ட்விட்டரை விட்டு அதிரடியாக வெளியேறிய குஷ்பு : குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விருப்பம்!

ட்விட்டரை விட்டு அதிரடியாக வெளியேறிய குஷ்பு : குடும்பத்தினருடன் நிம்மதியாக வாழ விருப்பம்!

பாலிவுட்டிலிருந்து தென்னிந்திய தமிழ் திரைப்படத்துறையில் வந்து முப்பது ஆண்டுகாலமாக தனக்கென்று ஒரு தனி இடத்தை பிடித்திருப்பவர் நடிகை குஷ்பு. குஷ்புவுக்கு கோயில் கட்டிய ரசிகர்களும் இருக்காங்க.

தமிழ் திரையுலகில் முன்னணி கதாநாயகியாக இருந்த சமயத்தில் இயக்குனர் சுந்தர்.சி அவர்களை காதலித்து திருமணம் செய்து கொண்டார். தற்போது அவந்திகா, ஆனந்திதா என்ற இரண்டு மகள்கள் இருக்கிறார்கள். 

சினிமாவில் தனது மார்க்கெட் குறைய சின்னத்திரையில் கலக்கி வந்தார். மேலும் பல்வேறு படங்களில் குணச்சித்திர வேடங்களிலும் நடித்து வருகிறார். அதேசமயம் அரசியலிலும் அதிக ஈடுபாடு காட்டி வந்தார். எப்போதும் ட்விட்டரில் சொந்த விவகாரங்கள், அரசியல், சினிமா குறித்து தனது கருத்துக்களைப் பதிவிட்டு வந்தார்.  

twitter

ட்விட்டர் தளத்தில்  மற்ற எல்லோரையும் விட ஆக்டிவாக இருந்தார் என்று கூட சொல்லலாம். காங்கிரஸ் கட்சியில் இருக்கும் குஷ்பு (kushboo), பாஜக கட்சியினர் தொடர்பான செய்திகளுக்கு தன்னுடைய எதிர்ப்புகள் அனைத்தையுமே உடனுக்குடன் தனது ட்விட்டர் பக்கத்திலேயே பதிவிட்டு வந்தார். 

மேலும் கணவர் சுந்தர்.சி இயக்கி வரும் படங்கள் குறித்த செய்திகள், ட்ரெய்லர் வெளியீடு ஆகியவற்றையும் குஷ்புவே வெளியிட்டார். அவ்வப்போது சில சர்ச்சையான பதிவுகளையும் அவர் வெளியிடுவதுண்டு.

குறிப்பாக குஷ்பு ஒரு முஸ்லிம் மதத்தைச் சார்ந்தவர் என்று பலரும் கூறி வந்தனர். அதற்கு ஆம். நான் முஸ்லிம் மதத்தைச் சேர்ந்தவர்தான். என் பெயர் நக்கத் கான் என்று வெளிப்படையாகவே தனது ட்விட்டர் பக்கத்தில் அறிவித்தவர் குஷ்பு.

தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் 1.3 மில்லியன் ஃபாலோயர்களை கொண்ட குஷ்பு திடீரென எந்த காரணமும் தெரிவிக்காமல் தனது ட்விட்டர் கணக்கிலிருந்து வெளியேறி உள்ளார்.  

twitter

இந்நிலையில் ட்விட்டர் தளத்திலிருந்து விலகியது ஏன் என்பது குறித்து தற்போது விளக்கம் அளித்துள்ள குஷ்பு, நான் நானாக இருக்க விரும்புகிறேன். ட்விட்டர் பக்கத்தில் என்னால் அப்படி இருக்க முடியவில்லை. அதனால் தான் ட்விட்டர் தளத்தில் இயங்க வேண்டாம் என முடிவு எடுத்தேன். 

உண்மையை சொல்லணும்னா என்னை ட்விட்டரில் ஃபாலோ செய்தவர்களில் என்னுடைய ரசிகர்களை விட, ட்ரோல் செய்வதற்காகவே ஃபாலோ செய்வர்கள் அதிகம். ட்விட்டர் பயன்படுத்துவதில் நன்மைகளை விட தீமைகள்தான் நிறைய இருக்கு என்பதை நான் அனுபவரீதியாக சொல்கிறேன் என கூறியுள்ளார். 

மேலும் ட்விட்டர் தளத்தில் நிறைய எதிர்மறை விஷயங்களே உள்ளன. கடவுள் எனக்கு கொடுத்திருக்க குடும்பத்தோடு நிம்மதியா வாழ விரும்புறேன், அதனால்தான் ட்விட்டரிலிருந்து வெளியேறிட்டேன்.

என்னுடைய உண்மையான ரசிகர்கள் வெவ்வேறு வழிகளில் எப்போதும் என்னுடன் இணைப்பில்தான் இருப்பார்கள். என்னுடைய அரசியலை இனி செயல்பாடுகளில் பார்ப்பீங்க என்று கூறியுள்ளார்.

கடந்த சில தினங்களுக்கு முன் குஷ்புவின் ட்விட்டர் பக்கத்தில் தனது குடும்பத்துடன் தீபாவளி கொண்டாடிய புகைப்படங்களை ஷேர் செய்திருந்தார். அதில் குஷ்பு (kushboo) தனது இரண்டவது மகள் ஆனந்திதாவுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை பேபி டால் என குறிப்பிட்டு ஷேர் செய்திருந்தார்.

twitter

அப்போது அனந்திதாவின் உருவத்தை கெட்ட வார்த்தையை பயன்படுத்தி ஒருவர் கேலி செய்திருந்தார். இதனை கண்டு கோபமடைந்த குஷ்பூ, முதலில் உன் மூஞ்சியை கண்ணாடில பாரு, நாய் கூட பார்க்காது வாந்தி எடுத்துட்டு போயிடும் என்று கடுமையான பதிலடி கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

twitter

இதுபோன்ற விரும்பத்தகாத விஷயங்களால் தான் குஷ்பு (kushboo) ட்விட்டரில் இருந்து வெளியேறிவிட்டதாக கூறப்படுகிறது. ட்விட்டரில் குஷ்புவை பாலோ செய்து வந்த ரசிகர்களுக்கு இது அதிர்ச்சியை கொடுத்துள்ளது.

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!                                                                                       

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!