Celebrity Life
பட வாய்ப்புகள் குறைவு.. திருமணத்துக்கு தயாரான நடிகை லட்சுமி மேனன் : விரைவில் டும் டும்!

நடிகை லட்சுமி மேனனுக்கு விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. கும்கி படம் மூலம் தமிழில் ஹீரோயினாக அறிமுகமானவர் மலையாள நடிகை லட்சுமி மேனன். முதல் படமே சூப்பர் டூப்பர் ஹிட் என்பதால் பிஸியான நடிகையானார்.
இரண்டாவது படம் சசிகுமார் அவர்களுக்கு ஜோடியாக ‘சுந்தரபாண்டியன்’ படத்தில் நடித்தார். இந்த படமும் ஹிட் படமாக அமைந்தது. இந்த இரு படங்களின் மூலம் லட்சுமி தமிழக ரசிகர்களிடம் மனதில் இடம்பிடித்தார்.
இதன் மூலம் முன்னணி நடிகைகளின் வரிசைக்கு டக்கென சென்றுவிட்டார். கிராமத்து பாங்கான இந்த திரைப்படத்தில் அசாத்தியமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களின் நெஞ்சங்களைக் கொள்ளை கொண்டார்.
இதையடுத்து குட்டிப்புலி, பாண்டியநாடு, ஜிகர்தண்டா, கொம்பன் என தொடர்ந்து படங்களில் நடித்து வந்தார். கடைசியாக ‘றெக்க’ படத்தில் விஜய் சேதுபதிக்கு ஜோடியாக நடித்தார். அதை அடுத்து அவருக்கு வாய்ப்புகள் குறைந்தது. இப்படத்தை தொடர்ந்து நீண்ட இடைவெளிக்கு பிறகு தற்போது “யங் மங் சங்” என்ற படத்தில் நடித்துள்ளார்.
ஒரு சிறந்த காதலைத் தேடிக் கொண்டிருக்கிறேன்.. பிரேக்கப் பற்றி மனம் திறக்கும் ஸ்ருதி ஹாசன் !
இப்போது இந்த திரைப்படத்தின் வெளியீட்டிற்காக காத்துக் கொண்டிருக்கிறார் நடிகை லட்சுமி மேனன். இந்நிலையில் நடிகை லட்சுமி மேனன் (lakshmi menon) மேலும் ஒரு புதிய திரைப்படத்தில் நடிப்பதற்கு கமிட் ஆகியுள்ளார். அறிமுக இயக்குனரான ராஜசேகர பாண்டியன் அவர்களின் இயக்கத்தில் உருவாக இருக்கும் புதிய திரைப்படத்தில் ஆரி எனும் நடிகருடன் இணைந்து நடிக்க காத்திருக்கிறார் நடிகை லட்சுமி மேனன்.
இருப்பினும் இந்த புதிய திரைப்படத்தில் லட்சுமிமேனனின் கதாபாத்திரம் குறித்த தகவல்கள் இன்னும் வெளியாகவில்லை. முன்னதாக விஷால், கார்த்தி போன்ற முன்னணி நாயகர்களுடன் லட்சுமி மேனன் ஜோடி போட்டு வந்தார்.
ஆனால் வேதாளம் படத்தில் அஜித்தின் தங்கையாக நடித்த பிறகு இவருக்கு ஹீரோயின் வாய்ப்பு குறைந்தது. மேலும் அவரது உடல் எடையும் அதிகரித்து விட்டது. இதனால் தற்போது அறிமுக நடிகர்களுடன் நடிக்கும் அளவிற்கு மார்க்கெட் டவுனாகியுள்ளது.
பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் குறித்து லாஸ்லியாவின் முதல் ட்வீட் : காதல் கன்பார்ம்!
10வது படிக்கும் போதே லட்சுமி மேனன் நடிக்க வந்துவிட்டார். இந்நிலையில் லட்சுமி மேனன் (lakshmi menon) கேரளாவில் தனது படிப்பில் முழு ஆர்வத்தையும் செலுத்தி வருகிறார். இதனிடையே நடிகர் விஷாலும், லட்சுமி மேனனும் காதலிப்பதாக திரையுலக வட்டாரங்களில் தகவல் வெளியான வண்ணம் இருந்தது.
ஆனால் அது வெறும் வதந்தி தான் என பின்னர் தெரியவந்தது. இந்நிலையில் தற்போது 22 வயதாகும் லட்சுமி மேனனுக்கு திருமணம் செய்து வைக்க அவரது குடும்பத்தினர் முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. பட வாய்ப்புகள் சரியாக இல்லாததால் திருமணம் செய்து கொண்டு கணவர் குடும்பத்துடன் செட்டில் லட்சுமி மேனனும் விருப்பப்படுவதாக கூறப்படுகிறது.
மாப்பிள்ளை தேடும் படலம் தீவிரமாக நடைபெற்று வந்ததாகவும், அதில் இரண்டு மாப்பிள்ளைகளை சார்ட் லிஸ்ட் செய்து வைத்துள்ளதாகவும் அவரது வட்டாரங்கள் தெரிவிக்கின்றனர். ஒரு மாப்பிள்ளை கேரளாவில் பிரபலமான தொழில் அதிபரின் வாரிசு என்றும் மற்றொருவர் கனடாவில் பணியாற்றும் சாப்ட்வேர் என்ஜினியர் என்றும் சொல்லப்படுகிறது.
ஆனால் அவர்கள் குறித்த முழு விவரங்கள் ரகசியமாக வைத்திருக்கப்படுகிறது. அடுத்த ஆண்டு இறுதியில் அவர்களது திருமணம் நடைபெற உள்ளது. அதன் பின்பு நடிப்பு தொழிலுக்கு அவர் முழுக்கு போட உள்ளதாகவும் அவரது வீட்டார் கூறி உள்ளனர். அதற்குள் ஒரு சில படங்களில் லட்சுமி மேனன் (lakshmi menon) நடித்து முடித்து விட திட்டம் வைத்துள்ளார்.
சரண்யா பொன்வண்ணனின் மகள்கள் இவ்வளவு அழகா ! வெளியாகாத புகைப்படங்கள் !
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity Life
மலையாளத்தில் மம்மூட்டி ஜோடியாக நடிகை மஞ்சு வாரியர்.. கனவு நிறைவேறியதாக மகிழ்ச்சி!
Swathi Subramanian
தனது காதலரை அறிமுகப்படுத்தினார் நடிகை ப்ரியா பவானி சங்கர்….. ரசிகர்கள் அதிர்ச்சி!
Swathi Subramanian
25 படங்களில் நடித்த பயணம் கடினமாக இருந்தது… ரசிகர்களுக்கு நன்றி கூறிய நடிகை வரலட்சுமி!
Swathi Subramanian
நடிகை சினேகாவிற்கு இரண்டாவதாக பெண் குழந்தை பிறந்தது….. உச்சகட்ட மகிழ்ச்சியில் பிரசன்னா!
Swathi Subramanian