Celebrity gossip
அப்பாவின் இரண்டாவது திருமணம்.. அம்மாவுக்காக சம்பாத்தியம்.. அறிந்திராத அமலாவின் மறுபக்கம்!

நைன்டிஸ் கிட்ஸ் ஸ்பெஷல் நடிகை அமலா (amala). ஆங்கிலோ இந்திய பெண்ணின் அழகுடன் அமலா தமிழ் சினிமாவிற்குள் நுழைந்த போது இளைஞர் பட்டாளம் கிறங்கி போயிருந்தது. அவரது நடன திறமை கண்டு வியந்தது.
நாமெல்லாம் அறிந்த அமலா நல்லதொரு நடிகையாக இருந்தார். முன்னணி நடிகர்களுடன் நடித்தார். பின்னர் நாகர்ஜூனாவின் இரண்டாவது மனைவியாக மாறி ப்ளூ க்ராஸ் மெம்பர் ஆனார். மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் என்பதுதான்.
காதலி நதியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் – முகேனின் ஸ்பெஷல் புகைப்படம் !
Youtube
ஆனால் அமலா தன்னைப் பற்றிய முக்கியமான விஷயங்களை முன்னணி ஊடகம் ஒன்றிற்கு பேட்டி அளித்திருக்கிறார். அத்தனை அழகான ஐஸ்க்ரீம் பெண்ணிற்குள் இத்தனை சோகங்களா என்று நம்மை ஆச்சரியப்படுத்தும் பல உண்மைகளை அதில் அவர் வெளிக்காட்டி இருக்கிறார்.
சிறு வயதில் இருந்தே மிருகங்கள் மீது அமலாவிற்கு அன்பிருந்தது. அவைகளை பராமரிப்பது பிடித்திருந்தது. இதனால் கால்நடை மருத்துவராகும் கனவை வைத்திருந்தார் அமலா. சிறு வயதில் பத்மா சுப்ரமணியத்தின் நாட்டியத்தை பார்க்க அழைத்து சென்ற போது அமலாவிற்கு நாட்டியத்தின் மீது பற்று பிறந்தது.
கணவரால் கைவிடப்பட்ட நடிகை கனகா.. அனாதை இல்லம் மூலம் சிகிச்சை பெறும் கொடுமை..
Youtube
அதன் பின்னர் அமலாவும் அவரது அம்மாவும் அவருக்கு எட்டு வயதாக இருக்கும்போது கலாக்ஷேத்ரா வில் வந்து விசாரித்தனர். தான் தனியாக இருந்து கொள்வேன் என்று அமலா உறுதியாக கூறிவிட எட்டு வயதில் இருந்தே அமலா ஹாஸ்டலில் தங்கி நடனம் பயின்றிருக்கிறார்.
படித்தபடியே பல மாநிலங்களில் நடக்கும் நடன நிகழ்ச்சியில் நடனமாடி வருமானம் பெற்றிருக்கிறார். அது அவருக்கு போதாமல் இருந்திருக்கிறது. காரணம் அம்மா அயர்லாந்தில் இருக்க அப்பா இன்னொரு பெண்ணை இரண்டாவது திருமணம் செய்து கொண்டாராம்.
மினுமினுப்பான தேகத்திற்கு மீன் எண்ணெய் மாத்திரை! ஆரோக்கியம் ப்ளஸ் அழகு கேரண்ட்டி !
Youtube
இதனால் அம்மாவையும் சேர்த்து பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு அமலாவிற்கு இருந்தது. ஒருமுறை இவரது நடனத்தை பார்த்த டி ராஜேந்தர் இவருக்கு மைதிலி என்னை காதலி திரைப்படத்தில் கதாநாயகி ஆகும் வாய்ப்பினை கொடுத்திருக்கிறார்.
வருமானம் போதாமல் இருந்த அமலாவிற்கு நடிப்பு தொழில் தேவையான வருமானத்தை கொடுத்தது. ஆரம்ப காலத்தில் சரியான கதைகளை தேர்வு செய்ய ஆள் இல்லாமல் சில படங்கள் தோல்வியடைந்தது. அதன் பின்னர் சிங்கீதம் சீனிவாசராவ் இயக்கத்தில் பேசும் படம் திரைப்படத்தில் நடித்த அமலா அதில் இருந்து தன்னுடைய நடிப்பின் போக்கை மாற்றினார்.
இரவு பகலாக உழைத்து அம்மாவிற்காக அடையாறில் ஒரு வீடு வாங்கியபோது தான் அளவில்லாத மகிழ்வடைந்ததாக அமலா குறிப்பிட்டிருக்கிறார். நடிப்பினால் டான்ஸை குறைக்க உடல் எடை அதிகமாகி சிரமப்பட்ட அமலாவை யோகா காப்பாற்றி உடல் எடையை தக்க வைத்திருக்கிறது.
இனி எங்களுக்குள் எதுவுமில்லை.. அவரவர் வாழ்க்கை அவரவருக்கானது..ப்ரியங்காவின் பிரேக்கப் நோட்
Youtube
கமலிடம் கற்று கொள்ளலாம் ரஜினியிடம் கலர்புல்லாக வேலை செய்யலாம் என்று கூறும் அமலா 1998 சமயங்களில் தெலுங்கு நடிகர் நாகர்ஜூனாவுடன் இணைந்து நடிக்க ஆரம்பித்தார். அதன் பின்னர் இருவருக்கும் காதல் மலரவே இருவரும் திருமணம் செய்து கொண்டனர்.
மகன் அகிலை 10 மாத குழந்தையாக இருக்கும்போதே பேபிஸ் டே அவுட் ஆங்கில படத்தின் ரிமேக்கில் அமலா நடிக்க வைத்திருந்தார். இப்போது அம்மா, மாமியார் , மருமகள் என பல பொறுப்புகள் இருந்தாலும் தன்னுடைய ரி என்ட்ரியை ஆரம்பிக்க இருக்கிறார் அமலா.
நான் கொடுத்து வைத்தவள் நான் கனவு கண்டதை விட அதிகமாகவே எனக்கு கடவுள் கொடுத்திருக்கிறார்கள். நடிகர்களின் வாழ்வு ஆசிர்வாதங்களால் நிறைந்தது என்று தன்னுடைய பேட்டியை முடித்திருக்கிறார் அமலா. ஆம்.. நீண்ட இடைவெளிக்கு பின்னர் அமலாவை நம் தமிழ் சினிமாவில் கூடிய விரைவில் பார்க்க போகிறோம்.
Youtube
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!
Read More From Celebrity gossip
உங்கள் அழகை பராமரிக்க சில குறிப்புகள்!
Deepa Lakshmi
குழந்தைகள் எனக்கு மிகவும் பிடிக்கும்..ஆனால்..குழந்தை இல்லாமை பற்றி நெகிழும் விஜயசாந்தி!
Deepa Lakshmi
அரச குடும்பத்தில் இருந்து வெளியேறுகிறோம்.. டயானாவின் மகன் இளவரசர் ஹாரி அதிர்ச்சி முடிவு..
Deepa Lakshmi
நடிகை ஐஸ்வர்யா ராஜேஷ் இப்படிப்பட்ட குடும்ப பின்னணியில் இருந்து வந்தவரா!
Deepa Lakshmi
செம்பருத்தி சீரியலில் ஆதியின் சம்பளம் இவ்வளவா !
Deepa Lakshmi