புதிய ஆண்டு தொடங்கிவிட்டது! நாம் அனைவரும் வாழ்க்கையின் அனைத்து அம்சங்களிலும் புதிய தொடக்கங்களையும் வளர்ச்சியையும் நிச்சயம் விரும்புவோம். இந்த அழகான 2020ல் , எந்த மாதிரியான தொழிலை தேர்ந்தெடுக்கலாம் என்று ஒரு விளக்கமான அலசலுக்குள் (யோசனை) செல்வோமா? எந்த வேலையில் இருந்தாலும், குறிப்பாக மென்பொருள் வேலை செய்பவர்களுக்கு பணி நிரந்தரம் இல்லை என்னும் அச்சுறுத்தல் இருந்துகொண்டே இருப்பதால், கூடுதலாக என்ன மாதிரியான தொழில் துவங்கலாம்(business ideas), அதற்கு என்ன முதலீடு செய்ய வேண்டும், நீங்கள் எப்படி தயாராக வேண்டும், எந்த எந்த தொழிலுக்கு என்ன தேவைப்படும் என்று பார்க்கலாம்.
2016ம் ஆண்டு மே மாதம் ஏர்பிஎன்பி இந்தியாவில் துவங்கப்பட்டபோது, மக்கள் இதற்காகவே காத்திருந்ததுபோல பிரமாதமான வரவேற்பு கொடுத்தார்கள். தற்போது 45,000 இடங்கள் பட்டியலிடப்பட்டிருக்கிறது. உலகத்தில் யார் வேண்டுமானுலும், தங்கள் இல்லத்தையோ, இல்லத்தின் ஒரு அறையையே, அடுக்குமாடியில் ஒரு வீட்டையோ, மலைப்பகுதியில் ஒரு வீட்டையோ என்று தங்கும் வசதியுள்ள இடத்தை உலகப்பயணம் மேற்கொள்பவர்களுக்கு வாடகைக்கு விடலாம். அதற்கான ஒரு தளம் தான் ஏர்பிஎன்பி.
உங்கள் சொத்தை பயன்படுத்திக் கொள்ள நீங்கள் அனுமதி தந்து, விருந்தினர்களை நன்றாக உபசரித்தால், உங்களின் மதிப்பு கூடும். அதைப் பொருத்து உங்களுக்கு அதிக வாடிக்கையாளர்கள் வருவார்கள்.
மூலதனம்:
உங்களிடம் இருக்கும் கூடுதல் வீடு
படுக்கை அறை
அபார்ட்மெண்ட் வீடு
தற்போது துளிர்விட்டு இருக்கும் தொழில் காலணி சலவையாகும். விதவிதமான காலணிகளை சலவை செய்து, சரி செய்து, புதிதுபோல தரக்கூடிய ஒரு நிறுவனத்தை உருவாக்கலாம்.
முதலில், சிறிய அளவில் லெதர் காலணிகளை மட்டும் பராமரிப்பது என்று ஆரம்பிக்கலாம். பிறகு அனைத்துவகை காலணிகளையும் சலவை செய்து விரிவாக்கலாம். அப்போது அனைத்து காலணிகளின் விவரங்களையும் தெரிந்துகொண்டு பின்னர் செயல்பட வேண்டும். ஒரு ஆப் மூலம் பிக்/ட்ராப்(pick/drop) செய்யலாம். தரமான சேவையும், துரிதமான வேலையும் நிச்சயம் அதிக வாடிக்கையாளர்களை ஈர்க்கும்.
முதலீடு:
6 முதல் 8 லட்சம்
அனைத்து விதமான காலணிகளைப்பற்றிய அறிவு
சரியான சாதனங்கள் மற்றும் உபகிரகணங்கள்
நீங்கள், சூரிய ஒளியில் இருந்து சக்தியை புதுப்பிக்கக்கூடிய வாய்ப்பை எதிர்நோக்கும் ஒரு நபராக இருந்தால், மின் சக்தி ஒப்பந்ததாரர் ஆக முயற்சிக்கலாம். இந்திய அரசு 2022ல் 100ஜிடபிள்யூ(gw) சூரிய சக்தியை உருவாக்க லட்ச்சியம் கொண்டுள்ளது.
ஒரு குறிப்பிட்ட இடத்தில், வீடு அல்லது ஒரு அலுவலகத்தில் எவ்வளவு மின் சக்தி தேவை என்று ஆராய்ந்து, அதற்கேற்ற சூரிய ஒளியில் இயங்கும் சாதனங்களை பரிந்துரைத்தும், மொட்டை மாடியில் எந்த அளவு சூரிய ஒளி பேனல்களை(solar panel) அமைக்க வேண்டும் என்பதையும் ஆராய்ந்து பரிந்துரைப்பதே மின் சக்தி ஒப்பந்ததாரரின் பணியாகும்.
ஆற்றல் துறையைப் பற்றி படித்திருந்தால் இந்த துறைக்கு உதவியாக இருக்கும். ஆனால், அது கட்டாயம் கிடையாது. ஒரு வகுப்பு பயிற்சியில் உங்கள் அறிவை இந்தத் துறையில் மேன்படுத்திக்கொள்ளலாம்.
முதலீடு:
4 முதல் 5 லட்சம்
சூரிய சக்தி துறையில் அறிவு
அதற்கேற்ற லைசென்ஸ் மற்றும் பதிவு
உடலை ஆரோக்கியமாக வைத்துக்கொள்ள தற்போது அனைவர்க்கும் விழிப்புணர்வு வந்திருக்கிறது என்றே சொல்ல வேண்டும். மக்களுக்கு வரும் உடல் உபாதைகளே இதற்கு தூண்டுதலாக இருக்கிறது. எல்லா வயதினரும் பயன்பெறும் வகையில் விரைவாக வளர்ந்துவரும் இந்தத்துறையில் உங்கள் முதலீட்டை ஆரம்பிக்கலாம்.
நீங்கள் முதலில் நல்ல பயிற்சியாளராக சான்று பெற்றிருக்க வேண்டும். மேலும், சரியான இடத்தைத் தேர்வு செய்வது மிகவும் அவசியம்.
முதலீடு:
10 முதல் 12 லட்சம்
பிட்னெஸ் சாதனங்கள்(fitness equipment)
பயிற்சியாளர் சான்றிதழ்
மேலும் படிக்க - ஒரு பாதுகாப்பான நிதியை உருவாக்குவது எப்படி? பெண்களுக்கான சில பயனுள்ள நிதி குறிப்புகள்
ஆர்கானிக் உணவு என்பது எந்தவித ரசாயனமும் கலக்காமல், எந்த உரமும் போடாமல், இயற்கையாக விளைந்த உணவுப் பொருட்கள். இது பல ஆண்டுகளாக பிரபலமாகிக்கொண்டு இருந்தாலும், அனைவருக்கும் இது இன்னும் போய்ச் சேரவில்லை என்றுதான் சொல்ல வேண்டும்.
இந்த துறையில், மளிகை சாமான்கள், காய்கறிகள், பழங்கள், தானியங்கள் என எளிதாக எப்போதும் கிடைக்குமாறு உற்பத்தியிலும், வணிகத்திலும் கவனம் செலுத்தினால் இது ஒரு அருமையான வளர்ந்துகொண்டே இருக்கும் வணிகமாகும்.நீங்கள் வீட்டில் இருந்தபடி வியாபாரம் செய்யலாம். மேலும், மெதுவாக பெரிய அளவில் கடைகள் அமைத்து விரிவாக்கலாம்.
முதலீடு:
5 முதல் 10 லட்சம்
கடை உரிமம்
ஆர்கானிக் உணவு அங்கீகாரம்
உணவகம் அமைக்க முடியாத இடங்களில் உணவு சப்ளை செய்வதுதான் கிளவுட் கிச்சன்(cloud kitchen). ஸ்விக்கி(swiggy), ஸ்மோடோ(zomato) போன்ற பிரபலமான ஆப்கள் இருந்தாலும், உணவு சப்ளை தற்போது மிகவும் பிரதான இடத்தில் இருக்கிறது.
முழுநேர உணவகம் ஆரம்பிக்க வசதி இல்லாத, ஆனால் தேவை அதிகம் உள்ள இடங்களில், தொலைவில் இருந்து உணவு அனுப்பி நன்றாக சம்பாதிக்கலாம். இந்த முறை நிச்சயம் உங்கள் தொழிலை அதிகரிக்கும்.
முதலீடு:
5 லட்சத்திற்கு அதிகமாக
தகுந்த உரிமம் மற்றும் அனுமதி
அதிக உணவுத் தேவை உள்ள இடத்தில், 600 முதல் 700 சதுரஅடி
ஈ கமெர்ஸ் தொழிலில் விருப்பம் உள்ளவர்கள் ட்ராப் ஷிப்பிங் செய்யலாம். அமேசான், பிலிப்கார்ட் போன்ற ஆப்கள் செய்யும் வேலையை நீங்கள் தனி ஒருவராக செய்ய முனைவதே ட்ராப் ஷிப்பிங். ஆன்லைனில், ஷாபிபை(shopify) மூலம் உங்களுக்கான ஒரு ஸ்டாரைத்(store) துவங்குங்கள். உங்கள் ஸ்டோரில் விற்பவை பற்றி மற்ற சமூக ஊடகங்களில்(facebook, instagram) விளம்பரம் செய்யுங்கள். உங்கள் பொருட்கள் தரமானதாகவும், மலிவாகவும் இருந்தால், உங்கள் விற்பனை முன்னேறிச்செல்லும்.
எந்த மாதிரியான பொருட்களுக்கு அதிகத் தேவை உள்ளது என்று அறிந்து, அந்த பொருளைப்பற்றி நன்கு தெரிந்து கொண்டு உங்கள் விற்பனையைத் துவங்கலாம். நம் நாட்டில் இந்தத் தொழில் வளர இன்னும் அதிக இடம் இருக்கிறது என்று தான் சொல்ல வேண்டும்.
முதலீடு:
50,000க்கு மேல்
இணையதளம் வசதி கொண்ட கணினி
நல்ல ஆன்லைன் கடைமுகப்பு
நல்ல விற்பனையாளர்களின் வலைப்பின்னல்
அனைவருமே குறைந்தது ஒரு இரு சக்கர வாகனம் ஓட்டும் உரிமமாவது தற்காலத்தில் வைத்திருக்கிறார்கள். நேரடியாக சென்று உரிமம் பெறுவதைவிட, டிரைவின் வகுப்பு நடத்துனரிடம் சென்றால் எளிதாக பெற்றுவிடலாம் என்ற கணிப்பில்தான் நாம் உள்ளோம். எனவே, உங்களுக்கு இதில் ஆர்வம் இருந்தால் இது தொழில் துவங்க ஒரு சிறந்த துறையாகும்.நல்ல அனுபவம் மிகுந்த ஒருவரிடம் கற்றுக்கொண்டு, உங்கள் வகுப்புகளுக்கு உரிமம் பெற்று துவங்கலாம்.
முதலீடு:
10 முதல் 20 லட்சம்
ஓட்டுதல் பயிற்றுவிப்பாளர் உரிமம்
பல்வேறு வளர்ந்துவரும் தொழில்களைப் பற்றி தெரிந்து கொண்டிருப்பீர்கள். உங்களுக்கு விருப்பமான துறையில் உங்கள் அறிவை வளர்த்துக்கொண்டு, அவற்றைப் பற்றி முற்றிலுமாகத் தெரிந்துகொண்டு, பின்னர் தொழில் துவங்குங்கள். உங்கள் விருப்பமான தொழிலில் ஓங்கிட வாழ்த்துக்கள்!
மேலும் படிக்க - பெண்கள் தனது 20/30 வயதில் எளிதில் சேமிக்க ஐந்து சிறந்த முதலீடு திட்டங்கள்
பட ஆதாரம் - Shutterstock
#POPxoLucky2020 - ஒவ்வொரு நாளும் அற்புதமான ஆச்சிரியங்களுடன் , இந்த தசாப்தத்தை நிறைவு செய்வோம் ! மேலும்,100% உங்களை பிரதிபலிக்கும் அழகிய நோட்புக்குகள், தொலைபேசி கவர்கள் மற்றும் மேஜிக் மக்குடன் வரும் புதிய POPxo இராசி தயாரிப்புகளை தவறவிடாதீர்கள்! கூடுதலாக 20% தள்ளுபடி உள்ளது, எனவே POPxo.com/shopzodiac க்குச் சென்று உங்களுக்கான பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்