அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு - பீட்ரூட் !

அடர்த்தியான கூந்தல் மற்றும் தெளிவான சருமத்திற்கு - பீட்ரூட் !

பீட்ரூட் என்பது நிலத்திற்குள் விளையக்கூடிய ஒரு கிழங்கு. பெரும்பாலும், நிலத்திற்கு அடியில் முளைக்கும் கிழங்குகளினால் உடலுக்கு அவ்வளவு நன்மைகள் இல்லை என்று தான் நினைத்துக்கொண்டிருக்கிறோம். ஆனால், பீட்ரூட் அதற்கு விதி விளக்காக பல நன்மைகளைத் தரக்கூடியது. உடல் ஆரோக்கியத்திற்கு மட்டுமல்லாமல், சருமத்திற்கும், கூந்தலுக்கும் பல நன்மைகளை செய்யக்கூடியது.

பொதுவாக என்ன காய் வாங்க வேண்டும் என்ற குழப்பம் வரும்போது, பீட்ரூட் வாங்கி விடுகிறீர்களா? அடிக்கடி பீட்ரூட் செய்து வீட்டில் இருப்பவர்கள் அழுத்துக் கொள்கிறார்களா? வழக்கமான பொரியல், கூட்டு இல்லாமல் வேறு எப்படி பீட்ரூட்டை பயன்படுத்தி உணவு செய்து சாப்பிடுவது என்று பார்க்கலாம். மேலும் , பீட்ரூட் கூந்தல் மற்றும் சருமத்திற்கு தரும் பலன்களையும் (beetroot benefits) அறிவோம் வாங்க!

பீட்ரூட்டில் சாலட் மற்றும் ஜூஸ்

பீட்ரூட் சாலட்

Pexels

முதலில், பீட்ரூட் பயன்படுத்தி எப்படி ஒரு சாலட் செய்வது என்று பார்க்கலாம்.

செய்முறை:

1. பீட்ரூட்டை பொடியாக நறுக்கி ஆவியில் வேகவைத்துக்கொள்ளுங்கள்.
2. வேகும் நேரத்தில், ஒரு கை அளவு தேங்காயை துருவி ஒரு கிண்ணத்தில் போட்டுக் கொள்ளுங்கள்.
3. அதோடு, கொஞ்சம் சின்ன வெங்காயம் நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள்.
4. சிறிது சீரகம், மிளகு, உளுத்தம்பருப்பு பொடி, மற்றும் சிறிது கறிவேப்பிலை, கொத்தமல்லி இலை, ஒரு தக்காளி ஆகியவற்றை நறுக்கி சேர்த்துக்கொள்ளுங்கள். 
5. ஆவியில் வெந்த பீட்ரூட்டை இந்த கலவையோடு கலந்து சாப்பிடுங்கள். 
பார்க்கவே சுவையாகத் தோன்றும் இந்த சாலட்டை சாப்பிட்டால், பீட்ரூட்டில் உள்ள மருத்துவ சத்துக்கள் முழுவதும் கிடைக்கும். 

பீட்ரூட் ட்ரிங்க் 1

சாலட் சாப்பிட விரும்பாதவர்களுக்கு , பீட்ரூட் பயன்படுத்தி எப்படி ஒரு சூப்பரான ட்ரிங்க் தயாரிப்பது என்று பார்க்கலாம்.

தேவையான பொருட்கள்:
½ கப் பீட்ரூட்
¼ கப் துருவிய தேங்காய்
1½ வெல்லம் அல்லது பனங்கற்கண்டு
¼ தேக்கரண்டி ஏலக்காய்தூள்

செய்முறை:

பீட்ரூட்டை தோள் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.அதோடு, துருவிய தேங்காய், வெல்லம் அல்லது பனங்கற்கண்டு, ஏலக்காய்தூள் சேர்த்து அரைத்து ஜூஸ் செய்யுங்கள்.வடிகட்டி குழந்தைகளுக்கும், பெரியவர்களுக்கும் கொடுக்கலாம். பிரம்மாதமாக இருக்கும்.

Pexels

பீட்ரூட் ட்ரிங்க் 2

சிறிது காரம் மற்றும் இனிப்பு சுவையில் பீட்ரூட் ஜூஸ் எப்படி தயாரிப்பது என்று பார்க்கலாம். 

தேவையான பொருட்கள்:

2 பீட்ரூட்
1 வெள்ளரிக்காய்
½ எலுமிச்சை
½ துண்டு இஞ்சி
1 தேக்கரண்டி தேன்
சிறிது புதினா இலைகள்
சிறிது மல்லி இலைகள்

செய்முறை:

1. பீட்ரூட்டை தோள் நீக்கி, சிறு துண்டுகளாக நறுக்கிக் கொள்ளுங்கள்.
2. வெள்ளரிக்காயை சுத்தம் செய்து தோளோடு நறுக்கி சேர்த்துக் கொள்ளுங்கள். 
3. இதோடு, இஞ்சி, எலுமிச்சை சாறு, தேன் ஆகியவற்றை சேர்த்துக் கொள்ளுங்கள். 
4. இதில் புதினா இலைகள், மல்லி இலைகள் சேர்த்தால் நல்ல வாசனையாக இருக்கும். 
5. இவை அனைத்தையும் நன்றாக அரைத்து, வடிகட்டி பருகினால் நன்றாக இருக்கும்.

பீட்ரூட் சாப்பிடுவதால் உடலுக்கு ஏற்படும் நன்மைகள்

Pexels

 1. புற்றுநோய் வராமல் தடுக்கும் 
 2. ரத்தத்தில் உள்ள சிவப்பு அணுக்களை அதிகரித்து, ரத்த சோகை நோய்யை குணப்படுத்தும் 
 3. ரத்தத்தில்  உள்ள கழிவுகளை நீக்கும் 
 4. அல்சர், வயிற்றுப் புண் போன்ற பிரச்சனைகளை சரி செய்யும் 
 5. மலச்சிக்கல்  இருந்தால் சரி செய்து, மூல நோய் வராமல் தடுக்கும் 
 6. சருமத்தில் ஏற்படும் அரிப்பு ஆகியவற்றிற்கு சரியான தீர்வாக பீட்ரூட் சாறு பயன்படும்.
 7. சிறுநீரகத்தில் கல் உருவாவதை தடுக்கும் 
 8. சிறுநீரகத்தில் ஏற்படும் கடுப்பைப் போக்கும் 
 9. பித்தப்பை சம்மந்தமான பிரச்சனைகளை சரி செய்யும்
 10. 80 சதவிகிதத்திற்குமேல் நீர்சத்து உள்ள காய் என்பதால் உடலை நல்ல நீரோட்டமாக வைக்க  உதவும்.
 11. புரதச் சத்து, கார்போஹைட்ட்ரேட்ஸ், சுண்ணாம்பு சத்து, பொட்டாசியம், இரும்புச் சத்து, வைட்டமின் பி1, சி ஆகிய சத்துக்களும் உள்ளடக்கியது பீட்ரூட். 

மேலும் படிக்க - மருத்துவ குணங்கள் நிறைந்த கீழாநெல்லி மூலிகையின் ஆரோக்கிய நன்மைகள்!

பீட்ரூட் சருமத்திற்கு என்ன நன்மைகளை தருகிறது ?

வறண்ட சருமத்திற்கு

சருமம் வறண்டு இருந்தால், மென்மையாகவும் சிலக்கியாகவும் மாற,பீட்ரூட் துண்டுகளோடு, தயிர் சேர்த்து அரைத்து ஒரு பசைபோல செய்து கொள்ளுங்கள். அதோடு, தேவைப்பட்டால் பாதாம் எண்ணெய் சிறிது கலந்து முகத்திலும், உடலிலும் தடவி 20 நிமிடங்கள் ஊற விடுங்கள். பிறகு குளிர்ந்த நீரில் கழுவி சுத்தம் செய்து பாருங்கள். அழகான சருமம் கிடைத்து விட்டதா?

சுருக்கங்கள் உள்ள சருமத்திற்கு

Pexels

வாரத்திற்கு இரண்டு முறை பீட்ரூட் சாறுடன், தேன் மற்றும் பால் சேர்த்து முகத்தில் பூசி வந்தால், முகத்தில் உள்ள சுருக்கங்கள், கண்களைச் சுற்றி ஏற்படும் கரு வளையம் நீங்கி, வயதான தோற்றம் மறையும். பீட்ரூட்டில் உள்ள லிகோபேன்(Lycopene) மற்றும் ஸ்காலீன்(squalene) தோள் தொங்கிப்போவதை தடுத்து, இளமையான தோற்றத்தை தரும்.

முகப்பரு, ப்ளாக் ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் உள்ள சருமத்திற்கு

சிறியளவு பீட்ரூட் சாறுடன், தக்காளி சாறை கலந்து முகத்தில் பூசி 15 நிமிடங்கள் ஊறவிட்டு, கழுவுங்கள். அழுத்தமான கறைகள், முகப்பரு, ப்ளாக் ஹெட்ஸ், வைட் ஹெட்ஸ் ஆகியவை நீங்கும். மேலும், முகப்பருவை சுற்றி ஏற்பட்டுள்ள புண்களையும், நோய்த் தொற்றையும் குணப்படுத்தும். முகத்தின் துளைகளில் உள்ள அதிக எண்ணெய்யை நீக்கும். மேலும், பீட்ரூட்டில் உள்ள வைட்டமின் சியானது சருமத்திற்கு நல்ல நிறத்தைக் கொடுக்கும்.

பீட்ரூட் கூந்தலுக்கு அளிக்கும் நன்மைகள்

கூந்தல் உதிர்வதை கட்டுப்படுத்துகிறது

ஜீவனில்லாத கூந்தலுக்கும், நுனி வெடித்து வறண்ட கூந்தலுக்கும், சரியான ஊட்டச்சத்துக்கள் இல்லாத காரணத்தினால், கூந்தல் அதிகம் உதிரும். பீட்ரூட்டில் அதிக மினெரல்கள், பொட்டாசியம், இரும்புச் சத்து, இருப்பதால், கூந்தலுக்கு நல்ல போஷாக்கை அளிக்கும். பீட்ரூட் சாறு அல்லது பீட்ரூட்டை அப்படியே அரைத்து கூந்தலுக்கு ஒரு மாஸ்க் போல பயன்படுத்தலாம். அரைத்த காபி கொட்டைகளையும் சேர்த்துக்கொள்ளலாம். கூந்தல் நன்றாக கருமையாக, அடர்த்தியாக வளரும். 

Pexels

பொடுகை நீக்குகிறது

பீட்ரூட்டில் உள்ள சிலிக்கா தலையில் உள்ள பங்கஸ்ஸை எதிர்த்து வேலை செய்யும். வறண்ட தலையையும், தொற்றுக்களையும், பொடுகு ஏற்படுத்தும் பாக்டீரியாவையும் குணப்படுத்தும் தன்மை கொண்டது பீட்ரூட். வேப்பிலை சாறுடன், பீட்ரூட் சாறையும் கலந்து தலையில் தேய்த்துவர தலையில் ஏற்படும் அரிப்பை சரி செய்யும். மேலும், கூந்தல் மென்மையாகத் தோன்றும். இதோடு கேரட் சாறையும் சேர்த்து கூந்தலுக்கு தேய்த்துக்கொண்டால், கூந்தல் ப்ளீச் செய்தது போல அழகான நிறம் கிடைக்கும். 

இப்படி ஒரு அசாதாரண மேஜிக் பயன்கள் கொண்ட பீட்ரூட்டின் மகத்துவம் பற்றி தெரிந்து கொண்டோம். உதடுகளுக்கு மட்டும் நிறத்தை தராது, கூந்தலுக்கும், பொதுவாக சருமத்திற்கும், மேலும் ஆரோக்கியத்திற்கும் பல பயன்களை அள்ளி வீசுகிறது. அளவோடு பயன்படுத்தினால்தான், எதுவம் அமிர்தம். கொஞ்சம் கொஞ்சமாக உங்கள் டயட்டிலும், அழகுக்கும் பயன்படுத்தி பெரும் பயன் பெறுங்கள். 

மேலும் படிக்க - சருமம் மற்றும் தலைமுடி ஆரோக்கியத்திற்கு கொய்யா இலைகள்!

பட ஆதாரம்  - Shutterstock

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!