104 வயது கணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் உயிரிழப்பு : இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

104 வயது கணவன் இறந்த துக்கத்தால் மனைவியும் உயிரிழப்பு : இறப்பிலும் இணை பிரியாத தம்பதி!

ஆலங்குடி அருகே 100 வயதை கடந்த தம்பதி ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து இறந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது. சாவிலும் இணைபிரியாத ஜோடிகள் என்று உலகில் மிகச்சிலரே. 

இந்த நிலையில் தமிழ்நாட்டில் உள்ள புதுக்கோட்டை மாவட்டத்தில் அப்படி ஒரு ஜோடி  இருந்துள்ள அதிசய சம்பவம் நடைபெற்றுள்ளது. புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அருகே உள்ள குப்பக்குடி ஏ.டி.காலனியை சேர்ந்தவர் வெற்றிவேல் (வயது 104). இவரது மனைவி பிச்சாயி (வயது 100). 

இவர்கள் குப்பக்குடி கிராமத்தில் விவசாயம் செய்து வந்துள்ளனர். இவர்களுக்கு 5 மகன்கள், ஒரு மகள், மற்றும் பேரன்கள், கொள்ளு பேரன்கள் என மொத்தம் 23 பேர் உள்ளனர். நூறு வயதை கடந்து விட்ட நிலையிலும் யாருடைய உதவியும் இன்றி வெற்றிவேலும், மனைவி பிச்சாயியும் (wife) மகன் ஒருவரின் வீட்டில் வாழ்ந்து வந்தனர்.

youtube

கடந்த சில மாதங்களாக இருவருக்கும் வயது முதிர்வின் காரணமாக உடல் நிலை பாதிக்கப்பட்டது. இதனால் நன்றாக எழுந்து நடமாடி வந்த அவர்கள் படுத்த படுக்கையாகினர்.

அவர்களை அவரது மகன்களும், மகளும் கவனித்து வந்தனர். இந்நிலையில் வெற்றிவேலுவுக்கு திடீரென நெஞ்சுவலி ஏற்பட்டது. வெற்றிவேலை அவரது மகன்கள் மற்றும் உறவினர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு கொண்டு சென்று காப்பாற்றி விட முயற்சித்தனர்.

சருமத்தை சேதத்தில் இருந்து பாதுகாக்க ஆலிவ் எண்ணெய் பாடி வாஷ்! வீட்டிலேயே செய்வது எப்படி?

ஆனால் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலே அவர் உயிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். இதனால் அவரது உடலை சொந்த ஊருக்கே கொண்டு வந்துள்ளனர். அவருக்கு இறுதிச்சடங்கு செய்வதற்கான பணிகளை உறவினர்கள் மற்றும் மகன்கள் மேற்கொண்டிருந்தனர்.

அப்போது வெற்றிவேல் இறந்ததை அறிந்த அவரது மனைவி பிச்சாயி (wife) மிகவும் சோகத்துடன், அவர் உடல் அருகே அமர்ந்து அழுது கொண்டிருந்தார். அவரை அவரது உறவினர்கள் தேற்றினர்.

youtube

எனினும் பிச்சாயியால் அவரது கணவர் உயிரிழந்ததை ஏற்றுக்கொள்ள முடியவில்லை. மிகவும் உடல்நிலை பாதிக்கப்பட்ட நிலையில் இரவு முதல் இன்று அதிகாலை வரை சோகத்தில் இருந்த பிச்சாயி (wife) திடீரென மயக்கமடைந்தார். 

இதைப்பார்த்து அதிர்ச்சியடைந்த உறவினர்கள் அவரை எழுப்ப முயன்ற போது அவரும் இறந்து போனது தெரியவந்தது. 24 வயதில் வெற்றிவேலு - பிச்சாயி தம்பதியினருக்கு திருமணம் ஆகியுள்ளது.

இந்துலேகா பிரிங்கா கூந்தல் தைலம் பற்றி இத்தனை விஷயங்களா ! அறிந்து பயன்பெறுங்கள் !

கிட்டத்தட்ட 80 ஆண்டுகள் கணவன், மனைவி இருவரும் இணை பிரியாமல் வாழ்ந்து வந்தனர். இப்போது இருவரும் ஒன்றாகவே உயிரிழந்துள்ளது அப்பகுதி மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

youtube

இதனையடுத்து மரணத்திலும் இணை பிரியாத இந்த தம்பதிக்கு அந்த பகுதி மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி, மாலைகள் அணிவித்து மரியாதை அளித்தனர். மேலும் இருவரையும் ஒன்றாகவே தகனம் செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.

சரும நிறத்தை அதிகரிக்க உதவும் குங்குமப்பூ : பயன்படுத்தும் முறைகள்& பேஸ் பேக்குகள்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!