திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற சில உதவிகள்! POPxo | POPxo

திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !

 திருமண வாழ்வை அற்புதமான அதிசயங்கள் நிறைந்த பயணமாக மாற்ற உங்களுக்கான சில உதவிகள் !

திருமணம் எவ்வளவுக்கெவ்வளவு பாதுகாப்பானதோ அதே அளவிற்கு சிக்கலானதும் கூட. ஒரு பக்கம் ஒருவரை உங்கள் வாழ்க்கை முழுதும் உங்கள் துணையாக கொள்வது சுகம் என்றாலும் அதே போல இன்னொரு பக்கத்தில் வாழ்நாள் முழுதும் உங்களுடன் வரப்போகிற ஒரு துணையை பொருத்தமாக தேர்ந்தேடுப்பது என்பது கடினமான விஷயம்தான்.


உங்கள் வாழ்நாள் என்பது மிக நீண்ட காலம். அதில் மாறக் கூடிய சூழ்நிலைகள் என்பது அடிக்கடி நிகழும் நிதர்சனம். ஆகவே இந்த திருமண கடலுக்குள் ஆழம் பார்ப்பது கொஞ்சம் பயமான காரியம்தான். ஆனாலும் அதனையும் உடன் இருப்பவர்கள் உந்துதலால் நல்லபடியாக செய்து முடித்தவர்களுக்காகத்தான் இந்த கட்டுரை.


7அடி மனைவி காலை பிடித்து எடுத்து வைத்து அம்மி மிதித்து அருந்ததி பார்த்து அக்னியை வலம் வந்து உங்கள் திருமணம் முடிந்திருக்கும். முதல் சண்டை முடிந்து உங்கள் உடைகளை பேக் செய்து அம்மா வீட்டிற்கும் போய் வந்திருக்கலாம். அதெல்லாம் போகட்டும். சண்டை இல்லாத சமாதானமான திருமண வாழ்க்கை வேண்டாம் என்று யாரவது கூற முடியுமா. அதற்காகதான் இந்த கட்டுரை. For a happy married life.


இரு கரம் கோர்த்து எழுதும் ஒரு அரும்பெரும் காவியம் .. திருமண நாள்.. சில சுவாரஸ்ய குறிப்புகள்திருமண மலர்கள் நிறம் வெளிறும் சூரிய காலங்கள்


திருமணம் முடிந்த முதல் வருடம் வரை உங்கள் துணையுடன் ஆன வாழ்வென்பது கொஞ்சம் சுலபமாக முடிந்திருக்கலாம். ஆனால் இவருடன்தான் நீங்கள் உங்கள் மிச்ச வாழ்நாளை கழிக்க வேண்டும் என்பது மிகவும் சவாலான ஒன்றுதான் என்று உங்களுக்கு இப்போது புரிந்திருக்கலாம்.


காமத்தின் வெப்பத்திற்கு கோபத்தின் தகிப்பிற்குமான வித்யாசங்கள் உங்களுக்கு புரிந்திருக்கும். அதனால் அதனை சரி செய்து உங்கள் உணர்வுகளை சமன் செய்து மீதம் உள்ள வாழ்வின் பயணமெங்கும் இந்த திருமண உறவு உங்கள் விரல் பிடித்து நகர எனது வாழ்த்துக்கள்.


திருமண வாழ்வில் தென்படும் சவால்கள்


கருத்து வேறுபாடுகள்


இது பொதுவாக எல்லா உறவுகளுக்கு இடையில் நடக்கிற ஒன்றுதான் என்றாலும் நாம் முழு உரிமை செலுத்தக் கூடிய ஒரு உறவில் இத்தகைய கருத்து வேறுபாடுகள் வரும்போது அதனை எல்லோராலும் ஏற்று கொள்ள முடிவதில்லை.


எங்க வீட்ல முக்கியமான முடிவுகளை நான் எடுப்பேன் சின்ன முடிவுகளை மனைவிகிட்ட விட்டுடுவேன் என்கிறார் ஒருவர். அப்படியா என்னென்ன முடிவுகள் நீங்கள் எடுப்பீர்கள் என்று ஆச்சர்யத்தில் இன்னொருவர் கேட்க நாட்டை எந்த கட்சி ஆள வேண்டும் கிரிக்கெட்டில் யார் ஜெயிக்க வேண்டும் என்பது போன்ற பெரிய முடிவுகளை நான் எடுப்பேன். வீட்டுக்கு என்ன வாங்க வேண்டும் சொந்தக்காரர் கல்யாணத்துக்கு என்ன சீர் செய்ய வேண்டும் என்பது போன்ற சின்ன முடிவுகளை என் மனைவி எடுப்பார் என்றாராம் அவர். இப்படித்தான் பலரின் வாழ்க்கை சிறப்பாக நடந்து கொண்டிருக்கிறது.


இந்த கருத்து வேறுபாடுகள் உங்கள் வாழ்வை மாற்றி விடாமல் பார்த்து கொள்ளுங்கள். அவரவருக்கென தனி கருத்து எல்லாவற்றிலும் இருக்கும் என்பதை பரஸ்பரம் ஒப்புக்கொண்டு குடும்பத்தை கொண்டு செலுத்துங்கள்.


சகிப்பு தன்மை குறையலாம்


இப்போதெல்லாம் முணுக் என்றாலும் நீதிமன்ற வளாகத்திற்கு நுழையும் பெண்கள் ஆண்கள் என பலரை பார்க்கிறோம். ஒருவரை ஒருவர் சகித்துக் கொள்ளும் தன்மை மிக குறைந்து போனதே இதற்கு காரணம். குறட்டை விடுவது ஒரு குறைபாடு அதனை கூட பொறுத்து கொள்ளாமல் நீதிமன்றம் ஏறும் தாய்குலங்கள் இருக்கத்தான் செய்கிறார்கள். மனைவியை வேலைக்கு அனுப்பி விட்டு தன்னை போலவே அவளும் தனக்கு துரோகம் செய்து விடுவாளோ என்று சந்தேகத்தில் நடுங்கும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இவற்றை தவிர்ப்பது ஆரோக்கியமான உறவிற்கு அடிகோலும்.


உங்க காதல்  எந்த நிலை.. திருமணத்தில் முடியுமா.. தெரிந்து கொண்டு தெளிவாகுங்கள்!நம்பிக்கைகள் அதற்கான மதிப்புகள்


கணவன் மனைவி இருவரும் ஒருவர் உயிர் இன்னொருவரில் கலந்த அன்றில் பறவைகள் என்றாலும் கூட இருவருக்கும் இடையே தனிப்பட்ட நம்பிக்கைகள் பல இருக்கலாம். உதாரணமாக கலப்பு திருமணம் நடக்கும் தம்பதிகளில் ஒரு சிலர் தாங்கள் வழிநடத்தப்பட்ட நம்பிக்கைகளை விட்டு கொடுக்க முடியாமல் புதிய உறவால் ஏற்பட்ட நம்பிக்கைகளை ஏற்க முடியாமல் போலித்தனமாக இருப்பார்கள். தான் மட்டுமே கோயிலுக்கு செல்வது ஒருவருக்கு சலிப்பை தரலாம். துணை கடவுள் நம்பிக்கை அற்றவராக இருப்பது சங்கடத்தை ஏற்படுத்தலாம். மென்று முழுங்கித்தான் வாழ்வு நடக்குமே தவிர நிம்மதியாக இருக்காது. குழந்தைகளுக்கு கற்று கொடுப்பதிலும் பிரச்னைகள் வரலாம். இது உங்கள் திருமண பந்தத்தை கேள்விக்குறி ஆக்கலாம்.


அழுத்தம்


அழுத்தம் என்பது எல்லா உறவுகளும் சந்திக்கும் ஒரு சகஜமான அத்யாயம்தான். அப்பா அம்மா முதல் மகன் மகள் வரை எல்லா உறவுகளிலும் சில நேரங்கள் ஸ்ட்ரெஸ் எனப்படும் அழுத்தங்கள் இருக்கும். பொருளாதார சிக்கல்கள் இதில் முதன்மையானவை. அதன் பின்னர் குடும்ப சிக்கல்கள் அம்மா மனைவிக்கிடையே ஆன போராட்டங்கள் பிள்ளைகள் தரும் தொல்லைகள் என இதன் நீட்சி அதிகமாகவே இருக்கும். ஸ்ட்ரெஸ் என்பதை எது வேண்டுமானாலும் தொடங்கலாம். இதுவும் உங்கள் திருமண உறவை பதம் பார்க்கும்.


உறவுகளில் ஏற்படும் சலிப்புகள்


சலிப்பு திருமண உறவை உடைக்க கூடிய மிகவும் குறைவாக மதிப்பிடப்பட்ட ஒரு காரணம் என்றாலும் கூட இது மிக கவனமாக கையாள வேண்டிய காரணமாகும். பழகி போன வழக்கங்கள் பெரும்பாலும் சலிப்பை பிரிவு வரை இழுத்து செல்வதில்லை என்றாலும் பழக்கப்படுத்தப்பட்ட அதாவது வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட சில பழக்கங்கள் உங்கள் துணைக்கு சலிப்பை ஏற்படுத்தலாம்.


இருவருக்கிடையே ஒரு ஸ்பார்க் இல்லாத போது தொடர்ந்து பல வருடங்கள் ஒரே வித வழக்கங்களை செய்து கொண்டே இருப்பது சலிப்பை ஏற்படுத்தி அதன் மூலம் பிரிவினையை ஏற்படுத்தும்.


ஒருவரை ஒருவர் ஏமாற்றுவது


உணர்வு ரீதியாக ஒருவரை ஒருவர் ஏமாற்றி கொள்வது இன்னொரு உறவினை ஏற்படுத்தி கொண்டு உங்கள் துணைக்கு துரோகம் செய்வது என்பது சரி செய்ய முடியாத சிக்கல்களை உருவாக்கலாம். இதனை தவிர ஒரு நாள் இரவுக்கு பழகும் பார்ட்டி உறவுகள், உடல்ரீதியான மாற்று தேவைகளுக்காக செய்யப்படும் துரோகங்கள், இணையவழி உறவுகளால் ஏற்படும் சலனங்கள், குறைந்த கால உறவுகள் என இதற்கான பெயர்கள் மாறுபட்டிருந்தாலும் அடிப்படையில் இதன் பெயர் துரோகம் என்பதே ஆகும். முதலில் குறிப்பிட வேண்டிய காரணத்தை இறுதியாக குறிப்பிட்டிருப்பது இதனை அடுத்தடுத்த காரணங்களால் நீங்கள் மறந்து விட வேண்டாம் என்பதனால் தான்.


ஐ மிஸ் செல்வராகவன்.. எனக்கென எழுதப்பட்டிருக்கும் வாழ்வை வாழ்கிறேன்.. சோனியா அகர்வால்உங்கள் திருமண உறவை மகிழ்ச்சியானது மாற்றியமைக்க சில வழிகள்


ஒருவருக்கு ஒருவர் உண்மையாக இருங்கள்
என்ன நடந்தாலும் ஒருவருக்கு ஒருவர் மனம் விட்டு பேசுங்கள். மறைக்காதீர்கள். அதனை பற்றி கேள்வி கேட்க வரும் துணையை ஆக்ரோஷமாக எதிர்கொள்ளாமல் அமைதியாக பேசுங்கள். உங்கள் தவறுகள் கண்டுபிடிக்கப்பட்டதால் உங்கள் துணை மீதான அவதூறுகளை பேசாமல் உங்கள் தவறுகளை ஏற்று கொண்டு அதற்கு அடுத்த கட்டத்தை பற்றி யோசியுங்கள். உங்கள் தவறுகளை சரி செய்யுங்கள்.


பாராட்டுங்கள்


ஒருவரை ஒருவர் பாராட்டுவது வலிமையான உறவுக்கான அடித்தளத்தை அமைக்கும் என்பதை தெரிந்து கொள்ளுங்கள். உங்கள் துணையை உங்கள் கால்களுக்கு கீழே வைத்து கொள்ளாமல் உங்கள் தோள்களில் சாய்த்து கொள்வதுதான் அற்புதமான உறவின் அழகான அடையாளம் என்பதை உணருங்கள். அடுத்தவரின் திறமைகளை பாராட்டுங்கள். உங்களின் பெருமைகளை பேசிக்கொண்டே இருப்பதை விடவும் இது மிகவும் அற்புதமான பலன்களை தரும்.


முக்கியத்துவம்


என்ன ஆனாலும் உங்களோடு வாழ்நாள் முழுதும் வர போகும் உறவிற்கு முதன்மையான இடம் தருவதுதான் நியாயம்? இறைவனே தனது பாதியை உமையாளுக்கு கொடுத்து இதற்கான முன்னுதாரணமாக திகழ்கையில் நாம் மனிதர்கள் ஏனோ இதனை செய்ய தயங்குகிறோம். நம்மோடு கூட இருப்பவர்தானே என்கிற அலட்சியம் பெரும்பாலும் வெல்வதால் இந்த நிலை. முதலில் உங்களில் பாதியானவருக்கு முக்கியத்துவம் கொடுங்கள். வாழ்வில் நல்லவை எல்லாமே முதன்மையாக உங்களுக்கு நடக்கும்.


இந்த குணங்கள் உங்களிடம் இருந்தால் உலகின் அரிய மனிதர்களில் நீங்களும் ஒருவர்தான்!வார இறுதிகளில் டேட்டிங்


திருமணமான துணையோடு டேட்டிங்கா அதுவும் பிள்ளைகள் பிறந்த பிறகா என்று நீங்கள் கொஞ்சமாக வெட்கப்படலாம். பரவாயில்லை நமக்குள் இருக்கும் எல்லா உணர்வுகளும் வெளியே வரட்டும். நிச்சயம் உங்களுக்கும் உங்கள் துணைக்கும் எப்போதுமே அந்த காதல் பொறி இருந்து கொண்டே இருக்க வேண்டும். அது அணைகின்ற சமயத்தில்தான் அடுத்த உறவுகள் முளைக்கின்றன. அதனை வரவேற்காமல் இருக்க நீங்கள் வார இறுதிகளில் ஒரு இரவை உங்கள் இவருக்காக ஒதுக்கி டேட் செல்லுங்கள்.


சமாதானம்


எவ்வளவு சண்டை நடந்தாலும் முதல் மூன்று நாட்களுக்குள் சமாதானம் செய்து கொள்வதாக உங்களுக்குள் சபதம் செய்து கொள்ளுங்கள். நமது ஈகோவா அல்லது நமது வாழ்நாள் துணையா என்று வரும்போதெல்லாம் நீங்கள் ஈகோவை துறப்பது உங்கள் காதலை காப்பாற்றும்.


உங்கள் துணைக்கான தனிப்பட்ட இடத்தை நீங்கள் அனுமதியுங்கள்


ஈருடல் ஓருயிர் என்றாலும் உங்கள் இருவரின் உயிரும் தனித்துவமானவை என்பதை உணர்ந்து உங்கள் துணைக்கு தேவையான தனிமையை கொடுங்கள். அவர் புத்தகம் படிக்கட்டும் வெளியே சென்று வரட்டும் பிடித்த படங்களை பார்க்கட்டும் எல்லாமே உங்கள் விருப்பப்படியே நடக்க வேண்டும் என்று நினைக்காமல் அவரது விருப்பங்களை அனுமதியுங்கள்.


மற்றவரை விடுங்கள், முதலில் நம் மீது நாம் கருணையாக இருக்கிறோமா ?குடும்ப உறவுகளை மதியுங்கள்


உலகில் பெரும்பான்மையான மக்கள் பின்படுத்துவது பெண்களின் உறவுகளை மதிப்பதும் ஆண்களின் உறவுகளை தவிர்ப்பதும் போன்ற வழக்கங்களையே. ஆச்சர்யகரமாக இது உலகம் முழுக்கவே இப்படித்தான் இருக்கிறது. அதனால்தான் பல்வேறு நாடுகளில் பல விவாகரத்துகள் சாத்யமாகின்றன. இதனை தவிர்க்க இரண்டு பக்க உறவுகளையும் சமமாக நீங்கள் நடத்த வேண்டும் என்பதுதான்.


திட்டமிடுங்கள்


என்ன திட்டமாக இருந்தாலும் இருவரும் சேர்ந்து அதனை திட்டமிடுங்கள். ஒரு ஞாயிறு திரைப்படமோ அல்லது குடும்பத்துடன் ஆன சுற்றுலாவோ இருவரும் இணைந்து திட்டமிடுங்கள். இது உங்களுக்கிடையேயான உறவினை பலப்படுத்தும்.


எப்போதெல்லாம் முடியுமோ


எப்போதெல்லாம் முடியுமோ அப்போதெல்லாம் ஒன்றாகவே இருங்கள். ஒன்றாகவே செல்லுங்கள்.உங்களை நம்பிய உறவான திருமணத்தில் ஒருவரை ஒருவர் கைபிடித்து அழைத்து செல்வதில்தான் வாழ்க்கையின் அற்புதம் அடங்கி இருக்கிறது.


உங்களோடு "செம்புலப் பெயர் நீர் போல ஒன்றிணையும்" ஒரு இதயத்தை கண்டுபிடிக்க 9 குறிப்புகள்வேண்டும் சில விளையாட்டுத்தனங்கள்


உங்கள் துணையை மன அழுத்தங்கள் நீங்கி வாய் விட்டு சிரிக்க வைக்க நிறைய விளையாட்டுக்களை செய்யுங்கள். ஜோக் அடியுங்கள். உங்கள் துணை மனம் விட்டு சிரித்தபடி மகிழ்வாக இருந்தால் உங்கள் வாழ்க்கை சிறப்பாக நடக்கும்.


திருமண உறவிற்கு வெளியே கொஞ்சம்


உங்கள் இருவரையும் ஏதோ ஒரு ஜெயிலில் போட்டு அடைத்தது போல மூச்சு முட்ட நீங்கள் வாழ்வது உங்களுக்கே பிடிக்காத ஒன்றுதான் இல்லையா. திருமணம் என்னும் உறவை தாண்டிய சில விஷயங்களை உங்கள் துணைக்கு அறிமுகம் செய்யுங்கள். உங்கள் இருவர் உங்கள் குடும்பம் தாண்டிய சில விஷயங்கள் அவர்கள் பிறந்த பிறப்பிற்கான நோக்கத்தை கொஞ்சம் மீட்டு தரலாம்.


சின்ன சின்ன தினசரி திருமணக் குறிப்புகள்


தொடுங்கள்


உங்கள் மனைவி அல்லது கணவனை தவிர நீங்கள் வேறு யாரை அதிகமாக தொட முடியும். அடிக்கடி அவருடன் தொட்டு தொடரும் உறவாக நீங்கள் மாறுங்கள். இது உளவியல் ரீதியாக ஒருவரை ஒருவர் விலகாதிருக்க வழி செய்யும்.


முத்தமிடுங்கள்


அடிக்கடி முத்தம் இடுங்கள். கணக்குகள் வைத்து கொண்டு முத்தமிட இது ஒன்றும் போட்டி அல்ல. ஆனால் முத்தமிட முத்தமிட நீங்கள் உங்களுக்கான வாழ்நாள் பரிசான காதலை நிரந்தரமாக பெறுவீர்கள் என்பது நிச்சயம்.காமம்


இருவருக்கும் இடையே என்ன சிக்கல்கள் எழுந்தாலும் சமாதானம் செய்து அதனை காமத்தில் முடிப்பது உங்கள் உறவினை பலமாக்கும். கோபம் என்றால் காமல் தவிர்ப்பது உங்கள் துணையை நீங்கள் அவமதிப்பதற்கு சமமாகும்.


லவ் யு


அடிக்கடி லவ் யு சொல்லுங்கள். அதனால் உங்கள் துணையின் ஆழ்மனதில் இந்த காதல் பளிச்சென இடம் பிடிக்கும். அனைவர் முன்னிலையிலும் சொல்லப்படும் லவ் யூக்கள் உங்கள் துணை உங்கள் மீது நம்பிக்கையும் காதலையும் அதிகரிக்க வைக்கும் அற்புத தந்திரமாகும். உள்ளிருந்து சொல்லுங்கள். உதட்டளவில் சொல்லாமல் இருப்பதே நல்லது.


ரகசிய பெயர்கள்


உங்கள் திருமண உறவு சுவாரசியம் நிறைந்ததாக இருக்க உங்கள் இருவருக்கு இடையே ரகசிய பெயர்கள் வைத்து அழைப்பது உதவும். அது ஒரு விதமான கிக் என்பதை நீங்கள் அழைக்க ஆரம்பித்த உடன் புரிய தொடங்கும்.


கூடலுக்கு பின்னர் ஆண்கள் செய்யக் கூடாதது என்னென்ன ? தெரிந்து கொள்ளுங்கள் !காதல் பெருகட்டும்


எதனை செய்தாலும் அதில் காதல் பெருகட்டும்
உங்கள் துணைக்காக நீங்கள் என்ன செய்தாலும் சரி. சாதாரண சமையலோ அல்லது அற்புதமான பரிசோ எதுவாக இருந்தாலும் ஒற்றை பூவினை நீங்கள் வழங்கினாலும் அதனை முழுமையான காதலோடு வழங்குங்கள். அது உங்களுக்குள் பொங்கும் காதலை மேலும் வளர்க்கும்.


வருத்தம் மற்றும் நன்றி தெரிவியுங்கள்


உங்கள் மனைவிதான் உங்கள் கணவர்தான். அதற்காக ஸாரி சொல்ல கூச்சப்படாதீர்கள். மனதார கேட்கப்படும் மன்னிப்புகள் உங்கள் உறவை அற்புதமான உயரத்திற்கு கொண்டு போகும். அதனை போல சிறு சிறு விஷயங்களுக்கும் நன்றி தெரிவியுங்கள். உங்களை சகித்து கொண்டு உங்களை நேசிக்கும் ஒரு உயிரை நீங்கள் மரியாதை செய்வது என்பது இந்த நன்றி தெரிவித்தலில் இருக்கிறது. உங்களுடன் சகபயணியாக வரும் உங்கள் துணையிடம் நன்றி செலுத்துவது தவறான காரியம் இல்லை.


குடும்ப படகை கொண்டு செலுத்துங்கள்


திருமணம் என்பது உங்களோடு முடிந்து விடும் ஒன்றல்ல. இரண்டு குடும்பங்கள் அதற்கிடையேயான பந்தங்கள் உங்கள் மூலம் உருவான உயிர்கள் என அனைவரையும் பாதிக்க கூடிய ஒன்றுதான் திருமணம். அது உங்களை பற்றி மட்டுமே உருவான ஒன்றல்ல என்பதை புரிந்து கொள்ளுங்கள். வாழ்த்துக்கள் .புகைப்படங்கள் பிக்ஸா பே பாக்ஸெல்ஸ்


இரு கரம் கோர்த்து எழுதும் ஒரு அரும்பெரும் காவியம் .. திருமண நாள்.. சில சுவாரஸ்ய குறிப்புகள்


இப்படி ஒரு மாமியார் கிடைக்க ஆர்யா கொடுத்து வைத்திருக்க வேண்டும் - நெகிழும் நெட்டிசன்ஸ்!


---


POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!


மகிழ்ச்சியான செய்தி! POPxo ஆன்லைன் ஷாப் விற்பனையில் தற்போது 25% தள்ளுபடி! கோப்பைகள், மொபைல் கவர்கள், குஷன்ஸ், லேப்டாப் ஸ்லீவ்கள் மேலும் பல்வேறு பொருட்களுக்கு மேல் இத்தள்ளுபடி செல்லும். அதற்கு POPXOFIRST என்கிற கூப்பனை உபயோகிக்கவும் பெண்களுக்கான மிக சிறந்த ஆன்லைன் ஷாப்பிங் POPxo