Bath & Body

குதிகால் வெடிப்பால் கவலையா? அழகான மென்மையான பாதங்களை பெற வீட்டு வைத்திய வழிகள் இதோ!

Nithya Lakshmi  |  Nov 6, 2019
குதிகால் வெடிப்பால் கவலையா? அழகான மென்மையான பாதங்களை பெற வீட்டு வைத்திய வழிகள் இதோ!

பாத வெடிப்பு வலியையும் ஏற்படுத்தி, பார்க்கவும் நன்றாக இருக்காது. கிராக் கிரீம் வாங்கி பயன்படுத்தினாலும் ஒரு பிரயோஜனமும் இல்லையா? வீட்டில் உள்ள இயற்கையான பொருட்களே போதும் உங்கள் பாதங்களை குணப்படுத்த !

குதிகால் வெடிப்பு ஏன் வருகிறது?

  1. குளிக்கும்போது உடலை நன்றாக தேய்த்து குளிக்கிறோம். ஆனால், பாதத்தை விட்டுவிடுகிறோம். கட்டாயம் பாதத்தையும் நன்றாக தேய்த்து சுத்தம் செய்வது அவசியம். அவ்வாறு அலட்சியம் செய்வதால் அழுக்கு சேர்ந்து நாளடைவில் வெடிப்பு உண்டாகிறது.
  2. சரியான அளவு இல்லாத, மற்றும் மிகவும் கடினமான உள்ள செருப்பு அல்லது ஷூ அணிவதால்கூட குதிகால் வெடிப்புகள் (cracked foot) தோன்றும்.

குதிகால் வெடிப்பு குணமாக சில எளிமையான வீட்டு வைத்தியங்கள்

1. அரிசி மாவு

அரிசி மாவு(3 தேக்கரண்டி) + தேன்(1 தேக்கரண்டி) + ஆப்பிள் சிடர் வினீகர்(2-3 சொட்டுகள்) ஒரு அருமையான தீர்வு ! அரிசி மாவு பாதங்களை சுத்தம் செய்து, ஊட்டச்சத்து கொடுக்கும்; தேன் இயற்கையான ஆன்டி-செப்டிக் தன்மை கொண்டது – கிருமிகளை எதிர்த்துப் போராடும்; இயற்கையாக குணப்படுத்தும் தன்மை கொண்டது ஆப்பிள் சிடர் வினீகர். பாதங்களை 10 நிமிடம் மிதமான சூடு கொண்ட தண்ணீரில் ஊறவைத்து சுத்தம் செய்த பிறகு, இந்த மூன்றையும் கலந்து வெடிப்புகளில் வாரத்திற்கு இரண்டு மூன்று முறை தடவி சுத்தம் செய்து வாருங்கள், உங்கள் பாதங்கள் முகத்தைப்போலவே பளிச்சிடும்.

2. வாழைப்பழம்

Shutterstock

வாழைப்பழம் இயற்கையாக சருமத்திற்கு ஈரப்பதத்தை தரக்கூடியது. வைட்டமின் ஏ, பி6, சி போன்ற சத்துக்கள் உள்ளடக்கியதால், சருமத்தை ஈரப்பதமாக வைத்து, மிருதுவாக வைக்க உதவும். பழுத்த வாழைப்பழத்தை நன்றாக மசித்துப் பயன்படுத்துங்கள். 20 நிமிடம் ஊறிய பிறகு, மிதமான சூடு உள்ள தண்ணீரில் நன்றாக சுத்தம் செய்து விடுங்கள். இரண்டு வாரங்களில் உங்கள் பாதங்கள் பளிச்! பளிச்!

3. விக்ஸ் வேப்போரப்

யூக்கலிப்டஸ் மற்றும் புதினா உள்ளதால், விக்ஸ் உங்கள் பாதங்களுக்கு நல்ல குளிர்ச்சியைத் தரும். தூங்கும்போது போட்டுக்கொள்ளலாம். காலையில் மிதமான சூடு உள்ள தண்ணீரில் கழுவ மறக்காதீர்கள். 

4. வினீகர்

Shutterstock

லிஸ்டரின் என்ற மெளத்வாஷில்(mouthwash) ஆல்கஹால் இருக்கிறது. அது கிருமிகளை எதிர்த்துப் போராடும். வினிகர் சருமத்தை மிருதுவாக்கும். இந்த இரண்டையும் சேர்த்து கலந்து பாத வெடிப்புகளில் தடவி வந்தால், பாதம் அழகாக மாறும்.

5. தேங்காய் எண்ணெய்

தேங்காய் எண்ணெய்(2 தேக்கரண்டி) + கற்பூரம்(2) + கற்றாழை ஜெல்(½ தேக்கரண்டி)
இந்த மூன்றையும் லேசாக சூடு செய்து நன்றாகக் கலந்து வைத்துக் கொள்ளுங்கள். பின் பாத வெடிப்புகளில் தடவி வாருங்கள். வெடிப்புகள் மறைந்து விடும்.

6. கடுகு எண்ணெய்

Shutterstock

இதற்கு தேவையானவை – மெழுகு(1 candle) + கடுகு எண்ணெய்(4 தேக்கரண்டி) + வைட்டமின் ஈ கேப்ஸுல்(2). மெழுகுவர்த்தியை துருவி ஒரு கிண்ணத்தில் போட்டுக்கொள்ளுங்கள். அதோடு கடுகு எண்ணெய் சேர்த்து கலந்து கொள்ளுங்கள். ஒரு பாத்திரத்தில் தண்ணீர் விட்டு அதில் இந்த கிண்ணத்தை வைத்து, மெழுகு உருகி எண்ணெயுடன் கலக்குமாறு சூடு செய்யவும். பின் வைட்டமின் மாத்திரைகளை நறுக்கி அதன் திரவத்தையும் இதில் கலந்து கொள்ளுங்கள். பிறகு ஒரு சுத்தமான பாட்டிலில் ஊற்றி வைத்துக்கொள்ளுங்கள். மெழுகு ஆறியவுடன் ஜெல் போன்று இருக்கும். இதை பாதங்களில் பூசினால் உடனடி தீர்வு கிடைக்கும். இதை தண்ணீர் கொண்டு கழுவ வேண்டாம். அப்படியே விட்டு விடலாம். டிஸு பேப்பர் கொண்டு துடைத்துக் கொள்ளுங்கள். இந்த கலவை மூன்று மாந்தங்கள் வரை வைத்துப் பயன்படுத்தலாம்.

7. வெஜ்டப்பிள் எண்ணெய்

வைட்டமின் ஏ, டி, ஈ ஆகிய சத்துக்கள் உள்ளதால், சருமத்திற்கு நல்ல ஊட்டச்சத்தை கொடுக்க கூடியது வெஜிடபிள் எண்ணெய். தூங்கும்போது இந்த எண்ணெய்யை பாத வெடிப்புகளில் தடவிக்கொண்டு, சாக்ஸ் அணிந்து கொள்ளுங்கள். 

8. பேக்கிங் சோடா

Shutterstock

தண்ணீரில் சிறிது பேக்கிங் சோடாவை கலந்து பாதங்களை 15 நிமிடம் ஊற வைக்கவும். பின் கால்களை நன்றாக கழுவி, தேய்த்து இறந்த செல்களை நீக்குங்கள். வறண்ட, நாற்றம் உள்ள வெடிப்புகளுக்கு இது மிகவும் நன்றாக வேலை செய்யும். 

தொலைக்காட்சி பார்க்கும்போது, மிதமான சூடு உள்ள தண்ணீரில் கல் உப்பு சேர்த்து, சிறிது எலுமிச்சை சாறு பிழிந்து 20 நிமிடம் பாதங்கள் ஊறவைத்து கழுவினால், பாதத்தில் உள்ள அழுக்குகள் நீங்கும், எந்த நோயும் அண்டாது(வைத்தியம்). 

பாதங்களை கழுவிய பிறகு வீட்டிற்குள் செல்லும் பழக்கத்தை மேற்கொள்ளுங்கள். பாதி பிரச்சனை வீட்டிற்கு வெளியிலேயே காணாமல் போய் விடும். அதையும் மீறி வரும் வெடிப்புகளுக்கு மேலே சொன்ன தீர்வில் (remedy) ஏதாவது ஒன்றை பாதங்களை நன்றாக சுத்தம் செய்த பிறகு பயன்படுத்தி, அழகான மருதுவான பாதங்களைப் பெறுங்கள். 

 

மேலும் படிக்க – உங்கள் உலர்ந்த கைகளை கையாள சில எளிமையான வழிகள்

பட ஆதாரம்  – Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

Read More From Bath & Body