Beauty

உங்கள் சருமம் தங்கம் போல் பளபளக்க பாசிப்பயறு மாவு பயன்படுத்துங்கள்!

Swathi Subramanian  |  Jan 10, 2020
உங்கள் சருமம் தங்கம் போல் பளபளக்க பாசிப்பயறு மாவு பயன்படுத்துங்கள்!

தற்போதைய காலத்தில் பெண்கள் அழகிற்கு அதிக முக்கியத்துவம் தருகின்றனர். அதற்காக அழகு நிலையங்கள் மற்றும் பல க்ரீம்களை தேடி அலைகின்றனர். ஆனால் அக்காலத்தில் பெண்கள் இவற்றை நாடவில்லை எனினும் அனைவரும் அழகாக இருந்தனர். 

அதற்கு முக்கிய காரணம் கெமிக்கல் இல்லாத பொருட்களை கொண்டு உடலைப் பராமரித்து வந்தது தான். அதிலும் அவர்கள் வீட்டின் சமையலறையில் உள்ள பொருட்களைக் கொண்டு தான் உடலைப் பராமரித்து வந்தார்கள். 

அதாவது மஞ்சள் தூள், தயிர், பால், கடலை மாவு, பாசிப்பயறு மாவு போன்றவற்றை கொண்டே அழகை மேம்படுத்தி வந்தனர். ஏனெனில் இவை எவ்வித பக்க விளைவுகளையும் தருவதில்லை. பச்சை பாசிப்பயறு மாவை பயன்படுத்தி நமது சருமத்தை எப்படி பொலிவாக மாற்றுவது என்பது குறித்து இங்கு காண்போம். 

pixabay

பருக்கள் வராமல் தடுக்க 

பாசிப்பயறு மாவை தினமும் முகத்திற்கு பயன்படுத்தினால், முகத்தில் ஆங்காங்கு உள்ள முகப்பருக்கள் மற்றும் கரும்புள்ளிகள் மறைந்து, முகம் பொலிவாகும். 1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை, எடுத்து அதனுடன் 1/2  ஸ்பூன் தேன் கலந்து முகத்தில் தடவுங்கள். 10 நிமிடம் கழித்து முகத்தை கழுவ வேண்டும். தினமும் இதனை தொடர்ந்து செய்து வந்தால் ஒரே வாரத்தில் முகப்பருக்கள் மட்டுமின்றி அதன் தழும்புகளும் மறைந்து விடும்.

பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பிரகாசமான சன்செட் ஐ-மேக்கப், போடுவது எப்படி?

முழங்கை மற்றும் கழுத்து கருமை நீங்க 

சில பெண்களுக்கு முழங்கை மற்றும் கழுத்துகளில் கருமையாக இருக்கும். இத்தகைய கருமையைப் போக்குவதற்கு ஒரு அருமையான மாஸ்க் என்றால் அது பாசிப்பயறு மாவு மாஸ்க் தான். அதற்கு பாசிப்பயறு மாவில் தயிர் மற்றும் மஞ்சள் தூள் சேர்த்து கலந்து கருமையாக உள்ள இடங்களில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து கழுவ வேண்டும். பின்னர் நல்லெண்ணெய் கொண்டு மசாஜ் செய்தால் கருமை விரைவில் போய்விடும்.

சரும நிறத்தை அதிகரிக்க 

1 ஸ்பூன் பாசிப்பயறு பொடியுடன் 2 ஸ்பூன் எலுமிச்சை சாறு கலந்து முகத்தில் மாஸ்க் போல் போடுங்கள். 10 நிமிடம் கழித்து வெதுவெதுப்பான நீரில் கழுவ வேண்டும். தினமும் இதனை செய்து வந்தால் சரும நிறம் அதிகரிக்கும். உங்களுக்கு வறண்ட சருமமாக இருந்தால் எலுமிச்சை சாறுக்கு பதிலாக பால் கலந்து பயன்படுத்தலாம். 

pixabay

முகத்தில் வளரும் முடியை தடுக்க

சில பெண்களுக்கு முகம் மற்றும் வாய்க்கு மேலே மீசை போன்று முடி வளரும். அத்தகைய முடியின் வளர்ச்சியை தடுப்பதற்கு பாசிப்பயறு மாவில் (green gram flour) மஞ்சள் தூளை சேர்த்து நீர் ஊற்றி பேஸ்ட் செய்து தினமும் காலை மற்றும் மாலையில் முடி வளரும் இடத்தில் தடவி ஊற வைத்து கழுவி வந்தால் நாளடைவில் முடியின் வளர்ச்சி தடைபடுவதை உணரலாம்.

சுருக்கங்கள் மறைய 

அன்றாடம் பாசிப்பயறு மாவை முகம் மற்றும் உடல் முழுவதும் தேய்த்து குளித்து வந்தால், சருமத்தில் உள்ள சுருக்கங்கள் நீங்கும். மேலும் பாசிப்பயறு பொடியை 1 ஸ்பூன் எடுத்து அதனுடன் ரோஸ் வாட்டரை கலந்து கொள்ளுங்கள். இதனை முகம், கழுத்து  பகுதியில் தடவி மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் 20 நிமிடங்கள் கழித்து கழுவுங்கள். தினமும் இரவில் இப்படி செய்து வந்தால் சுருக்கங்கள் மறைந்து இளமையாக காணப்படுவீர்கள். 

சலூனுக்கு போகாமல் ஹேர் கலரை நீக்க 8 எளிமையான வழிகள்!

மென்மையான சருமம்

பாசிப்பயறு மாவை தினமும் உடல் முழுவதும் பூசிக் குளித்து வந்தால் சருமம் மென்மையாக இருப்பதோடு, உடல் சூடு குறையும். எண்ணெய் பசை சருமம் உள்ளவர்களின் முகம் எப்போதும் பொலிவிழந்து புத்துணர்ச்சியின்றி இருக்கும். அத்தகையவர்கள் பாசிப்பயறு மாவை அன்றாடம் பயன்படுத்தினால் முகத்தில் எண்ணெய் வழிவது கட்டுப்படுத்தப்பட்டு சருமம் பொலிவாகும்.

pixabay

கருமை நீங்க 

சூரிய ஒளியால் கருமையாகிப் போன சருமத்தை மாற்ற பாசிப்பயறு (green gram flour)உதவுகிறது. 1/2 ஸ்பூன் பாசிப்பரு, கற்றாழை ஜெல் 1 ஸ்பூன் எடுத்து இரண்டையும் கலந்து, இதனுடன் சிறிது நீர் கலந்து முகத்தில் முகத்தில் தடவுங்கள். இதனை வாரம் மூன்று முறை செய்து வந்தால் உங்கள் சருமத்தில் இருக்கும் கருமை நீங்கி பளிச்சென்று மாற்றும். 

புத்துணர்ச்சியான சருமம்

உங்கள் சருமம் டல்லாக இருக்கிறதே என்று எண்ணும்போது பாசிப்பயறு மாவு சிறந்த தீர்வாக இருக்கும். 1 ஸ்பூன் பாசிப்பொருப்பு மாவை எடுத்து, அதனுடன் சிறிது தயிர் கலந்து முகத்தில் தடவி காய்ந்ததும் கழுவுங்கள். இதனை தொடர்ந்து செய்து வர முகத்தில் இருக்கும் சோர்வு, கருமை எல்லாம் மறைந்து பளிசென்று மறிவிடும்

பொலிவிழந்த கூந்தலுக்கு

பாசிப்பயறு மாவை கூந்தலுக்கும் பயன்படுத்தலாம். கூந்தல் பொலிவிழந்து பாதிக்கப்பட்டு காணப்பட்டால் இந்த மாவில் தயிர் சேர்த்து கலந்து குளிக்கும் முன் தலைக்கு தடவி 5 நிமிடம் ஊற வைத்து குளித்தால் முடி பட்டுப் போன்று மின்னும். மேலும் கூந்தலும் நன்கு வலிமையோடு வளரும். அதுமட்டுமல்லாமல் பொடுகுத் தொல்லையும் நீங்கும்.

pixabay

ஆரோக்கியமான கூந்தலுக்கு 

1 ஸ்பூன் பாசிப்பயறு மாவுடன், கால் கப் நெல்லிக்காய் ஜூஸ் கலந்து கூந்தலின் வேர்க்கால்களில் தடவ வேண்டும். 20 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பூ கொண்டு தலைமுடியை அலசுங்கள். வாரம் ஒருமுறை இதனை செய்து வந்தால் கூந்தலின் வேர்க்கால்களில் உள்ள பாதிப்புகள் குறைந்து ஆரோக்கியமான முடி வளரும்.

பொடுகு தொல்லை நீங்க 

1 ஸ்பூன் பாசிப்பயறு மாவை கால் கப் வேப்பிலை சாறுடன் கலந்து பொடுகுள்ள ஸ்கால்ப்பில் தடவுங்கள். அரை மணி நேரம் கழித்து தலைமுடியை அலசுங்கள். இப்படி வாரம் 2 முறை செய்தால் பொடுகு தொல்லை மற்றும் அரிப்பு நீங்கும். 

பளபளப்பான கூந்தலுக்கு 

அரை ஸ்பூன் பாசிப்பயறு மாவுடன் (green gram flour), ஆப்பிள் சைடர் வினிகர் மற்றும் ரோஸ் வாட்டர், கால் கப் தேங்காய் எண்ணெய் கலந்து தலைமுடிக்கு தடவி மசாஜ் செய்யுங்கள். பின்னர் அரை மணி நேரம் ஊற வைத்து தலைமுடியை ஷாம்பு கொண்டு அலசினால் உங்கள் கூந்தல் மிருதுவாகவும், பளபளப்பாகவும் இருக்கும்.

பனிக்கால பாத வெடிப்பு…. வீட்டில் இருக்கும் பொருட்களை பயன்படுத்தி எளிதாக குணப்படுத்தலாம்!

#POPxoLucky2020 – ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

 

Read More From Beauty