logo
ADVERTISEMENT
home / Food & Nightlife
குளிர்காலத்துக்கு  ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

குளிர்காலத்துக்கு ஏற்ற ஆரோக்கியமான சூப் வகைகள்

இதோ இந்த வருடம் முடிய போகிறது. நான்கு சீசன்களில் இறுதி சீசன் ஆன குளிர்காலத்தில் நாம் இருக்கிறோம். இந்த குளிர்காலத்திற்கேற்ற வெதுவெதுப்பூட்டும் மற்றும் ஆரோக்கியம் தரும் சூப் வகைகள் (soup varieties)  மற்றும் அதனை சமைக்கும் முறைகள் உங்களுக்காக. 

சூப் குடிப்பதால் ஏற்படும் நன்மைகள்

சூப் என்பது உங்கள் வயிற்றுக்கு இதம் தரும் தன்மை கொண்டது. 

சூப் என்பது சைவம் மற்றும் அசைவம் இரண்டிலுமே தயார் செய்ய முடியும்.

சூப் என்பது நார்ச்சத்து மற்றும் நீர்சத்துக்களை அதிகம் கொண்டது 

ADVERTISEMENT

சூப் என்பது சில சமயங்களில் ஒரு முழுமையான உணவுக்குரிய ஊட்டச்சத்துக்களை வழங்குகிறது.

சூப் என்பது பல்வேறு விதமான சுவைகளில் உங்களால் தயாரிக்க முடியும். 

சூப் என்பது ஊட்ட சத்துள்ள உணவுகளில் முதன்மையானது.

சூப் அருந்துவதன் மூலம் உடல் ஆரோக்கியம் மேம்படும். தேவையற்ற கொழுப்புகள் கரைய சூப் உதவுகிறது.

ADVERTISEMENT

சூப் தயாரிக்கும் முறையில் சத்துக்கள் வீணாக்காமல் சேமிக்கப்படுகின்றன. அதனால் சூப் மற்ற உணவுகளை விட ஆரோக்கியமானதாக கூறப்படுகிறது.

 

குளிர்காலத்துக்கு ஏற்ற சூப் வகைகள்

இனி மார்கழி தொடங்கப் போகிறது. இந்த நேரத்தில் குளிர்காலத்துக்கு ஏற்ற சூப் வகைகளை சைவம் மற்றும் அசைவம் இரண்டிலும் செய்து பார்த்து வீட்டில் உள்ளோரை ஆரோக்கியமாக வைத்திருங்கள்.

ADVERTISEMENT

சைவ சூப்கள் உடலுக்கு ஆரோக்கியம் தருவதில் முதன்மையானது. இதில் பலவிதமான சூப் வகைகள் செய்யமுடியும். எல்லா வகை காய்கறிகளுடனும் இந்த சூப்களை செய்ய முடியும். எலும்புகள் மற்றும் நரம்புகள் ஆரோக்கியம் அடைய இந்த சைவ சூப்களை செய்து பருகுங்கள்.

 

சைவ சூப் வகைகள்

மூலிகை சூப்

கொல்லிமலை போன்ற இயற்கை சார்ந்த இடங்களுக்கு சென்றால் அப்போதுதான் பறிக்கப்பட்ட மூலிகைகளை கொண்டு நாவுக்கு இதமான சூப் செய்து தருவார்கள். இது இப்போது நீங்கள் வசிக்கும் இடங்களுக்கு அருகேயும் கிடைக்கிறது. இதனை வீட்டிலேயே எப்படி செய்யலாம் என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள் :

ADVERTISEMENT


மிளகு – 20 கிராம்

சீரகம் – 20 கிராம்,

கண்டதிப்பிலி, அரிசித் திப்பிலி – தலா 10 கிராம்,

ஓமம் – 20 கிராம்,

ADVERTISEMENT

துளசி உலர்ந்தது – ஒரு கைப்பிடி,

உலர்ந்த கற்பூரவல்லி இலை – ஒரு கைப்பிடி,

பாசிப்பருப்பு – ஒரு டேபிள்ஸ்பூன்,

கறுப்பு உளுந்து – 2 டேபிள்ஸ்பூன்,

ADVERTISEMENT

உப்பு – தேவையான அளவு.

செய்முறை 


அனைத்துப் பொருட்களையும் வெறும் வாணலியில் ஒவ்வொன்றாக வறுத்து ஆற வைத்து மிக்ஸியில் போட்டு பொடித்துக்கொள்ளவும். அடுப்பில் ஒரு பாத்திரம் வைத்து அதில் 2 கப் தண்ணீர் ஊற்றி கொதிக்க ஆரம்பித்தவுடன் இந்தப் பொடியை ஒரு ஸ்பூன் அளவு எடுத்து அதில் கலந்து நன்றாகக் கொதித்து 1 கப்பாக வற்றியதும் இறக்கி பருகவும்.

ADVERTISEMENT

Pixabay

தக்காளி மஞ்சள் சூப்

தேவையான பொருட்கள்


3 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

2 வெங்காயம், நறுக்கியது

ADVERTISEMENT

2 தேக்கரண்டி நறுக்கிய புதிய தைம் (அல்லது 2 தேக்கரண்டி உலர்ந்த)

7 மஞ்சள் தக்காளி, கோர்ட்டு, துண்டுகளாக வெட்டப்படுகிறது

6 கப் பதிவு செய்யப்பட்ட குறைந்த சோடியம் சிக்கன் குழம்பு

உப்பு மற்றும் மிளகு

ADVERTISEMENT

croutons:

2 ரொட்டிகள் பிரஞ்சு ரொட்டி, 24 1/2-inch தடிமனான துண்டுகள் 

6 தேக்கரண்டி உப்பு சேர்க்காத வெண்ணெய், உருகியது

2 கிராம்பு பூண்டு, பாதியாக

ADVERTISEMENT


ஒரு பெரிய வாணலியில் ஆலிவ் எண்ணெயை சூடாக்கவும். வெங்காயம் சேர்த்து சமைக்கவும், தைம் சேர்த்து 1 நிமிடம் சமைக்கவும். தக்காளி மற்றும் குழம்பு சேர்க்கவும். தக்காளியை மென்மையாக்கி, சூப் சிறிது கெட்டியாகும் வரை, 25 முதல் 30 நிமிடங்கள் வரை, ஒரு வேகவைத்து, சமைக்கவும். உப்பு மற்றும் மிளகுடன் இறக்கவும்.

காலிப்ளவர் சிவப்பு மிளகாய் சூப்

தேவையான பொருட்கள் :

காலிப்ளவர்- 100gm

சிவப்பு மிளகாய் – 1/2

ADVERTISEMENT

பெ வெங்காயம் – 1 (பொடியாக நறுக்கியது )

இஞ்சி – 1/2 இன்ச்

பூண்டு – 3 பல்

சீரகம் – 1 tsp

ADVERTISEMENT

மிளகு – 1 tsp

தேங்காய் எண்ணெய் – 2 tbsp

கொத்தமல்லி தூள் – 1/2 tsp

செய்முறை:

ADVERTISEMENT

வாணலியில் தேங்காய் எண்ணெய் காயவைத்து , சீரகம், பெரிய வெங்காயம் போட்டு வணக்கவும். பின் காலிப்ளவர் சேர்த்து சிறுது வணக்கிய பின் சிவப்பு மிளகாய் சேர்த்து வணங்கவும். இஞ்சி, பூண்டு, மிளகு சேர்த்து , இவை அனைத்தும் மூழ்கும் வரை தண்ணீர் வூற்றி வேகவைக்கவும். ஆறியய பின் தண்ணீரோடு mixieயில் grind செய்து பரிமாறவும்.

மிளகு சூப்

தேவையான பொருள்கள் 


கொரகொரப்பாக

அரைத்த மிளகு – 1 டீஸ்பூன்

ADVERTISEMENT

சுக்குப் பொடி – 1 டீஸ்பூன்

பூண்டுப் பல் – 3

தக்காளி – 1

மஞ்சள் தூள் – 1 சிட்டிகை

ADVERTISEMENT

சின்ன வெங்காயம் – 2

கொத்தமல்லி, கறிவேப்பிலை – சிறிது

உப்பு – தேவைக்கு

நெய் – அரை டீஸ்பூன்

ADVERTISEMENT

செய்முறை


கடாயில் நெய்விட்டுச் சூடானதும்  நறுக்கிய வெங்காயத்தையும் நறுக்கிய பூண்டையும் போட்டு வதக்கிக்கொள்ளுங்கள். இதனுடன்  தக்காளி, மஞ்சள் தூள், மிளகுப் பொடி, சுக்குப் பொடி, கொத்தமல்லி, கறிவேப்பிலை, உப்பு ஆகியவற்றைப் போட்டு நன்றாக வதக்கிக்கொள்ளுங்கள். அதன்பின்  இரண்டு டம்ளர் தண்ணீர் ஊற்றிக் கொதிக்கவிடுங்கள். இந்த சூப் கலவை நன்றாக வெந்து ஒரு டம்ளர் அளவுக்குக் குறைந்ததும் அடுப்பை அணைத்து மூடிவிடுங்கள். நல்ல மிதமான சூட்டில் வடிகட்டிப் பருகுங்கள். 

காளான் சூப்

தேவையான பொருட்கள்: 


காளான் – 100 கிராம் (பொடியாக நறுக்கியது) 

ADVERTISEMENT

இஞ்சி பூண்டு பேஸ்ட் – 1/4 டீஸ்பூன் 

புதினா மற்றும் மல்லி – சிறிது (நறுக்கியது) 

சோள மாவு – 1 டேபிள் ஸ்பூன் 

உப்பு – தேவையான அளவு 

ADVERTISEMENT

வெண்ணெய் – தேவையான அளவு 

மிளகு தூள் – தேவையான அளவு


ஒரு பாத்திரத்தில் பாதி அளவு தண்ணீர் நிரப்பி, அடுப்பில் வைத்து நீரை  கொதிக்க விடவும். நன்கு கொதித்ததும் பொடியாக நறுக்கிய காளானை சேர்த்து, 5 நிமிடம் கொதிக்க வைத்து இறக்கி நீரை வடித்து காளானை தனியாக வைத்துக் கொள்ள வேண்டும். 

கடாயை அடுப்பில் வைத்து, அதில் வெண்ணெய் சேர்த்து இஞ்சி பூண்டு பேஸ்ட் சேர்த்து கிளறி விடவும். அதன்பின் புதினா மற்றும் மல்லியை சேர்த்து 1 நிமிடம் வதக்கி பின் 1/2 டேபிள் ஸ்பூன் சோள மாவை சேர்த்து கிளற வேண்டும். பிறகு மீதமுள்ள சோள மாவு மற்றும் உப்பை, தேவையான அளவு தண்ணீரில் கரைத்து, வாணலியில் ஊற்றி 5 நிமிடம் கொதிக்க விட வேண்டும். அதன் பின்  வேக வைத்துள்ள காளானை அத்துடன் சேர்த்து, 10 நிமிடம் நன்கு கொதிக்க விட்டு இறக்க வேண்டும். காளான் சூப் தயார். தேவைக்கு மிளகுப்பொடி தூவிக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

Pixabay

காய்கறி சூப்

தேவையான பொருட்கள்:

பீன்ஸ், கேரட், முட்டைகோஸ் – 150 கிராம்

ADVERTISEMENT

தக்காளி – 2

மிளகுத் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு – தேவையான அளவு


கொடுக்கப்பட்ட காய்கறிகள் மற்றும் தக்காளியை பொடியாக நறுக்கவும். நறுக்கிய காய்களை கொஞ்சம்  தண்ணீர் விட்டு குக்கரில் போட்டு நன்கு வேக வைக்கவும். அதன்பின் இறக்கி நன்றாக ஆற வைக்கவும்.

ADVERTISEMENT

தண்ணீரை வடித்து ஒரு கிண்ணத்தில் தனியாக வைத்துவிட்டு, காய்கறியை மிக்சியில் போட்டு நைசாக அரைக்க வேண்டும். .இந்த அரைத்த விழுதுடன் வடித்து வைத்த தண்ணீரைச் சேர்க்கவும். மீண்டும் லேசாக சூடு படுத்தவும், உப்பு மிளகு தேவையான அளவு சேர்க்கவும்.

 

ஸ்வீட் கார்ன் சூப்

தேவையான பொருட்கள் :


சோளம் – 4,

ADVERTISEMENT

வெங்காயம் – 1,

வெண்ணெய் – 1 டேபிள் ஸ்பூன்,

பால் – 1 கப்,

அஜினோ மோட்டோ – அரை டீஸ்பூன்,

ADVERTISEMENT

வெள்ளை மிளகுத்தூள் – தேவையான

உப்பு, சர்க்கரை – தேவையான அளவு,

சோயா சாஸ் – சில துளிகள்,

இஞ்சி – ½ அங்குலத்துண்டு.

ADVERTISEMENT

 

வெங்காயத்தை பொடியாக நறுக்கி கொள்ளவும்.மக்கா  சோளத்தை உரித்து, பெரிய கண் உடைய துருவியில் லேசாகத் துருவிக்கொள்ளவும். வாணலியில் வெண்ணெய் போட்டு சூடானதும் வெங்காயத்தை போட்டு வதக்கவும். குக்கரில் துருவிய சோளத்தை போட்டு அதனுடன் பால், தண்ணீர், வதக்கிய வெங்காயம், இஞ்சி சேர்த்து பிரஷர் குக்கரில் பத்து நிமிடங்கள் சோளம் நன்கு வேகும் வரையில் வெயிட் போட்டு வேகவிடவும்.

வெந்தபின் ஆறவைத்து, இஞ்சித்துண்டை எடுத்துவிடவும். வேகவைத்த முழு சோளம்  இரண்டு டேபிள்ஸ்பூன் அளவுக்குத் தனியே எடுத்து வைக்கவும். மீதமுள்ளவற்றை மிக்ஸியில் போட்டு அரைத்து நன்கு வடிகட்டி தேவையான அளவுக்கு தண்ணீர் சேர்த்து கொள்ளவும்.

முட்டைகோஸ் சூப்

இது உடல் எடை குறைப்பிற்கு உதவுகிறது. 

ADVERTISEMENT


தேவையான பொருட்கள்:


முட்டைகோஸ் 250 கிராம்

வெள்ளை பூசணிக்காய் : 250 கிராம்

வெங்காயம் : 3

ADVERTISEMENT

உருளைக்கிழங்கு : 2

சோள மாவு : தேவைகேற்ப

வெண்ணெய் : 1 தே‌க்கர‌ண்டி

உப்பு, மிளகுத்தூள் : தேவைகேற்ப

ADVERTISEMENT

முதலில் கொடுக்கப்பட்ட கா‌ய்க‌றிகளை பொடியாக நறு‌க்‌கி‌க் கொ‌ள்ள வேண்டு‌ம். அதன்பிறகு  வாண‌லி‌யி‌ல் வெண்ணெயை போ‌ட்டு அடுப்பில் வைத்து, ‌சி‌றிது சோ‌ம்பு சே‌ர்‌த்து தா‌ளி‌க்கவு‌ம்.‌உடன்  பொடியாக நறு‌க்‌கிய முட்டைகோஸ், பூசணிக்காய், வெங்காயம், உருளைக்கிழங்கு முதலியவைகளை போ‌ட்டு ந‌ன்கு வத‌க்கவு‌ம்.

அதன் பிறகு  ஒரு கப் தண்ணீர் சேர்த்து 20 நிமிடம் வேக விடவும். ந‌ன்கு வெ‌ந்தது‌ம், ‌சி‌றிது சோள மாவை த‌ண்‌ணீ‌ரி‌ல் கரை‌த்து சூ‌ப்‌பி‌ல் ஊ‌ற்‌றி ‌கிள‌றி ‌விடவு‌ம்.தேவையான  அள‌வி‌ற்கு உப்பு, மிளகுத்தூள் சேர்த்து, கொ‌த்தும‌ல்‌லி தூ‌வி சூடாக பரிமாறவும்.

கேரட் இஞ்சி சூப்

தேவையான பொருட்கள்பூண்டு – இரண்டு பல் (நறுக்கியது).இஞ்சி துண்டு – இரண்டு.காரட் – ஒரு கப் (துருவியது).தண்ணீர் – தேவைகேற்ப.கருப்பு மிளகு தூள் – தேவைகேற்ப.லெமன் ஜூஸ் – ஒரு டீஸ்பூன்.கொத்தமல்லி – சிறிதளவு.உப்பு – தேவையான அளவு.

குக்கரில் எண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பூண்டு, இஞ்சி, காரட் போட்டு வதக்கவும்.பின்னர் தண்ணீர் ஊற்றி மூடி போட்டு மூன்று விசில் வந்தவுடன் இறக்கி இஞ்சி துண்டுகளை எடுத்துவிடவும். அதன் பிறகு மீதி உள்ள கலவையை விழுதாக அரைத்து கொள்ளவும். அப்படி அரைத்த விழுதுடன் தண்ணீர் சிறிதளவு சேர்த்து (மிதமான சூடு உள்ள தண்ணீர்) அடுப்பில் வைத்து சூடு பண்ணவும் (கொதிக்க கூடாது).தேவையான அளவு உப்பு, மிளகு தூள் சேர்த்து கிளறி இறக்கவும்.இதன் உடன் சுவைக்கு லெமன் ஜூஸ் பிழிந்து, கொத்தமல்லி துவி பரிமாறவும்.

ADVERTISEMENT

Pixabay

முருங்கை இலை சூப்

தேவையான பொருட்கள்: 

முருங்கை இலை – 2 கப் 

ADVERTISEMENT

கேரட் துருவல் – அரைகப் 

தேங்காய் துருவல் – அரைகப்

பெரிய வெங்காயம் – 2 

இஞ்சி துண்டுகள் – 3 

ADVERTISEMENT

பூண்டு – 1 

மல்லி இலை – ஒரு பிடி 

உப்பு – தேவையான அளவு

மிளகு தூள் – ஒரு தேக்கரண்டி

ADVERTISEMENT

சீரகம் – ஒரு தேக்கரண்டி

நெய் – 2 தேக்கரண்டி

பெருங்காயத்தூள் – சிறிதளவு

முருங்கை இலையை தனித்தனியாக கிள்ளி வைத்துக் கொள்ளுங்கள். பெரிய வெங்காயம், இஞ்சி இரண்டையும்  சிறிதாக நறுக்கவும். இதனுடன் கொத்தமல்லி இலையையும் நறுக்கி வைத்துக்கொள்ளுங்கள். 

ADVERTISEMENT

இதனுடன் கேரட் துருவல், தேங்காய் துருவல், பூண்டு, போன்றவைகளை சேர்த்து அதில் ஐந்து கப் தண்ணீர் விட்டு கொதிக்கவையுங்கள். வெந்து வரும் தண்ணீரை வடிகட்டி எடுத்து வைத்துக்கொள்ளுங்கள்.

கடாயை சூடாக்கி நெய் அல்லது தேங்காய் எண்ணையை ஊற்றி  சூடானதும் சீரகம், முருங்கை இலையைக் கொட்டி லேசாக வதக்குங்கள். இதனுடன் வேகவைத்த பொருட்களையும் ஒன்றாக்கி மிக்சியில் போட்டு அரைக்கவும். இந்த விழுதில் ஏற்கனவே எடுத்து வைத்திருக்கும் சூப்பையும் சேர்த்து மீண்டும் கொதிக்கவிடுங்கள். உடன்  மிளகுதூள், காயத்தூள், உப்பு போன்றவைகளைச் சேர்த்து இறக்கவும். சத்துக்கள் மிகுந்த முருங்கை கீரை சூப் தயார்.

 

ADVERTISEMENT

அசைவ சூப் வகைகள்

சூப் என்றாலே அசைவம் இல்லாமலா ! நாவிற்கினிய உடலுக்கு ஆரோக்கியம் நல்கும் சில அசைவ சூப் வகைகள் எப்படி தயாரிக்கலாம் என்பதை பார்க்கலாம். 

நாட்டுக்கோழி சூப்

தேவையான பொருட்கள்:

நாட்டுக் கோழி – 1/4 கிலோ (எலும்புடன்) 

சின்ன வெங்காயம் – 12 

ADVERTISEMENT

தக்காளி – 1 

பச்சை மிளகாய் – 2 

பூண்டுப் பல் – 7 

மிளகு (பொடித்தது) – 1 தேக்கரண்டி 

ADVERTISEMENT

சீரகப் பொடி – 1/2 தேக்கரண்டி 

மஞ்சள் தூள் – 1/4 தேக்கரண்டி 

உப்பு – தேவையான அளவு 

கறிவேப்பிலை, மல்லித் தழை – சிறிதளவு

ADVERTISEMENT

செய்முறை:

கோழியை சுத்தம் செய்து கொள்ளுங்கள். 


அதனுடன்  3/4 லிட்டர் தண்ணீர் சேர்த்து நசுக்கிய சின்ன வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய், பூண்டு, மிளகு, சீரகம், உப்பு, மஞ்சள் தூள், கறிவேப்பிலை, மல்லித் தழை சேர்த்து நன்றாகக் கொதிக்கவிட்டு இறக்குங்கள். 


அற்புத சுவையுடன் சூடான நாட்டுக்கோழி கோழி சூப் தயார்.

ADVERTISEMENT

சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்:

கோழிக்கறி (எலும்புடன்) – 1/2 கிலோ

சின்ன வெங்காயம் – 50 கிராம்

சீரகத்தூள் – 1 தேக்கரண்டி

ADVERTISEMENT

மிளகுத்தூள் – 1 தேக்கரண்டி

பச்சை மிளகாய் – 1

தக்காளி – 1

இஞ்சி – 1  துண்டு

ADVERTISEMENT

பூண்டு – 5 பல்

பட்டை, லவங்கம் – தலா 1

மிளகாய்த்தூள் – 1 தேக்கரண்டி

தனியாத்தூள் – 1 தேக்கரண்டி

ADVERTISEMENT

மஞ்சள்தூள் – 1 /2  தேக்கரண்டி

உப்பு, எண்ணெய் – தேவையான அளவு

கொத்தமல்லி தழை – சிறிதளவு

எலுமிச்சை சாறு – தேவைக்கு ஏற்ப

ADVERTISEMENT

 

செய்முறை:

சிக்கனை நன்றாக சுத்தம் செய்து கொள்ளவும். அதனுடன்  இஞ்சி, கொத்தமல்லி, பூண்டை விழுதாக அரைத்துக் கொள்ளவும். தக்காளி, பச்சை மிளகாய், சின்ன  வெங்காயத்தை தோல் உரித்து இரண்டாக நறுக்கி கொள்ளவும்.

குக்கரை அடுப்பில் வைத்து எண்ணெய் ஊற்றி சூடானதும் பட்டை, லவங்கம் போட்டு தாளித்த பின் வெங்காயத்தை சேர்த்து வதக்கவும். அதன்பின் இஞ்சி, பூண்டு விழுது சேர்த்து பச்சை வாசனை போக வதக்கவும். அதன்பின்  தக்காளி, பச்சை மிளகாய் சேர்த்து நன்கு மசியுமாறு வதக்கிக் கொள்ளவும்.

ADVERTISEMENT

எல்லாம் வதங்கியபின் மிளகுத்தூள், சீரகத்தூள், மிளகாய்த்தூள், தனியாத்தூள், மஞ்சள்தூள், உப்பு, கோழிக்கறி சேர்த்து நன்கு கலக்கி, 6 விசில் வரும்  வரை வேக விடவும். பின்னர் சிக்கன் சூப்பில் கொத்தமல்லி, எலுமிச்சைசாறு பிழிந்து பரிமாறவும். சுவையான சிக்கன் சூப் தயார்.

Pixabay

மட்டன் எலும்பு சூப்

தேவையான பொருள்கள்

ADVERTISEMENT


எலும்புத் துண்டுகள் – கால் ‌கிலோ

மிளகு – 1 ஸ்பூன்

‌சீரகம் – 1 ஸ்பூன்

சோம்பு – 1 ஸ்பூன்

ADVERTISEMENT

வெங்காயம் – 2

வெண்ணெய் – 1 ஸ்பூன்

உப்பு – தேவையான அளவு

இஞ்சி,பூண்டு விழுது – 1 ஸ்பூன்

ADVERTISEMENT

மஞ்சய்தூள் – அரை ஸ்பூன்


செய்முறை :


ஆட்டு எலும்பு து‌ண்டுகளை ந‌ன்கு கழுவி அதனுடன் இஞ்சி,பூண்டு விழுது., மஞ்சள் தூள்,உப்பு ,மிளகு, ‌சீரகத்தை பொடி செய்து தேவையான அளவு த‌‌ண்‌ணீ‌ர் வை‌த்து வேக வைக்கவும்.வாணலியில்  வெண்ணெயை உருக்கி, அதில் சோம்பை போடவும். சோம்பு ‌சிவ‌ந்தது‌ம் வெங்காயத்தை போ‌ட்டு வத‌‌க்‌கவும். அதனுடன் கழுவி வைத்த எலு‌ம்பு‌ச் சா‌ற்றை ஊ‌ற்றவு‌ம். எலு‌ம்பு‌ச் சாறு ந‌ன்கு கொ‌தி‌த்து மணமாக வரு‌ம்போது கொ‌த்தும‌ல்‌லி, க‌றிவே‌‌ப்‌பிலை தழைகளை‌த் தூ‌வி இற‌க்கவு‌ம்.

ஸ்க்விட் சூப்

ஸ்க்விட் மோதிரங்கள் – 250 கிராம்கள்

ADVERTISEMENT

தக்காளி – 4 துண்டுகள்

லீக்ஸ் – 1 பீஸ்

வெங்காயம் – 1 துண்டு

பூண்டு – 4 பற்கள்

ADVERTISEMENT

பச்சை பீன்ஸ் (உறைந்த) – 400 கிராம்

வோக்கோசு, மூட்டை – 1 துண்டு

காய்கறி எண்ணெய் – 3 பொருட்கள். கரண்டி

உப்பு, மிளகு – ருசிக்க

ADVERTISEMENT


தக்காளி கழுவவும், உப்பு சேர்த்து தெளித்து 40 நிமிடங்கள் ஒரு preheated அடுப்பில் ஒரு பேக்கிங் தாள் மீது வைக்கவும். காய்கறிகள் தயாரிக்கவும். அரை மோதிரங்கள் [போல ஸ்க்விட்களை வெட்டவும். வெங்காயம் வெட்டி. 2 பூண்டு கிராம்புகள் மெல்லிய தகடுகளாக வெட்டி,  வோக்கோசு இறுதியாக துண்டாக்கவும். வாணலியில் வெண்ணெயுடன் வெந்தயம், வறுத்த வெங்காயம், பூண்டு தகடுகள் மற்றும் வெங்காயம் . சூடான தக்காளி வைத்து வறுக்கவும். பீன்ஸ் சேர்க்கவும். காய்கறிகளை மூடி, 10 நிமிடங்களுக்கு இளங்கொதிவிற்காக தண்ணீரில் ஊற்றவும். சூப் கிட்டத்தட்ட தயாராக உள்ளது. இதனுடன் ஸ்கிட், உப்பு மற்றும் மிளகு சேர்க்க வேண்டும்.  மற்றொரு 6 நிமிடங்கள் கொதிக்கவும். இது உண்மையான இத்தாலிய மரபுகளில் ருசியான மற்றும் அசல் சூப் சுவை இதுவே. 

சிக்கன் க்ளியர் சூப்

சிக்கன் பீஸ் – ½ கப் 

இஞ்சி மற்றும் பூண்டு – 1 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது) 

கேரட், ஸ்வீட் கார்ன், பட்டாணி – ½ கப் (நறுக்கப்பட்டது) 

ADVERTISEMENT

மஞ்சள் தூள் – ¼ டீ ஸ்பூன்

கொத்துமல்லி தழை – 2 டீ ஸ்பூன் (நறுக்கப்பட்டது) 

சால்ட் – சுவைக்கு ஏற்ப அளவு 

பெப்பர் – சுவைக்கு ஏற்ப 

ADVERTISEMENT

தண்ணீர் – 3 கப் தேன் – 2 லிருந்து 3 டீ ஸ்பூன்

 

ஒரு வாணலியை எடுத்துக்கொள்ளுங்கள். அதில் சிக்கன், கேரட், பட்டாணி, ஸ்வீட் கார்ன் ஆகியவற்றை சேர்த்து கொள்ளுங்கள். இதனுடன் தண்ணீரையும் சேர்த்து கொள்ளுங்கள். கூடவே மஞ்சள், பெப்பர் மற்றும் சால்டையும் அத்துடன் சேர்த்து கொள்ளுங்கள். இப்பொழுது அனைத்தையும் கொதிக்க வையுங்கள். சிக்கன் பாதி வேகும் வரை கொதிக்க வைக்க வேண்டும். இறுதியாக கொத்துமல்லி தழைகளை அதில் தூவி வாணலியை மூட வேண்டும். சிக்கன் முழுவதுமாக வேகும் வரை காத்திருக்கவும்.ஒரு போதும் ஓவர்குக் ஆகும் அளவிற்கு அல்லது சிக்கன் ரப்பர் போல் (கடிக்க கடினம்) ஆகும் அளவிற்கோ விட்டுவிடாதீர்கள்.இப்பொழுது பௌலில் சூப்பை கொட்டவும். அதனுடன்  இரண்டு டீ ஸ்பூன் தேனை சேர்த்து நன்றாக கொதிக்க விட வேண்டும். சிக்கன் சூப் தயார். பிரட் ஸ்டிக் உடன் அருந்துங்கள்.

சிக்கன் மேன்சோ சூப்

சிக்கன் மேன்சோ சூப்

ADVERTISEMENT

சிக்கன் 200கி
கேரட் (Carrot ) – 100g
பீன்ஸ் (Beans) – 50g
கோஸ் – 50g
பூண்டு – 10 பல்
கொத்துமல்லி – 1/4 கட்டு
சோயா மாவு – 02 Tea Spoon
பச்சை மிளகாய் – 01
பச்சைப் பட்டாணி – 10g
வெங்காயம் – 01
அஜினமோடோ – 01 சிட்டிகை
உப்பு – தேவையான அளவு
மிளகுத்தூள் – தேவையான அளவு
எண்ணெய் – தேவையான அளவு

செய்முறை

சிக்கன் காய்கறிகள் , கொத்தமல்லித்தழையை மிகப்பொடியாக நறுக்கிகொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு , பச்சை மிளகாய் , வெங்காயம் , பூண்டுடன் காய்கறிகளை சேர்த்து வதக்கவும்.
இத்துடன் 3 1/2 டம்ளர் தண்ணீர் விட்டு உப்பு சேர்த்து நன்கு கொதிக்க விடவும். பொடியாக நறுக்கிய கொத்தமல்லி தழையையும் சேர்த்து நன்கு கொதித்தபின் Tea Spoon தண்ணீரில் சோயா மாவைக்கரைத்து ஊற்றவும். லேசாக கொதிக்க வைத்து மிளகு தூவி பருக கொடுக்கவும்.

மட்டன் சூப்

மட்டன் (மார்க்கண்டம்) -1/4 கிலோ

ADVERTISEMENT

மிளகு -1/2 ஸ்பூன்

வெங்காயம் – 1/2 (அரிந்தது)

தக்காளி -2

அரிசி – 1 கைப்பிடி

ADVERTISEMENT

காய்ந்த மிளகாய் -2

இஞ்சி பூண்டு விழுது -2 தேக்கரண்டி

மஞ்சள் தூள் – 1/4 டீஸ்பூன்

உப்பு எண்ணெய் – தேவையான அளவு

ADVERTISEMENT

பெருங்காயம் கருவேப்பிலை – தாளிக்க


செய்முறை :


வெங்காயம், தக்காளியை பொடியாக நறுக்கவும்.

மட்டனைச் சுத்தம் செய்து அதனுடன் வெங்காயம், தக்காளி, அரிசி, காய்ந்த மிளகாய், இஞ்சி பூண்டு விழுது, மஞ்சள் தூள் சேர்த்து குக்கரில் தேவையான நீர் விட்டு 10 விசில் வரை வேக வைத்துக் கொள்ளுங்கள்.

ADVERTISEMENT

வெந்ததும் நீரை வடித்துக் கொள்ளுங்கள். ஒரு கடாயில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் பட்டை, கிராம்பு, பெருங்காயம் கருவேப்பிலை போட்டுத் தாளித்து தனியே வடித்து வைத்திருக்கும் நீரை இதில் கொட்டிக் கொதிக்க விட்டு இறக்குங்கள். சூடான மட்டன் சூப் ரெடி.

Pixabay

சிக்கன் க்ரீம் சூப்

தேவையான பொருள்கள் 

ADVERTISEMENT

வேகவைத்து உதிர்த்த சிக்கன் அரை கப் 

வேகவைத்த சதுர சிக்கன் துண்டுகள் அரை கப் 

வெண்ணெய் இரண்டு ஸ்பூன் 

சலித்த மைதா மாவு 2 ஸ்பூன் 

ADVERTISEMENT

பால் 21/2 கப் 

வேகவைத்த சிக்கன் நீர் 31/2 கப் 

உப்பு 

மிளகு 1 ஸ்பூன் 

ADVERTISEMENT

க்ரீம் ஆறு ஸ்பூன் 

கொத்தமல்லி தழை சிறிதளவு 


செய்முறை 


ஒரு நான் ஸ்டிக் தவாவில் வெண்ணையை உருக்கி அதில் மைதாவை சேர்க்கவும். நன்கு கலந்த பின்பு பாலை சிறிது சிறிதாக ஊற்றி கலக்கவும். மிதமான தீயில் இந்த கலவையை கொதிக்க விடவும். அடிக்கடி கிளறவும். ஐந்து நிமிடம் கழித்து சிக்கன் வேகவைத்த நீரை இதனுடன் சேர்க்க வேண்டும். மீண்டும் கலக்கவும். கட்டிகள் இருக்க கூடாது.உதிர்த்த சிக்கன் துண்டுகளை தண்ணீர் சேர்த்து நன்றாக அரைக்கவும். இந்த சிக்கனை கொதித்துக்கொண்டிருக்கும் கலவையில் சேர்த்து தீயை அதிகரித்து நன்கு கொதிக்க விடுங்கள். 

ADVERTISEMENT

5 நிமிடம் கழித்து சிக்கன் சதுர துண்டுகளை கொதிக்கும் கலவையில் சேர்க்கவும்.உப்பு மிளகு தூள் சேர்க்கவும்.இரண்டு ஸ்பூன் க்ரீம் சேருங்கள்.மிதமான தீயில் வைக்கவும்.அதன் பின் நறுக்கிய கொத்தமல்லி சேருங்கள். அடுப்பை அணைக்கவும். அதன் பின்னர் நான்கு பவுல்களில் சூப்பை சேர்த்து அதன் மேல் ஒவ்வொரு ஸ்பூன் க்ரீம் சேர்த்து பரிமாறுங்கள். 

காரமான சிக்கன் சூப்

தேவையான பொருட்கள்

1 தேக்கரண்டி ஆலிவ் எண்ணெய்

1 கப் துண்டுகளாக்கப்பட்ட இனிப்பு வெங்காயம்

ADVERTISEMENT

2 தேக்கரண்டி மிளகாய் தூள்

1 தேக்கரண்டி அரைத்த ஆரஞ்சு பட்டை

1 டீஸ்பூன் நொறுக்கப்பட்ட சிவப்பு மிளகு

4 பூண்டு கிராம்பு, துண்டு துண்தாக வெட்டப்பட்டது

ADVERTISEMENT

2 கப் துண்டாக்கப்பட்ட சமைத்த கோழி மார்பக

1/2 கப் புதிய ஆரஞ்சு சாறு

4 (10 1/2-அவுன்ஸ்) கேன்கள் குறைந்த உப்பு கோழி குழம்பு, பிரிக்கப்பட்டுள்ளது

2 கப் சிவப்பு மணி மிளகு கீற்றுகள்

ADVERTISEMENT

1/3 கப் (1-இன்ச்) ஜூலியன்-வெட்டப்பட்ட கேரட்

1/3 கப் துண்டுகளாக்கப்பட்ட விதை அனாஹெய்ம் சிலி

2 தேக்கரண்டி துண்டுகளாக்கப்பட்ட விதை ஜலபீனோ மிளகு

1/2 டீஸ்பூன் உப்பு

ADVERTISEMENT

4 கப் கரடுமுரடான நறுக்கப்பட்ட பச்சை முட்டைக்கோஸ்

4 கப் காய்கறி சாறு

1 கப் சமைக்காத காட்டு அரிசி

1 தேக்கரண்டி மிளகாய் தூள்

ADVERTISEMENT

4 பிளம் தக்காளி, ஒவ்வொன்றும் எட்டு குடைமிளகாய் வெட்டப்படுகின்றன

3 கப் பதிவு செய்யப்பட்ட கடற்படை பீன்ஸ் வடிகட்டியது

1/2 கப் குறைந்த கொழுப்பு புளிப்பு கிரீம்


நடுத்தர வெப்பத்திற்கு மேல் ஒரு பெரிய நான்ஸ்டிக் வாணலியில் எண்ணெய் சூடாக்கவும். வெங்காயம் மற்றும் அடுத்த 4 பொருட்கள் (பூண்டு வெங்காயம்) சேர்க்கவும்; 4 நிமிடங்கள் அல்லது வெங்காயம் மென்மையாக இருக்கும் வரை வதக்கவும். கோழியை ஆரஞ்சு சாற்றில் கிளறவும்;

ADVERTISEMENT

ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். 2 நிமிடங்கள் சமைக்கவும் அல்லது திரவம் கிட்டத்தட்ட ஆவியாகும் வரை, தொடர்ந்து கிளறி விடவும். 1 கேன் குழம்பு சேர்க்கவும்; ஒரு கொதி நிலைக்கு கொண்டு வாருங்கள். பெல் மிளகு, கேரட், அனாஹெய்ம் சிலி, ஜலபீனோ, உப்பு ஆகியவற்றில் கிளறவும். நடுத்தர வெப்பத்திற்கு 15 நிமிடங்கள் அல்லது காய்கறிகள் மென்மையாக இருக்கும் வரை சமைக்கவும். சூப் தயார்.

சிக்கன் நூடுல்ஸ் சூப்

சமைக்க தேவையானவை

 சைனீஸ் மஸ்ரூம் ( உலர்ந்தது ) – 15 கிராம்

 சிக்கன் ஸ்டாக் – 1 கப்

ADVERTISEMENT

 கோழிக்கறி – 1/4 கிலோ

 நூடுல்ஸ் – 100 கிராம்

 ஸ்வீட் கார்ன் – 50 கிராம்

 

ADVERTISEMENT

முதலில் கோழிக்கறியை சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளவேண்டும். அதன் பின் அகலமான பாத்திரம் ஒன்றில் சைனீஸ் மஸ்ரூம் சேர்த்து , அதில் 1 கப் சூடான தண்ணீர் ஊற்றி அரை மணி நேரம் அப்படியே வைத்திருக்கவும். அதன் பின்னர் காளான்களை வடித்து, அந்த தண்ணீரை பெரிய சாஸ்பேன் ஒன்றில் ஊற்றி  அதனுடன் கோழிக்கறியை சேர்த்து கொதிக்க வைத்து இறக்கவேண்டும் .

அதன் பின் வடித்த காளான்களை பொடியாக நறுக்கிக் கொள்ளவேண்டும். இறுதியாக ஒரு பேஷனில் நூடுல்ஸ், சிறிதளவு தண்ணீர் சேர்த்து கொதிக்க வைக்கவேண்டும் அதனுடன் காளான், சிக்கன் ஸ்டாக், கோழிக்கறி, ஸ்வீட் கார்ன் சேர்த்து கொதிக்க விடவும். நூடுல்ஸ் வெந்ததும் இறக்கி பரிமாறவும்.

 

 

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

11 Dec 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT