பேன்ட்டி லைனரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஆறு விஷயங்கள்

பேன்ட்டி லைனரை பற்றி நீங்கள் தெரிந்துகொள்ளவேண்டிய ஆறு விஷயங்கள்

பேன்ட்டி லைனர் நீங்கள் உபயோகிக்கும் மாதவிடாய் பேடுகள் போலவே இருக்கும். உங்களில் சிலருக்கு மாதவிடாய் வருவதற்கு முன்னும் பின்னும் வரும் யோனி வெளியேற்றத்தை கட்டுப்படுத்த இது பயன் படும் ஒன்றாகும். இதனால் நீங்கள் இன்னும் புத்துணர்ச்சியுடன் இருக்க முடியும்.


இந்த பேன்ட்டி லைநேர்ஸ் (panty liner) பல வகைகள், வடிவங்கள், மற்றும் அமைப்பில் வருகிறது. உதாரணத்திற்கு, உங்கள் உள்ளாடையை பொறுத்து நீங்கள் இதை வாங்கி உபகோகிக்கலாம். லீக்கேஜ் அதிகம் இருக்கும்போது , இதுபோல் ஒன்று உங்களுக்கு உதவும்.இதை நீங்கள் தினம் ஏன் உபயோகிக்க வேண்டும் என்று ஆறு காரணங்களை நாங்கள் உங்களுக்கு அளிக்கிறோம்!


1) நாள் முழுவதும் புத்துணர்ச்சி -'அந்த இடத்தில்' உங்களுக்கு நாள் முழுவதும் ஈரமாக இருந்தால், உங்கள் வேலைகள் அனைத்தும் நின்று விடும் இல்லையா? நினைத்து பாருங்கள் ... உங்களின் முக்கியமான ப்ரெசென்ட்டேஷன், மீட்டிங் அல்லது பயணத்தின் நடுவில், இதுபோல் அதிகம் யோனி வெளியேற்றம் இருந்தால், அதை எவ்வாறு சமாளிப்பீர்கள்? அதுவே ஒரு அசெளகரியத்தை அளிக்கும் . அதை தவிர்க்க இதுபோல் ஒரு பேன்ட்டி லைனரை நீங்கள் பயன்படுத்தலாம் (use).


2) உங்கள் உள்ளாடையை பாதுகாக்க -


ஆம்! நினைத்து பாருங்கள்... நீங்கள் கஷ்டப்பட்டு தேடி வாங்கிய உங்கள் உள்ளாடை , யோனி வெளியேற்றத்தால் , சேதமடைந்தால் அதை நீங்கள் விரைவில் தூக்கிப்போடும் நிலைமை ஏற்படலாம். அதை எளிதில் தவிர்க்க, மேலும் உங்கள் உள்ளாடைகளை நீண்ட நாட்கள் பயன்படுத்த, அதன் மீது எந்த வித கரையும் படாமல் தவிர்க்க பேன்ட்டி லைநேர்ஸ் பயன்படும்!


3)மாதவிடாய் நாட்களை கையாள -மாதவிடாய் நெருங்கும் நாட்களில், எதிர்பாராமல் முன்னதாக உங்கள் மாதவிடாய் வந்து விட்டால், இது உங்களை காப்பாத்தும். மேலும் உங்கள் காஸ்டிலியான ஜீன் / ஸ்கர்ட் கரையிலிருந்து தப்பிக்கும். ஆடை முக்கியம் அல்லவா ?!


4) எதிர்பாராத கசிவை கையாள -


எதிர்பாரதா நேரங்களில் ... உங்கள் நண்பர்கள் ஜோக் அடிக்கும் போது அல்லது ஏதேனும் உணர்ச்சித்திரன் அளிக்கும் விஷயத்தால் வரும் லீக்கேஜை எளிதில் சமாளிக்க பேன்ட்டி லைநேர்ஸ் ஒரு சிறந்த வழி.


 


5) உடற்பயிற்சின்போது -

உடற்பயிற்சின்போது சில அசைவுகளில் , ஓடும்போது உங்களை அறியாமல் வெளிவரும். மேற்கொண்டு இதனால் நீங்கள் உங்கள் பயிற்சியில் ஈடுபடமுடியாமல் யோசிக்கலாம். இதை தவிர்க்க , உங்களுக்கு ஏற்ற பேன்ட்டி லைனரை பயன்படுத்துங்கள். 


6) கர்ப்பிணி பெண்களுக்கு -


மகப்பேற்றுக்கு ஓட்டம் என்றது கர்ப்பிணி பெண்களுக்கு கர்ப்பத்திற்கு பின்பு வரக்கூடிய யோனி வெளியேற்றம். அதை எளிதில் கையாள இதுபோல் ஒரு பேன்ட்டி லைனர் அவசியம்.


பேன்ட்டி லைனரை பயன்படுத்தும் பொது நீங்கள்  நினைவில் வைத்துக்கொள்ள வேண்டிய குறிப்புகள் (Panty liner tips)-


  • இது உங்கள் மாதவிடாயின் பொது வரும் அதிக ரத்த வெளியேற்றத்திற்கு ஏற்றது இல்லை.

  • இதை அதிக நேரம் பயன்படுத்தும் பொது உங்கள் தொடைகளின் உள்பகுதியில்  சிவத்தல் ஏற்படலாம். ஆகையால், ஒரு ஆர்கானிக் பேன்ட்டி லைனர் ரை உபயோகியுங்கள்.

  • செண்ட்டெட் (scented)பேன்ட்டி லைனர்ரை தவிர்க்கவும். ஏனெனில் இது உங்களுக்கு இன்னும் அரிப்பு- அல்ர்ஜி உருவாக்கலாம்.

  • பேன்ட்டி லைனர் ஈரமாகி விட்டால் அதை உடனடியாக மாற்றவேண்டும்.

  • பெரும்பாலும் இரவில் இதை பயன்படுத்த வேண்டாம் இல்லாவிட்டால் இதை மாற்றவேண்டிய வேலை உங்கள் தூக்கத்தை தொந்தரவு செய்யும்.


பேன்ட்டி லைனர்ரை வாங்க -


உங்கள் உள்ளாடையின் அளவிற்கு ஏற்ற பேன்ட்டி லைனர்கல் விற்பனையில் உள்ளது. இவை மெல்லியதாகவும் தடிமனாகவும் கிடைக்கிறது.


இதில் சிறந்ததை வாங்க POPxo பரிந்துரைப்பது - பெல்லா ஹெர்ப்ஸ் பேன்ட்டி லைனர் (Rs.150)
வ்ஹிஸ்பேர் டெய்லி லைனர்(Rs.165)


பட ஆதாரம்  - gifskey, shutterstock 


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி,  தமிழ், தெலுங்கு , மராத்தி மற் றும் பெங்காலி !


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் .பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo.