நகைகள் என்றாலே பெண்களுக்கு பேராசை என்பது போன்ற சித்தரிப்புகளை நாம் சமூகவலைத்தளங்களில் காண்கிறோம். திரைப்பட நகைச்சுவைகளில் இந்த சித்தரிப்புகள் இணைக்கப்படுவதை பார்த்து நாமும் கூட சேர்ந்து நகை’க்கிறோம்.
மீம் க்ரியேட்டர்களும் போதாக்குறைக்கு நமது ஷாப்பிங் ஹாபியை குறை சொல்கிறார்கள். உண்மையில் அவையெல்லாம் நிஜமா இல்லையா என்று யோசித்தால் பெரும்பாலான பெண்கள் நகையை ஒரு பாதுகாப்பான சேமிப்பிற்காகவே வாங்குகிறார்கள்.
தமிழகப் பெண்களுக்கு சிறந்த வாய்ப்பு ! அரசு சான்றிதழுடன் இலவச அழகுக்கலை பயிற்சி !
Youtube
கணவரை கஷ்டப்படுத்தி சேர்க்கும் நகைகள் எல்லாம் அவரது கஷ்டத்தை தீர்ப்பதற்காகவே என்பதை அவர்களும் அறிந்துதான் இருக்கிறார்கள். ஆனாலும் சும்மாவாவது நகைச்சுவைகளில் சேர்க்கப்பட்டதற்கு சிரித்தும் வைப்பார்கள்.
ஆனாலும் நம் பெண்கள் என்ன நடந்தாலும் நகை சேமிப்பதை நிறுத்துவதே இல்லை. அதுதான் அவர்களின் திறமை.
பொதுவாக வாங்கும் நகைகளில் சில அவசரத்திற்கு அடமானம் (pludge) வைக்கப்பட்டாலும் அதனை திரும்ப எடுத்த உடன் சில பரிகாரங்கள் செய்து அணிவது உங்கள் நகையை மீண்டும் அடகுக்கு செல்ல விடாமல் தடுக்கும்.
அதற்கு முன்னர் நகை வாங்கிய உடன் செய்ய வேண்டிய சில பரிகாரங்களை பார்த்து விடுவோம்.
அழகான பட்டு புடவைகளுக்கு அழகான பிளவுஸ் (ரவிக்கை) தேர்வு செய்ய சில சுவரசியமான குறிப்புகள்!
Youtube
நகைகளை (jewells) வாங்கிய உடனே அணிந்து கொள்ளாமல் வீட்டுக்கு எடுத்து வந்து பூஜை அறையில் வைத்து அணிய முறையாக பூஜித்து மகாலக்ஷ்மியாகிய தங்கம் உங்களை விட்டு நீங்காமல் இருக்க வேண்டும். மென்மேலும் தங்கம் உங்கள் வீட்டில் சேர வேண்டும் என்று வேண்டி கொள்ள வேண்டும்.
அதன் பின்னர் உங்கள் இஷ்ட தெய்வ கோயிலுக்கு நகையை எடுத்து சென்று இறைவன் இறைவி மடியில் வைத்து வணங்கி அதன்பின்னர் அங்கேயே நீங்கள் அதனை அணிந்து கொள்ள வேண்டும். இப்படி செய்வதால் வாங்கும் தங்க நகைகள் அடகுக்கடைக்கு போகாமல் தடுக்க முடியும்.
பஞ்சாயத்தில் சிக்கியிருக்கும் பகல்நிலவு அஸீம் – சின்னத்திரையில் தொடரும் முறையற்ற உறவுகள் !
Youtube
நகையை தவிர்க்க முடியாத காரணங்களுக்காக அடகு வைத்தவர்கள் அந்த நகையை மீட்டு வருவதும் அதன்பின்னர் அதனை மீண்டும் மறு அடகுக்கு வைப்பதுமாக இருப்பவர்கள் கீழ்கண்ட முறையில் பரிகாரம் செய்து நகையை அணிந்து வந்தால் நகை மீண்டும் அடகுக்கடைக்கு போகாதவண்ணம் உங்களுக்கு ஐஸ்வர்ய பாக்கியம் உண்டாகும்.
அடகு வைத்த நகையை மீட்டு வீட்டுக்கு கொண்டு வாருங்கள். வந்த உடன் ஒரு நாள் முழுதும் ஒரு தட்டு நிறைய கல் உப்பைக் கொட்டி அதன் மேல் இந்த நகையை வைத்து விடுங்கள். இருபத்து நான்கு மணி நேரம் கழித்து அந்த கல் உப்பில் இருந்து நகையை எடுத்து மஞ்சள் கலந்த நீரில் போடவும்.
மோனல் தற்கொலை வழக்கில் 17 ஆண்டுகளுக்கு பின் திருப்பம் – கலாமாஸ்டர் மற்றும் மும்தாஜ் கைது ?
Youtube
அதன் பின்னர் நகையை நல்ல தண்ணீரில் கழுவி பூஜை அறையில் வைத்து அணிந்து கொள்ளுங்கள். இப்படி செய்வதால் அடகு கடைக்கு சென்ற தோஷம் நகையிடம் இருந்து நீங்கும். மீண்டும் அந்த நகை அடகு கடைக்கு செல்லாமல் இருக்கும்.
அந்த தோஷம் கல் உப்பில் இறங்கி இருக்கும். அதனை யார் காலிலும் படாத இடத்தில் தண்ணீரில் கொட்டி விடுவது உத்தமம். யார் காலிலாவது பட்டால் அவர்களுக்கு அந்த தோஷம் சென்று சேரும் என்பது நியதி. ஆகவே தண்ணீரில் கொட்டி விடுவது நல்லது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!