங்கள்  ஒப்பனை நீண்ட நேரம்  நீடிக்கவில்லையா?  நாள் முழுவதும் ஜொலிக்க 6 சிறந்த மேக்கப் செட்டிங் ஸ்பிரேக்கள்!

எப்பொழுதும் எந்நேரம் ஆனாலும் ஒரு பிரகாசமான தோற்றத்தில் இருப்பதை தான் நம் அனைவரும் விரும்பும் ஒரு விஷயம் ஆகும் ! நீங்கள் ஒருவேளை, உங்கள் ஒப்பனையை நீண்ட நேரம் கடின உழைப்பினால் பூசிய பிறகு, அது போதுமான நேரத்திற்கு உங்கள் முகத்தில் தங்காவிட்டால் வருத்தமாக தான் இருக்கும். அதுவும் கோடைகாலத்தில் வெப்பம் அதிகம் இருக்கும் இடங்களுக்கு செல்லும் போது வியர்வையினால் உங்கள் முகத்தில் ஒப்பனை நீண்ட நேரம் தாங்குமா என்பது கேள்விக்குறி தான்! இதை சரி செய்ய நாங்கள் சில சிறந்த செட்டிங் ஸ்ப்ரேகளை இங்கு பட்டியலிட்டு இருக்கிறோம். இது உங்களுடைய ஒப்பனையை லாக் செய்து நீண்ட நேரம் நீடிக்க வைக்க பயன்படும்.


1. மேக் ப்ரெப் அண்ட் ப்ரைம் மேக்கப் செட்டிங் ஸ்ப்ரே (MAC Prep And Prime Setting Spray)


1


வெள்ளரிக்காய், கெமோமில், கிரீன் டீ கொண்ட  இந்த செட்டிங் ஸ்ப்ரே வறண்ட சருமத்திற்கு மிகப் பொருத்தமான ஒன்றாகும். இது உங்கள்  சருமத்திற்கு ஏற்ற ஈரப்பதத்தை கொடுத்து அதை மிருதுவாகும். மேலும் இது உங்கள் முகத்தை நீண்ட நேரம் பிரகாசமாக வைத்துக்கொள்ள உதவும். உங்களது என்னை கொண்ட சருமமாக  இருந்தால் இதை தவிர்க்கவும்.


நன்மைகள்:  லைட் வெய்ட் போர்முலா, வைட்டமின் கனிமங்கள் நிறைந்துள்ளது


குறைபாடுகள் : விலை கொஞ்சம் உயர்வாக இருக்கலாம்


ரூ 1,800


இதை இங்கு வாங்குங்கள்


2. NYK  ப்ரொபசஷனல் மேட் மேக்கப் செட்டிங் ஸ்ப்ரே (NYK Professional Matte Setting Spray)


2


உங்கள் சருமம் எண்ணை கொண்டதாக இருந்தால் நிச்சயம் உங்கள் ஒப்பனையை  பூசிய சிறிது நேரத்திலே உங்கள் முகம் புத்துணர்ச்சியை இழக்க வாய்ப்பு உள்ளது. அதை தவிர்க்க  இந்த NYK செட்டிங் ஸ்ப்ரேயை நீங்கள் பயன்படுத்தலாம். இது எண்ணை கொண்ட சருமத்திற்கு தயாரிக்கப்பட்ட ஒரு பயனுள்ள பொருளாகும். இது உங்கள் சருமத்தில் இருக்கும் எண்ணெயை உறிஞ்சி ஒரு மேட் பினிஷ் தர உள்ளது.


நன்மைகள் : லைட் வெய்ட் போர்முலா, சுலபமாக பயன்படுத்தலாம்


குறைபாடுகள் : இது எண்ணையை உறிஞ்சினாலும், ஒப்பனையை நீண்ட நேரம் தங்க வைக்காது, சில அம்சங்கள் உங்கள் சருமத்தை மிகவும் வறண்டதாக்கிவிடும்.


ரூ 875


இதை இங்கு வாங்குங்கள்


மேலும் படிக்க - எண்ணெய் கொண்ட சருமத்திற்கான சிறந்த ப்ரைமர்கள்


3. எல் .எ கேர்ள் ப்ரோ ஹை டெபினிஷன் செட்டிங் ஸ்ப்ரே(L.A Girl Pro High Definition Setting Spray)


3


ஒப்பனையை பூசிய  அடுத்த ஒரு மணி நேரத்திலேயே உங்கள் ஒப்பனை வேர்வை என்னை தன்மையைக் கொண்டு கலைந்து போக வாய்ப்பு உள்ளது என்றால்   இந்த எல்.எ.கேர்ள் செட்டிங் ஸ்ப்ரேவை பயன்படுத்துங்கள். இந்த உயர்தர US பிராண்ட் உங்கள் முகத்தை நீண்ட நேரம் பிரகாசமாக வைக்க, மேட் பினிஷ்ஷை குடுத்து , இயல்பான தோற்றத்தை குடுக்க உள்ளது . மேலும் இது ஒரு  வேகன் பொருளாகும்.


நன்மைகள் : பிசுபிசுப்பு தன்மை அற்றது


குறைபாடுகள்: இது சிறிதளவில் வருவதினால் இதன் விலை அதிகமாக தோணலாம்


ரூ 850


இதை இங்கு வாங்குங்கள்


மேலும் படிக்க - யாரும் உங்களிடம் கூறாத சில ஒப்பனை குறிப்புகள்


4. பாபி பிரவுன் பெஸ்  மிஸ்ட் (Bobby Brown Face Mist)


4


பாபி பிரவுன்  பல தரமான ஒப்பனை பொருட்களை தயாரித்து வரும் ஒரு பிராண்ட் ஆகும். இதில் வரும் இந்த செட்டிங் ஸ்ப்ரே பெஸ் மிஸ்ட் சல்பேட் மற்றும் பாரபீந் பிரீ ஆகும். மேலும் இது  ஒரு வேகன் பொருளாகும் . உங்கள் ஒப்பனையை முடித்துவிட்டு 10 - 12 இஞ்சுகள் தள்ளியபடி உங்கள் முகத்தில் அடித்துக் கொண்டு வெளியில் செல்லலாம் . மேலும் முகம் மந்தமாக தோன்றும் நேரங்களிலும் இதை அடித்து  நாள் முழுவதும் ஜொலிக்கலாம்!


நன்மைகள் :   பல பயன்கள் உள்ளது. மேக்கப்பிற்கு முன்னாள் ஒரு டோனராகவும் ஒப்பனையை பூசிவிட்டு செட்டிங் ஸ்ரேயாவும் அடித்து கொள்ளலாம் , இது எல்லாவித சருமத்திற்கும் பொருத்தமானது


குறைபாடுகள் : விலை அதிகம்


ரூ 2,450


இதை இங்கு வாங்குங்கள்


5. லோரியல் பாரிஸ் இந்பாலிபல்  ப்ரோ ஸ்ப்ரே அண்ட் செட் மேக்கப் எக்ஸ்டெண்டர் ( L'Oreal Paris Spray And Set Makeup Extender)


5-


உங்கள் ஒப்பனையை முற்றிலும் லாக் செய்து நாள் முழுவதும் பிரகாசமாக தோன்ற , லோ ரியல் பாரிஸ் செட்டிங் ஸ்ப்ரே உதவுகிறது. இதில் இருக்கும் போர்முலா உங்கள் ஒப்பனையை கரையாமல், மந்தமாகாமல் பாதுகாக்கிறது ! உங்கள் முகத்தில் சிறிது தூரத்தில் வைத்து இதை ஸ்ப்ரே செய்துகொண்டு நீங்கள் வெளியில் எளிதில் செல்லலாம். இது அணைத்து  விதமான சருமத்திற்கும் ஏற்றது.


நன்மைகள் : லேசான தோற்றத்தை அளிக்கும் , எளிதில் பயன்படுத்தலாம் , மலிவான விலை


குறைபாடுகள் : இதில் இருக்கும் அம்சங்கள் உங்கள் சருமத்தை மேலும் வறண்டதாக்கலாம்.


ரூ 800


இதை இங்கு வாங்குங்கள்


6. கிளினிக் மொய்ஸ்சுர் செர்ஜ் பெஸ் ஸ்ப்ரே (Clinique Moisturizer Surge Face Spray)


6


கிளினிக்  எனும் புகழ்பெற்ற  பிராண்ட், சருமத்திற்கு ஏற்ற,வாசனை திரவியங்கள் மற்றும் பாரபின் இல்லாத தரமான பொருட்களை தயாரித்து வருகிறார்கள். இந்த பிராண்டில் வரும் அனைத்து ஒப்பனை பொருட்களும் சருமத்தின் மேல் சோதனையிட்டு மருத்துவத்துறையில் நிரூபிக்கப்பட்ட சூத்திரங்களை கொண்டு தயாரித்து வருகிறார்கள் .அந்த வகையில் வரும் இந்த செட்டிங் ஸ்ப்ரே உங்கள் சருமத்தை மிருதுவாக்கி மென்மையாக்க உதவுகிறது. வறண்ட சருமத்திற்கு இது பொருத்தமான ஸ்பிரே  ஆகும். இது உங்கள் சருமத்திற்கு தேவையான ஊட்டச்சத்தை அளித்து நாள் முழுவதும் ஜொலிக்க வைக்கும்!


நன்மைகள் : ஒப்பனையின் முன்பும், பின்பும் இதை பபயன்படுத்தலாம்


குறைபாடுகள்: விலை அதிகம்


ரூ 3,250


இதை இங்கு வாங்குங்கள்


மேலும் படிக்க - 'நோ - மேக்கப்'  மேக்கப் லுக் அடைவதற்கான யுத்திகள்


பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  ,இன்ஸ்டாகிராம்  


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.