ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.. ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரைசா!

ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செல்ல விரும்புகிறேன்.. ட்விட்டரில் காதலை வெளிப்படுத்திய ரைசா!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் முதல் சீசனில் கலந்து கொண்டு ரசிகர்களைக் கவர்ந்தவர் ரைசா வில்சன். பெங்களூரை சார்ந்த இவர், படித்து கொண்டிருக்கும் போதே விளம்பரங்களில் நடிக்க தொடங்கினர். அதற்கு பின் மாடலிங் துறையில் காலடி எடுத்து வைத்தவர், பல விளம்பரங்களில் நடித்தும், மாடலிங் செய்தும் வந்தார்.  

இதனை தொடர்ந்து  கடந்த 2011ம் ஆண்டு நடைபெற்ற மிஸ் இந்தியன் தெற்கில் போட்டி போட்டு வெற்றி பெற்றார். பின்னர் 2017ம் ஆண்டு தமிழில் தனுஷ் நடிப்பில் வெளியான ‘வேலையில்லா பட்டதாரி 2’ படத்தில் காஜலுக்கு உதவியாளராக நடித்து இருந்தார். 

twitter

பின்னர் கமலஹாசன் தொகுத்து வழங்கிய தமிழ் பிக் பாஸ் 1 நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்து கொண்டார். இந்த நிகழ்ச்சியின் மூலம் மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றார் ரைசா வில்சன் (raiza) . மேலும் அதே சீசனில் போட்டியாளராக கலந்து கொண்ட நடிகர் ஹரீஷ் கல்யாணுடன் நெருங்கி பழகியதால் இருவரும் காதலிப்பதாக தகவல் பரவியது.

மேலும் படிக்க - அமெரிக்காவில் வளைகாப்பு.. புகைப்படங்களை வெளியிட்ட தமிழ் நடிகை.. !

ஆனால் இருவரும்  நல்ல நண்பர்களாக தான் பழகி வருகின்றோம் என்று கூறினார்கள்.  பிக் பாஸ் நிகழ்ச்சி பிறகு விஐபி 2, நாச்சியார் உள்ளிட்ட படங்களில் சிறிய வேடத்தில் நடித்திருந்தார். 

மேலும் யுவன் சங்கர் ராஜா தயாரிப்பில் நடிகர் ஹரீஷ் கல்யாண் உடன் இணைந்து “பியார் பிரேமா காதல்” படத்தில் கதாநாயகியாக நடித்தார். இந்த படம் வெற்றியடைந்த நிலையில், தொடர்ந்து பட வாய்ப்புகள் வராததால் கவர்ச்சி போட்டோஷூட் நடத்த தொடங்கினார். 

 

சமீபத்தில் நீச்சம் குளத்தில் இருந்தவாறு போட்டோஷூட் நடத்தி புகைப்படங்களை அவரது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்தார். இந்த புகைப்படங்கள் வைரல் ஆனது. 

இதனை தொடர்ந்து நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற ரைசா, விளம்பரங்களில் நடிக்க, சிவப்பாக இருக்க வேண்டும், ஸ்டைலாக நடந்துகொள்ள வேண்டும் எனப் பலர் நினைக்கின்றனர். உலகில் பிறந்த ஒவ்வொருவருமே அழகுதான்.

மேலும் படிக்க - 90களின் சின்னத்திரை தொகுப்பாளர் பெப்ஸி உமா இப்போது என்ன செய்கிறார் தெரியுமா

மாடலிங் துறையில் வெற்றி பெற முறையான பயிற்சி இருந்தாலே போதும். எவரும் அத்துறையில் வெற்றிக் கொடி நாட்டலாம் என கூறியிருந்தார். தற்போது ‘அலிசா’, ‘காதலிக்க யாருமில்லை’, ‘எப்.ஐ.ஆர்’ படங்களில் ரைசா (raiza) நடித்து வருகிறார். 

twitter

இதில் அறிமுக இயக்குனர் மணி சந்துரு இயக்கும் ஆலிஸ் திரைப்படம் கதாநாயகிக்கு முக்கியத்துவம் உள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில்  தமிழ்நாடு மக்களுக்காக ஹரீஷ் கல்யாணுடன் டேட்டிங் செய்ய விரும்புகிறேன் என்று ரைசா அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். 

இதை பார்த்த நெட்டிசன்கள், அதிர்ச்சி அடைந்துள்ளனர். ஐயோ இது எங்க போயி முடியபோதுன்னு தெரியலையே என்று கமெண்ட்ஸ்  செய்து வருகின்றனர். ரைசாவின் (raiza) இந்த கருத்திற்கு பல்வேறு விமர்சனங்கள் எழுந்த நிலையில், 

அதன்பின் இதற்கு விளக்கம் அளித்த ரைசா, ‘டேட்டிங் என்றால் என்ன என்று எனக்கு தெரியாது. இதற்கு முன்னர் அதனை நான் செய்ததில்லை. அவ்வாறு இருக்கும்போது என்னிடம் டேட்டிங் குறித்து அடிக்கடி கேள்வி கேட்பவர்களுக்காகவே இந்த பதிலை நான் பதிவு செய்தேன் என்று கூறியுள்ளார். 

மேலும் படிக்க - நீண்ட கால திருமண உறவில் கணவனும், மனைவியும் அன்பு நிறைந்த வாழ்க்கையை எப்படி வாழ்வது?

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!