குங்குமப்பூவின் அழகு மற்றும் ஆரோக்கிய பயன்கள்!

குங்குமப்பூவின் அழகு மற்றும் ஆரோக்கிய பயன்கள்!

குங்குமப்பூ என்று சொன்னாலே, அனைவருக்கும் சிவந்த சருமம் தான் நினைவுக்கு வரும். அடுத்ததாக அதன் விலை.குங்குமப்பூவை (saffron benefits) சிறிய அளவு பயன்படுத்தினாலும், அதன் பலன் பல மடங்கு அதிகமாக இருக்கும்.

குங்குமப்பூவால் கிடைக்கும் நன்மைகள்

குங்குமப்பூ பல உடல் நல நன்மைகளையும், சருமம் மற்றும் தலைமுடி வளர்ச்சிக்கான நன்மைகளையும் அதிகம் தரும் பண்புகள் கொண்டது. இதனை பாலில் கலந்து தினமும் அருந்தி வந்தால், பல நோய்கள் குணமாவதோடு, உடலும் ஆரோக்கியம் பெரும். மேலும் சருமம் புத்துணர்ச்சிப் பெரும். குங்குமப்பூவின் பலன்கள் இங்கே:

 1. புற்றுநோய் உண்டாகும் வாய்ப்புகளை குறைக்கும்
 2. மூட்டு வலியை போக்கும்
 3. கண் பார்வையை அதிகரிக்கும்
 4. தூக்கமின்மையை போக்கும்
 5. மூளையின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
 6. ரணத்தை சீர் செய்யும்
 7. சருமத்தில் இருக்கும் புண், பருக்கள் மற்றும் பிற பிரச்சனைகளை போக்கும்
 8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும்
 9. மாதவிடாய் பிரச்சனைகளை குணப்படுத்தும்
 10. இருதயம் மற்றும் கல்லீரலின் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
 11. ஊதா கதிர்களிடம் இருந்து சருமத்தை பாதுகாக்கும்
 12. சருமத்தின் நிறத்தை மேம்படுத்தும்.

குங்குமப்பூவை எப்படி பயன்படுத்துவது?

1. உணவில் குங்குமப்பூ

Pexels

 தினமும் பாலில் சிறிது குங்குமப்பூவை கலந்து அருந்தலாம். மேலும் நீங்கள் சமைக்கும் இனிப்பு பலகாரங்களில் குங்குமப்பூவை சேர்த்து செய்யலாம். இது உடலுக்கு நல்ல பலன்களைத் தரும்.

2. தலைமுடி வளர்ச்சிக்கு

 • சரும அழகிற்கு மட்டுமல்லாது, தலைமுடியின் வளர்ச்சிக்கும் குங்குமப்பூ பெரிதும் உதவுகின்றது(uses).
 • சிறிது குங்குமப்பூவை எடுத்து பாலில் கலந்து கொள்ளவும்.
 • தேங்காய் பாலை பயன்படுத்துவது நல்ல பலனைத் தரும்
 • பின்னர் இதனை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் சிறிது நேரம் கழித்து தலைமுடியை மிதமாக செய்யக்காய், அல்லது ஷாம்பூ போட்டு குளிர்ந்த நீரில் அலச வேண்டும்
 • இப்படி செய்தால், தலைமுடி, மிருதுவாகவும், பலபலப்பாகவும், நீளமாகவும், மற்றும் அடர்த்தியாகவும் வளரும்.

மேலும் படிக்க - சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

3. பருக்களை போக்க

Pexels

பக்டீரியா எதிர்ப்பு மற்றும் ஆக்சிஜனேற்ற பண்புகள் குங்குமப்பூவில் அதிகள் உள்ளது. இதனால் இது முகத்தில் தோன்றும் பருக்களை போக்க பெரிதும் உதவுகின்றது.

 • சிறிதளவு துளசி இலைகளை எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் சிறிது குங்குமப்பூவை சேர்த்து நன்கு பசை போல செய்து முகத்தில் தடவ மிதமாக மசாஜ் செய்ய வேண்டும்
 • நன்கு உலர்ந்த பின்னர், முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்

4. பலபலப்பான சருமம்

வறண்ட மற்றும் ஆரோக்கியமற்ற சருமத்தை போக்க, குங்குமப்பூ பெரிதும் உதவுகின்றது.

 • ஒரு தேக்கரண்டி தேன் எடுத்துக் கொள்ளவும்
 • இதனுடன் பொடி செய்த குங்குமப்பூவை கலந்து பசை போல செய்து கொள்ளவும்
 • இந்த பசையை முகத்தில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்
 • இது இரத்த ஓட்டத்தை அதிகரித்து, நல்ல பொலிவை சருமதிற்குத் தரும்

5. வெயிலால் ஏற்பட்ட சரும பிரச்சனைகளை போக்கும் – டான்

Pexels

வெயிலில் அதிகம் இருந்தால் சருமம் கருத்து, பொலிவிழந்து போகக் கூடும். இதனை போக்க குங்குமப்பூ பெரிதும் உதவியாக உள்ளது.

 • சிறிது குங்குமப்பூவை எடுத்து கெட்டிப் பாலில் நன்கு இரவு முழுவதும் ஊற வைக்க வேண்டும்
 • பின்னர் இதனை முகம் மற்றும் கை, கால்களில், அதிகம் வெயில் பட்டதால், பாதித்து உள்ள சருமத்தில் தடவி மசாஜ் செய்ய வேண்டும்
 • சிறிது நேரம் அப்படியே விட்டு விட்டு, பின்னர் முகத்தை குளிர்ந்த நீரில் கழுவ வேண்டும்
 • இப்படி செய்து வந்தால், நல்ல பொலிவான மற்றும் ஆரோக்கியமான சருமத்தைப் பெறலாம்

6. சருமத்தை மிருதுவாக்க

சருமம் கடுமையாகவும், போளிவின்றியும் இருந்தால், அதனை மிருதுவாக்க, இங்கே ஒரு குறிப்பு:

 • அரை கப் தண்ணீரை நன்கு கொதிக்க விட வேண்டும்
 • இதில் தேவைப்படும் அளவு குங்குமப்பூ மற்றும் பால் பொடியை கலந்து பசை போல் செய்து கொள்ள வேண்டும்
 • பின்னர் முகத்தில் பேஸ் பாக் போல் போடா வேண்டும்
 • சிறிது நேரம் அப்படியே விட்டு விட வேண்டும்
 • பின்னர் குளிர்ந்த நீரில் முகத்தை கழுவி விட வேண்டும்

7. குளியலுக்கு குங்குமப்பூ

Pexels

தினமும் நீங்கள் குளிக்கும் நீரில் குங்குமப்பூவை கலந்து குளிக்கலாம். இது நல்ல பலனைத் தரும்.

 • குளியலுக்குத் தேவைப்படும் அளவு தண்ணீரில் தேவைப்படும் அளவு குங்குமப்பூவை கலந்து கொள்ள வேண்டும்
 • தண்ணீர் சற்று மிதமாக சூட்டில் இருப்பது நல்லது
 • அரை மணி நேரம் வரை அந்த தண்ணீரை குங்குமப்பூ போட்ட பின்னர் விட்டு விட வேண்டும்
 • பின்னர் அந்த தண்ணீரில் குளிக்க வேண்டும்
 • இப்படி செய்தால், சருமம் நல்ல நிறத்தை பெறுவதோடு, மிருதுவாகவும், ஆரோகியதோடும் இருக்கும்.

மேலும் படிக்க - வில்வ இலையின் பலன்களும், பயன்களும்!

மேலும் வாசிக்க - 

Benefits Of Saffron In Hindi

 

பட ஆதாரம் - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம்இந்திதமிழ்தெலுங்குமராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!