logo
ADVERTISEMENT
home / Celebrity gossip
இது புதுசு! ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து கதைக்கு ஓகே சொல்லும் நயன்தாரா !

இது புதுசு! ஜாதகங்களை வாங்கி பொருத்தம் பார்த்து கதைக்கு ஓகே சொல்லும் நயன்தாரா !

சினிமாவில் பல கசப்புகளை உருவாக்கிய நயன்தாரா அதன் பின்னர் தன்னுடைய இரண்டாவது இன்னிங்க்ஸை மிகத் தெளிவாகவே ஆரம்பித்தார். அறம் போன்ற திரைப்படங்களின் வெற்றிக்குப் பின்னர் கதை கேட்கும் விஷயத்தில் நேரடியாகவே ஈடுபடுகிறார்.

தானே கதையைத் தேர்ந்தெடுக்கவும் செய்கிறார். அப்படி இருந்தும் பிகில் திரைப்படம் தன்னை ஏமாற்றி விட்டதாகவே நயன்தாரா (nayanthara) நினைக்கிறாராம். தனக்கு முக்கியத்துவம் இல்லாத கதாபாத்திரங்களில் நடிப்பதில்லை என்பதை கொள்கையாகவே மாற்றிக் கொண்ட நயன்தாராவை பிகில் திரைப்படத்தில் ஊறுகாய் போல பயன்படுத்திக் கொண்டதாக பேசப்படுகிறது.

பிஞ்சுக் குழந்தையை நெஞ்சோடு சுமந்தபடி உணவு விற்பனை செய்யும் வள்ளி..வாழ்க்கை வாழ்வதற்கானதே!                                                       

 

ADVERTISEMENT

Youtube

இதனை அறிந்திருந்த நயன்தாரா இதையெல்லாம் தர்பார் (darbar) திரைப்படத்தில் சரிக்கட்டி விட்டதாக தகவல்கள் கூறுகின்றன. பிகில் (bigil) படத்தில் தன்னை இன்னும் அழகாக காட்டியிருக்கலாம் என்று நயன்தாரா நினைத்ததால் தர்பார் கேமராமேன் உடன் ஒப்பந்தம் போட்டு கொள்வதற்கு முன்னமே இதைப்பற்றி பேசி விவாதித்து தன்னை அழகாக காட்டும்படி கேட்டுக்கொண்டாராம்.

அதனால் தர்பார் திரைப்படத்தில் நயன்தாரா இன்னும் கூடுதல் அழகுடன் திகழ்வார் மற்றும் பிகில் திரைப்படத்தில் தவறவிட்டவைகளை தர்பாரில் சரிக்கட்டி விட்டார் என்று சினிமா வட்டாரத்தில் பேசிக்கொள்கிறார்கள்.

ADVERTISEMENT

யார் மீதும் காதல் கொள்ளுங்கள்.. ஆனால் இப்படிப்பட்ட ஆண்களை மறந்தும் அனுமதிக்காதீர்கள் !                                                                                      

Youtube

அதைப் போலவே நயன்தாரா தான் நடிக்கப்போகும் கதையை மிக பொறுமையாக கேட்டுக் கொள்கிறாராம். கதை கேட்டு பிடித்திருந்தால் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனரின் ஜாதகங்களை வாங்கி தன்னுடைய ஆஸ்தான ஜோதிடரிடம் கொடுத்து சரிபார்க்கிறாராம்.

ADVERTISEMENT

சரியாக இருந்தால் மட்டுமே கதைக்கு ஓகே சொல்கிறார் நயன்தாரா. வேற்று மதத்தை சார்ந்திருந்தாலும் தற்போது தீவிர ஆன்மிக பக்தையாகவே மாறிவிட்ட நயன்தாரா விக்னேஷ் ஷிவன் விஷயத்தில் மட்டும் சடங்கு ஜாதகங்கள் பார்க்காமல் இருக்கிறாராம்.

கோலிவுட்டில் (kollywood) கிசுகிசுக்கப்படும் இந்த விஷயத்திற்கு நயன்தாராவின் பதில் என்னவாக இருக்கும் எனத் தெரியவில்லை. ஆனாலும் தர்பார் திரைப்படம் வெளியானால் கேமராமேன் ஒப்பந்தம் பற்றிய உண்மை புலப்படலாம்.

நீ பறப்பதற்கு இறக்கைகள் கொடுக்க விரும்புகிறேன்… மகனுக்கு ஜெனிலியா உருக்கமான கடிதம்!                                                                                        

ADVERTISEMENT

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty – POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!

28 Nov 2019

Read More

read more articles like this
good points

Read More

read more articles like this
ADVERTISEMENT