logo
ADVERTISEMENT
home / அழகு
உங்கள் உலர்ந்த கைகளை கையாள சில எளிமையான வழிகள்

உங்கள் உலர்ந்த கைகளை கையாள சில எளிமையான வழிகள்

நம் எல்லா வேலைகளிலும் நம் கைகளை தான் அதிகம் உபயோகிக்க வேண்டும். அப்படி பட்ட கைகளில் வரும் முக்கிய பிரச்சனை வறண்ட சருமம்! அதும் பனிக்காலங்களில் கேட்கவே வேண்டாம். அதை எப்படி கையாள்வது என்று பார்க்கலாம்.

கைகள் உலர்ந்து போகக்கூடிய காரணங்கள்:

pexels-photo-951572

ஆம்! கைகளை கழுவுவது மிக முக்கியம். அதை பனிக்காலங்களில் அதிகம் செய்யும்போது, சருமம் பாதிக்கப்படுகிறது.கடும் குளிரின் காரணமாக உடலில் உள்ள ஈர தன்மை வெளியேறி, கைகள் வறண்டு (dry) விடும்.அடிக்கடி தண்ணீரில் கைகள் வைக்க சூழல் வரும்,  குளிர்ந்த தண்ணீரில் பாத்திரம் கழுவும் போதும் வரக்கூடும்,உணர்திறன் உள்ள தோல், கெமிக்கல் கலந்த லோஷன், சோப் உபயோகிக்கும் போது கைகள் உலர்ந்து விடும். 
 

அதிகபச்ச வெப்பநிலையில், உங்கள் சருமத்தை கண்காணித்து அதை பாதுகாப்பது அவசியம்.

ADVERTISEMENT

தவிர்க்க முடியாத சூழலில் இருக்கும் போது இதனை எவ்வாறு அடையாளம் காண வேண்டும் :

  • கைகள் வறண்டு, சாதாரண நிறத்தை விட வெளிறி போயி இருக்கும்.
  • அதோடு தோல் சுருக்கங்கள் அதிகம் தோன்றும்.
  • அதீத வறட்சியின் காரணமாக வெடிப்புகள் வந்து எரிச்சல் தரும்.
  • சிலருக்கு வெடிப்பில் இருந்து ரத்தம் கூட கசியும்.

வறண்ட கைகளுக்கு தீர்வு :

மாய்ஸ்ட்டுரைசர் :

pexels-photo-286951
மெடிக்கல் மற்றும் சூப்பர் மார்க்கெட்களில் கைகளுக்கு என்றே பிரத்யோகமாக கிரீம் கிடைக்கிறது.அதனை வாங்கி வைத்துக்கொண்டு தினமும் கைகளில் தேய்த்து கொள்ளுங்கள்.உங்கள் சருமத்திற்கு ஏற்ற கிறீமை வாங்குவது மிக அவசியம். 

POPxo பரிந்துரைக்கிறது – 

காதி மில்க் அண்ட் சபிரோன் ஹாண்ட் கிரீம் (Rs.140)

நை கா ஹாண்ட் அண்ட் நைல் கிரீம் (Rs.220)

ADVERTISEMENT

கையுறை :

உலர்ந்த கைகளை வீட்டிலேயே எளிமையான முறையில் சரி செய்யலாம். வருமுன் காப்பது போல குளிர் காலங்களில் காட்டன் அல்லது லெதர் வாட்டர் ப்ரூப் கையுறை அணியலாம். முட்டிக்கை நீளம் வரை இருக்கும் இது, அனைத்து  ஷாப்பிங் இணையதளத்தில் கிடைக்கின்றது .

POPxo பரிந்துரைக்கிறது –

காட்டன் புள் ஹாண்ட் ஆம் ஸ்லீவ் க்ளோவ்ஸ் (Rs.199) 

காசி அண்ட் வாம் பிங்கர்லேஸ் வின்டர் க்ளோவ்ஸ் (Rs.399)

ADVERTISEMENT

ஈரப்பதமூட்டி (humidifier) :

வீட்டில் நீங்கள் ஒரு ஈரப்பதமூட்டி வைத்துக்கொண்டால் உங்கள் அறையின் வெப்பநிலையை சரிசெய்ய உதவும். மேலும் இது உங்கள் வறண்ட சருமத்திற்கு உதவியாக இருக்கும்.

எண்ணெய்கள் (essential oils):

pexels-photo-932577

வீட்டில் இருக்கும் தேய்க்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், நல்லஎண்ணெய் போன்றவை தேய்த்துக் கொண்டால் சருமத்துக்கு வழவழப்பு தன்மை கிடைக்கும். மற்ற அத்தியாவசிய எண்ணெய்கள் கடைகளில் விற்பனையில் இருக்கின்றது. அதையும் நீங்கள் பயன்படுத்தலாம். 

POPxo பரிந்துரைக்கிறது – 

ADVERTISEMENT

நைகா நச்சுரல்ஸ் லாவண்டர் ஆயில் (Rs.280)

பாடி ஷாப் டி ட்ரீ ஆயில் (Rs.645)

இயற்கை முறையில் தீர்வு – வீட்டு வைத்தியம் (home remedy) :

சோற்று கத்தாழை :

எல்லா இடங்களில் எளிதில் வளர கூடிய இந்த செடியை வீட்டில் வைப்பது மிகவும் நல்லது.இதன் ஜெல், தோல்களுக்கு ரொம்ப நல்லது. இதை குளிக்கும் முன் தேய்த்து கொண்டு அரை மணி நேரம் கழித்து குளித்து வந்தால், சருமம் வறட்சி குறைந்து கைகள் (hands) வெடிப்பில் இருந்து பாதுகாக்கலாம்.இதை நீங்கள் இரவில் தூங்கும் முன் பூசிக்கொண்டு,கையுறை அணிந்து,மறுநாள் காலையில் கழுவி விடலாம்.

வெண்ணை :

இதனை கைகளில் காலையிலும் மாலையிலும் தடவி வந்தால், தேவையற்ற வெடிப்புகள் வராது.அதோட தோல் சுருக்கமும் தவிர்க்கப்பட்டு, கையின் நிறம் கூடும்.

ADVERTISEMENT

ஓட்ஸ் :

oat-2775006 960 720

ஓட்ஸ் இதயத்தை பாதுகாக்குமா இல்லையானு பெரிய பட்டிமன்றமே நடக்கின்றது. ஆனா , இது உங்கள் தோலிற்கு ரொம்ப நல்லது.ஓட்ஸை தூளாக அரைத்து ஒலிவ் எண்ணெய் உடன் சேர்த்து கைகளில் தடவி வந்தால் ரொம்ப நல்லது.கையின் ஈரத்தன்மை பாதுகாக்க படும்.எக்ஸெமாவால் (eczema) உருவாகும் எரிச்சல் , வறண்ட சருமம், அரிப்புத்தன்மையை ஓட்ஸ் கட்டுப்படுத்துகிறது.

வாசலின் :

அனைத்து கடைகளிலும் எளிதில் கிடைக்கும் இவை எப்போதும் வீட்டில் வைத்து கொள்ளுங்கள். வெளியே சென்றாலும் ஹாண்ட்பேக்கில் எப்போதும் வைத்துக்கொண்டு செல்லுங்கள்.ஒரு நாளைக்கு மூன்று முறை தடவி கொள்ளுங்கள்.வெய்யிலில் செல்ல நேர்ந்தால், கையில் தடவி கொண்டு செல்லுங்கள்.

ஆலிவ் எண்ணெய் :

காலையில் குளிக்கும் முன் ஆலிவ் எண்ணெய் தேய்த்து குளித்து மசாஜ் செய்தால் சருமம் ஈர தன்மையை இழக்காது. காலையில் நேரம் இல்லாதவர்கள் இரவில் தூங்கும் முன் கைகளில் தேய்த்து தூங்கலாம்.

ADVERTISEMENT

தேங்காய் எண்ணெய் :

pexels-photo-725998

குளிரின் காரணமாக வெடிப்புகள் வரும் போது, தேங்காய் எண்ணையில் சிறிது உப்பு கலந்து கைகளில் தடவி, வெதுவெதுப்பான நீரில் கழுவி வந்தால் கைகள் எவ்வித வெடிப்புகளும் இல்லாமல் இருக்க உதவும்.

வரும் முன் காக்க – உங்கள் கைகள் வறண்டு போகாமல் பாதுகாக்க சில விஷயங்கள் :

உங்களுக்கு இதுபோல் வறண்ட சருமம் பனி காலங்களில் தான் அதிகம் வரும் என்றால், கவனமாக இருக்க வேண்டும்.

  • இந்த பிரச்சனை உள்ளவர்கள் நிச்சயம் அடிக்கடி தண்ணீரில் கை போடாதீங்க.இது உங்க பாதிப்பை மேலும் அதிகரிக்கும்.
  • அதுபோல வெய்யிலில் கைகள் தெரியும் படி செல்ல கூடாது.வெடிப்புகள் அதிகரிக்க கூடும்.
  • ஓவர் கெமிக்கல் உள்ள ஹாண்ட் வாஸ்/சோப் உபயோகிப்பதை தவிர்க்கவும்
  •  கெமிக்கல் கலந்த லோஷன்/கிரீம் பயன்படுத்த வேண்டாம்.
  • ஹோட்டல்களில் இருக்கும் ஹாட்ட்ரையேர்ஸ் (dryers) பயன்படுத்தாமல், டிஸ்ஸு பேப்பர் பயன்படுத்துங்கள்.

மேலும் படிக்க  – குளிர் காலங்களில் ​​முடி கொட்டுவதை​ ​​எளிதாகவும் சுலபமாகவும் ​​ கையாள்வது எப்படி?

ADVERTISEMENT

உஷாராக இருங்கள் : 

treatment-of-skin-2416946 960 720

ஆனால் அதீத ரத்தமோ, வழியோ அல்லது கைகள் வீக்கம், கடுமையான வலியுடன் கூடிய புண், அதிகமான அளவுக்கு சிவந்து போதல் போன்ற பிரச்சனை இருந்தால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுங்கள்.

கைகள் தானே என்று இருக்காமல், கண் போல பார்த்துக்கொண்டு சந்திப்பவர்களுடன் சந்தோசமாக கைகுலுக்கலாம்.உங்கள் கைகளை மீண்டும் இளைமையாக வைத்துக்கொள்ள நீங்கள் தயாரா? 

படங்களின் ஆதாரங்கள் – பிக்ஸாபெ,பேக்செல்ஸ்   

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !

மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

To approve a single suggestion, mouse over it and click “✔”
Click the bubble to approve all of its suggestions.

22 Jan 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT