பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் குறித்து லாஸ்லியாவின் முதல் ட்வீட் : காதல் கன்பார்ம்!

பிக் பாஸ் நிகழ்ச்சிக்கு பிறகு கவின் குறித்து லாஸ்லியாவின் முதல் ட்வீட் :  காதல் கன்பார்ம்!

பிக்பாஸ் 3-வது சீசன் ரசிகர்கள் இடையே நல்ல வரவேற்பை பெற்ற நிலையில், முகென் அதிக வாக்குகளை பெற்று முதலிடத்தை பிடித்தார். அவருக்கு 50 லட்ச ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது. 2-ம் இடத்தை சாண்டியும், 3-வது இடத்தை லாஸ்லியாவும் பிடித்தனர்.

முந்தைய சீசன்களில் இல்லாத வகையில் இந்த பிக் பாஸ் சீசன் காதல் காவியமாக இருந்தது. இதற்கு முக்கிய காரணம் நடிகர் கவின் தான். முதலில் அபிராமிக்கு கவின் மீது கிரஷ் இருந்தது. பிறகு சாக்ஷியும், கவினும் காதலர்களை போல் சுற்றித் திரிந்தனர்.

twitter

அவர்களுக்கு இடையே லாஸ்லியா வந்ததால் இந்த காதல் முக்கோண காதலாக மாறியது. மற்றொரு பக்கம் அபிராமி - முகென், தர்ஷன் - ஷெரின் இடையே ரொமான்ஸ் காட்சிகள் அரங்கேறின. ஆனால் இதை எல்லாம் ஒன்றுமில்லாமல் செய்து விட்டது கவின் - லாஸ்லியா (கவிலியா) காதல். 

கமல், சேரன், லாஸ்லியாவின் குடும்பத்தினர் என பலரும் அறிவுரை வழங்கிய நிலையிலும் அவர்களது காதல் ஒரு பக்கம் வளர்ந்து கொண்டு இருந்தது. பிக் பாஸ் நிகழ்ச்சி நடந்து கொண்டிருந்த போது கவிலியா என்ற ஹேஷ்டேக் ட்விட்டரில் டிரெண்டிங்காகும். 

கவின், லாஸ்லியா ரசிகர்களும், அவர்களது எதிர்ப்பாளர்களும் இதில் மோதிக்கொள்வர். ஆனால் இப்போது பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்த பிறகும் கவிலியா ஹேஷ்டேக் டிரெண்டிங்காகி இருக்கிறது பலருக்கும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது. 

twitter

பிக் பாஸ் நிகழ்ச்சியில் இருந்து வெளியேறிய போட்டியாளர்கள் அனைவரும் மற்ற போட்டியாளர்களை சந்தித்து புகைப்படங்களை பதிவிட்டு வருகின்றனர். கவின், முகென், சாண்டி, தர்ஷன் ஆகியோர் ஒன்றாக இருக்கும் புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் வெளியானது.

மேலும் கவின், சாண்டி மகள் லாலாவுடன் மகிழ்ச்சியாக சைக்கிள் ஓட்டி விளையாடும் வீடியோக்கள் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. அதேபோல ஷெரின் மற்றும் சாக்ஷி ஒன்றாக சுற்றும் புகைப்படங்களும் வெளியானது. 

பிக் பாஸ் நிகழ்ச்சி முடிந்ததில் இருந்து லாஸ்லியா எந்த ஒரு அப்டேட்டும் விடாததால் அவரது ரசிகர்கள் வருத்தத்தில் இருந்தனர். இந்நிலையில் லாஸ்லியா பாத்திமா பாபுவை சந்தித்த புகைப்படங்கள் வெளியானது. மேலும் சென்னை மால் ஒன்று லாஸ்லியா தனது ரசிகர்களுடன் குத்தாட்டம் போட்ட வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. 

இதனை தொடர்ந்து லாஸ்லியா அவரது ட்விட்டர் பக்கத்தில் எதிர்ப்பாராததை எதிர்ப்பாருங்கள் என்று பதிவிட்டு விஜய் தொலைக்காட்சி மற்றும் கமல்ஹாசன் அவர்களுக்கு நன்றி கூறியுள்ளார். 

மேலும் மை கேம் சேஞ்சர் என பதிவு செய்துள்ளார். பிக்பாஸில் கவினும் கேம் சேஞ்சர் விருது கொடுக்கப்பட்ட நிலையில் லாஸ்லியா தனது ட்விட்டரில் கவினை குறிப்பிட்டுள்ளது தெரிகிறது. 

 

twitter

முன்னதாக நிகச்சியில் நடைபெற்ற செய்தியாளர்கள் சந்திப்பு ஒன்றில், என் பெற்றோர்கள் காதல் திருமணம் செய்தவர்கள். நாங்கள் இப்படித்தான் காதலித்தோம் என சொல்லிச் சொல்லிதான் எங்களை வளர்த்தார்கள். 

ஆனாலும் பெற்றோர் சம்மதத்துடன்தான் என் திருமணம் நடக்கும் என்று தெரிவித்திருந்தார். இந்நிலையில் அவரது பெற்றோர் சம்மதத்துடன் கவினை திருமணம் செய்து கொள்வாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!