ராசிபலனை நம்ப ஆரம்பித்தவர்களுக்கு எல்லாமே அதன் அடிப்படையில் அமைத்துக் கொண்டால் தான் திருப்தியாக இருக்கும். அணிகின்ற அணிகலன்கள் முதல் ஆடையின் நிறம் வரை ராசிபலன்கள் நம்மை வழிநடத்திக் கொண்டே இருக்கிறது.
அதன்படி மாற்றங்களுக்கு ஏற்றவாறு உங்கள் ராசிக்கேற்ற மொபைல் கேஸ் கவர்கள் (mobile case covers) என்னென்ன என்பதை பார்க்கலாம். எனது சுவாரஸ்யமான இந்தப் பதிவு உங்களுக்குப் பிடிக்கும் என நம்புகிறேன்.
உங்கள் ராசி நெருப்பு ராசி. ஆகவே மின்னுகின்ற எதுவும் உங்களுக்கு பொருந்தும். அதனால் க்ளிட்டர்கள் அதிகம் பயன்படுத்தப்பட்ட மொபைல் கேஸ் கவர்கள் உங்களுக்கு பொருத்தமாகவும் ராசியாகவும் இருக்கும்.
நீங்கள் மற்றவரை விட சற்றே அதிகம் யோசிப்பவர். யதார்த்தவாதியும் கூட.மற்றவரை எரிச்சல்படுத்தாத எதுவும் உங்கள் தேர்வாக இருக்கும். பாம்பு தோல் போன்ற மொபைல் கவர்கள் உங்கள் நில ராசிக்கு பொருத்தமானதாக ராசியானதாக இருக்கும்.
மிதுன ராசிக்காரர்கள் எப்போதும் பாடும் பாடல் இரண்டு மனம் வேண்டும் பாடல்தான். எப்போதும் இரண்டு மனம் உங்களுக்கு இருக்கும். அதனால் ஒரு பாதி கிரிஸ்டல் மறுபாதி மார்பிள் என இரண்டு வடிவம் ஒன்றிணைந்த மொபைல் கேஸ் கவர் உங்களுக்கு ராசியைத் தேடித் தரும்.
கடக ராசிக்காரர்கள் மற்றவர்களை அரவணைத்து செல்வதில் வல்லவர்கள். அதைப்போலவே நல்ல சௌகரியமான உணவுகளை நேசிப்பவர்கள். டோனட் போலவே உள்ளேயும் வெளியேயும் இனிப்பானவர்களுக்கு இனிப்புகள் பின்னணியில் மொபைல் கேஸ் கவர்கள் ராசி தரும்.
எதிலும் முதலில் நின்று ஜெயிப்பவர்கள் இவர்கள். இவர்கள்தான் நம்பிக்கைக்கான ஆதாரங்கள். அனைவரையும் அதிகாரம் செய்வதில் வல்லவர்களாக இவர்களுக்கு தீப்பொறி பறக்கும் பின்னணியில் க்ளிட்டர்கள் உடன் மொபைல் கேஸ் கவர்கள் ராசியாக இருக்கும்.
நீங்கள் மிகவும் மென்மையானவர். நல்ல விஷயங்களை பாராட்டுபவர். வாழ்க்கையின் நேர்த்தியான விஷயங்களை கருணையோடு அணுகுவீர்கள். முத்துக்கள் பதித்த அல்லது பின்னணியில் இருக்கும் மொபைல் கவர்கள் உங்களுக்கு ராசியானதாக இருக்கும்.
அமைதி, நல்லிணக்கம் மற்றும் அழகு இவை மூன்றும்தான் உங்களை சிறந்த மனிதர் ஆக்குகிறது. வெள்ளை நிற மரத்தால் ஆன மொபைல் கவர்கள் உங்களுக்கு ராசியை தரும்.
எதற்கும் இல்லை எனும் பதில் உங்களிடம் இருக்காது. உங்களுக்கு என்ன வேண்டுமோ அதனை எப்படியாவது அடைந்தே தீருவீர்கள். உங்களுக்கு பறவைகள் பின்னணியில் உள்ள மொபைல் கேஸ் ராசியை தரும்.
நீங்கள் இந்த உலகை அனுபவிக்க பிறந்தவர். செயல்முறைகளில் வெல்பவர். மோதிரங்கள் பின்னணி அல்லது மோதிரம் போன்ற வளையங்கள் கொண்ட மொபைல் போன் கேஸ் கவர்கள் உங்களுக்கு பொருத்தமானது.
நீங்கள் நம்பிக்கையானவர். நேர்த்தியானவரும் கூட. நீங்கள் அடைய வேண்டிய சாதனைகள் நிறையவே இருக்கின்றன. கடல் பின்னணி கொண்ட மொபைல் கேஸ் கவர்கள் உங்கள் ராசிக்கு பொருத்தமானதாக இருக்கும்.
அதிக உணர்ச்சிகளுக்கு ஆளாக விரும்பும் ரொமான்ஸ் ராசி உங்களுடையது. ஆற்றல் அதிகமாக இருக்கும் உங்களுக்கு எலுமிச்சையின் மஞ்சள் நிறம் அல்லது எலுமிச்சை பின்னணி கொண்ட மொபைல் கேஸ் கவர்கள் ராசியை தரும்.
நீங்கள் கற்பனாவாதி. உங்கள் கற்பனைகளுக்குள் மூழ்கி முத்துக்களை எடுக்க விரும்பும் உங்களுக்கு பொருத்தமான மொபைல் கேஸ் கவர் க்ளிட்டர்கள் மெல்ல மேலிருந்து கீழிறங்கும் ஹோலோக்ராம் போடப்பட்ட மொபைல் கவர்கள் ராசியாக இருக்கும்.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!