சிந்தனைக்கான உணவு:வாழ்க்கையில் உங்களுக்கு உத்வேகம் அளிக்க 8 சிறந்த தமிழ் புத்தகங்கள்!

சிந்தனைக்கான உணவு:வாழ்க்கையில் உங்களுக்கு  உத்வேகம் அளிக்க  8 சிறந்த தமிழ் புத்தகங்கள்!

புத்தகம் வாசிப்பது(read) ஒரு நல்ல பழக்கம். நீங்கள் நிறைய விஷயங்களைத் தெரிந்து கொண்டும், அறிந்து கொண்டும் உங்கள் வாழ்க்கையில் சரியான தீர்வை எடுக்க அந்த அறிவைப் பயன்படுத்தலாம். அப்படி நாம் தேர்வு செய்து படிக்கும் புத்தகங்கள்(book) நமக்கு நேர்மறையான எண்ணங்களை தோற்றுவிப்பதாக இருக்கும்படி வாசித்து வாழ்க்கையில் நல்ல வழிகளில் அமைதியாக வாழ முனையுங்கள். உங்களை ஊக்குவிக்கவும்(inspirational), உங்கள் அறிவை மேன்படுத்தவும் இங்கே சில தமிழ் புத்தகங்கள்.

1. அக்னிச் சிறகுகள்

இந்திய ஏவுகணை மற்றும் அணு ஆயுத அறிவியல் விஞ்ஞானியாகவும் மற்றும் இந்திய குடியரசுத் தலைவராகவும் பணியாற்றி, இந்திய மக்கள் மனதில் ஆழமாக குடிகொண்டிருக்கும் டாக்டர். அப்துல் கலாம் அவர்களின் சுயசரிதைதான் அக்னிச் சிறகுகள். 

மாணவர்களையும் பெரிதும் கவர்ந்து வைத்திருக்கும் அப்துல் கலாம் அவர்களின் வாழ்வில் நடந்த சம்பவங்களையும், அவரின் சிந்தனைகளையும் இந்நூலில் எளிமையாகவும், இனிமையாகவும் எழுதப்பட்டிருக்கிறது.

2007ல் இந்நூல் ஆங்கிலத்தில்தான் வெளிவந்தது. தற்போது 13 மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்டு புகழ் பெற்று விளங்குகிறது.

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

1. அக்னிச் சிறகுகள்

2. பணக்கார தந்தை ஏழைத் தந்தை

நீங்கள் பொருளாதார ரீதியாக சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று நினைத்தால், ‘ரிச் டாட், புவர் டாட்’ என்ற ஆங்கில புத்தகம், தமிழில் மொழி பெயர்க்கப்பட்ட இந்த புத்தகத்தை படியுங்கள். 

இந்த புத்தகத்தைப் படித்து முடிக்கும்போது, “நீங்கள் பணத்திற்காக வேலை செய்ய கூடாது. பணம் உங்களுக்காக வேலை செய்ய வேண்டும்.” என்னும் கருத்தை உங்கள் மனதில் ஆழமாக பதியவைத்து விடுவார் நூலாசிரியர்  - ராபர்ட் டி கியோசாகி.

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

முற்போக்குச் சிந்தனை என்றால் அது பெரியார்தான். நீங்கள் பெரியாரைப்பற்றி தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறீர்கள் எனில், இந்தப் புத்தகம் ஒரு நல்ல துவக்கமாக இருக்கும்.

ஆர். முத்துக்குமார் தற்கால ஆசிரியராக இருந்து மறைந்தவர். பெரியார் வாழ்க்கை வரலாற்றையும், சமூகத்தில் ஏற்படுத்திய மாற்றங்களைப் பற்றியும் அற்புதமாக நம் கண் முன் வைக்கிறார் ஆசிரியர்.

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

3. பெரியார்

4. மனித வாழ்வின் பெருமை எது ?

பெரியாரின் துணிவைப்பற்றி தெரிந்துகொண்ட பின் அவர் எழுதிய நூலைப் படிக்க வேண்டாமா. பிறப்பு, இறப்பு, மறுபிறப்பு பற்றிய விழிப்புணர்வாகவும், இறப்பிற்குப் பின் செய்யும் சடங்குகளின் அர்த்தமற்ற நிகழ்வுகளையும் தெளிவாக விமர்சித்துள்ளார். 

எதையும் அப்படியே ஏற்றுக்கொல்லாமல், எப்படி கேள்வி கேட்டு நம் சுய அறிவைப் பயன்படுத்துவது என்று இந்த புத்தகத்தைப் படித்தபின் ஞானம் பிறக்கும். இந்த புத்தகத்தை நம் சுய முன்னேற்றத்திற்காக படித்து அறிந்து கொள்ளலாம். 

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

பெண் கல்விக்காக போராடி, தாலிபான் தீவிரவாதிகளால் சுடப்பட்டு, உயிர் பிழைத்த சிறுமியின் கதை. இது ஒரு சுயசரிதை. ஸ்வாட் பள்ளத்தாக்கில் மலாலா ஆரம்ப கால கட்டத்தில் தன் தந்தையோடு சேர்ந்து கல்விக்காக போராடிய நிமிடங்களை கிறிஸ்டினா லாம்ப்போடு இணைந்து ‘ஐயம் மலாலா’ என்று எழுதினார். அது இன்று உலகப்புகழ் பெற்றிருக்கிறது. தவறாமல் படியுங்கள்.

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

5. நான் மலாலா

6. அத்தனைக்கும் ஆசைப்படு

அனைவருக்கும் அவர்கள் நினைத்தவாரு எல்லாம் நடக்க வேண்டும் என்று ஆசை இருக்கும். பல விஷயங்கள் அவர்கள் நினைத்தது போல நடந்தாலும், ஏதாவது ஒரு விஷயம் கைகூடவில்லை என்றால் சோர்ந்து விடுவர். பிறகு இதெல்லாம் ஆசைப்படுவதால்தான் வருகிறது என்று, ஆசைப்படாமல் எப்படி இருப்பது என்று ஆசைப்படுகிறோம். மனித வாழ்வின் அடிப்படையே ஆசைப்படுவதுதான் என்றும், அதனைக் கட்டுப்படுத்தாதீர்கள் என்றும் சத்குரு கூறுகிறார்!

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

வாழ்க்கையில் ஏதாவதொரு கட்டத்தில் நாம் பின்தங்கி விட்டதாகவும், இதற்குமேல் ஒன்றும் இல்லை என்றும், நடந்ததை நினைத்து நொந்து கொண்டிருப்பவர்களாக மாறிவிடுவோம். நீங்கள் விரும்பியதை எப்படி அடைவது, ஒவ்வொரு நிலையாக படிப்படியாக எப்படி முன்னேறுவது, விரும்பியவற்றை எப்படி செய்வது என்று இந்த புத்தகத்தைப் படித்தால் அறிந்துகொள்வீர்கள். நீங்கள் யார் என்பதையும் அறிய வைக்கும். நீங்கள் பல வெற்றிகள் பெற்று, உங்களுக்காக காத்திருக்கும் உயர்ந்த இடத்தை அடையவும் வழி வகுக்கும் ஒரு அற்புதமான ஊக்குவிக்கும் புத்தகம் .

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

7. இரகசியம்

8. நேர்மறை சிந்தனையின் வியத்தகு சக்தி

‘தி பவர் ஆப் பாசிட்டிவ் திங்கிங்’ என்ற ஆங்கில புத்தகத்தின் தமிழாக்கமே ‘நேர்மறை சிந்தனையின் வியத்தகு சக்தி’. இந்த நூலின் ஆசிரியர் சில உதாரணங்களைக் கொண்டு நம்பிக்கை எப்படி ஒரு மனிதனை தங்கள் வாழ்க்கையில் முழுமையடையச் செய்கிறது என்று விளக்கியுள்ளார். நம் வாழ்வின் அன்றாட பிரச்சனைகளைத் தீர்க்க, உத்வேகம் அளிக்க உதவும் ஒரு கையிடாக இந்த புத்தகத்தைப் பயன்படுத்தலாம்.

புத்தகத்தை வாங்க இங்கு கிளிக் செயுங்கள்.

 

பட ஆதாரம்  - இன்ஸ்டாகிராம்  

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!