இன்றைய தலைமுறை பழைய தலைமுறைக்கு மாறாக உறவில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய தலைமுறை பழைய தலைமுறைக்கு மாறாக உறவில் என்ன எதிர்பார்க்கிறார்கள்?

இன்றைய காலத்தில் பலதரப்பட்ட மக்களை சந்திக்கும் வாய்ப்பு இருக்கிறது. ஆன்லைன் மூலம் அறிமுகமாகி, பின்னர் சந்தித்து ஒருவரை ஒருவர் நன்றாகத் தெரிந்து கொண்டு ஒரு உறவுக்குள் நுழைகிறார்கள். அதுவும் கட்டாயம் ஒரு கல்யாணம் என்று ஆரம்பிப்பதில்லை, கல்யாணம் செய்யாமலேயே லிவிங்-டுகெதர்; ஒரு நல்ல குடும்பம் இல்லாமலேயே குழந்தைகள் பெற்றுக்கொள்வது; இப்படி சம்ப்ரதாயம், கலாச்சாரத்திற்கு கொடுக்கும் முக்கியத்துவதைவிட, உறவின் தரத்திற்கு மிக முக்கியத்துவம் கொடுக்கின்றனர்.

அதுபோல அவர்களுடைய துணையிடம் அவர்கள் எதிர்பார்ப்பதும், பழங்காலத்து உறவுகளிடம் இருந்ததைவிட மாறுபட்டிருப்பதில் ஆச்சர்யம் இல்லை. அப்படி இன்றைய தலைமுறை (millennials) உறவுகளுக்குள் என்ன எதிர்பார்க்கிறார்கள், மேலும் அது எப்படி பழைய தலைமுறையில் இருந்து மாறுபடுகிறது என்று பார்ப்போம்.

1. எல்லாவிதத்திலும் சமமான ஒரு துணை

Pexels

அந்தக்காலத்தைப் போல அவர்கள் வீட்டை கவனித்துக் கொள்ள ஒருவரும், சம்பாரிக்க ஒருவரும் என்று பிரித்துப் பார்க்காமல், அனைத்தையும் சமமாக கவனித்துக் கொள்ளும் ஒரு துணையை இக்கால இளைஞர்கள் எதிர்பார்க்கிறார்கள். அவர்களுக்கு சமமாக அலுவலகத்தில் வேலை பார்த்து, அவர்களுடன் எல்லா இடங்களுக்கும் பயணித்து, அறிவாற்றல் மிக்க ஒரு துணையைத்தான் விரும்புகிறார்கள். 

2. வித்யாசமான ஸ்டேட்டஸ்

பழைய தலைமுறையினருக்கு ‘ஸ்டேட்டஸ்’ மிகவும் முக்கியம். சமுதாயத்தில், தாங்கள் ஒரு நல்ல இடத்தில் இருப்பதாகவும், அதை குலையாமல் பார்த்துக்கொள்ள வேண்டும் என்ற கட்டுப்பாட்டிற்குள் இருப்பார்கள். மேலும், அதற்காக என்ன வேண்டுமென்றாலும் விட்டுக்கொடுக்கத் தயார் என்ற நிலையில் இருப்பார்கள். இருவர் வாழ்க்கையில் இணைந்தால் அவர்களுடைய தரம் என்னவாகும் என்ற எண்ணம்தான் மேலோங்கி இருக்கும். அதற்குத் தகுந்த ஜோடியை (பார்ட்னர்) தேர்ந்தெடுப்பார்கள்.

ஆனால், மில்லினியல் இளைஞர்கள் தங்கள் கனவை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். பெருநிறுவனங்களின் பாதையைப் பின்பற்றி செல்ல விரும்பாமல், தனித்துவமாக தங்கள் பயணத்தை மேற்கொண்டு, எவ்வளவு வித்தியாசம் காண்பிக்கிறோம் பாருங்கள் என்பதில் தான் அவர்களின் கவனம் ஆர்வமும் இருக்கிறது!

மேலும் படிக்க - என்ன தொழில் தொடங்கலாம்? 2020 ஆம் ஆண்டின் சிறந்த, சுவாரஸ்யமான பிசினஸ் யோசனைகள்!

3. பரந்த கொள்கையுடன் இருக்கிறார்கள்

Pexels

குழந்தை பெற்றுக்கொள்ள அவசரப்படுவதில்லை. மில்லினியல்ஸ் கல்யாணம், உடனே குழந்தை என்ற வழக்கமான பாணியைப் பின்பற்ற நினைப்பதில்லை. வாழ்க்கையில் தாங்கள் ஒரு நல்ல இடத்தைப் பிடிக்க வேண்டும், எல்லாவற்றையும் அனுபவித்தபின் குழந்தையைப்பற்றி யோசிக்கலாம் என்று இருக்கிறார்கள். எனவே, இதேபோல் சிந்தனையுள்ள ஒரு பார்ட்னரை (partner) அவர்கள் தேர்வு செய்கிறார்கள்!  

4. துணிந்து செய்ய நினைக்கிறார்கள்

அக்காலத்தில் திருமணம், குழந்தை என்பது இளம் வயதிலேயே துவங்கிவிடுவதால், அவர்கள் வாழ்க்கையில் எந்த துணிச்சலான செயலிலும் ஈடுபட யோசிப்பார்கள். பாதுகாப்பான ஒரு வேலை காலத்திற்கும் இருந்தால் போதும் என்று வாழ்க்கையை நிம்மதியாக நடத்திக்கொண்டிருந்தார்கள்.

ஆனால், தற்போது உள்ள இளைஞர்கள் எதையும் துணிந்து செய்து பார்த்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள். அவர்களுக்கு வாழ்க்கையில் த்ரில் பத்தவில்லை என்று தோன்றுகிறது. துணிகர செயல்கள், சாகசங்கள் பல செய்ய வேண்டும் என்று விரும்புகிறவர்களாக இருக்கிறார்கள். ஏனெனில் அவர்கள் பிறந்தது முதல் நினைத்ததெல்லாம் தேவைக்கு அதிகமாகவே கிடைக்கப்பெற்று பழகி விட்டதால், வாழ்க்கையில் சுவாரசியத்தை எதிர்பார்த்து சாகசங்களை செய்ய நினைக்கிறார்கள். 

5. பேரார்வம்

Pexels

ஆணாக இருந்தாலும் பெண்ணாக இருந்தாலும் அவர்களுக்கு எந்த விஷயத்தில் பேரார்வம் இருக்கிறதோ அதை இருவரும் அங்கீகரித்து அதை நோக்கி பயணிக்க விரும்புகிறார்கள். இணையதளத்தில் அவர்களுக்கு இருக்கும் வெளிப்பாடு இக்காலத்து  இளைஞர்களுக்கு அதிகம். கல்வியில் சிறந்தவர்களாக திகழ்கிறார்கள். நன்றாக படித்திருக்கிறார்கள். அனைத்து இனத்தவரும் ஒன்றுபோல வளர்ந்திருக்கிறார்கள். அனைவரும் எல்லாத்துறைகளின் பங்களிக்கின்றனர். அனைத்தும் கையில் கிடைக்கும் காலமாக  இருப்பதால், சோம்பேறிகளாக தற்காலத்து மக்கள் தோன்றுகிறார்கள் என்றும் கூறலாம்! 

இருப்பினும், நிறைய விஷயங்களுக்கு இக்காலத்தினருக்கு வெளிப்பாடு இருப்பதால், எல்லாவிதத்திலும் எல்லா நேரங்களிலும் அவர்களுடைய துணை நல்ல உறுதுணையாக இருக்க வேண்டும் என்று அதிக எதிர்பார்ப்பு கொண்டிருக்கிறார்கள். அவர்களுடைய நம்பிக்கை, கனவு, ஆர்வம் ஆகியவற்றை வாழ்க்கையின் எல்லாத் தளத்திலும் பகிர்ந்து கொள்ளும் ஒரு  துணையைத்தான் தேர்வு செய்கிறார்கள். பார்ப்பதற்கு சோம்பேறிகளாக தோன்றினாலும், அவர்களுடைய காரியத்தை வேறுவிதமாக முடிக்கிறார்கள் இக்காலத்தினர். அக்காலத்தினர் போன்று கடின உழைப்பிற்கு முக்கியத்துவம் தருவதில்லை. சமயோஜிதமாக, புத்திசாலித்தனமாக செயல்படுகிறார்கள்.

மாற்றம் ஒன்றே மாறாதது என்பதுபோல் காலத்திற்கேற்ப மனிதர்களின் அணுகு முறை மாறிக் கொண்டே இருக்கிறது.எவ்வாறாயினும், அனைத்து தலைமுறையினரும் தங்கள் வழியில் நன்றாகவே வாழ்ந்திருக்கிறார்கள் / வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று கூறலாம். முடிவினில், எந்த தலைமுறையினர் சரியானவர் அல்லது சிறந்தவர் என்பது முக்கியமல்ல,வாழ்க்கையில் அனைத்து மாற்றங்களுக்கும் இடையில், சரியான நபரை வாழ்க்கை துணையாக தேர்ந்தெடுப்பதே மிக முக்கியம்! இது குறித்து உங்கள் கருத்து?

மேலும் படிக்க - ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பட ஆதாரம்  - Pinterest, Instagram 

#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!