பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பிரகாசமான சன்செட் ஐ-மேக்கப் , போடுவது எப்படி ?

பண்டிகை நாட்களுக்கு ஏற்ற பிரகாசமான  சன்செட் ஐ-மேக்கப் , போடுவது எப்படி ?

முகத்தில் மிக முக்கியமான பங்கு வகிப்பது கண்கள்தான். கண்களுக்கு மேக்கப் போடுவது சற்று சேலஞ்சிங் விஷயம் தான் என்றாலும், தொடர்ந்து செய்தால், நீங்களும் விரைவில் எக்ஸ்பெர்ட் ஆகி விடுவீர்கள்.

திருமணம் , பண்டிகை என்று வரும்போது நீங்களும் ஒரு அழகிய கண் ஒப்பனையில் அசத்த விரும்புகிறீர்களா? இதற்கு பொருத்தமான சன்செட் ஐ மேக்கப் (sunset eye makeup) எப்படி போடுவது என்று பார்க்கலாம்.எப்போதும் மேக்கப் போடுவதற்கு முன் முகத்தை நன்றாக சுத்தம் செய்வது அவசியம். கீழே உள்ள விளக்கமான மேக்கப் குறிப்புகளை கவனமாகப் பின்பற்றி அழகிய தோற்றத்தை பெறுங்கள்.

1. புருவம்

Instagram

முதலில், புருவங்களை அழகு படுத்துங்கள். நியூட்ரோஜெனா ஐ பென்சில் பயன்படுத்தி புருவங்களை நிரப்புங்கள். அதனால், உங்கள் ஐ ஷேடோ மேக்கப் துவங்க பளிச்சென்று இருக்கும். பின் பழைய மஸ்காரா பிரஷ் கொண்டு புருவ முடிகளை சீவி விடுங்கள்.

இதற்கு POPxo பரிந்துரைப்பது - நியூட்ரோஜெனா ஊட்டமளிக்கும் கண் லைனர் காஸ்மிக் கருப்பு (ரூ. 1365) அல்லது NYX நிபுணத்துவ ஒப்பனை மைக்ரோ புரோ பென்சில் - எஸ்பிரெசோ (ரூ. 875)

2. கன்சீலர்

பிறகு ஒரு கன்சீலர் பயன்படுத்தி புருவத்திற்கு பார்டர் கொடுப்பதுபோல, புருவத்திற்கு மேலேயும் கீழேயும் வரைந்து கொள்ளுங்கள். ஐ ஷேடோ பேஸ் போல கண்களுக்கு இந்த கன்சீலரை பயன்படுத்துங்கள்.

குறிப்பு : கன்சீலருக்கு பதிலாக ஐ ஷேடோ ப்ரைமர் அல்லது ஃபௌண்டேஷன் பயன்படுத்தலாம்.ஐ ஷேடோ ப்ரைமர் பயன்படுத்தினால், மேக்கப் நன்றாக நீண்ட நேரம் நீடிக்கும்.

3. பவுடர்

பிறகு, பவுடர் பயன்படுத்தி கன்சீலரை செட் செய்ய வேண்டும். விரல்களால் அல்லது ப்ளெண்டிங் பிரஷால் செட் செய்து கொள்ளுங்கள். இதற்கு நிறம் அல்லாத டிரான்ஸ்லூசென்ட் பவுடர் பயன்படுத்தலாம். 

குறிப்பு: பவுடர் பயன்படுத்துவதால், ஐ ஷேடோ போடும்போது திட்டு திட்டாக இல்லாமல் இருக்கும். முகத்திற்கு மேக்கப் போடுவதற்கு முன் ஐ ஷேடோ போடுகிறீர்கள் என்றால், கண்களுக்கு கீழேயும் பவுடர் போட்டுக்கொள்ளுங்கள்.

4. மேல் இமை - ஐ ஷேடோ

Pinterest
Youtube

ப்ளெண்டிங் பிரஷ் எடுத்துக் கொள்ளுங்கள். பாபி(bobbie) நிற ஐ ஷேடோவை இமைகளுக்கு வெளிப்புறத்திலும், உட்புறத்திலும் தடவுங்கள். பிறகு கிரீஸ்(crease) பகுதியில் பரவுமாறு வெளியில் இருந்து உள்ளே பிரஷ் கொண்டு அழகாக நிறத்தை பூசுங்கள். நிறம் அடர்த்தியாகத் தோன்ற ஐஸ்(aish) நிற ஐ ஷடோவை மீண்டும் அதே போல செய்யுங்கள். இமைகளுக்கு நடுவே உள்ள பகுதியை நிரப்ப மோர்னின்(mornin) நிற ஐ ஷேடோவை இமைநடுவே விரல்களால் தடவிக்கொள்ள வேண்டும். கீழ் இமைப் பகுதிக்கும் மேலே கூறியவாறு இரண்டு நிற ஐ ஷேடோவை பயன்படுத்தி பின்னர் நடுவில் மோர்னின்(mornin) நிற ஐ ஷேடோவை தடவுங்கள். 

இதற்கு POPxo பரிந்துரைப்பது - கரிட்டி காஸ்மெடிக்ஸ் அதிக நிறமி கொண்ட ப்ரொபெஷனல் ஐ ஷேடோ பாலெட் (ரூ. 4,017) அல்லது இந்த நிறங்களின் சாயல்கள் கொண்ட எல்.ஏ. கலர்ஸ் ஸ்வீட்! 16 வண்ண ஐ ஷேட பாலெட் (ரூ. 475).

குறிப்பு :  படத்தில் மார்க் செய்திருக்கும் நிறங்களை அல்லது இந்த நிற சாயல்களை பயன்படுத்துங்கள். ஐ ஷேடோவை ப்ரஷில் தொட்டால் போதும். பிரஷைஐ ஷேடோ மீது சுத்தக்கூடாது.

5. ப்ரோ போன்(brow bone)

புருவத்திற்கு கீழே உள்ள எலும்பை வெளிப்படுத்திக்காட்டவும், மேலும் விழியின் உட்புறத்தில் உள்ள இடத்திலும்,  பியர்லெஸ்(fearless) நிற ஐ ஷேடோவை பயன்படுத்துங்கள்.

6. கீழ் இமைகளுக்கு ஐ-பென்சில்

பெரும்பாலும் அனைவரும் மறக்கூடிய ஒரு விஷயம் இது. கருப்பு நிற ஐ பென்சில் பயன்படுத்தி கீழ் இமையை அலங்கரிக்கவும்.இது உங்கள் கண்களை முழுமையாக காட்ட உதவும்.

7. ஐ லைனர்

Instagram

பிறகு மேல் இமையை அழகுபடுத்த கருப்பு நிற ஐ லைனர் பயன்படுத்துங்கள். பாரம்பரிய தோற்றம் வேண்டுமெனில் கீழ் இமையில் கருப்பு நிற ஐ ஷேடோ பயன்படுத்தி அடர்த்தியாக்குங்கள். இதற்கு நாங்கள் பரிந்துரைப்பது - நைகா கெட் விங்ட் ஸ்கெட்ச் ஐலைனர் + ராக் தி லைன் காஜல் ஐலைனர் காம்போ (ரூ. 598).

8. இமை ஷேப்பர்

இமை முடியை வளைத்து ஷேப்பர் கொண்டு அழகாக வளைத்துக் கொள்ளுங்கள். மேக்கப் ஆரம்பிக்கும் முன்கூட இமை முடியை வளைத்து ஷேப்பர் கொண்டு அழகாக வளைத்தபின் அடுத்த படிக்கு செல்லுங்கள். இதனால் இமை முடிகளில் பிறகு மேக்கப் பட்டு அழுத்துவதை தவிர்க்கலாம். ஆனால், உங்கள் விருப்பம் போல இறுதியில், மஸ்காரா போடுவதற்கு முன்புகூட ஷேப் செய்து கொள்ளலாம். மேலும் ,நீங்கள் அறியாமல் செய்யக்கூடிய ஐ லாஷ் கர்லர் தவறுகளை தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செய்யவும்.

9. மஸ்காரா

இமையில் உள்ள முடிக்கு மஸ்காரா தடவிக்கொள்ளுங்கள். கீழ் இமையில் மஸ்காரா தடவும்போது, முகத்தில் படாதவாறு பார்த்துக்கொள்ளுங்கள். அல்லது ரெடிமேட் இமை முடிகளை பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

இப்போது கண்களுக்கு எப்படி அழகாக மேக்கப் போட வேண்டும் என்ற குறிப்புகளும், திருமண விழாவிற்கு எவ்வாறு கண் ஒப்பனையை பொதுவாக செய்யலாம் என்றும் அறிந்திருப்பீர்கள். இவற்றை நன்றாக பயிற்சி செய்து, உங்களுக்கெனத் தனி பாணியை உருவாக்குங்கள்.

மேலும் படிக்க - ஐ - பென்சிலை மட்டுமே பயன்படுத்தி ஸ்மோக்கி ஐ லுக்கை எவ்வாறு பெறலாம்?

பட ஆதாரம்  - Pinterest, Instagram 

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!