பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படும் வலிகளை போக்க சில எளிய குறிப்புகள்

பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படும் வலிகளை போக்க சில எளிய குறிப்புகள்

 


பெண்களுக்கென்றே ஏற்படும் பிரத்யேகமான வலிகளில் பிரதான வலியாக இருப்பது இந்த பீரியட்ஸ் நேரங்களில் ஏற்படும் வலிதான்.


அப்போதுதான் பருவம் அடைந்த சிறுபெண் முதல் ஐம்பதுகளில் மெனோபாஸ் சின்ரோமில் இருப்பவர்கள் வரை இந்த மாதவிடாய் என்பது பல சமயங்களில் மிக துன்பத்தை கொடுக்கிறது. அந்த ஐந்து நாட்களில் வரும் வலியை பொறுத்துக் கொள்வது என்பது சிலரால் முடியவே முடியாது. அடிவயிற்றில் சதா நெருப்பு பற்றி எரிவது போலவே பயத்துடன் நாம் அந்த நாட்களை எதிர்கொள்ள காத்திருப்போம்.


மெனோபாஸ் நேரத்தில் இருக்கும் என் போன்ற பெண்களுக்கெல்லாம் மேலும் வேதனையை கொடுக்கும். ஒருமுறை பிரசவம் செய்து குழந்தை பெறுவது என்பதே பல்வேறு உடல் வேதனைகள் மன சவால்களை கடந்துதான் நடக்கிறது. ஆனால் பெரும்பாலும் மெனோபாஸ் நேரங்களில் இருப்பவர்களுக்கு இததகைய பிரசவத்தை போன்ற வலி மாதா மாதம் ஏற்படுகின்றது என்பதுதான் உண்மை.


இந்த வலிகளை குறைக்க தற்போது மருத்துவர்கள் மாத்திரைகளை எழுதி தருகிறார்கள். ஆனால் அதை விடவும் இயற்கையான முறையில் வீட்டில் இருக்கும் பொருட்களை வைத்தே நமது மாதவிடாய் எனும் கொடும் கனவின் வேதனைகளை போக்க முடியும் என்பது மகிழ்ச்சியான செய்திதான் இல்லையா.


நாம் ஒரு மருத்துவரை அணுகி அதற்காக காத்திருந்து அவர் கேள்விகளுக்கான பதில் கூறி அதன்பின் கொடுக்கப்படும் பரிசோதனைகளை முடித்து அதன் பின் அவர்கள் தரும் பக்கவிளைவுகள் கொண்ட மாத்திரைகளை உண்பதைக் காட்டிலும் இந்த இயற்கை வழிகளை முயற்சித்து பார்த்து அதிலும் பலன் கிடைக்காவிட்டால் பின்னர் மருத்துவரை அணுகலாம்.


நீர்சத்து அதிகம் உள்ள உணவுகள்


பொதுவாக மாதவிடாய் நேரங்களில் நாம் அதிக ரத்தத்தை இழப்போம். ஆகவே அந்த சமயங்களில் நாம் நீர்ச்சத்து அதிகம் உள்ள உணவை எடுத்துக் கொள்ள வேண்டும். வெந்தயத்தை இரவே நீரில் ஊற வைத்து அதனை காலையில் வெறும் வயிற்றில் குடிக்கலாம். பழைய சாத நொதி நீர் இருப்பின் அதனை பருகலாம். இப்படி செய்வதால் உடல் சூடு தணியும். வலிகள் குறையும்.துவர்ப்பு உணவு வகைகள்


துவர்ப்பு சுவை எப்போதும் பல்வேறு சிறப்பம்சங்களைக் கொண்டது. பெரும்பாலும் வயிற்று வலி போன்ற சமயங்களில் ஆண்கள் பெண்கள் இருவருக்குமே இந்த துவர்ப்பு சுவையுள்ள உணவுகளைக் கொடுத்து வந்தால் வயிற்று நோய்கள் உடனே குணமாகும், மாங்காயின் கொட்டைகள், அல்லது மாதுளம் பழத் தோலின் உட்பகுதி வாழைப்பூ போன்றவை இதற்கான உணவுகள்.நார் சத்து உணவு வகைகள்


பீரியட்ஸ் நேரங்களில் நிச்சயம் பெரும்பான்மையான பெண்கள் சந்திப்பது மல சிக்கலைதான். இதனை தவிர்க்க வேண்டும் என்றால் நார்சத்து கொண்ட உணவினை அடிக்கடி உன்ன வேண்டும். பீன்ஸ், கீரை வகைகள், போன்றவை உதவி செய்யும். மேலும் முற்றலான காய்களை தவிர்த்து பிஞ்சு காய்களை உண்பதால் பலன்கள் கூடும்.செக்கில் ஆட்டிய நல்லெண்ணெய்


மாதவிடாயின் போது அந்த காலங்களில் எல்லாம் நல்லெண்ணையை சூடாக்கி உணவில் சேர்த்து தருவார்கள். இதனால் உடல் பலம் பெரும். இப்போது தூய்மையான எண்ணெய் என்றால் செக்கு எண்ணெய்தான் . ஆகவே அந்த நல்லெண்ணையை அந்த நாட்களின் போது ஒன்று அல்லது இரண்டு ஸ்பூன் அளவில் சேர்த்துக் கொண்டால் உடல் வலி நீங்கும். அல்லது சாப்பிடும் உணவில் கலந்தும் இதனை உட்கொள்ளலாம். உதாரணமாக இட்லி பொடி அல்லது சாம்பார் சாதம் போன்றவற்றில் இதனை கலந்து சாப்பிடலாம்.கறிவேப்பிலை


மாதவிடாய் நேரங்களில் கறிவேப்பிலையை அடிக்கடி சேர்த்து வரலாம். அல்லது தேங்காய் சேர்க்காத கறிவேப்பிலை துவையல் போன்றவற்றை செய்து சாப்பிடலாம். இதனால் பீரியட்ஸ் நேரங்களில் ஏற்படும் கால்வலி, இடுப்புவலி, வயிற்றுவலி போன்ற அனைத்து வலிகளும் நிவாரணம் பெறும்.மோர்


மாதவிடாய் காலங்களில் உடல் சூடு ஏற்படுவது என்பது தவிர்க்க முடியாத ஒன்று. அதனை சரி செய்ய மோர் குடிக்கலாம். இதில் உள்ள சுண்ணாம்பு சத்து உங்கள் எலும்புகளுக்கு பலம் தரலாம். இரண்டு அல்லது மூன்று முறை நீங்கள் ஒரு நாளில் அடிக்கடி மோர் குடிக்கலாம். அதனோடு வெண்பூசணியையும் சேர்த்து கொள்ளலாம்.புட்டரிசி அல்லது சிவப்பு நிற கைக்குத்தல் அரிசி


பீரியட்ஸ் நேரத்தில் ஏற்படும் அதிக ரத்தப்போக்கை தடுக்க புட்டரிசி எனப்படும் சிவப்பு நிற கைக்குத்தல் அரிசியை உண்ணவேண்டியது அவசியம். ஒரு கப் அளவாக சமைத்து அதனோடு தயிர் அல்லது சாம்பார் போன்ற உங்களுக்கு விருப்பமான உணவுடன் சேர்த்து சாப்பிடலாம். அல்லது புட்டு போல வேக வைத்தும் சாப்பிடலாம். இனிப்பை தவிர்த்து விடுவது நல்லது.உளுந்தங்கஞ்சி


நம் முன்னோர்கள் காலத்தில் இருந்தே நமது உடலுக்கு உறுதி சேர்க்கும் முக்கிய உணவாக இந்த உளுந்தங்கஞ்சி பார்க்கப்படுகிறது. மாதவிடாய் வருவதற்கு இரண்டு மூன்று நாட்கள் முன்பிருந்தே இந்த கஞ்சியை தயார் செய்து தினமும் குடித்து வரவேண்டும். மாதவிடாயின் போதும் அருந்த வேண்டும். அல்லது இதனுடன் பனைவெல்லம் மற்றும் நல்லெண்ணெய் ஊற்றி களி போல கிண்டியும் சாப்பிடலாம்.
இதனால் இடுப்பெலும்புகள் வலுப்பெறும். இடுப்பு வலி குறையும். 


Also read all you need to know about using a period tracker


Also read easy tips to stop periods