logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
முதலில் அம்மா டயானாவை இழந்தேன்.. இப்போது மனைவிக்கு குறி வைக்கிறார்கள்..  இளவரசர் ஹாரி

முதலில் அம்மா டயானாவை இழந்தேன்.. இப்போது மனைவிக்கு குறி வைக்கிறார்கள்.. இளவரசர் ஹாரி

இங்கிலாந்து அரச குடும்பத்தின் இளைய இளவரசர் ஹாரி (prince harry) தற்போது ‘மெயில் ஆன்சன்டே’ என்கிற நாளிதழின் மீது வழக்கு தொடர்ந்திருக்கிறார். இளவரசர் ஹாரியின் மனைவி மேகன் மெர்கல் அவருடைய தந்தைக்கு எழுதிய கடிதத்தை எந்த அனுமதியும் பெறாமல் இந்த நாளிதழ் வெளியிட்டிருப்பதே இதன் காரணம்.

இது குறித்து ஊடகங்களிடம் இளவரசர் ஹாரி முதன் முறையாக அம்மா டயானாவின் இழப்பில் தனக்கிருந்த வேதனைகளையும் ஊடகங்களின் சுயலாபத்திற்காக தங்கள் குடும்பம் பாதிக்கப்படுவது பற்றியும் மனம் திறந்து பேசியிருக்கிறார்.

38 வருட தேடலை முதியோர் இல்லத்தில் முடித்து வைத்த காதல் – கண்கள் தளும்பும் ஓர் உண்மைக் கதை

ADVERTISEMENT

Twitter

அரச குடும்பத்தில் பிறந்த இளைய இளவரசர் ஹாரி மீது உலகெங்கிலும் பல்வேறு வித மக்கள் மொழி, இன பேதமின்றி அன்பு கொண்டிருக்கின்றனர். அவருடைய திருமணம் உலகெங்கிலும் உள்ள மக்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டது.

இளவரசர் ஹாரி மீது மக்களுக்கு இத்தனை பிரியம் ஏற்படக் காரணமாக இருந்தவர் இளவரசி டயானா. இந்தப் பெயர் மீதான அதிர்வு என்பது சொல்லில் அடங்காதது. அப்படி அனைவராலும் நேசிக்கப்பட்ட ஒரு ஆளுமையாக திகழ்ந்தவர் இளவரசி டயானா. ஆனால் பாப்பரசி விரட்டி சென்றதால் விபத்தில் சிக்கு உயிர் இழந்தார் டயானா.

 

ADVERTISEMENT

Twitter

ஊடகங்களால் ராஜ குடும்பம் இழந்த நிம்மதியைப் பற்றி பேசிய இளவரசர் ஹாரி.. அரச குடும்பத்தை சேர்ந்தவர்கள் என்கிற முறையில் நானும் என்னுடைய மொத்த தலைமுறைகளும் குடும்பத்தில் நடக்கும் விஷயத்தை வெளியில் ஊடகங்களுக்கு தெரிவிப்பதையும் அரச குடும்ப செய்திகளை அறிக்கைகளாக மக்களுக்கு வெளியிடவும் கடமைப்பட்டிருக்கிறோம்.

அதே சமயத்தில் சில ஊடகங்களின் செயல்கள் எங்களை மனவேதனையில் ஆழ்த்துகின்றன என்பதையும் மறக்க முடியாது. என் மனைவி கருத்தரித்த சமயங்களில் நாங்களே அதனை அறிக்கைகளாக வெளியிட்டுதான் இருக்கிறோம். ஆனால் எங்களை சார்ந்த வதந்திகள் தொடர்ந்து கொண்டே இருந்தன.

ADVERTISEMENT

 

Twitter

குழந்தை பிறந்த நேரம்.. பெயர் வைத்தல் அது இது என பல வதந்திகள் வெளியிடப்பட்டன. என் மனைவியின் தந்தை உள்பட யார் வெளியே சென்றாலும் அவர்களை பின் தொடர்ந்து சென்று அதனை ஒரு செய்தியாக்கி வெளியிடுகின்றனர்.

ADVERTISEMENT

ஊடகங்கள் தங்களை வளர்த்துக் கொள்வதற்காக நாங்கள் எங்கள் நிம்மதியை இழந்து கொண்டிருக்கிறோம். அரச குடும்பத்தில் பிறந்ததற்காக நான் இன்னும் எத்தனை நேசத்துக்குரியவர்களை இழக்க வேண்டும்.. வதந்திகள் உண்மையில்லை என்பது எங்கள் குடும்பத்திற்கு நன்றாகவே தெரியும்.

Twitter

அதற்காக வெளியிடப்படும் ஒவ்வொரு வதந்திக்கும் மறுப்பு அறிக்கை கொடுத்துக் கொண்டே போக முடியுமா? மறுப்பையே அளித்தாலும் நாங்கள் அடைந்த மனவேதனைகள் சரியாகி விடுமா?

ADVERTISEMENT

உண்மையை சொல்ல வேண்டும் என்றால் அன்று ஊடகங்கள் பரப்பிய வதந்திகளால்தான் நான் என் அம்மாவை டயானாவை இழந்தேன். இப்போது அதே நிலை என் மனைவிக்கு வருவதை என்னால் பார்த்துக் கொண்டிருக்க முடியவில்லை.

Twitter

கடிதம் எழுதுவது என்பது மேகன் மெர்கலின் தனிப்பட்ட உரிமை. ஒரு மகளாக அவருடைய தந்தைக்கு அவர் கடிதம் எழுதி இருக்கிறார். அவர்களுக்குள் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும் அது அவர்களின் உரிமையே. மெர்கல் எழுதிய தனிப்பட்ட கடிதத்தை எங்கள் அனுமதியில்லாமல் வெளியிட்டதே தவறு. அதிலும் சில திருத்தங்கள் செய்து வெளியிட்டு மேகன் மெர்கல் மீது அவதூறு பரப்பி வருகிறார்கள்.

ADVERTISEMENT

ஒரு ராஜ குடும்ப வாரிசாக இருப்பதில் இருந்து வெளியே வந்து தனிப்பட்ட ஒரு மனிதனாக எங்களுக்கான நியாயத்தை நீதிமன்றம் மூலம் நாங்கள் தேட வேண்டிய நேரம் வந்துவிட்டது என்று மிகுந்த உணர்வுபூர்வமாக பேசியிருக்கிறார் இளவரசர் ஹாரி.

படித்து பார்க்கையில் தான் புரிகிறது.. சில சமயம் மலர்படுக்கை வாழ்க்கையில் முட்களின் மீதும் நடக்க வேண்டி வரலாம் என்பதை. தனி மனிதர்களின் உரிமையை வேட்டையாடும் அளவிற்கு மனித நேயமின்றி வேலைகள் செய்யும் யாராக இருந்தாலும் அவர்கள் தண்டிக்கப்பட வேண்டியவர்கள் மற்றும் கண்டிக்கப்பட வேண்டியவர்கள்தான்,

twitter

ADVERTISEMENT

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

04 Oct 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT