இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் & இயற்கை முறையில் அதிகரிப்பதற்கான வழிகள்!

இரத்தத்தில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் & இயற்கை முறையில் அதிகரிப்பதற்கான வழிகள்!

நம்முடைய இரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களில் உள்ளே ஒரு வகையான கூறே ஹீமோகுளோபின் எனப்படுகிறது. இதன் வேலை நுரையீரலுக்குள் நாம் உள்ளிழுக்கும் காற்றிலிருந்து ஆக்சிஜனைப் பிரித்தெடுத்து உடலின் அனைத்து பாகங்களுக்கும் கொண்டு சென்று அதன்மூலம் உடலின் எல்லா பகுதிகளிலும் ஏற்படும் வளர்சிதை மாற்றத்திற்கு உதவி செய்வதாகும். 

எனவே சரியான அளவில் உடல் ஹீமோகுளோபின் (hemoglobin) இருக்க வேண்டியது அவசியம் ஆகும். பொதுவாக ஆண்களுக்கு 14- 18 கி/ டெ.லி, பெண்களுக்கு 12- 16 கி/டெ.லி ஹீமோகுளோபின் இருப்பது இயல்பு நிலையாகும். ஹீமோகுளோபின் அளவை இயல்பு நிலையில் வைத்திருப்பதனால் உடல் பாதிப்புகள் ஏற்படாமல் தடுக்கலாம்.

Table of Contents

  உடலில் ஹீமோகுளோபின் குறைவதற்கான காரணங்கள் (Causes of low hemoglobin)

  • சரிவிகித உணவை சரியாக உண்ணாமல் இருப்பதே ஹீமோகுளோபின் குறைய காரணம் ஆகும். பொதுவாக இரும்பு சத்து அதிகம் உள்ள உணவை தவிர்பவர்களுக்கு ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட அதிக வாய்ப்புள்ளது.
  • ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன. 
  • அன்றாட உணவில் போதிய அளவு இரும்புச் சத்து இல்லாமல் இருப்பது, பெருங்குடலில் இருக்கும் நாடாப்புழு இரும்புச் சத்தை உறிஞ்சிக் கொள்வது, சாப்பிடும் உணவில் உள்ள இரும்புச் சத்தை உடல் கிரகிக்க முடியாமல் போவது, எலும்பு மஜ்ஜை பாதிப்பு, மாதவிடாய் கோளாறுகளால் அதிக ரத்தப் போக்கு போன்றவை முக்கிய காரணங்கள். 
  • உடலில் எந்த ஒரு செல் வளர வேண்டும் என்றாலும் அதன் வளர்ச்சி ஊக்குவிக்க வைட்டமின் பி12 அவசியமாகிறது. வைட்டமின் பி12 குறைபாடு இருந்தாலும், ரத்த சிவப்பணுக்கள் போதுமான அளவு வளராமல் ரத்த சோகை ஏற்படும்.
  pixabay

  ஹீமோகுளோபின் குறைந்ததற்கான அறிகுறிகள் (Symptoms)

  ஹீமோகுளோபின் அளவு வெகுவாக குறைந்தால் அது இரத்த சோகையின் அறிகுறியாக இருக்கலாம். அதன் அறிகுறிகள் மிகவும் கடுமையாக இருக்கும். அவை என்னென்ன என்பது குறித்து இங்கு காண்போம். 

  வேகமான அல்லது ஒழுங்கற்ற இதய துடிப்பு (Fast or irregular heartbeat)

  இதயத்தின் அழகிய துடிப்புகளே உயிருக்கு அடையாளம். துடிப்புகளின் ஏற்ற இறக்கமே நோய்களின் அறிகுறி. உடலில் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது இதய துடிப்பு சீரற்றதாக இருக்கும். ஆக்ஜிஜனை உடல் பகுதிகளுக்கு கொண்டு செல்ல துணை புரியும் ஹீமோகுளோபின் அளவு குறையும் போது குறைந்தளவு ஆக்ஜிசனே இழையங்களுக்குக் கொண்டு செல்லப்படுகிறது. இந்த குறைபாடை ஈடுசெய்வதற்காக இதயம் விரைவாக இயங்கி அதிகளவு இரத்த ஓட்டத்தை ஏற்படுத்த விளையும். அதனால் இதயத் துடிப்பு அதிகரிக்கும். இது தொடரும் பட்சத்தில்  மார்புப் படபடப்பு இதயத்தில் ஏற்படவும் வாய்ப்புண்டு.

       மேலும் படிக்க - தனியாக பயணிக்கும் பெண்களுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயணத்திற்கான குறிப்புக்கள்!

  வெளிர் தோல் மற்றும் ஈறுகள் (Pale skin and gums)

  உடலில் இரத்தம் இருக்கிறதா இல்லையா என்பதை கண்கள், தோல் மற்றும் ஈறுகளை வைத்து தெரிந்து கொள்ளலாம். கண்ணின் கீழ் இமையை கீழே நோக்கி இழுக்கும் போது அடியில் உள்ள தோல் பகுதியானது சிவப்பு நிறத்தில் இல்லாமல் நிறமற்று காணப்பட்டால் ஹீமோகுளோபின் (hemoglobin) குறைபாடு இருக்கிறது என தெரிந்து கொள்ளலாம். மேலும் விரல்களின் மேல் பகுதியில் அழுத்தும் போது இரத்தமானது விரல் முனைகளுக்கு வரும். ஆனால் இரத்த சோகை உள்ளவர்களின் விரல்களை அழுத்தினால் எந்த ஒரு மாற்றமும் இல்லாமல் வெள்ளையாகவே இருக்கும். மேலும் ஈறுகளும் வெளிர் நிறத்தில் காணப்படுவதை வைத்து உறுதி செய்து விடலாம்.

  pixabay

  தசை பலவீனம் (Fatigue Muscle weakness)

  தசை பலவீனம் மற்றும் இரும்புச்சத்து குறைபாடு ஆகியவை ஒன்றோடொன்று தொடர்புடையவை. இரும்பு சத்து போதுமான அளவு தசை சுருக்கத்திற்கு தேவையான ஆக்ஸிஜனை வழங்குகிறது. ஹீமோகுளோபின்  தசை வலி மற்றும் தசைகளின் வீக்கத்தை குறைக்க உதவுகிறது. இந்நிலையில் ஹீமோகுளோபின் குறையும் போது கை மற்றும் கால்களில் தசை பலவீனம் உண்டாக அதிக வாய்ப்புகள் உள்ளது. இதனை ஆரம்பத்திலேயே சரி செய்ய வில்லை என்றால் தசை பலவீனம், டிஸ்ப்னியா ஆகியவை மரணத்திற்கு வழிவகுக்கும். 

  விவரிக்கப்படாத சிராய்ப்பு (Frequent or unexplained bruising)

  ஹீமோகுளோபின் குறைபாடு ஏற்பட்டால் உடலில் ஆங்காங்கே சிராய்ப்புகள் உண்டாகும். இரத்த உறைதலைக் கட்டுப்படுத்தும் பிளேட்லெட்டுகளின் உற்பத்தி மற்றும் செயல்பாடு ஹீமோகுளோபின் குறைபாடால் பாதிக்கப்படுகிறது. சிராய்ப்பு என்பது நம் வாழ்க்கையின் தாளத்துடன் ஒரு பொதுவான நிகழ்வு. போதுமான இரும்பு சத்து  அளவு சருமத்தில் விரைவாக சிராய்ப்பதைத் தடுக்கலாம். உடலில் ஹீமோகுளோபின் குறைவால் உண்டாகும் சிராய்ப்பு நாளடைவில் பெரிய காயங்களாக மாறி ரத்த கசிவுகள் உண்டாக கூட வாய்ப்பிருப்பதால் கவனமாக இருக்க வேண்டும். 

  கடுமையான தலைவலி (Reoccurring headaches)

  ரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவு சீராக பராமரிக்கப்பட வேண்டும். அதன் அளவு குறையும்போது தலைவலி, மூச்சடைப்பு, மயக்கம் போன்ற பிரச்சினைகள் ஏற்படும்.  பொதுவாக ரத்த சிகப்பணுக்களின் எண்ணிக்கை குறைவது, இரும்பு சத்து குறைபாடு போன்றவை ஹீமோகுளோபின் அளவு குறைய முக்கிய காரணமாகின்றன. இதனால் கடுமையான தலைவலி மற்றும் அசதி உண்டாகும். மேலும் உற்சாகமின்மை, எதிலும் ஆர்வமின்மை, உண்பதற்கு கூட எழுந்துபோய் உட்கார்ந்து உண்ண வேண்டுமே என்று எண்ணத் தோன்றும் உள்ளிட்டவை ஹீமோகுளோபின் குறைவின் அறிகுறிகளாகும். 

  pixabay

  உடலில் ஹீமோகுளோபினை அதிகரிப்பது எப்படி (How to increase hemoglobin)

  உடலில் ஹீமோகுளோபினை (hemoglobin) அதிகரிக்க சில பழக்க வழக்கங்களை பின்பற்றினாலே போதுமானது.  உங்களுடைய உடம்பில் ஹீமோகுளோபின் அளவு குறைவாக இருக்கிறதா நினைக்கிறீர்களா? அப்படியானால் கீழ்கண்ட முறைகளை பின்பற்றுங்கள். 

  இரும்பு சத்து உணவுகளை உட்கொள்ளுதல் (Increase iron intake)

  உடலில் மூன்றில் இரண்டு பகுதி இரும்பு ஹீமோகுளோபின் ஆக இரத்தச் சிவப்பணுக்களில் இருக்கிறது. இவை ஆக்சிசனை திசுக்களுக்கு எடுத்து செல்லும். அதற்கு நமக்கு தினமும் 15லிருந்து 18 மில்லி கிராம் வரை இரும்புச்சத்து தேவைப்படுகிறது. இதனை பூர்த்தி செய்ய பச்சையிலைக் காய்கறிகள், சுண்டைக்காய் , பால், பருப்பு, பயறு வகைகள், கீரைகளை உணவில் தினமும் சேர்த்து கொள்ள வேண்டும். மருத்துவரை ஆலோசனை பெற்று இரும்பு சத்து மாத்திரைகளையும் சாப்பிடலாம். 

  இரும்பு சத்து உறிஞ்சுதலை அதிகரிக்க வேண்டும் (Maximizing iron absorption)

  நமது உடலில் ஹீமோகுளோபினை அதிகரிக்க இரும்பு சத்து உணவுகளை சாப்பிட்டால் மட்டும் போதாது. அவை உடலில் சீராக உறிஞ்சப்பட்டு வேண்டும். இரும்பு உறிஞ்சுவது என்பது நாம் தினம் உட்கொள்ளும் உணவில் உள்ள இரும்பு எவ்வாறு உடலுக்குள் உறிஞ்சப்பட்டு உபயோகிக்கப்படுகிறது என்பதைப் பொறுத்து அமையும். ஒரு நல்ல உடல் நலம் உள்ள மனிதன் உட்கொள்ளும் உணவில் 30% மட்டுமே உறிஞ்சப்படுகிறது. உணவுப்பொருட்களை பொறுத்து இது மாறுபடக்கூடும். இரும்புஉறுஞ்சுதலுக்கு வைட்டமின் சி, போலிக்கமிலம், வைட்டமின்பி12 போன்ற உணவுப்பொருட்களின் துணை புரிகிறது. 

           மேலும் படிக்க - அனைத்து சிறப்பு நிகழ்சிகளுக்கும் மற்றும் சூழலுக்கும் பெண்கள் தேர்வு செய்ய சில ஆடை குறிப்பு

  ஃபோலேட் உட்கொள்ளலை அதிகரிக்கவும் (Increase folate intake)

  சிவப்பு இரத்த அணுக்களை உருவாக்க தேவையாக இருப்பது பி-காம்ப்ளக்ஸ் வைட்டமினான ஃபோலேட் அமிலமாகும். அதனால் ஃபோலேட்  அமில குறைபாடு இருந்தால் ஹீமோகுளோபின் அளவு தானாகவே குறைந்து விடும். ஃபோலேட் அமிலம் வளமையாக உள்ள பச்சை இலை காய்கறிகள், ஈரல், அரிசி சாதம், முளைத்த பயறு, காய்ந்த பீன்ஸ், கோதுமை, சத்தூட்டப்பட்ட தானியங்கள், கடலை, வாழைப்பழம் மற்றும் ப்ராக்கோலி போன்ற உணவுகளை உட்கொள்ளுங்கள். ஏதேனும் நோய்க்கு சிகிச்சை பெற்று கொண்டிருப்பவர்கள் மருத்துவரை கலந்தாலோசித்த பிறகு ஃபோலேட் அடங்கிய மருந்துகளை தினமும் 200-400 மி.கி. வரை உண்ணலாம்.

  pixabay

  நெட்டில் தேநீர் அருந்துங்கள் (Drink nettle tea)

  தேநீர் அருந்தும்போது உடலுக்கு புத்துணர்வு ஏற்படுவதுடன், உடல் ஆரோக்கியமும் மேம்படுகிறது. சில தேநீர்கள் நோய்களை குணப்படுத்தும் நோக்கிலும், மன அழுத்தம் போக்கும் வகையிலும் அருந்தப்படுகிறது. அந்த வகையில் நெட்டில் தேநீர் ஆரோக்கியமான பானம் என்று கூறப்படுகிறது. பல்வேறு ஆரோக்கிய நிலைகளுக்கு சிகிச்சையளிக்க முடியும். இது இயற்கை குணப்படுத்தும் மற்றும் மாற்று மருத்துவம் சார்ந்திருக்கிறது. தொட்டால் எரிச்சலூட்டுகிற தேநீர் இலைகள் மற்றும் அதன் வேர்கள் இருந்து தயாரிக்கப்படும் ஒரு மூலிகை 'தேநீர்' தான் நெட்டில் தேநீர் என்றழைக்கப்படுகிறது. இதனுடன் தேன் கலந்து அருந்தினால் உடலில் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும்.

  இரும்பு சத்து தடுப்பான்களை தவிர்க்கவும் (Avoid iron blockers)

  உங்கள் ஹீமோகுளோபின் அளவு குறையாக இருக்கும் போது இரும்புச்சத்தை உறிஞ்சும் உங்கள் உடலின் திறனை பாதிக்கும் உணவுகளை கண்டிப்பாக நீங்கள் தவிர்க்க வேண்டும்.  இரும்பு சத்தை தடுக்கும் உணவுகளான காபி, டீ , கோலா , வைன், பீர் , கடைகளில் கிடைக்கும் அன்டாசிட் காபியில் இருக்கும் `கஃபைன்' 39 சதவிகித இரும்புச்சத்து சேர்வதைத் தடுக்கும். அதேபோல் தேநீரில் இருக்கும் 'டான்னின்' 64 சதவிகித இரும்புச்சத்து உடலில் சேராமல் தடுத்துவிடும். நம்மில் பலர் காலை உணவுடன் காபி, பால் ஆகியவற்றை குடிப்பதைப் பழக்கமாகவே வைத்திருக்கிறோம். இவற்றுக்குப் பதிலாக பழச்சாறு குடிக்கலாம், இது உடலில் இரும்புச்சத்தை அதிகரிக்கும்.  

  உங்கள் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும் உணவுகள் (Foods that boost your hemoglobin level)

  நம் உடம்பில் போதுமான அளவு ஹீமோகுளோபின் உருவாவதற்கு போதுமான இரும்புச்சத்துள்ள உணவு உட்கொள்ள வேண்டும். அத்தகைய இரும்புச்சத்துக்கள் நிறைந்த உணவு பொருட்கள் குறித்தும், அவற்றில் இருக்கும் சத்துக்கள் குறித்தும் இங்கு விரிவாக பாப்போம். 

  pixabay

  கீரைகள் (Spinach)

  நமது அன்றாட உணவில் போதுமான அளவு ஊட்டச்சத்துகள் இருக்கவேண்டுமானால் கீரைகளை அன்றாட உணவில் சேர்த்து கொள்ள வேண்டும். முருங்கைக் கீரை வாரத்தில் மூன்று அல்லது நான்கு முறை முருங்கை இலையை உணவில் சேர்த்துக் கொள்ளுங்கள். பொன்னாங்கன்னிக்கீரையைப் பொரியல் செய்து பகல் உணவுடன் தொடர்ந்து நாற்பது நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உற்பத்தியாகி உடல் பலம் பெறும். புதினாக் கீரை மற்றும் அரைக் கீரையுடன் பருப்பு சேர்த்துச் சமைத்து பகல் சாதத்துடன் சாப்பிட்டு வந்தால் பதிய இரத்தம் உற்பத்தியாகும்.

      மேலும் படிக்க - சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

  பீட்ரூட் (beetroot)

  ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க பீட்ரூட்  அதிகமாக பரிந்துரைக்கப்படுகிறது. இரும்பு, ஃபோலிக் அமிலம், நார்ச்சத்து மற்றும் பொட்டாசியம் உள்ளிட்ட சத்துக்கள் இதில் வளமையாக உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் உடலில் உள்ள சிவப்பு இரத்த அணுக்களின் எண்ணிக்கையை அதிகரிக்க உதவும்.  முந்தைய நாள் இரவில் ஒரு பீட்ரூட்டை இரண்டாக வெட்டி அதை நீரில் போட்டு வைக்க வேண்டும். இந்த நீரை காலையில் குடித்து வந்தால் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். பீட்ரூடை பிரெஷ் ஜூஸ் ஆக செய்தும் அருந்தலாம். 

  சிவப்பு இறைச்சி (Red meet)

  மாட்டிறைச்சி, ஆட்டிறைச்சி, ஈரல், கோழி இறைச்சி, வான்கோழி இறைச்சி போன்ற பல்வேறு இறைச்சி வகைகள் உள்ளன. இவற்றில் இரும்புச்சத்து அதிகமாக உள்ளது. சிவப்பு இறைச்சியில் புரதம், கொழுப்பு, தாது உப்பு மற்றும் இரும்பு சத்துக்கள் உள்ளன. குழந்தைகளுக்கும், முதியவர்களுக்கும், மெல்லுவதற்கு ஏற்றது. இது பல பகுதிகள் வாயுவை ஏற்படுத்தவும், அஜீரத்தை விளைவிக்கவும் கூடியவை என்பதால், சீரகம், மிளகு போன்ற பொருட்களைக் கலந்து இவற்றைச் சமைக்க வேண்டும். வாரம் ஒரு முறை சாப்பிட்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு கட்டுக்குள் வைக்கப்படும்.

  pixabay

  வேர்க்கடலை வெண்ணெய் (Peanut butter)

  வேர்க்கடலை வெண்ணெய் சைவ உணவு வகைகளில் மிகவும் சத்தான மற்றும் புரதச்சத்து நிறைந்த உணவுகளில் ஒன்றாக கருதப்படுகிறது. 100 கிராம் வேர்க்கடலை வெண்ணெய் 25% புரதங்கள் மற்றும் இரும்பு சத்துக்களை கொண்டுள்ளது. வேர்க்கடலையானது ஏழைகளின் முந்திரி என்றழைக்கப்படுகிறது. இது ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கும். உடலை பலமாக்கும். தினமும் இதனை உணவிற்கு பின்னர் சாப்பிட்டு வந்தால் பெண்களின் ஹார்மோன் வளர்ச்சியை இது சீராக்குகிறது.  

  உருளைக்கிழங்குகள் (Tomotoes)

  உருளைக்கிழங்கில் கலோரிகள் அதிகம் இருந்தாலும் இரும்புச்சத்தும் அதிகம் உள்ளது. ஆகவே இரத்த சோகை இருந்தால் தினமும் உருளைக்கிழங்கை உணவில் சேர்த்து வாருங்கள். உருளைக்கிழங்கில் ஸ்டார்ச் அதிகமாக உள்ளது.  இதனை தோலை உரிக்காமல் வேக வைக்கும்போது வைட்டமின் பி, சி மற்றும் தோலில் காணப்படும் தாதுக்கள் பாதுகாக்கப்படுகின்றன. இவை இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபினை அதிகரிக்க துணை புரிகிறது. மேலும் இது உடலில் இரும்புச்சத்து உறுஞ்சுதலை அதிகரிக்கிறது. 

  முட்டைகள் (Eggs)

  முட்டையில் புரதம், கொழுப்பு, வைட்டமின், இரும்பு, கால்சியம் மற்று தாது ஆகிய அனைத்துச் சத்துக்களும் இருப்பதால் இது உடலும் அதிக நன்மைகளைத் தரக்கூடியது. உடலின் ஹீமோகுளோபின் அளவு உள்ளிட்ட உடலுக்குத் தேவையான அத்தியாவசிய பல சத்துக்களும் இதனால் அதிகரிக்கக் கூடும். ஒரு கோழி முட்டையை உடைத்து விட்டுக் கிளறி, ஒரு தேக்கரண்டி அளவு நெய்யும் சேர்த்துத் தொடர்ந்து 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் புதிய இரத்தம் உண்டாகும். உடல் வலிமையோடு இருக்கும்.

  pixabay

  மாதுளை பழம் (Pomegranates)

  மாதுளைப்பழத்தில் இரும்புச்சத்து, கால்சியம், புரதம், கார்போஹைட்ரேட்ஸ் மற்றும் நார்ச்சத்து உள்ளது. இதிலுள்ள ஊட்டச்சத்துக்கள் இரத்தத்தில் உள்ள ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கவும் ஆரோக்கியமான இரத்த ஓட்டத்தை மேம்படுத்தவும் உதவும்.  ஒரு மாதுளைப்பழத்தை தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை பிரச்னை ஏற்படாது. காலை உணவுடன் சேர்த்து ஒரு டம்ளர் மாதுளை ஜூஸை குடிகலாம். அல்லது காய்ந்த மாதுளை விதை பொடியை 2 டீஸ்பூன் எடுத்து, அதனை வெதுவெதுப்பான பாலில் கலந்து தினமும் ஒரு முறை குடித்து வந்தாலும் ஹீமோகுளோபின் அளவு அதிகரிக்கும். 

  நட்ஸ் (Nuts)

  நட்ஸ் எனப்படும் அக்ரூட் கொட்டைப் பருப்பு வகைகளில் ஆரோக்கியம் அளிக்கும் சத்துகள் நிறைந்திருக்கின்றன. இரத்த சோகை இருப்பவர்கள் நட்ஸ் சாப்பிடுவதன் மூலம் அதனைத் தடுக்கலாம். அதிலும் பாதாமை தினமும் உட்கொண்டு வந்தால் ஹீமோகுளோபின் அளவு வேகமாக அதிகரிக்கும். போலிக் அமிலம், ரிபோபிளேவின், தையாமின் உள்ளிட்ட பி காம்ப்ளெக்ஸ் சத்துகள் நட்ஸில் அதிகமாக இருப்பதால் கர்ப்பிணிகள் உணவில் அதிகமாக சேர்த்துகொள்ளலாம்.

  கடல் உணவுகள் (Sea food)

  இரும்புச்சத்து, போலிக் அமிலம், வைட்டமின்கள் நிறைந்த சத்துள்ள உணவுகளை நிறைய சேர்த்துக் கொண்டாலே இரத்த சோகையினைத் தவிர்க்கலாம். இந்த சத்துக்கள் கடல் உணவுகளில் நிறைந்துள்ளதால் அவற்றை வாரம் ஒரு முறை சாப்பிடுவதன் மூலம் ஹீமோகுளோபின் அளவை அதிகரித்து ரத்த சோகை வராமல் தடுக்க உதவுகிறது. கடல் உணவுகளான மீன்கள், இறால், சிப்பிகள் போன்ற  இரும்பு சத்துள்ள உணவுகளை உண்பதால் இரத்த சோகை நோயை வராமல் தடுக்க முடியும். 

  pixabay

  தேன் (Honey)

  தேன் இரத்த சோகையை சரிசெய்ய பெரிதும் உதவியாக இருக்கும். எலுமிச்சை சாறு, ஆப்பிள் சீடர் வினிகர் மற்றும் தேன் சேர்த்து கலந்து, தினமும் சாப்பிட்டு வந்தால் இரத்த சோகை விரைவில் குணமாகும். தேன் இரத்த ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்க உதவுவதோடு உடலில் காப்பர் மற்றும் மாங்கனீசு அளவையும் அதிகரிக்கும். தினமும் உணவில் 100 கிராம் தேன் உணவில் சேர்த்துக்கொண்டால் இரத்த சோகை விரைவில் குணம் ஆகும். மேலும் ஏதாவதொரு பானத்துடன் சேர்த்தும் சாப்பிடலாம் .

  ஆப்பிள் (Apple)

  தினமும் ஒரு ஆப்பிள் உட்கொண்டால் இயல்பான ஹீமோகுளோபின் அளவை பராமரிக்கலாம். ஆப்பிள்களில் இரும்புச்சத்துடன், உடல்நலத்திற்கு நன்மையை அளிக்கும் பல பொருட்களை வளமையாக உள்ளது. இவைகள் உங்கள் ஹீமோகுளோபின் எண்ணிக்கையை ஆரோக்கியமாக வைக்க உதவி புரிகிறது. தினமும் தோலுடன் கூடிய ஒரு ஆப்பிளை கண்டிப்பாக உண்ண வேண்டும். மேலும் கேக்குகள், ப்ரௌனீஸ் மற்றும் பல இனிப்பு பண்டங்களில் ஆப்பிளை சேர்த்தும் சாப்பிடலாம் அல்லது ஜூஸ் செய்தும் அருந்தலாம்.

  pixabay

  பேரிட்சை பழம் (Dates)

  பேரிச்சம் பழத்தில் இரும்புச்சத்து ஏராளமாக உள்ளது. 100 கிராம் பேரீச்சையில் 277 கலோரிகள், 0.90 மி.கி இரும்புச்சத்து இருக்கிறது. இரும்புச்சத்து அதிகமாக இருப்பதால், நோய் எதிர்ப்பு சக்தியும் இதில் அதிகமாகக் கிடைக்கும். வைட்டமின் மற்றும் மினரல் நிறைந்த இந்தப் பழம் நரம்புத்தளர்ச்சியைப் போக்கும். மேலும் இது உடலில உள்ள இரத்த சிவப்பணுக்கள் மற்றும் ஹீமோகுளோபின் அளவை மேம்படுத்த உதவும். உலர்ந்த முந்திரிப்பழம், பேரீட்சை பழம், உலர் திராட்சை மூன்றையும் இரவு முழுவதும் பாலில் ஊற வைத்து, மறுநாள் காலையில் பாலுடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் ரத்த சோகை ஏற்படாது. 

  கேள்வி பதில்கள் (FAQ's)

  1. ஹீமோகுளோபின் குறைபாடால் ஏற்படும் பிரச்னைகள் என்ன? (What are the problems caused by hemoglobin deficiency?)

  ஹீமோகுளோபின் குறைபாடால் பிரசவத்தின் போது ஏற்படும் அதிகப்படியான  பிரச்சனைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. ரத்த சோகை இருந்தால் உயிருக்கே ஆபத்தாக முடியலாம். தாய்க்கு ரத்த சோகை இருந்தால் குழந்தை குறை பிரசவத்திலும், குறைவான எடையுடனும் பிறக்கும் வாய்ப்பிருக்கிறது. குழந்தைக்கும் ரத்த சோகை ஏற்படலாம். 

  pixabay

  2. ரத்த சோகை உள்ளவர்களுக்கு இதய பாதிப்பு ஏற்படுமா? (People with anemia will affect the heart?)

  ரத்த சோகையின் காரணமாக ரத்தத்தில் எடுத்து செல்லப்படும் ஆக்சிஜனின் அளவு குறைவதால் ஆக்சிஜனுக்காக இதயம் அதிகமாக ரத்தத்தை, 'பம்ப்' செய்ய வேண்டியிருக்கும். இது தொடரும் பட்சத்தில் இதயம் செயலிழக்கக் கூடும். 

  3. ஹீமோகுளோபின்கான பரிசோதனைகள் என்னென்ன? (What are the tests for hemoglobin?)

  ஹீமோகுளோபின்கான பரிசோதனை என்பது சாதாரண ரத்த பரிசோதனை போன்றே இருக்கும். இந்த பரிசோதனையின் போது ரத்தத்தில் இருக்கும் ஹீமோகுளோபின் அளவு தனியாக கணக்கிடப்படுகிறது. இதன் மூலம் ரத்த சோகை உள்ளதா, இல்லையா என தெரிந்து விடும்.

  POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

  அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!