கணவர் ஈஸ்வர் உடனான பிரச்னை... கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

கணவர் ஈஸ்வர் உடனான பிரச்னை... கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி!

செங்கல்பட்டு அருகே கூடுவாஞ்சேரியில் கடிதம் எழுதி வைத்துவிட்டு நடிகை ஜெயஸ்ரீ தற்கொலை முயற்சி செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சின்னத்திரைகளில் நடித்து வருபவர் நடிகை ஜெயஸ்ரீ. முதல் கணவருக்கு பிறந்த மகள் இருக்கும் நிலையில் 2-ஆவது ஈஸ்வரை திருமணம் செய்து கொண்டார்.

கடந்த வருடம் சீரியல் நடிகை ஜெயஸ்ரீ ஒரு புகார் போலீஸ் நிலையத்தில் கொடுத்திருந்தார். அதில் தனது கணவர் ஈஸ்வர் தன்னுடன் நடிக்கும் நடிகை மகாலட்சுமியுடன் தொடர்பில் இருப்பதாகவும் தன்னை கொடுமைப்படுத்துவதாகவும் புகார் அளித்தார். 

மேலும் தனது குழந்தையிடம் தவறாக நடக்க முயன்றதாகவும் அடையாறு போலீசில் புகாரளித்தார். இந்தப் புகாரின் பேரில் கைதான நடிகர் ஈஸ்வர், சில நாட்களில் பிணையில் இருந்து பின் வெளியே வந்து செய்தியாளர்களை சந்தித்தார்.

pixabay

அப்போது தனது மனைவிக்கும் நடிகை மகாலட்சுமியின் கணவர் அனிலுக்கும் இடையே முறை தவறிய உறவு இருப்பதாகக் கூறினார். இதுகுறித்து விளக்கம் அளித்த நடிகை மகாலட்சுமியின் கணவர் அனில், ஜெயஸ்ரீ தனக்கு தங்கை, அவருடன் எனக்கு எவ்வித தவறான உறவும் இல்லை என கூறினார். மாறி மாறி ஒவ்வொருவரும் தெரிவித்த புகார்களால் மக்கள் மத்தியில் இந்த விவகாரம் பேசுபொருளானது. 

அதனால் ஈஸ்வர் மகாலட்சுமி நடிக்கும் தேவதையைக் கண்டேன் சீரியலும் விரைவில் முடிவுக்கு வர உள்ளதாக தகவல்கள் வெளியாகின. இதனிடையே மகாலட்சுமி வீட்டுக்கு சென்று ஜெயஸ்ரீ கலாட்டா செய்ததாகவும் புகார் எழுந்தது. ஆனால் அந்த புகாரை ஜெயஸ்ரீ மறுத்தார். 

அமெரிக்க காப்பகத்தில் சமையல் வேலைபார்க்கும் நடிகை ஜெயஸ்ரீ.. நெகிழ வைக்கும் பின்னணி..

மேலும் தான் அவரது வீட்டுக்கு சென்றேனா என்பதை அங்குள்ள சிசிடிவியை பார்த்துவிட்டு தெரிந்து கொள்ளுமாறும் போலீஸில் ஜெயஸ்ரீ (jayashr) தெரிவித்தார்.  

அதன் பின்னர் கொஞ்ச நாட்களாக இந்தப் பிரச்னை ஓய்ந்துவிட்டது போல் தெரிந்தது. ஆனால் தற்போது மீண்டும் இப்பிரச்னை விஸ்வரூபமெடுத்துள்ளது. தனது குடும்ப பிரச்னையால் மனமுடைந்த நடிகை ஜெயஸ்ரீ தற்கொலைக்கு முயன்றுள்ளார். 

pixabay

கோர்ட், கேஸ் என அலைந்து கொண்டிருந்த ஜெயஸ்ரீ, கூடுவாஞ்சேரியில் உள்ள தனது வீட்டில் மாத்திரைகளை சாப்பிட்டுள்ளார்.மயங்கிய நிலையில் கிடந்த ஜெயஸ்ரீ (jayashree) மீட்கப்பட்டு நீலாங்கரையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மேலும் அவர் எழுதிய கடிதத்தையும் போலீஸார் கைப்பற்றியுள்ளனர்.

அதில் எந்த சூழலிலும் டான்ஸ் ஆடுவதை நிறுத்தாதே என தனது மகளுக்கு அறிவுரை வழங்கிய ஜெயஸ்ரீ தனது முடிவுக்கு வருத்தம் தெரிவித்துள்ளார். மேலும் தனது மகளை தொல்லை செய்ய வேண்டாம் என ஈஸ்வருக்கு அதே கடிதத்தில் வேண்டுகோள் விடுத்துள்ளார். 

மாதவிடாய் நாட்கள் : பெண்கள் மனதில் வைத்துக் கொள்ள வேண்டிய சுகாதார குறிப்புகள்!

ஈஸ்வர் உன்னால் என்னை எதுவும் செய்ய முடியாது என்று கேலி செய்துள்ளாராம். இதனால் ஜெயஸ்ரீ ஏகப்பட்ட தூக்க மாத்திரை சாப்பிட்டுள்ளார் என கூறப்படுகிறது.இதுகுறித்து தனது தோழி ஒருவருடன் தொலைபேசியில் பேசிய உரையாடல் ஒன்றும் வெளியாகியுள்ளது.

pixabay

அதில், “நான் மிகவும் மன உளைச்சலில் இருக்கிறேன். வாழ்வதற்கு தகுதியற்றவளாக நான் உணர்கிறேன். இனிமேல் வாழ விரும்பவில்லை. எனக்கு இத்தனை நாள் ஆதரவளித்த உனக்கு நன்றி. என் அக்கா என்னிடம் எப்படிப் பேசுவாரோ அப்படி என்னிடம் நடந்து கொண்டாய். 

இது என்னுடைய குட் பை மெசேஜ்” என்று கூறியுள்ளார். ஜெயஸ்ரீயின் இந்த மெசேஜைப் பார்த்த அவரது தோழி, ஜெயலட்சுமி தற்கொலைக்கு முயல்வதை தெரிந்து கொண்டு அவரைக் காப்பாற்றி மருத்துவமனையில் அனுமதித்துள்ளார். 

தற்போது மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார் நடிகை ஜெயஸ்ரீ (jayashree) . பரிதாப நிலையில் அவர் மருத்துவமனையில் இருக்கும் புகைப்படம் வெளியாகியுள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!