ஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா? கண்டறியுங்கள் !

ஷாம்பூ இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாமா? கண்டறியுங்கள் !

எப்போதுமே ஷாம்பூ பயன்படுத்தி கூந்தலை அலசுபவர்களுக்கு ஷாம்பூ (shampoo) இல்லாமல் வெறும் தண்ணீரில் கூந்தலை அலசலாம் என்பது  ஒரு ஆச்சர்யமான செய்தியாக இருக்கும். ஷாம்பூ போடாமல், வெறும் தண்ணீரில் அலசினால் கூந்தலில் உள்ள அழுக்கு எப்படி போகும்? பிசுபிசுப்பாக இருக்காதா? கூந்தல் வறண்டு போகாதா? கூந்தலில் சிக்கு பிடிக்காதா? தலை அரிக்காதா? பொடுகு வராதா? கூந்தல் நிறம் மாறி செம்மட்டை நிறத்தில் இருக்குமல்லவா? இப்படி பல கேள்விகள் தோன்றும். உங்களுக்காக ஆழ்ந்த ஒரு அலசல். ஆங்கிலத்தில், நோ-பூ(no-poo) முறை என்று அழைக்கப்படும் நோ ஷாம்பூ முறையைப் பற்றிய நன்மை தீமைகளை விளக்கமாக தெரிந்து கொள்வோம்.

கூந்தலுக்கு முற்றிலுமாக ஷாம்பூ தவிர்ப்பதால் ஏற்படும் நன்மைகள் என்ன?

1. ஆரோக்கியமான தலை

இயற்கை நம் தலையில் போதிய அளவு எண்ணெய் சுரக்கிறது. அது கூந்தலை மென்மையாகவும், உறுதியாகவும் வைத்துக் கொள்கிறது. கூந்தல் மிகவும் அடர்த்தியாகவும் தோன்றும்.

2. கூந்தல் நல்ல அமைப்பாக தோன்றும்

கூந்தல் நல்ல அமைப்பாக இயற்கையாக தோன்றும். ஸ்டைல் செய்ய நீங்கள் வேறு எந்தப் பொருளையும் தேடிச் செல்ல வேண்டியதில்லை.

3. கூந்தல் வறண்டு போகாது

Shutterstock

ஷாம்பூ பயன்படுத்தினால்  கூந்தல் வறண்டு போகும். அதற்கு ஈரப்பதமூட்ட, மாய்ஸ்ட்டரைஸர்(moisturiser) பயன்படுத்துவோம். அது பிசுபிசுப்பை உண்டாக்கும். பின்னர் மீண்டும் ஷாம்பூ போடுவோம்.இந்த சுழற்சியை நாமே ஏற்படுத்திக் கொள்கிறோம். ஷாம்பூ பயன்படுத்தவில்லையெனில் கூந்தல் வறண்டு போகாது. வேறு எதுவும் பயன்படுத்த வேண்டிய அவசியம் இருக்காது.

4. ரசாயனங்களில் இருந்து விடுதலை

தலையில் எரிச்சல் ஏற்படுத்தும் ஷாம்பூவில் உள்ள ரசாயனங்களில் இருந்து விடுபடலாம்.

5. பிளாஸ்டிக்கை தவிர்க்கலாம்

பிளாஸ்டிக் பாட்டில்களில் வரும் ஷாம்பூ வாங்கத் தேவையில்லை. அதனால், குப்பையும் சேராது. ஷாம்பூ வாங்கி செலவளிக்கத் தேவை இல்லை.

கூந்தலை எப்படி வெறும் தண்ணீரில் அலசுவது?

1. ஒரு பக்கெட் தண்ணீரில் உங்கள் கூந்தலை நன்றாக முக்கி எடுங்கள்.அல்லது, ஷவரில் நின்று கூந்தலை நன்றாக ஷாம்பூ போட்டது போல மசாஜ் செய்து அலசுங்கள்.

2. தினமும், கூந்தலை நன்றாக வாரி சிக்கு இல்லாமல் வைத்துக்கொள்ளுங்கள். வாருவதன்மூலம் அழுக்குகள் வந்துவிடும். 

3. சீபம்(sebum) என்பது தலையின் சருமத்தில் உள்ள pH அளவுகளையும், நெகிழ்ச்சி தன்மையையும் கட்டுக்குள் வைக்க சுரக்கும் எண்ணெய்.  இவ்வளவு நாள் ஷாம்பூ பயன்படுத்தியதால், தலை அதிகம் வறண்டு போகும். அதை சரி செய்ய சீபம் அதிகமாக சுரக்கும். ஷாம்பூ தவிர்த்து தண்ணீரில் குளிக்க ஆரம்பித்து, 16 வாரங்களில் சீபம் அளவு சீராகிவிடும் என்கிறார்கள் நிபுணர்கள். ஷாம்பூவை தவிர்க்க ஆரம்பித்துவிட்டால், இடையில் மாற்றாதீர்கள். சிறிது நாட்களில் பழக்கத்திற்கு வந்து விடும். 

 

Shutterstock

4. சீபம் அதிகமாக இருப்பதாக உணர்ந்தால், வெதுவெதுப்பான தண்ணீரில் கூந்தலை அலசுங்கள். மிக அதிக சூடான தண்ணீர் கூந்தலை வறண்டு போகச் செய்யும்.

5. மேலும் தலையை தினமும், ஒன்றிற்கு இரண்டுமுறை நன்றாக மசாஜ் செய்து கொள்ளுங்கள். மெல்லிய கூந்தலுக்கு, வேகன் பிரஷ் பயன்படுத்தலாம்; அடர்ந்த கூந்தலுக்கு மரத்தினால் ஆன பின் பிரஷ், சுருட்டை முடிக்கு பற்கள் வைத்த சீப்பும் பயன்படுத்தலாம். இப்படி பிரஷ் கொண்டு சீவுவதால், சீபம் தலையில் இருந்து கூந்தலின் நுனிவரை கொண்டு சேர்க்கும். 

6. இறுதியாக குளிர்ந்த நீரில் அலசுவதால், கூந்தலுக்கு ஆரோக்கியம் தரும், கூந்தலின் வேருகளை மூடிவிடும், கூந்தல் சிக்கல் ஆகாமல் இருக்கும். 

அனைவருமே ஷாம்பூ இல்லாமல் தண்ணீரில் மட்டும் கூந்தலை அலசலாமா ?

செலவில்லாமல், ரசாயனம் இல்லாமல், அற்புதமான, ஆரோக்கியமான ஒரு விஷயத்தை ஏன் எல்லோரும் பின்பற்றக்கூடாது! ஆனால், நாம் பயன்படுத்தும் தண்ணீர் சுத்தமான ரசாயனம் இல்லாத, உப்பு இல்லாத, அழுக்கு இல்லாத, கிளோரின் கலக்காத தண்ணீராக இருக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், தண்ணீரை கொதிக்க வைத்து ஆறவைத்து பின்னர் பயன்படுத்தலாம். 

நீங்கள் இன்னும் திருப்தி அடையவில்லை என்றால், இங்கே ஷாம்புக்கு பதிலாக பயன்படுத்தக்கூடிய சில பொருட்களை காணலாம்! 

ஷாம்பூவிற்கு பதிலாக வேறு என்ன பொருட்களை தலைக்கு பயன்படுத்தலாம் ?

1. ரை அல்லது வல்லரிசி

பொதுவாக முகத்திற்கு மாஸ்க் போல இந்த வல்லரிசியைப் பயன்படுத்துவார்கள். இதை இன்னும் சிறிது தண்ணீர் விட்டு கூந்தலுக்கு பயன்படுத்தினால் கூந்தலுக்கு நல்ல ஆரோக்கியத்தையும், பொலிவையும் தரும். வைட்டமின் பி5 கொண்ட வல்லரிசியில் புது செல்களை உருவாக்கும் தன்மையும், ஆன்டி-இன்பிளமேட்டரி தன்மையும் உள்ளது. சருமத்தையும், கூந்தலையும் ஆரோக்கியமாக வைக்கும். இந்த இங்கு வாங்கலாம்.

2. பென்டோனைட் களிமண்(bentonite clay)

Shutterstock

இந்த களிமண்ணும் முகத்திற்கு மாஸ்க் போட பயன்படுத்துவார்கள். கூந்தலுக்கு பயன்படுத்தினால், அழுக்குகளை களைந்து, எண்ணெய்ப் பசையைப் போக்கிவிடும். 

3. பேக்கிங் சோடா

தண்ணீரில் பேக்கிங் சோடாவை கரைத்து தலையில் தேய்த்துக் கொள்ளவேண்டும். சருமத்தில் உள்ள அழுக்குகள் நீங்கி விடும்.அதன் பிறகு ஆப்பிள் சிடர் வினீகர் பயன்படுத்தி கூந்தலை அலசினால், கூந்தல் மென்மையாகவும், சில்க்கியாகவும் இருக்கும்.

மேலும் படிக்க - ஆப்பிள் சீடர் வினிகரின் சரும பாதுகாப்பு நன்மைகள் மற்றும் தயாரிக்கும் முறைகள்!

4. ஷாம்பூ பார்

Shutterstock

பலவிதமான பொருட்களைக் கொண்டு தயாரித்த ஷாம்பூ கட்டிகள் கிடைக்கிறது. ஷாம்பு  பார்கள் உங்கள் தலைமுடிக்கு தேவையான நுரையை உருவாக்க உதவும் மற்றும் ஷாம்புக்கு ஒத்த அனைத்து அழுக்குகளையும் சுத்தம் செய்யும், பிளாஸ்டிக்கையும் தவிர்க்கலாம்! மேலும், அவற்றைப் பற்றி தெரிந்து கொள்ள இங்கு கிளிக் செயுங்கள். 

ஒவ்வொருவருடைய  சருமமும், கூந்தலும் தனித்தன்மை வாய்ந்தது. எந்த ரசாயனமும் இல்லாமல், வெறும் தண்ணீரில் குளித்துப் பாருங்கள்(hair wash with water). இத்தனை வருடங்களாக ஷாம்பூ பயன்படுத்தி பழகிவிட்டதால், கூந்தல் அதன் இயற்கை தன்மைக்கு வர சிறிது நாட்கள் ஆகும். பிறகு நீங்களும் ‘நோ பூ’ என்று கூறி, இயற்கையான அழகான கூந்தலுடன் வளம் வந்து எல்லோரையும் ஆச்சர்யப்பட வைக்கலாம்!

மேலும் படிக்க - இளம் வயதில் நரை முடி பிரச்னை: காரணங்கள் & இயற்கை முறையில் கருமையாக்குவதற்கான டிப்ஸ்!

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!