காதலி நதியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் - முகேனின் ஸ்பெஷல் புகைப்படம்!

காதலி நதியாவுடன் கோயிலில் சாமி தரிசனம் - முகேனின் ஸ்பெஷல் புகைப்படம்!

பிக் பாஸ்(biggboss)  சீசன் மூன்று நிகழ்ச்சியில் வழக்கம் போல இல்லாமல் இந்த முறை நேர்மையான நியாயமான போட்டியாளரான முகேனுக்கு முதல் பரிசு வழங்கப்பட்டது. முகேன் ராவ் (muken rao) தன்னுடைய பாடல்களால் மட்டும் அல்லாமல் நியாயமான சிந்தனை நேர்மையான நடவடிக்கை மூலம் அனைவர் மனதையும் கவர்ந்தார்.                                                

போட்டியாளர்கள் ஒவ்வொருவரும் ஒரு ஒரு கணக்கு போட்டு மற்றவர்களுடன் பழகிய போது யாரோடும் எந்த கணக்கு திட்டமிடுதலும் இல்லாமல் அனைவரிடமும் ஒரே மாதிரியான அன்பை பொழிந்தவர் முகேன். அபிராமி தானாகவே வந்து காதலை சொல்லி விடாமல் நெருங்கிய போதும் மனத்தை மாற்றாமல் காதலி நதியாவுக்கே (nadiya yasmin) தன்னுடைய காதல் என்பதில் உறுதியாக இருந்தவர் முகேன்.                                                   

 

Hotstar

மற்றவருக்கு எப்படியோ எனக்கு முகேன் காட்டிய அந்த உறுதி மிகவும் பிடித்திருந்தது. மேலே மேலே வந்து விழும் அபிராமியிடம் ஜென்டில்மேனாக பழக 23 வயதிலேயே முகேனுக்கு தெரிந்திருக்கிறது. அது அநேகமாக பெரும்பாலான ஆண்மகன்களுக்கு இல்லாத குணம்.

யாரையும் பயன்படுத்திக் கொள்ள நினைக்காத இந்த குணம் தான் முகேன் மீது அனைவரின் அன்பையும் விதைத்தது. கூடவே பிரபஞ்சத்தை நேசிக்கும் நேசிப்பாளன். இந்த சிறிய வயதில் பிரபஞ்ச கோட்பாடுகள் அதன் மீதான தீராத பிரியம் அதன் மீதான மதிப்பு இவை எல்லோருக்கும் வந்து விடுவதில்லை.

Hotstar

அதைப்போலவே தன்னுடைய கோபத்தை அழகாக கட்டுக்குள் கொண்டு வந்த விதம் முகேனை பார்த்து இன்னும் என்னை ஆச்சர்யப்பட வைக்கிற விஷயம். என்னாலேயே கூட இன்னும் இது முடியவில்லை. எல்லோரிடமும் இல்லா விட்டாலும் நெருங்கியவர்களிடம் அவர்கள் நியாயத்துக்கு புறம்பாக நடந்தாலோ பொய் சொன்னாலோ பெரும் கோபம் வந்து விடுகிறது.

ஒருவேளை எனக்கும் இப்படி ஒரு 100 நாட்கள் கிடைத்தால் நானும் மாறி விடுவேன் என நினைக்கிறேன். இப்படி முகேன் பற்றி பக்கம் பக்கமாக என்னால் சொல்ல முடியும் ஆனாலும்.. அது உங்களுக்கு போர் அடிக்கலாம். ஆகவே விஷயத்துக்கு வந்து விடுகிறேன்.

 

Youtube

முகேன் தன்னுடைன் பழகிய நதியா யாஸ்மின் மீது அளவில்லாத காதல் கொண்டிருந்தார். இது ஒருதலை காதல் என்பதால் அதன் முடிவு தெரியாமலேயே பிக் பாஸ் வீட்டிற்குள்ளும் வந்து விட்டார். என்னதான் காதலில் தீவிரமாக இருந்தாலும் தன்னுடைய குடும்பத்தாரை நேசிப்பதையும் முகேன் ஒரு காலத்திலும் விடவே இல்லை.

100 நாட்கள் முடித்து வின்னராக மலேசியா சென்ற போதுதான் காதலி நாடியாவிடம் இருந்து பச்சை சிக்னல் விழுந்திருக்கிறது. இப்படியான மோசமான உலகில் தங்கம் போலவே குணம் உள்ள ஒரு ஆணை வேண்டாம் என்று சொல்ல நதியா யாஸ்மின் ஒன்றும் குழந்தையில்லையே! முகேனின் காதலை ஏற்றுக் கொண்டார்.

 

Youtube

அதனை அடுத்து ஊடகங்களில் தான் சந்தோஷமாக இருப்பதாக முகேன் கூறி இருந்தார். இப்போது முகேனும் அவரது காதலி நதியாவும் மலேசியாவில் உள்ள கோயிலுக்கு ஒன்றாக சென்றது வைரலாகி இருக்கிறது. ஆன்மிகத்தில் நாட்டம் உள்ள முகேன் இப்படி அடிக்கடி கோயில் செல்வது வழக்கம்தான் என்றாலும் காதலியுடன் செல்வது இதுவே முதல் முறை.

ஆகவே முகேன் காதலியுடன் எடுத்துக் கொண்ட புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் கூடிய சீக்கிரம் திருமண புகைப்படத்தை அனுப்பி வையுங்கள் எனக் கூறி வருகின்றனர்.

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!