தெலுங்கில் சங்கத்தமிழன்..தன் பெயரே படத்தின் டைட்டில் : புதிய அந்தஸ்தை பெற்ற விஜய் சேதுபதி!

தெலுங்கில் சங்கத்தமிழன்..தன் பெயரே படத்தின் டைட்டில் : புதிய அந்தஸ்தை பெற்ற விஜய் சேதுபதி!

விஜய் சேதுபதி தொடர்ந்து பல வித்தியாசமான கதாபாத்திரங்களை தேர்வு செய்து நடித்து வரும் நடிகர்களில் ஒருவராக இருக்கிறார். அதன் அடிப்படையில் 'சூப்பர் டீலக்ஸ்',  'ஆரஞ்சு மிட்டாய்', 'விக்ரம்வேதா' என ஹீரோயிஸம் காட்டும் கதை மற்றும் கதாபாத்திரங்களை தவிர்த்து வித்தியாசத்தையும் தன்னுடைய ரசிகர்களின் ரசனைக்கு ஏற்றவாறு கொடுத்து வருகிறார்.

ஹீரோவாகத் தான் நடிப்பேன் என்று அடம்பிடிக்காமல் பேட்ட படத்தில் ரஜினிக்கு வில்லன் தற்போது விஜய் 64 படத்தில் விஜய்க்கு வில்லன் என துணிச்சலாக நடிக்கிறார் விஜய்சேதுபதி. இதனால் அவரது மார்கெட் நிலவரம் என்னவோ  கூடிக்கொண்டுதான் போகிறது.

இந்நிலையில் வாலு திரைப்படத்தின் இயக்குனரான விஜய் சந்தர் இயக்கத்தில் விஜய் சேதுபதி மற்றும் நிவேதா பெத்துராஜ், ராசி கண்ணா மற்றும் காமெடி நடிகரான சூரி, மொட்டை ராஜேந்திரன், ஜான் விஜய், மாரிமுத்து மேலும் சிலர் நடித்துள்ள திரைப்படம் சங்கத்தமிழன். 

விஜயா புரடொக்சன்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்திற்கு விவேக் ராகுல் இசையமைத்துள்ளார். வேல்ராஜ் ஒளிப்பதிவில், பிரவீண் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகியுள்ளது.  இந்த திரைப்படத்தில் மக்கள் செல்வன் விஜய் சேதுபதி இரண்டு வேடங்களில் நடித்துள்ளார். 

நட்சத்திர விடுதியில் எல்லை மீறி வீடியோ வெளியிட்ட நடிகை சாக்ஷி அகர்வால் : ரசிகர்கள் ஷாக்!

இந்த நிலையில் சங்கத்தமிழன் தீபாவளிக்கு வெளியாகும் என ராசிகள் ஆவலுடன் எதிர்பார்த்தனர். ஆனால் இந்த திரைப்படம் தீபாவளிக்கு வெளியாகவில்லை. அன்றைய தினம் விஜய்யின் பிகில், கார்தியின் கைதி ரீலீஸ் ஆனதால், போட்டியை தவிர்க்கும் நோக்குடன் ரிலீஸ் தள்ளிவைக்கப்பட்ட நிலையில், சங்கத்தமிழன் திரைப்படத்தை வருகின்ற நவம்பர் 15ம் தேதி வெளிடுவதாக படக்குழுவினர் கூறியுள்ளனர். 

மேலும் இந்த திரைப்படம் நல்ல வரவேற்பை பெரும் என அனைவராலும் எதிர் பார்க்கபடுகிறது. இந்நிலையில் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பிற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டள்ளது. நடிகர்களின் பெயரிலேயே ஒரு திரைப்படத்தின் டைட்டிலும் அமைவது என்பது திரையுலகில் மிகவும் அபூர்வமாக நடைபெறும் நிகழ்வு ஆகும்.

ரஜினிகாந்த் பெயரில் "அன்புள்ள ரஜினிகாந்த்" திரைப்படம் வெளியாகியுள்ளது. அதேபோல வந்துள்ளது நடிகை நதியா பெயரில் பாடல் வந்துள்ளது. தற்போது விஜய்சேதுபதி நடித்த ஒரு படத்திற்கு ‘விஜய்சேதுபதி’ என்றே டைட்டில் வைக்கப்பட்டுள்ளது.

மேலும் இந்த படத்தின் தெலுங்கு பதிப்பும் அதே நவம்பர் 15ம் தேதி வெளியிட தயாரிப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. எனவே சற்றுமுன் டைட்டிலுடன் கூடிய போஸ்டரையும் படகுழுவினர் வெளியிட்டுள்ளனர். 

விஜய்சேதுபதி, ராஷிகண்ணா, நிவேதா பேத்ராஜ், ஜான்விஜய், சூரி, நாசர் உள்பட பலர் நடித்துள்ள இந்த படத்தை விஜய்சந்தர் இயக்கியுள்ளார். தெலுகில் சிரஞ்சீவி நடித்த சைரா நரசிம்ம ரெட்டி படத்தில் முக்கிய வேடம் ஏற்று நடித்திருந்தார் விஜய்சேதுபதி. இதனால் தெலுங்கிலும் அவருக்கு மவுசு கூடியிருக்கிறது. முன்னதாக இந்த படத்தின் டீசரில் விஜய் சேதுபதி மிகவும் ஸ்டைலீஷில் தன்னுடைய நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்.  ஆக்ஷன் மற்றும் காமெடி கலந்த வகையில் இந்த படம் உருவாகி உள்ளது. இதனால் சங்கத்தமிழன் திரைப்படத்தின் எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. 

நீ மட்டும் தனியாக வா .. ஆசைக்கு அழைத்த சூப்பர் ஸ்டார் நடிகர்.. அதிர்ந்த இஷா கோபிகர்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!