சலூனுக்குப் போகாமல், கடினமான கெமிக்கல் பயன்படுத்தாமல் ஹேர் கலரை நீக்குவது எப்படி?

சலூனுக்குப் போகாமல், கடினமான கெமிக்கல் பயன்படுத்தாமல் ஹேர் கலரை நீக்குவது எப்படி?

ஒரு விழாவிற்காக கூந்தலுக்கு அழகாக கலர் செய்து இருக்குறீர்களா? அல்லது இரண்டு மூன்று வருடங்களாக அதே நிற டை பயன்படுத்தி சலித்து போய்விட்டதா? என்ன காரணமாக இருந்தாலும், சிறிது நாட்களுக்கு பின் வேறு ஒரு தோற்றத்தில் விளங்கவே முனைவோம். அப்போது ஹேர் டை நீக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏற்படும். கூந்தலுக்கு அதிக பாதிப்பு இல்லாமல் கலரை எப்படி நீக்கலாம் என்ற குறிப்புகளைத் இங்கு தெரிந்து கொள்ளலாம்.

1. வைட்டமின் சி, ஷாம்பூ மற்றும் ஹைட்ரஜன் பெராக்ஸைட்

10 முதல் 15 வைட்டமின் சி மாத்திரைகளை நன்றாகப் பொடி செய்து கொள்ளுங்கள். அல்லது வைட்டமின் சி பவுடர் கிடைத்தாலும் பயன்படுத்தலாம். பிறகு அதில் சிறிது ஷாம்பூவை ஊற்றி கலக்குங்கள். இதுவே போதுமானது. ஆனால், விரைவான பலன் கிடைக்க ஹைட்ரஜன் பெராக்ஸைட் 3 தேக்கரண்டி சேர்த்துக் கொள்ளலாம்.

இந்தக் கலவையை, கூந்தலில் கலர் உள்ள இடங்களில் பூசி ஒரு ஷவர் கேப் போட்டுக் கொள்ளுங்கள். 45 நிமிடங்கள் ஊறிய பின் கூந்தலை நன்றாக அலசிவிடுங்கள்.இப்படி 2, 3 முறை செய்தால் சுத்தமாக கூந்தல் கலர் மறைந்து இயற்கை நிறம் வந்துவிடும். வைட்டமின் சி’யில் உள்ள அமிலத்தன்மை கூந்தல் கலரை போக்க உதவும். வைட்டமின்-சி’க்கு பதிலாக எலுமிச்சை சாறும் பயன்படுத்தலாம்.

2. பேக்கிங் சோடா மற்றும் ஷாம்பூ

Pexels

பேக்கிங் சோடா இயற்கையாக ஹேர் டை நீக்கும் தன்மை கொண்டது. இதோடு ஆன்டி-டாண்ட்ரப் ஷாம்பு ஷாம்பூ சமமாகக் சேர்த்து கூந்தலில் பயன்படுத்துங்கள்.இந்தக் கலவை முற்றிலுமாக நிறத்தை போகாவிட்டாலும், நிறத்தை மங்கச் செய்யும். தொடர்ந்து பயன்படுத்தினால் கூந்தலில் உள்ள டை முற்றிலும் நீங்கி விடும். இதற்கு POPxo பரிந்துரைப்பது - ஹோலி நச்சுரல் - தி ஒண்டெர் ஒப் வேர்ல்ட் பேக்கிங் சோடா (ரூ 170), வெல்லா வல்லுநர்கள் INVIGO சுத்தமான ஸ்கால்ப் ஆன்டி டாண்ட்ரப் ஷாம்பு (ரூ 620).

3. சூடான எண்ணெய்

தேங்காய் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய் எது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம். எண்ணெயை சூடு செய்து அதைக் கூந்தலில் தடவி இரண்டு மணி நேரம் ஊறவிடுங்கள். பின்னர் ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை நன்றாக அலசுங்கள். 

மிகவும் மென்மையான, எளிதில் உடைந்துவிடக்கூடிய கூந்தல் தன்மை உள்ளவர்கள், பிளீச் செய்தால் கூந்தல் சேதமடைந்துவிடும். ஆகையால் ப்ளீச் செய்யாமல் சூடான எண்ணெய்யை கூந்தலில் உள்ள நிறத்தை நீக்க பயன்படுத்தலாம்.ஜோஜோபா எண்ணெய் அல்லது பேபி ஆயில் (baby oil) கூட இதற்கு பயன்படுத்தலாம்.

4. வினீகர் மற்றும் சூடான தண்ணீர்

Pexels

வெள்ளை டிஸ்டில் வினீகர் இதற்கு எடுத்துக்கொள்ளுங்கள். ஒரு டப்பில் சூடான தண்ணீர் நிரப்பிக்கொள்ளுங்கள். அதில் சிறிது வினீகரை ஊற்றுங்கள். உங்கள் கூந்தலை அதில் நனைத்து  நனைத்து எடுத்துக் கொள்ளுங்கள். சிறிது நேரத்தில் கூந்தலில் உள்ள டை மறைவதைப் பார்க்கலாம். பிறகு, எப்போதும்போல ஷாம்பூ போட்டு தலைக்கு குளித்துக்கொள்ளுங்கள்.

மேலும் படிக்க - ஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா? கண்டறியுங்கள் !

5. பிளீச்சிங் பவுடர் மற்றும் ஷாம்பூ

இது மிகவும் கடினமான ஹேர் டைகளை நீக்கக் கூடிய தன்மை கொண்டது. ஷாம்பூவுடன் அமோனியா இல்லாத பிளீச்சிங் பவுடரை கலந்து வைத்துக் கொள்ளுங்கள். உங்கள் கூந்தலில் மட்டும் நன்றாகத் தடவி ஒரு மணி நேரம் ஷவர் கேப் போட்டு ஊற விடுங்கள். பின்னர் நன்றாகத் தண்ணீர்விட்டு அலசிக்கொள்ளுங்கள். 

ஹேர் டை முற்றிலும் காணாமல் போனதைப் பார்ப்பீர்கள்.அமோனியா இல்லாத பிளீச்சிங் பவுடர் இங்கே வாங்கலாம்.

6. சூரிய ஒளி

Pexels

சூரிய ஒளி கூட உங்கள் கூந்தல் நிறத்தை விரைவாக மங்கச்செய்யும். சிறிது நேரம் உங்கள் கூந்தலை சூரிய ஒளி படுமாறு விட்டுவிடுங்கள். செயற்கையான ஹேர்டை விரைவில் கூந்தலை விட்டு நீங்கும்.

மேலும் படிக்க -  வெப்ப பாதுகாப்பு சீரம்: கூந்தலின் அழகை மேம்படுத்த தரமான சீரம் தேர்வு செய்ய சில குறிப்புகள்

7. கிளோரின் கலந்த தண்ணீர்

நீச்சல் குளத்தில் கிளோரின் கலந்திருப்பார்கள். அந்த தண்ணீரில் கூந்தலை அலசும்போது நிரந்தரம் அல்லாத ஹேர் டை பயன்படுத்தி இருந்தால், டையின் நிறம் குறையும். ஆனால், நீண்ட நேரம் கிளோரின் கலந்த தண்ணீரில் கூந்தல் இருந்தால், வறண்டுவிடும் என்பதை மனதில் கொள்ளுங்கள்.

8. சலவை சோப்புத்தூள் அல்லது திரவம்

Pexels

ப்ளீச் இல்லாத சலவை சோப்புத் தூள் அல்லது திரவம் கூந்தலில் உள்ள கடினமான டை நிறத்தை போக்க உதவும். இதற்கு POPxo பரிந்துரைப்பது - கிரீன்வொர்க்ஸ் அல்ட்ரா லாண்டரி பவுடர் நேச்சுரல் (ரூ 398). குழந்தைகளுக்கு பயன்படுத்தும் ப்ளீச் இல்லாத சலவை சோப்புத் தூள் அல்லது திரவத்தை பயன்படுத்தலாம்.அதிக பாதிப்பு ஏற்படுத்தாமல் பாதுகாப்பானது. சருமத்தில் படாமல் கவனமாகப் பயன்படுத்த வேண்டும். 

உலகளவில் ஹேர் கலர் செய்வது மிகவும் பிரபலமாகிவிட்டது. பல நிறங்களில் எளிதாக கூந்தல் நிறத்தை மாற்றக் கிடைக்கிறது. அடர்த்தியான நிறத்தில் இருந்து இலகுவான நிறத்திற்கு மாறும்போது வீட்டில் இருந்தபடியே மேலே குறிப்பிட்ட ஹேர் டை நீக்கும் (hair dye removal) யுக்திகளை பின்பற்றி பயன்பெறுங்கள்.

மேலும் படிக்க -  அடர்த்தியான அழகிய கூந்தலை பெற 5 சிறந்த ஹேர் மாஸ்க்ஸ்

பட ஆதாரம்  - Shutterstock 

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!