Food & Nightlife

பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் … வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் ரெசிபிகள்!

Swathi Subramanian  |  Dec 23, 2019
பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் … வீட்டிலேயே செய்யக்கூடிய சிம்பிள் ரெசிபிகள்!

கிறிஸ்துமஸ் பண்டிகை நெருங்கிவிட்டது. பண்டிகையை கொண்டாட பலரின் வீடுகளிலும் வகை வகையான இனிப்புகள் மற்றும் பலகாரங்கள் செய்ய தொடங்கியிருப்பார்கள். ஆனால் எத்தனை இனிப்புகள் வந்தாலும் கிறிஸ்துமஸ் கேக் (christmas cake) என்பது எப்போதும் ஸ்பெஷல் தான். 

இந்த கிறிஸ்துமஸ் கேக்கை ப்ளம் கேக் என்றும் அழைக்கின்றனர். தற்போதெல்லாம் பாரம்பரிய கிறிஸ்துமஸ் கேக் அவ்வளவு எளிதாக கடைகளில் கிடைப்பதில்லை. இந்த கிறிஸ்துமஸ் பண்டிகைக்கு உங்கள் வீட்டிலேயே நீங்கள் கேக் செய்யலாம்.

pixabay

தேவையான பொருட்கள்:

மைதா – 1 கப், 2 ஸ்பூன்,
வெண்ணெய் – 1/4 கப், 
பொடித்த சர்க்கரை – 1 கப்,
பேக்கிங் பவுடர் – 3/4 ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1/2  ஸ்பூன்,
வெனிலா எசென்ஸ் – 1 ஸ்பூன்,
முட்டை – 3,
செர்ரி பழத் துண்டுகள் – 1/4 கப்,
ட்யூட்டி புரூட்டி – 1 கப்,
கிஸ்மிஸ், பாதாம், முந்திரி, பேரிட்சை – தலா 1/4 கப்,
ஆரஞ்சு சுளைகள் – 2 டேபிள் ஸ்பூன். 

மேலும் படிக்க – கால்சியம் சத்து நிறைந்த ஆரோக்கிய சாலட் வகைகள்… வீட்டிலேயே எளிமையாக செய்யலாம்!

கேராமல் தயாரிக்க…

பொடித்த சர்க்கரை – 1/2 கப்,
தண்ணீர் – 1/2 கப்.

மசாலா பவுடருக்கு…

கேராவே விதை பவுடர் – 1 ஸ்பூன்,
பட்டை, கிராம்பு, சுக்கு பவுடர் தலா – 1/4 ஸ்பூன்.

pixabay

செய்முறை

முதலில் அடி கனமான பாத்திரத்தில் சர்க்கரையைப் போட்டு ஒரு டேபிள் ஸ்பூன் தண்ணிர் விட்டு  அடுப்பில் வைத்து கிளற வேண்டும். சர்க்கரை முழுதாக கரைந்தவுடன் உடனடியாக அரைக் கப் தண்ணீர் ஊற்றி நன்கு கலக்கி இதில் நறுக்கிய நட்சை போட்டு கலந்து இரண்டு நிமிடங்கள் கொதித்த பின் ஆற விடவும்.

பின்னர் நன்கு ஆறியவுடன் மைதா, பேக்கிங் சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து, கலந்து இந்தக் கலவையை கேக் டிரேயில் ஊற்றி தனியாக வைக்கவும். முட்டையின் வெள்ளைக் கருவை மட்டும் ஊற்றி, அதில் வெனிலா சேர்த்து நன்கு கலக்கி வேறு ஒரு பாத்திரத்தில் சர்க்கரை, வெண்ணெய், கிரீம் சேர்த்து, கலந்து இதனை முட்டை கலவையுடன் சேர்த்து நன்கு கலக்க வேண்டும்.

மேலும் படிக்க – சீரகத்தை கொதிக்க வைத்த நீரை குடிப்பதால் கிடைக்கும் அற்புத நன்மைகள்!

பின்னர் கேக் டிரேயில் உள்ள கேரமல் கலவையில் சிறிது சிறிதாக ஊற்றி கலந்து கொள்ளவும். இதை பேக்கிங் டிரேயில் ஊற்றி பிரஷர் குக்கரில்  இந்த டிரேயை வைத்து 50 நிமிடங்கள் மிதமான பின் அதிக சூட்டில் மாற்றி, மாற்றி வைக்க வேண்டும். கேக் மணம் வந்தவுடன் அடுப்பை அணைத்துவிட்டு மெதுவாக வெளியில் எடுத்து, சர்க்கரை, நட்சுடன் அலங்கரித்தால் பிளம் கேக் (christmas cake)  தயார்! 

 

 

கிறிஸ்துமஸ் கேக்

தேவையான பொருட்கள்

மைதா –  1 கப், 
நாட்டுச் சர்க்கரை – கப், 
உப்பு, உலர்ந்த பழங்கள் – தேவையான அளவு,
முட்டை – 3 ,
வெண்ணெய் – 1/4 கப், 
பாதாம் – தேவையான அளவு,
வெண்ணிலா எசன்ஸ் – 1ஸ்பூன்,
பேக்கிங் சோடா – 1 ஸ்பூன்,
ஆரஞ்சு மற்றும் எலுமிச்சை தோல் சீவியது – 1 ஸ்பூன்,
ஏலக்காய், கிராம்பு, பட்டை அரைத்த பொடி – 1 ஸ்பூன்.

pixabay

செய்முறை

முதலில் வெண்ணெய் மற்றும் நாட்டுச் சர்க்கரையை ஒரு பாத்திரத்தில் கொட்டி நன்குக் கலக்க வேண்டும்.  இதனுடன் முட்டைகளை உடைத்து அதையும் நன்குக் கலந்துகொள்ள வேண்டும்.

பின் மைதா மாவு, உப்பு, வெண்ணிலா எசன்ஸ் மற்றும் பேக்கிங் சேடா ஆகியவற்றையும் சேர்த்து கிளற வேண்டும். இறுதியாக உலர்ந்த பழங்கள், எலுமிச்சை, ஆரஞ்சு பழத்தின் தோலை சீவி அதை ஒரு ஸ்பூன் சேர்த்து நன்கு சீராகக் கலக்க வேண்டும்.

பின் அதை ஒரு வட்டமான பாத்திரத்தில் கொட்டி அதன் மேல் பாதாமை தூவவும். அவன் இருந்தால் அதில் வேக வைக்கலாம். குக்கரில் அடியில் உப்பு கொட்டி அதன் மேல் அந்த பாத்திரத்தை வைத்து மிதமான சூடு பதத்தில் 50 நிமிடங்கள் வைக்க வேண்டும். பின் திறந்து பார்த்தால் கேக் உப்பி வந்திருக்கும். சுவையான கிறிஸ்துமஸ் கேக் (christmas cake) தயார்.

மேலும் படிக்க – குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Food & Nightlife