உடலை சுத்திகரித்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர் – டிடோக்ஸ் நீர்!

உடலை சுத்திகரித்து ஆரோக்கியத்தை அதிகரிக்கும் நீர் – டிடோக்ஸ் நீர்!

இன்று மக்கள் பல வகையான உணவுகளை உண்கின்றார்கள். அவை அனைத்தும் ஆரோகியமானத்துதான் என்று கூற முடியாது. உணவினாலேயே பலரும் இன்று பல வகை நோயினால் அவதிப்பட்டு வருகின்றனர். எனினும், சில தருணங்களில், தவிர்க்க முடியாத சூழலில் உடலுக்கு நலனற்ற உணவனை உண்ண நேர்ந்தால், உடலில் தேவையற்ற பொருட்கள் தங்கி, உண்டளுக்கு தீங்கு விளைவிக்கத் தொடங்கி விடுகின்றது. குறிப்பாக உடலில் நச்சு சேர்ந்து விடுகின்றது. இதனை அப்படியே விட்டு விட்டால், விரைவாக பல வகை நோய்களின் தாக்கம் ஏற்பட்டுவிடும். எனினும், இதனை தவிர்க்க, நீங்கள் தினமும் நச்சை போக்கும், மற்றும் உடலை சுத்தம் செய்யும் டிடோக்ஸ் நீரை (detox water) அருந்தலாம்.

இந்த டிடோக்ஸ் நீரை பற்றி தெரிந்து ஆர்வமாக உள்ளதா? அப்படியென்றால், இந்த தொகுப்பை தொடர்ந்து படியுங்கள்!

இது உங்களுக்கு பயனுள்ளதாக இருக்கும்!

Table of Contents

  டிடோக்ஸ் நீர் என்றால் என்ன?(What is detox water)

  • இந்த டிடோக்ஸ் நீர் உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடலுக்கு நல்ல ஆரோக்கியத்தை தரும்
  • சில டிடோக்ஸ் நீர் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரித்து பல நன்மைகளை தரும்
  • இருதயத்தின் ஆரோக்கியத்தை அதிகரித்து ஆரோகியமான வாழ்க்கையை வாழ உதவும்
  • குறிப்பாக முக அழகை அதிகரித்து, தலைமுடி உதிர்வையும் இது குறைக்கும்
  • உடலுக்கு தேவையான சக்தியை இது பெற உதவும்
  • இதை செய்ய முழுவதுமாக இயற்கை பொருட்களே தேவை
  • இது அனைவருக்கும் பாதுகாப்பானதாகவும், அனைவரும் அருந்தும் வகையிலும் இருக்கும்
  • ஜீரண பிரச்சனையை போக்கி, குடல் ஆரோக்கியத்தை அதிகரிக்கும்
  • குறிப்பிடத்தக்க பழங்கள் மற்றும் காய் வகைகளை கொண்டு இதனை தயார் செய்யலாம்
  • இதில் குறிப்பாக எலுமிச்சைபழ டிடோக்ஸ் நீர் மற்றும் திராட்சை டிடோக்ஸ் நீர் மிக அதிக பலன்களை தரக்கூடியதாக உள்ளது

  உங்கள் உடலில் நச்சு உள்ளதற்கான அறிகுறிகள்( Toxic signs in body)

  Pexels

  உங்கள் உடலில் நச்சுத்தன்மை அதிகம் இருந்தால், அதனை சில அறிகுறிகள் கொண்டு அறிந்து கொள்ளலாம். அப்படி நீங்கள் தெரிந்து கொள்ள, இங்கே சில குறிப்புகள்;

  1. மல சிக்கல் ஏற்படும்
  2. தலைவலி தொடர்ந்து அவ்வப்போது ஏற்படும்
  3. மயக்கம் ஏற்படும்
  4. வாயு பிரச்சனை உண்டாகும்
  5. வயிற்று போக்கு ஏற்படும்
  6. உடலில் வலி ஏற்படும்
  7. குமட்டல் அவ்வப்போது ஏற்படும்
  8. வயிற்றை சுற்றி இருக்கும் பகுதியில் கொழுப்பு சேர்ந்து பருமன் ஏற்படும்
  9. சரும பிரச்சனைகள் ஏற்படும்
  10. சரியாக உணவு எடுத்துக் கொள்ள முடியாமல் போகலாம்
  11. வாய் துற் நாற்றம் ஏற்படும்
  12. மன நிலையில் அடிக்கடி மாற்றம் ஏற்படும்
  13. உடலில் சக்தி குறைந்து காணப்படும்

  டிடோக்ஸ் நீரினால் கிடைக்கும் நன்மைகள் (Benefits of detox water)

  டிடோக்ஸ் நீரினால் பல நன்மைகளை (benefits) பெறலாம். இதனால் ஆரோக்கியமும், ஆயுளும் அதிகரிக்கும். அதனை பற்றி தெரிந்து கொள்ள, இங்கே உங்களுக்காக சில தகவல்கள்:

  1. உணவை நன்கு செரிக்க செய்யும்

  இந்த நீரின் முதல் முக்கிய வேலை, உணவை செரிக்க செய்வது. இதனால் ஜீரணம் சீராகும், குடலில் ஏற்படும் பிரச்சனைகளும் குறையும். மேலும் வயிற்று பகுதியை சுற்றி உண்டாகும் கொழுப்பும் கரையும்.

  2. வீக்கத்தை குறைக்கும்

  Pexels

  உடலில் நச்சு தன்மை அதிகரித்தால், சில இடங்களில் வீக்கம் ஏற்படுவது இயல்பு. எனினும், இந்த வீக்கம் சில அசௌகரியங்களை உடலுக்கு ஏற்படுத்தக் கூடும். டிடோக்ஸ் நீரை தொடர்ந்து அருந்தி வந்தால், உடலில் ஏற்படும் வீக்கம் குறையும்.

  3. உடல் எடை குறைவு

  உடலில் நச்சு சேர்ந்தாலே உடல் எடையும் அதிகரிக்கும். எனினும், இது வேறு பல நோய்களுக்கும் காரணமாகிவிடும். அதனால் டிடோக்ஸ் நீரை தொடர்ந்து அருந்தி வரும் போது, உடல் எடை சீரான அளவைப் பேரு. இது உடலில் இருக்கும் தேவையற்ற நச்சு, மற்றும் கொழுப்பு வெளியேறுவதால் ஏறபடும்.

  4. உடலின் நச்சுத்தன்மையை குறைக்கும்

  உடலில் நச்சு அதிகமானால் சிறுநீரகம் செயலிழக்கும் வாய்ப்பு உண்டாகக் கூடும். இதனை தடுக்க, இந்த டிடோக்ஸ் நீர் ஒரு நல்ல தீர்வாக உள்ளது. இந்த நீர் உடலில் ஆக்சிஜனேற்றத்தை அதிகரித்து உடல் சீராக செயல்பட உதவுகின்றது.

  5. அழகான சருமம்

  ஒருவருக்கு சருமத்தில் பிரச்சனை ஏற்பட முக்கிய காரணம் உடலில் சேரும் நச்சு. இதனை வெளியேற்றி விட்டால், சருமமும் அழகாகவும், ஆரோக்கியமாகவும் இருக்கும். டிடோக்ஸ் நீர் சருமத்திற்கு புத்துணர்ச்சியை தருகின்றது. இதனால் சருமம் மிருதுவாகவும், அழகாகவும் மாறுகின்றது.

  6. தலைமுடி வளர்ச்சியை அதிகரிக்கும்

  Pexels

  டிடோக்ஸ் நீர் தலைமுடி வளர்ச்சியை பல வழிகளில் அதிகரிகின்றது. இதில் நீர் சத்து அதிகம் இருப்பது ஒரு குறிப்பிடத்தக்க விடயம். இந்த நீர் சத்து மயிர்கால்களை பலப்படுத்தி தலைமுடி உதிர்வு, முடி சேதம் அடைவது போன்ற பிரச்சனைகளை குறைகின்றது. இதனால் தலைமுடி நல்ல வளர்ச்சியைப் பெறுகின்றது.

  7. முதுமையை போக்குகின்றது

  இன்று சிறு வயதிலேயே ஆண்களும், பெண்களும் முதுமை தோற்றத்தை பெறுகின்றார்கள். இதனால் அவர்கள் மன ரீதியாகவும் பாதிக்கப்படுகின்றார்கள். ஆனால், இந்த டிடோக்ஸ் நீரை தினமும் எடுத்துக் கொண்டு வரும் போது, உடலில் இருக்கும் நச்சு, தேவையற்ற கொழுப்பு போன்றவை வெளியேறுவதோடு, உடலுக்கு நல்ல சக்தியையும், ஆரோகியத்தையும் தருகின்றது. இதனால் உடலில் புத்துணர்ச்சி ஏற்படுகின்றது. மேலும் சருமமும் நல்ல தோற்றத்தை பெறுகின்றது. இது ஒருவரை இளமையாக இருக்க உதவுகின்றது.

  8. நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிகின்றது

  டிடோக்ஸ் நீர் உடலில் இருக்கும் தீங்கு விளைவுக்கு பக்டீரியா மற்றும் வைரசுகளை அழிகின்றது. மேலும் நல்ல பக்டீரியாவுக்கு உதவுவதோடு, உடலுக்குத் தேவையான சத்துகளை பெறவும் உதவுகின்றது. இதனால் உடலின் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிகின்றது.

  9. சக்தியை அதிகரிகின்றது

  ஒருவர் சோர்ந்து இருக்கும் போது ஏதாவது ஒரு வகை, அதிலும், குறிப்பாக எலுமிச்சைபழ டிடோக்ஸ் நீரை அருந்தினால் உடனடியாக சக்தியைப் பெறலாம். இதனால் அவருக்கு புத்துணர்ச்சியையும் தரும். இது குறிப்பாக கோடைகாலத்தில் மிகவும் பயன் தரக்கூடியதாக இருக்கும். முழு உடலுக்கும் சக்தியை தரக்கொடியதாக இந்த டிடோக்ஸ் நீர் இருக்கும். மயக்கம், சோர்வு, குமட்டல் போன்ற பிரச்சனைகளையும் இது போக்கி விடும்.

  10. சிந்திக்கும் திறனை அதிகரிக்கும்

  Pexels

  டிடோக்ஸ் நீர் உடலில் இருக்கும் அசௌகரியத்தை உண்டாக்கும் நச்சுகளையும், தேவையற்ற பொருட்களையும் வெளியேற்றி விடுகின்றது. இதனால உடலும், மனமும் நிம்மதியான நிலையில் இருகின்றது. இப்படி எந்த பிரச்சனையும் இல்லாத சூழலில், மூளையின் சிந்திக்கும் திறனும் அதிகரிக்கும். இதனால் நல்ல சிந்தனைகள் மற்றும் செயல்திறனும் அதிகரிகின்றது.

  11. மன நிலையை சீர் செய்யும்

  இன்று அதிக அழுத்தம் நிறைந்த சூழலிலேயே அனைவரும் வாழ்கின்றனர். இதில் உடலில் ஏற்படும் பிரச்சனைகளும் ஒன்று சேர, மனம் நிலையற்ற நிலையில் இருகின்றது. எனினும், டிடோக்ஸ் நீர் உங்கள் உடலுக்கு ஆரோக்கியத்தை தந்து, உங்கள் மனம் அமைதியாகவும், மகிழ்ச்சியோடும் செயல்பட உதவுகின்றது. இதனால், நிலையான மன நிலையில் உங்களால் இருக்க முடியும்.

  12. கல்லீரலில் செயல்திறனை அதிகரிக்கும்

  அதிகம் மது, காபி, மற்றும் புகை பிடிப்பவர்கள் உடலில் அதிக நச்சு சேர்ந்திருக்கும். இது குறிப்பாக கல்லீரலை பெரிதும் பாதிக்கும். ஆனால், இந்த டிடோக்ஸ் நீர் ஓரளவிர்காயினும், அத்தகைய நச்சுகளை உடலில் சேர விடாமல் தடுக்க உதவும். இதனால் கல்லீரலின் ஆரோக்கியம் அதிகரிகின்றது. எனினும், தொடர்ந்து மது மற்றும் காபி அருந்தினால், அது முழுமையான பலனைத் தராது.

  13. கொழுப்பை எரிக்கும்

  பல வகை உணவுகளை மக்கள் இன்று தினமும் உண்கின்றனர். அதிலும் குறிப்பாக துரித உணவு மற்றும் பரோட்டா போன்ற உணவுகளில் அதிக சுத்தமற்ற எண்ணை மற்றும் தேவையற்ற கொழுப்பு நிறைந்திருக்கும். இதனை தினமும் அல்லது அவ்வப்போது உண்டு வந்தால், உடலில் தேவையற்ற கொழுப்பும், நச்சும் சேரும். எனினும், டிடோக்ஸ் நீர் உடலில் தேவையின்றி சேரும் கொழுப்பை எரிக்க உதவுகின்றது. இதனால் குறிப்பாக வயிற்று பகுதியில் சேரும் கொழுப்பை கரைத்து, உடல் பருமன் ஏற்படாமல் இருக்க உதவும்.

  14. மிகவும் பாதுகாப்பானது

  Pexels

  இந்த டிடோக்ஸ் நீரை அனைவரும் அருந்தலாம். சிறுவர் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் தினமும் அருந்தலாம், இது மிகவும் பாதுகாப்பானது. இதனால் நல்ல பலன்களே அதிகம். அதனால், எந்த ஒரு ஐயமும் இன்றி நீங்கள் இதை தினமும் அருந்தலாம். எனினும், தினமும் ஒரே வகை டிடோக்ஸ் நீரை எடுத்துக் கொள்வதற்கு பதிலாக, ஒவ்வொரு நாள் ஒவ்வொரு பழம் அல்லது காய் வகையை பயன்படுத்தலாம். இதனால் கூடுதல் நன்மைகள் கிடைக்கும்.

  15. மொத்த ஆரோக்கியத்தை அதிகரிக்கும்

  இந்த நீர் உடலில் pH அளவை அதிகரிக்க பெரிதும் உதவியாக இருக்கும். இது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க உதவியாக இருகின்றது. குறிப்பாக குறிப்பிட்ட பகுதி என்று இல்லாமல், முழு உடலும் இதனால் ஆரோக்கியம் பெறுகின்றது. இது ஒரு குறிப்பிடத்தக்க விடயமாகும்.

  16. உள்ளுருபுகளின் செயல்திறனை அதிகரிகின்றது

  குறிப்பாக குடல், கல்லீரல், நுரையீரல், இருதயம், மூளை, சருமம் என்று அனைத்து உருபுகளின் செயல்திறனையும் இது அதிகரிக்க உதவுகின்றது. இதனால் உடலின் மொத்த ஆரோக்கியமும் அதிகமாவதோடு, குறிப்பிடத்தக்க நோய் உண்டாகும் வாய்ப்புகள் மிகக் குறைவாக போய் விடுகின்றது.

  17. போஷாக்கை பெற உதவுகின்றது

  உடலுக்கு பல வகை போஷாக்கு தினமும் தேவைப்படுகின்றது. இந்த டிடோக்ஸ் நீரை தினமும் எடுத்துக் கொள்ளும் போது, நச்சை வெளியேற்றுவதோடு, உடலுக்குத் தேவையான வைட்டமின், தாது பொருட்கள் மற்றும் பிற போஷாக்குகளும் கிடைகின்றது. இது உடலின் ஆரோக்கியத்தை அதிகரிக்க ஒரு முக்கிய காரணமாகவும் உள்ளது.

  18. நீர் சத்தை அதிகரிகின்றது

  Pexels

  இந்த டிடோக்ஸ் நீர், நீரை அதிகம் பயன்படுத்தி செய்வதால், உடலுக்கு தேவையான நீர் சத்தும் கிடைத்து விடுகின்றது. இதனால், உடல் சோர்வு மற்றும் மயக்கம் போன்ற பிரச்சனைகள் அகலுகின்றது. உடலில் நீர் சத்தை எப்போதும் தக்க வைத்துக் கொள்ள இது ஒரு சிறந்த வழியுமாகும்.

  19. கலோரிகள் இல்லை

   பலருக்கும் இந்த நீரை தினமும் எடுத்துக் கொள்வதால், உடலில் கலோரிகளின் அளவு அதிகரித்து, உடல் எடை அதிகரித்து விடுமா என்ற ஐயம் ஏற்படக் கூடும். ஆனால், இந்த நீரில் கலோரிகள் ஏதும் இல்லை என்பதால், மாறாக இது சத்துகளை மட்டுமே தரும் என்பதாலும், நீங்கள் நம்பிக்கையோடு இதனை தினமும் அருந்தலாம்.

  டிடோக்ஸ் நீரை செய்வது எப்படி(Detox water recipes)

  உடலுக்கு தேவையற்ற பல நச்சுகள் தினமும் உடலில் சேர்ந்து கொண்டே தான் இருக்கும். அவற்றை சேர விடாமல் அவ்வப்போது வெளியேற்றிக் கொண்டே இருக்க வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், உடலில் பல பிரச்சனைகள் ஏற்படத் தொடங்கி விடும். இந்த டிடோக்ஸ் நீர், உடலில் தேவையற்ற நச்சுகளை தொடர்ந்து வெளி ஏற்றிக் கொண்டே இருக்க உதவும். பல வகை டிடோக்ஸ் நீரை எப்படி செய்வது என்று இங்கே பார்க்கலாம்:

  1. எலுமிச்சை நீர்

  • ஒரு எலுமிச்சை பழத்தை எடுத்துக் கொள்ளவும்
  • சிறிது இஞ்சி துண்டை எடுத்துக் கொள்ளவும்
  • எலுமிச்சைபழ சாறை பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  • இஞ்சியை நன்கு இடித்து இந்த சாறுடன் சேர்த்து கலக்கவும்
  • இதனுடன் சிறிது கல் உப்பு சேர்த்து, தண்ணீர் அல்லது சுடு தண்ணீரில் கலந்து அருந்தவும்
  • இது ஜீரணத்தை சீர் செய்வதோடு, நச்சுகளை உடலில் இருந்து வெளியேற்றவும் உதவும்

  2. இளநீர்

  Pexels

  • இளநீர் உடலுக்கு நல்ல பலன்களைத் தரும்
  • இது உடலில் இருக்கும் அசுத்தங்களை வெளியேற்றுவதோடு, இதில் கால்சியம் சத்துக்களும் நிறைந்துள்ளது
  • தினமும் காலையில், குறிப்பாக 5 முதல் 7 மணிக்குள் இருக்கும் நேரத்தில், வெறும் வயிற்றில் இளநீரை அருந்துவது உடலுக்கு பல நன்மைகளைத் தரும்

  3. தர்பூசணி

  • தினமும், அல்லது வாரம் இரண்டு அல்லது மூன்று முறை தர்பூசணி பழத்தை நீங்கல்பயன்படுத்தலாம்
  • தேவையான அளவு தர்பூசணி பழத்தை தோல் நீக்கி எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு மிக்ஸ்யில் அடித்து சாறை எடுத்துக் கொள்ளவும்
  • குறிப்பு, இதனுடன் எந்த வெள்ளை சர்க்கரை அல்லது இனிப்பூட்டாங்களையும் சேர்க்க வேண்டும்
  • இந்த சாறை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்
  • நல்ல பலனைத் தரும்

  4. கருப்பு பெர்ரி

  • பெர்ரி பழத்தை தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும்
  • இதனை மிக்ஸரில் நன்கு அரைத்து சாறு போல எடுத்துக் கொள்ளவும்
  • கொட்டையை நீக்கி விடவும்
  • இதனுடன் தேன் சேர்க்கலாம், அல்லது அப்படியே தண்ணீர் சேர்த்து கலந்து அருந்தலாம்

  5. வெள்ளரிக்காய்

  Pexels

  • தேவையான அளவு வெள்ளரிக்காயை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை நன்கு சாறு போல அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • இந்த சாறை வடிகட்டி, இதனுடன் சிறிது எலுமிச்சைபழ சாறு சேர்த்து, உப்பு சிறிது சேர்த்து அருந்தவும்

  6. ஆப்பிள் சிடர் வினிகர்

  • சிறிதளவு ஆப்பிள் சிடர் வினிகரை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை ஒரு கப் தண்ணீரோடு கலக்கவும்
  • இதனுடன் சிறிது எலுமிச்சைபழ சாறை சேர்த்து நன்கு கலக்கி அருந்தவும்
  • தேவைப்பட்டால் சிறிது உப்பு சேர்த்துக் கொள்ளலாம்

  7. புதினா

  • தேவையான அளவு புதினா இலைகளை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும்
  • தேவைபட்டால் இஞ்சி சிறிது சேர்த்துக் கொள்ளலாம்
  • அரைத்த புதினாவில் தண்ணீர் சேர்த்து வடிகட்டி எடுத்துக் கொள்ளவும்
  • இதனுடன் சிறிது எலுமிச்சைபழ சாறை சேர்த்து கலக்கவும்
  • தேவைக்கேற்ப உப்பு அல்லது நாட்டுசர்க்கரை சேர்த்துக் கொள்ளலாம்
  • இதனை தினமும் வெறும் வயிற்றில் அருந்தி வந்தால் நல்ல பலனைப் பெறலாம்

  8. கற்றாழை

  Pexels

  • ஒரு இளம் கற்றாழை இலையை எடுத்து தோல் நீக்கி, சதை பகுதியை எடுத்துக் கொள்ளவும்
  • இதனை மிக்சியில் போட்டு நன்கு அரைத்துக் கொள்ளவும்
  • தேவையான அளவு தண்ணீர் அல்லது மோர் / தயிர் இதனுடன் சேர்த்து பானம் போல கலக்கிக் கொள்ளவும்
  • தேவைக்கேற்ப உப்பு சுவைக்கு சேர்த்து நன்கு கலக்கிக் கொள்ளவும்
  • இதனை வாரம் இரண்டு முறையாவது அருந்தலாம்

   

  9. அன்னாசி பழம்

  • தேவையான அளவு அன்னாசி பழத்தை எடுத்துக் கொள்ளவும்
  • மிக்சியில் போட்டு நன்கு சாறுபோல அரைத்து தண்ணீர் விட்டு கலக்கவும்
  • பின்னர் வாடி கட்டி அருந்தவும்
  • தேவைப்பட்டால், இதனுடன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்

  10. எலுமிச்சை மற்றும் இஞ்சி

  • ஒரு எலுமிச்சைபழத்தை எடுத்துக் கொள்ளவும்
  • சிறிது இஞ்சி எடுத்துக் கொள்ளவும்
  • எலுமிச்சைபழத்தை சாறு பிழிந்து எடுத்துக் கொள்ளவும்
  • இஞ்சியை நன்கு இடித்து இதனுடன் சேர்க்கவும்
  • இரண்டையும் நன்கு கலக்கவும்
  • தேவைக்கேற்ப உப்பு சேர்த்து அருந்தலாம்

  11. அன்னாசி மற்றும் வெள்ளரிக்காய்

  Pexels

  • தேவையான அளவு அன்னாசி பழம் மற்றும் வெள்ளரிக்காயை சமமான அளவு எடுத்துக் கொள்ளவும்
  • இரண்டையும் மிக்சியில் போட்டு நன்கு மசித்து அதனுடன் தண்ணீர் சேர்த்து சாறு போல எடுத்துக் கொள்ளவும்
  • இந்த சாறை வடிகட்டி தினமும் காலையில் வெறும் வயிற்றில் அருந்த வேண்டும்

  மேலும் படிக்க - உங்கள் உடல் நலனை அதிகரிக்க நார் சத்தின் முக்கியத்துவம்!

  ஜீரணத்திற்கு டிடோக்ஸ் நீர் (Detox water for digestive)

  டிடோக்ஸ் நீரானது ஜீரணத்திற்கு சிறந்த மருந்தாக பயன்படுகின்றது. கடுமையான உணவு உண்பவர்கள் அல்லது அஜீரணத்தினால் சிறமப்படுபவர்கள் இந்த நீரை தொடர்ந்து பருகினால் நல்ல பலனை பெறலாம்.

  1. இஞ்சி

  இஞ்சியில் பொட்டாசியம், ஆக்சிஜனேற்றம் மற்றும் மக்னீசியம் போன்ற த்துக்கள் நிறைந்துள்ளது. இது ஜீரணத்தை சரி செய்ய மிகவும் உதவியாக உள்ளது. ஒரு சிறு துண்டு இஞ்சியை எடுத்து, நன்கு அரைத்து, சாறு எடுத்து, தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சைபழ சாறை சேர்த்து, கலந்து அருந்தலாம். ஜீரண பிரச்சனைகள் குறையும். காலையில் வெறும் வயிற்றில் இதனை செய்வது நல்லது அல்லது தண்ணீரில் சிறிது இஞ்சியை தட்டி போட்டு, கொதிக்க வைத்து அருந்தலாம்.

  2. இலவங்கப்பட்டை

  Pexels

  இலவங்கப்பட்டை பலவகைகளில் உள்ளன. இந்த பட்டையில் ஆக்சிஜநேரம் நிறைந்துள்ளது. மேலும் இதில் அழற்சி எதிர்ப்பு பண்புகளும் அதிகம் உள்ளது. நீரழிவு நோய், இருதய நோய், ஹோர்மோன் ஏற்றதாழ்வுகள் போன்ற பிரச்சனைகளை குணப்படுத்த உதவும். இது ஜீரணத்தை சீர் செய்ய பெரிதும் உதவியாக உள்ளது. சிறிது லவங்கப்பட்டை பொடியை எடுத்து தண்ணீரில் போட்டு, கொதிக்க வைத்து சூடு குறைந்த பின் அருந்தலாம்.

  3. வெள்ளரிக்காய்

  வெள்ளரிக்கையில் நிறைந்திருக்கும் நீர் சத்தே, உடலை சுத்தம் செய்ய ஒரு முக்கிய பொருளாக அமைகின்றது. மேலும் அஜீரணத்தை குணப்படுத்துவது மட்டுமல்லாது, இது வயிற்றில் ஏற்படும் எரிச்சல் மற்றும் மல சிக்கல் போன்ற பிரச்சனைகளை சரி செய்கின்றது.  மேலும் வெள்ளரிக்காயில் இருக்கும் வைட்டமின்கள் மற்றும் தாது பொருட்கள் உடலுக்குத் தேவையான சத்துக்களை தருகின்றது. தினமும் ஒரு வெள்ளரிக்காயை அப்படியே சாப்பிடலாம், அல்லது, அதனை சாறு செய்து பானமாக அருந்தலாம்.

  4. புதினா

  புதினாவில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. இது ஒரு நல்ல மனமூட்டியாக இருந்தாலும், இதன் பயன்பாடும், பலன்களும் பல. தினமும் புத்நாவில் தேநீர் செய்தோ, அல்லது புதினா பானம் செய்தோ அருந்தலாம்.  சிறிது புதினா இலைகளை தண்ணீரில் சேர்த்து சூடு செய்து, அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்து சூடு செய்து, தேவைபட்டால், தேன் அல்லது நாடு சர்க்கரை சேர்த்து தினமும் காலையில் அருந்தலாம்.

  5. ஆப்பிள் சிடர் வினிகர்

  Pexels

  இதில் ஜீரண பிரச்சனைகளை போக்க பல மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. இதனை சிறிது எடுத்து சுடு தண்ணீரில் கலந்து தினமும் வெறும் வயிற்றில் அருந்தலாம். வயிற்றில் இருக்கும் பிரச்சனைகளை போக்க இது பெரிதும் உதவியாக இருக்கும்.

  6. எலுமிச்சைபழம்

  இதன் பயன்பட்டு எண்ணற்றவை. இதில் அதிக மருத்துவ குணங்கள் நிறைந்துள்ளது. தினமும் காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் சிறிது எலுமிச்சைபழத்தை பிழிந்து அருந்தி வந்தால், அஜீரணம், மல சிக்கல், போன்ற பல பிரச்சனைகள் குறையும்.

  மேலும் படிக்க - இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் & இயற்கை முறையில் அதிகரிப்பதற்கான வழிகள்!

  உடல் எடையை குறைக்க டிடோக்ஸ் நீர்(Detox water and weight loss)

  டிடோக்ஸ் நீரானது சருமத்திற்கும், முடி வளர்ச்சிக்கு மட்டும்மின்றி உடல் எடையை குறைக்கவும் சிறந்த முறையில் பயன் தருகின்றது.

  1. ஸ்ட்ரவ்பெர்ரி மற்றும் திராட்சை

  இந்த இரண்டு பழங்களுக்கும் உடலை சுத்தம் செய்யும் பண்புகள் அதிகம் உள்ளது. குறிப்பாக திராட்சை மலிவான விலையில், எளிதாக கிடைக்கும் பழம். இதனை தினமும் சாறாகவோ அல்லது அப்படியே பலமாகவோ எடுத்துக் கொண்டால், இரத்தத்தை சுத்தம் செய்து, கல்லீரல், சிறுநீரகம் மற்றும் குடல் ஆகியவற்றை சுத்தம் செய்யும். இதனால் தேவையற்ற கொழுப்பும், நச்சும் உடலில் இருந்து வெளியேறும். இது உடல் எடை குறைய ஒரு முக்கிய காரணமாகும்.

  2. அன்னாசிபழம்

  அன்னாசிபழம் பல நன்மைகளை தருகின்றது. இதில் வைட்டமின் சி போன்ற சத்துக்கள் அதிக அளவு உள்ளது. இது உடலில் இருக்கும் தேவையற்ற நச்சுப் பொருட்களை வெளியேற்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ள உதவுகின்றது. தினமும் சிறிதளவு அன்னாசிபழத்தை சாறு செய்தோ அல்லது அப்படியேயோ எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை நாளடைவில் சீராகும்.

  3. டிராகன் பழம்

  Pexels

  இந்த பழம் சமீப காலமாக மக்களிடையே பிரபலமாகி வருகின்றது. இந்த பழத்தை சரியான முறையில் தினமும் எடுத்துக் கொண்டு வந்தால், உடல் எடை குறைய பெரிதும் உதவியாக உள்ளது. இந்த பழத்தில் எண்ணற்ற சத்துக்கள் நிறைந்துள்ளது. தினமும் உங்கள் உணவோடு சேர்த்து இந்த பழத்தை சிறிது சேர்த்து எடுத்துக் கொண்டு வந்தால் நல்ல பலனைத் தரும். அல்லது சாறு செய்து வெறும் வயிற்றில் அருந்தி வருவது மேலும் சிறப்பு.

  4. இஞ்சி மற்றும் புதினா

  இஞ்சி வயிற்றில் ஏற்படும் அஜீரண கோளாறுகளை சரி செய்ய உதவுகின்றது. இதனோடு புதினாவையில் சேர்த்து எடுத்துக் கொண்டால் மேலும் பல நல்ல பலன்களைப் பெறலாம். இது விரைவாக தேவையற்ற கொழுப்பை உடலில் இருந்து கரைக்கவும், நச்சுகளை வெளியேற்றவும் உதவும். தினமும் இஞ்சி மற்றும் புதினாவை சேர்த்து அரைத்து, பானம் போல செய்து, தேவைப்பட்டால் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அருந்தி வந்தால், நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

  5. வெள்ளரிக்காய் நீர்

  வெள்ளரிக்காய் உடலை குளிர செய்வதோடு, உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றவும் உதவுகின்றது. தினமும் வெள்ளரிக்காயை அரைத்து வடிகட்டி, அதனுடன் தேவைபட்டால் சிறிது நீர் சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தி வரலாம். இப்படி செய்தால், நல்ல பலன்களை விரைவில் எதிர்பார்க்கலாம்.

  6. ராஸ்பெர்ரி மற்றும் புதினா

  Pexels

  தேவையான அளவு ராஸ்பெர்ரியை எடுத்து அதனுடன் புதினாவை சேர்த்து அரைத்து, பானம் போல அருந்தி வந்தால், உடல் எடை விரைவாக குறையும். இந்த பானம் உடலில் இருக்கும் தேவையற்ற கொழுப்பை விரைவாக கரைக்க உதவும். மேலும் உடலில் இருக்கும் நச்சுகளையும் எளிதாக வெளியேற்றி விடும். இவை இரண்டுமே, உடல் எடை சீரான அளவுக்கு வர உதவுகின்றது.

  7. எலுமிச்சைபழ நீர்

  உடல் எடை குறைய வேண்டும் என்றால், அதற்கு எலுமிச்சைபழத்திற்கு முக்கிய பங்கு உள்ளது. தினமும் நீங்கள் அருந்தும் தேநீரில் சிறிது எலுமிச்சைபழச்சாறை சேர்த்து அருந்தலாம். அல்லது, தினமும் காலையில் சுடு தண்ணீரில் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து வெறும் வயிற்றில் அருந்தலாம். அல்லது பகல் நேரங்களில் தினமும் எலுமிச்சை பழச்சாறு எடுத்து அதனுடன் சிறிது இஞ்சி சேர்த்து, தேவையான உப்பு சேர்த்து, குளிர்ந்த அல்லது சுடு தண்ணீரிலோ கலந்து அருந்தலாம். இது நல்ல பலனை நிச்சயம் தரும்.

  சரும பாதுகாப்பிற்கு டிடோக்ஸ் நீர்(Detox water for skincare)

  டிடோக்ஸ் நீரை முறையாக சருமத்திற்கு தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் விரைவில் நல்ல பலனை பெறலாம்.

  1. ஸ்ட்ரவ்பெர்ரி

  இது ப்ரீ ராடிகல்ஸ்கலை எதிர்த்து போராட உதவும். மேலும் இதில் நிறைந்திருக்கும் ஆக்சிஜனேற்றம் சருமம் ஆரோக்கியமாக இருக்க உதவும். தேவையான அளவு ஸ்ட்ரவ்பெர்ரியை எடுத்துக் கொண்டு, அதனுடன் சிறிது புதினா மற்றும் எலுமிச்சை பழச்சாறு சேர்த்து அரைத்து, சாறு செய்து பானமாக அருந்தி வரலாம். இது நல்ல பலனை உங்கள் சருமத்திற்கு தருவதை நாளடைவில் கவனிக்கலாம்.

  2. எலுமிச்சை, புதினா மற்றும் வெள்ளரிக்காய்

  Pexels

  இவை மூன்றுமே சரும ஆரோக்கியத்திற்கு மிகவும் உதவும் ஒன்றாக உள்ளது. தினமும், புதினா மற்றும் வெள்ளரிக்காயை சிறிது அரைத்து அதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து சருமத்தில் தடவி மசாஜ் செய்யலாம். அல்லது, இவை மூன்றையும் பானம் போல செய்து அருந்தலாம். இரண்டுமே நல்ல பலனை உங்கள் சருமத்திற்கு தரும். எனினும், பணாம் போல அருந்தும் போது உடலுக்கும் பல நன்மைகள் கிடைக்கும்.

  3. எலுமிச்சை

  எலுமிச்சை பழத்தை பல வகையில் பயன்படுத்தலாம். குறிப்பாக இதன் சாறை சிறிது சுடு தண்ணீரில் சேர்த்து தினமும் அருந்தி வந்தால், நல்ல மாற்றங்களை உங்கள் உடலில் நீங்கள் காணலாம். குறிப்பாக இதனை வெறும் வயிற்றில் அருந்த வேண்டும். இப்படி தினமும் செய்யும் போது உங்கள் சருமமும் நல்ல ஆரோக்கியத்தைப் பெரும்.

  4. தர்பூசணி மற்றும் புதினா

  தேவையான அளவு தர்பூசணி பழத்தை எடுத்துக் கொள்ளவும். இதனுடன் புதினா சேர்த்து நன்கு அரைத்துக் கொள்ளவும். இந்த கலவையை பானம் போல செய்து அருந்தவும். இப்படி தினமும் அருந்தி வந்தால், நல்ல ஆரோக்கியத்தோடு இருப்பதோடு, சருமமும் நல்ல பொலிவைப் பெரும்.

  5. எலுமிச்சை, ஆப்பிள் சிடர், கற்றாழை, தேன் மற்றும் புதினா

  இவை அனைத்துமே சருமத்திற்கும், உடல் நலத்திற்கும் பல நல்ல பலன்களை தருபவையாக உள்ளன. இவை அனைத்தும் உடலில் இருக்கும் நச்சுகளை எளிதாக வெளியேற்றி விட உதவும். தினமும் இவை அனைத்தையும் சேர்த்து பானம் போல அருந்தி வந்தால், உடலில் இருக்கும் நச்சுகள் விரைவில் வெளி ஏறி, இரத்த ஓட்டம் சீராகும். இதனால் சருமத்திற்கும் போதிய இரத்த ஓட்டமும், சத்துக்களும் எளிதாக கிடைத்து நல்ல ஆரோக்கியத்தைப் பெற உதவும்.

  6. அழகிய சருமம் பெற

  இந்த பானத்தை நீங்கள் எளிதில் தயார் செய்து விடலாம். அழகிய சருமத்தைப் பெற, தேவையான நீரில், சிறிது ஆப்பிள் சிடர் வினிகர், சிறிது எலுமிச்சை பழச்சாறு, சிறு துண்டுகளாக நறுக்கிய ஆப்பிள், சிறு துண்டுகளாக நறுக்கிய ஸ்ட்ரவ்பெர்ரி மற்றும் புதினா இலைகள் ஆகியவற்றை சேர்த்து கலந்து கொள்ளவும். இனிபூட்டான்கள் எதுவும் சேர்க்கத் தேவை இல்லை. இதனை அப்படியே வெறும் வயிற்றில் அருந்தலாம். நல்ல அழகிய சருமத்தை இது பெற உதவும்.

  7. ஸ்ட்ரவ்பெர்ரி மற்றும் கிவி

  Pexels

  இந்த பழங்களில் ஆக்சிஜனேற்றம் நிறைந்துள்ளது. மேலும் இது ப்ரீ ரடிகல்ஸ்களை எதிர்த்து போராட உதவுகின்றது. தேவையான தண்ணீரை எடுத்துக் கொள்ளவும். இதில் ஸ்ட்ரவ்பெர்ரி மற்றும் கிவி பழத்தை பொடியாக நறுக்கி சேர்த்து நன்கு கலக்கி அருந்த வேண்டும். தினமும் இப்படி அருந்தி வந்தால், நல்ல பலனை எதிர் பார்க்கலாம். விரைவாக சருமம் நல்ல பொலிவைப் பெரும்.

  8. வெள்ளரிக்காய், எலுமிச்சை மற்றும் புதினா

  இதனை எளிதாக செய்து விடலாம். இது உடலில் இருக்கும் நச்சுகளை வெளியேற்றி உடலும், சருமமும் ஆரோக்கியமாக இருக்க உதவும். தேவையான தண்ணீரை எடுத்துக் கொண்டு, அதில் வெள்ளரிக்காயை பொடியாக நறுக்கி போடவும். இதனுடன் புதினா இலைகளை சேர்த்து, சிறிது எலுமிச்சை பழச்சாறு சேர்த்து கலந்து அருந்தவும். இப்படி தினமும் செய்து வந்தால், நல்ல பலனை எதிர் பார்க்கலாம். சருமம் நாளடைவில் ஆரோகியமாவதை நீங்கள் கவனிக்கலாம்.

  தலைமுடி ஆரோக்கியத்திற்கு டிடோக்ஸ் நீர்(Detox water and hair care)

  டிடோக்ஸ் நீரானது உடலுக்கும் மட்டுமின்றி தலைமுடி ஆரோக்கயத்திற்கும் பல விதங்களில் பயனுள்ளதாக உதவுகின்றது. எவ்வாறு பயனலிக்கின்றது என்பதை கீழே உள்ள குறிப்புகளில் பார்க்கலாம்.

  1. டிடோக்ஸ் களிமண்

  இந்த களிமண் கலவை தலைமுடி நன்கு வளரவும், பொடுகு, பேன், புண் போன்ற பிரச்சணைகளை போக்கவும் உதவும். தேவையான அளவு பென்ட்டோனைட் களிமண் எடுத்து அதனுடன் சிறிது ஆப்பிள் சிடர் வினிகர், தேங்காய் எண்ணை மற்றும் தேவைப்பட்டால் தண்ணீர் சேர்த்து கலந்து கொள்ளவும். இந்த கலவையை தலையில் வேர் பகுதி முதல் நுணி வரை நன்கு தேய்த்து, சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இது தலைமுடியில் இருக்கும் பிரச்சனைகளை போக்கி நல்ல ஆரோக்கியமான தலைமுடியைப் பெற உதவும்.

  2. பேகிங் சோடா

  Pexels

  பேகிங் சோடா தலைமுடியில் இருக்கும் அழுக்கை விரைவில் நீக்க உதவும். மேலும் இது பேன். பொடுகு போன்ற பிரச்சனைகளையும் போக்க உதவும். சிறிதளவு பேகிங் சோடா எடுத்துக் கொண்டு, அதில் சிறிது தண்ணீர் சேர்த்து தலையின் வேர் பகுதியில் தேய்க்க வேண்டும். தேவை பட்டால் எலுமிச்சை பழச்சாறு சிறிது சேர்த்துக் கொள்ளலாம். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலசி விட வேண்டும்.

  3. வெள்ளரிக்காய் மற்றும் எலுமிச்சை

  தேவையான அளவு வெள்ளரிக்காய் எடுத்துக் கொள்ளவும். இதனை தண்ணீர் ஊற்றாமல் நன்கு அரைத்து எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது எலுமிச்சை பழச்சாறை சேர்த்து நன்கு கலக்கி, தலையில் தேய்த்து மசாஜ் செய்ய வேண்டும். சிறிது நேரம் கழித்து தலைமுடியை குளிர்ந்த நீரில் அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், நல்ல பலனை விரைவில் எதிர் பார்க்கலாம்.

  4. கடல் உப்பு

  தலையில் அரிப்பு, புண், பூஞ்சை போன்ற பிரச்சனைகள் இருந்தால், அதற்கு கடல் உப்பு ஒரு நல்ல தீர்வாக இருக்கும். சிறிது கடல் உப்பை எடுத்து நன்கு பொடி செய்து கொள்ளவும். இதனுடன் சிறிது தண்ணீர் சேர்த்து கலந்து கொண்டு, அந்த நீரை தலையின் வேர் பகுதியில் நன்கு தேய்க்க வேண்டும். பின்னர் குளிர்ந்த நீரில் சிறிது நேரம் கழித்து தலைமுடியை அலசி விட வேண்டும்.

  5. தேன் மற்றும் இலவங்கப்பட்டை

  இவை இரண்டும் தலைமுடி நன்கு அடர்த்தியாகவும், ஆரோக்கியமாகவும் வளர உதவும். தேவையான அளவு தேன் எடுத்துக் கொள்ளவும். இதனுடன் சிறிது இலவங்கப்பட்டை பொடியை சேர்த்து நன்கு கலந்து தலையில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து, தலைமுடியை குளிர்ந்த நீரில் அலசி விட வேண்டும். இப்படி வாரம் இரண்டு முறை செய்து வந்தால், தலைமுடியில் இருக்கும் பிரச்சனைகள் நீங்கி நல்ல ஆரோக்கியமான கூந்தலைப் பெறலாம்.

  6. வேர்களுக்கு மசாஜ்

  Pexels

  இதற்கு எந்த பொருளும் தேவை இல்லை. தேவைபட்டால் சிறிது தேங்காய் எண்ணையை தலையில் தேய்த்துக் கொள்ளலாம். உங்கள் கை விரல்களை பயன்படுத்தி சிறிது நேரம் நன்கு வேர் பகுதியில் தலையை சுற்றி மசாஜ் செய்ய வேண்டும். இப்படி செய்து வந்தால், தலைக்கு நல்ல இரத்த ஓட்டம் கிடைத்து, தலைமுடி நல்ல ஆரோக்கியத்தோடு வளரத் தொடங்கும்.

  7. எலுமிச்சை பழச்சாறு

  இது பல நன்மைகளை தரும். குறிப்பாக வேர் பகுதி நல்ல ஆரோக்கியமாக வளர இது உதவியாக இருக்கும். தேவையான அளவு எலுமிச்சை பழச்சாறை எடுத்துக் கொள்ளவும். இதனை ஒரு சிறிய பஞ்சில் நனைத்து தலைமுடியின் வேர் பகுதியில் தேய்க்கவும். சிறிது நேரம் கழித்து குளிர்ந்த நீரில் தலைமுடியை அலச வேண்டும். இப்படி செய்து வந்தால், தலையில் இருக்கும் புண், அரிப்பு, எரிச்சல் போன்ற பிரச்சனைகள் நீங்கி, தலைமுடி நல்ல ஆரோகியத்தோடு வளரும்.

  கேள்வி பதில்கள்(FAQ)

  1. காலையில் வெறும் வயிற்றில் டிடோக்ஸ் நீரை அருந்தலாமா?

  அருந்தலாம். காலையில் வெறும் வயிற்றில் சுடு தண்ணீரில் சிறிது எலுமிச்சை பழச்சாறை கலந்து அருந்தி வரலாம். இது ஒரு சிறந்த டிடோக்ஸ் நீராகும். தேவைப்பட்டால் இதனுடன் சிறிது இஞ்சி மற்றும் புதினா சேர்த்துக் கொள்ளலாம். இதற்கு இனிப்பு அல்லது உப்பு சேர்க்க வேண்டும் என்று அவசியம் இல்லை. இதனை எளிதாக செய்து விடலாம்.

  2. டிடோக்ஸ் நீரை தினமும் அருந்தலாமா?

  அருந்தலாம். தினமும் ஒரே மாதிரியான டிடோக்ஸ் நீரை எடுத்துக் கொள்ளலாம், அல்லது வெவ்வேறு பழங்கள் மற்றும் காய்களால் செய்யப்படும் டிடோக்ஸ் நீரையும் மாற்றி மாற்றி எடுத்துக் கொள்ளலாம். இது உடலை சுத்தம் செய்து, உடல் எடையை குறைத்து, ஆரோக்கியமாக வாழ உதவும்.

  3. வெறும் வயிற்றில் டிடோக்ஸ் நீரை அருந்தலாமா?

  அருந்தலாம். இது சிறந்த பலனைத் தரும். தினமும் காலையில் வெறும் வயிற்றில் டிடோக்ஸ் நீரை அருந்தும் போது விரைவாகவே குடலில் இருக்கும் தேவையற்ற பொருள்களை வெளியேற்ற இது உதவும். மற்றும் உடலில் தேங்கி இருக்கும் தேவையற்ற கொழுப்பை நீக்கவும் இது உதவும். அதனால் எந்த ஐயமும் இல்லாமல், தினமும் வெறும் வயிற்றில் இதனை எடுத்துக் கொள்ளலாம். எனினும் உங்களுக்கு வயிற்று புண் இருந்தால், பகல் நேரத்தில் எடுத்துக் கொள்வது நல்லது.

  4. டிடோக்ஸ் நீரில் என்ன பொருட்களை சேர்க்கலாம்?

  ஆப்பில், ஸ்ட்ரவ்பெர்ரி, திராட்சை, வெள்ளரிக்காய், எலுமிச்சை பழம், புதினா, இஞ்சி போன்ற பொருட்களை சேர்க்கலாம். எனினும், ஒரு எளிய மற்றும் சிறந்த டிடோக்ஸ் நீர் வேண்டும் என்றால், அதற்கு இஞ்சி, எலுமிச்சை மற்றும் புதினா சிறந்த பொருட்களாக உள்ளன. இவை எளிதாகவும் கிடைத்து விடும்.

  5. தலைமுடி வளர்ச்சிக்கு டிடோக்ஸ் செய்வது பலன் தருமா?

  நிச்சயம் பலன் தரும். எனினும், நீங்கள் எந்த விதமான பொருட்களை பயன் படுத்துகின்றீர்கள் என்பதை பொருத்தும் அது உள்ளது. எலுமிச்சை பழச்சாறு, கல் உப்பு, பேகிங் சோடா போன்றவை தலையில் இருக்கும் அழுக்கு மற்றும் பிற பிரச்சனைகளை எளிதில் போக்க உதவும். குறிப்பாக எரிச்சல், அரிப்பு மற்றும் பேன் மற்றும் பொடுகு பிரச்சனைகளை இது போக்க உதவும்.

  6. டிடோக்ஸ் நீரை எத்தனை நாட்கள் அருந்த வேண்டும்?

  இதற்கு கால வரை இல்லை. நீங்கள் இந்த டிடோக்ஸ் நீரை தினமும் அருந்தி வரலாம். எனினும், ஒரே மாதிரியான நீரை அருந்தாமல், வேறு வேறு டிடோக்ஸ் நீரை அருந்துவதால், பிற சத்துக்களும் உங்கள் உடலுக்கு கிடைக்கும்.

  மேலும் படிக்க - அளவுக்கு அதிகமாக தண்ணீர் பருகினால் என்னவாகும்? தாகத்தின் காரணங்களும் விளைவுகளும் !

  பட ஆதாரம்  - Shutterstock 

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!