உடலுக்கும், உள்ளத்துக்கும் ஓய்வளித்து ஏராளமான நன்மைகளை தரும் யோகா பயிற்சி உலகம் முழுவதும் அங்கீகாரம் பெற்றுள்ளது. இதில் புதுமை என்னவென்றால் அந்த யோகா பயிற்சிகளை தரையில் மட்டும் தான் செய்ய வேண்டுமென்பதில்லை, தண்ணீருக்குள்ளும் செய்யலாம்.
‘அக்வா’ யோகா என்றழைக்கப்படும் யோகா (yoga) புத்துணர்வூட்டும் புதிய பிரிவாக பிறந்திருக்கிறது. இது தற்போதைய ஃபிட்னஸ் உலகின் புதிய டிரெண்டாக இருக்கிறது. வழக்கமாக தரையில் ஒரு விரிப்பில் அமர்ந்து செய்யப்படும் யோகாசனமே இப்படி தண்ணீருக்கடியிலும் செய்யப்படுகிறது.
தண்ணீருக்குள் நின்றபடி உடலின் மேற்பகுதி தண்ணீருக்கு வெளியே இருக்கும்படியும், சில வேளைகளில் முழுமையாக தண்ணீருக்குள் மூழ்கி மூச்சடக்கியும் இந்த தண்ணீர் ஆசனம் மேற்கொள்ளப்படுகிறது. தண்ணீரின் மீது மிதக்கும் பலகையிலும் ஆசனம் செய்கிறார்கள்.
கடல் நீர் நிரப்பிய நீச்சல்குளங்கள், வெந்நீர் நிரப்பிய குளியல் தொட்டிக்குள் இந்த தண்ணீர் ஆசனங்கள் செய்யப்படுகிறது. இதை முடித்து வெளியே வரும்போது உடல், மனம், உணர்வு எல்லாமே புத்துணர்ச்சி பெறுவதாக தெரிவிக்கின்றனர்.
பிரசவத்திற்கு பிறகு தொப்பையை குறைக்க பெல்ட் அணியலாமா? நன்மைகள் மற்றும் அணியும் முறைகள்!
நீருக்கடியில் செய்வதற்கென்று சில எளிமையான யோகாசனங்களும் இருக்கின்றன. தடாசனா, உத்கடாசனா, நடராஜாசனா, ஊர்த்வ தனுராசனா போன்றவை இதில் பிரபலமானவை. உதாரணமாக நடராஜாசனா உடல் எடை முழுவதையும் வலது காலில் இறக்கி வலது காலை நன்றாக ஊன்றிக் கொள்ள வேண்டும்.
அதன்பிறகு, இடது காலை மெதுவாக பின்புறமாக தூக்கி, இடது கையால் பிடித்துக் கொள்ள வேண்டும். வலது கையை வலது தோள்பட்டைக்கு நேராக மேலே உயர்த்தி ஒற்றைக்காலில் நிற்க வேண்டும். இதேபோல் மறுபுறம், இடது காலை தரையில் ஊன்றி வலது காலை தூக்கி நிற்க வேண்டும்.
இந்த ஆசனத்தை செய்யும்போது, உடலுக்கு சமநிலை கிடைக்கிறது. பின்புறம் தொடை மற்றும் இடுப்பு தசைகள் உறுதியும் பெறுகின்றன. தண்ணீருக்குள் சூரிய நமஸ்காரம், விருக்ஷா சனம், அர்த்த சக்கராசனம், தனுராசனம் ஆகியவை பெரும்பாலும் செய்யப்படுகிறது. சூரிய நமஸ்காரமானது ஒட்டுமொத்த உடம்பின் வலுவையும் ஒழுங்கையும் கூட்டுகிறது.
மழைக்கால சரும வறட்சியை போக்கி உங்கள் முகத்தை அழகாக்கும் ஓட்ஸ்!
விருக்ஷாசனம் நிலைத்தன்மையையும், நெகிழ்வுத்தன்மையையும், அர்த்த சக்ராசனமானது முதுகெலும்பு மற்றும் பின்பகுதித் தசைகளுக்கு நெகிழ்வுத்தன்மையையும், தனுராசனம் உடம்பின் மேற்பகுதியை வளைத்து, தோள்பட்டைகளை வலுப்படுத்தவும், முதுகெலும்பு நெகிழ்வுத்தன்மையை மேம்படுத்தவும் உதவுகிறது. வீரபத்ராசனமும் தண்ணீருக்குள் அதிகம் மேற்கொள்ளப்படுகிறது.
- நீருக்கடியில் யோகா (yoga) செய்வது நிலத்தில் செய்வதை விட எளிதாக எளிதானது. நீரில் நம் உடல் எடை குறைந்த மிதக்கும் உணர்வைக் கொடுக்கிறது.
- இதனால் மூட்டு வலி இருப்பவர்கள், கை, கால்களில் அடிபட்டவர்கள் கூட மூட்டு இணைப்புகளில் அதிக அழுத்தம் கொடுக்காமல் இன்னும் எளிதாக செய்ய முடியும்.
- மிதக்கும் பலகையில் ‘பேலன்ஸ்’ செய்து ஆசனங்களை மேற்கொள்ளும்போது தசைகளின் வலுவையும் தன்மையையும் மேம்படுத்துகிறது. மேலும் தசைப்பிடிப்பு தன்மையை குறைக்கிறது.
முதலில் அம்மா டயானாவை இழந்தேன்.. இப்போது மனைவிக்கு குறி வைக்கிறார்கள்.. இளவரசர் ஹாரி
- தண்ணீரில் மிதந்தபடி ஆசனங்களை செய்வதற்கு உடம்பின் அனைத்து தசைகளையும் பயன்படுத்த வேண்டியிருக்கிறது. எனவே இது உடம்புக்கும் மனதுக்கும் நன்மை அளிக்கும் என உணர முடிகிறது.
- தண்ணீர் யோகாசனமானது (yoga) வலு, நிலைத்தன்மை, சமச்சீர், பல்வேறு அசைவுகள் என்று உடலின் அடிப்படைப் பணிகளை மேம்படுத்த உதவுகிறது. இந்த யோகாசனம் தற்போது பிரபலமாகி வருகிறது.
- தரையில் மேற்கொள்ளும் ஆசனத்தைவிட இதில் எடை குறைவாக உணரலாம். உடம்பின் சமச்சீர் நிலையை மேம்படுத்த இது கைகொடுக்கிறது.
- தண்ணீரின் அழுத்தமானது நுரையீரல்களை விரிவாக்க உதவுகிறது. அதனால் நாம் அதிகமான ஆக்சிஜனை உள்ளிழுக்க முடிகிறது. இதனால் நமது சுவாசம் சீராகிறது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!