எலுமிச்சை தோலில் இத்தனை இளமை ரகசியங்களா ! பேரழகு மின்ன மேலும் படியுங்கள் !

எலுமிச்சை தோலில் இத்தனை இளமை ரகசியங்களா ! பேரழகு மின்ன மேலும் படியுங்கள் !

நாம் தினமும் நமது முக அழகுக்காக எதையெதையோ செய்கிறோம். நிச்சயம் அதற்கான பலன்களை அறுவடையும் செய்கிறோம். தினமும் க்ளென்சிங் , டோனிங் , மாய்ச்சுரைஸர் போன்றவற்றை பயன்படுத்துகிறோம்.

நமது அழகையும் இளமையயையும் உடல் எடையையும் பராமரிக்க எலுமிச்சை நல்ல நண்பனாக உதவி செய்கிறது. நாம் பயன்படுத்தி விட்டு கீழே தூக்கி எறியும் எலுமிச்சை தோலில் (lemon skin) வைட்டமின் சி மற்றும் ஏ, கால்சியம், மெக்னீசியம், பீட்டா கரோட்டின் போன்ற சத்துக்கள் அதிகம் உள்ளது. இதனை எப்படி பயன்படுத்தினால் நம் அழகு பராமரிக்கப்படும் என்பதையும் பார்க்கலாம்.                                                                                  

Pinterest

எலுமிச்சை ப்ளீச்சிங் தன்மை தரும். அதனால் எலுமிச்சை தோலை நல்ல வெயிலில் காயவைத்து அதனை பொடியாக்கி எடுத்து சேகரித்து வைத்துக் கொள்ளுங்கள். இந்தப் பொடியுடன் தேன் சர்க்கரை ஆலிவ் எண்ணெய் ஆகியவற்றை சமமாக கலந்து முகத்தில் தடவி 10 நிமிடம் கழித்து கழுவி விடவும். இப்படி செய்வதால் வெயிலால் ஏற்படும் கருமை நீங்கும்.

நகங்கள் (nails) பலவீனமாக இருப்பது ஒரு அழகு மற்றும் ஆரோக்கிய குறைபாடு. ஆகவே நகங்கள் பலவீனமானவர்கள் மற்றும் மஞ்சள் நிறம் கொண்டவர்கள் எலுமிச்சை தோல் பொடியை விரல் நகங்களில் தடவி 30 விநாடிகள் மசாஜ் (massage) செய்து பின்னர் அலசவும். இதனால் பலவீன விரல்கள் பலம் பெறும். மஞ்சள் நிற விரல்கள் வெண்மையாகும்.                                                  

Pinterest

உடல் எடை குறைப்பு என்பது மிக சிரமமான ஒன்றாக பார்க்கப்படுகிறது. ஆனால் எலுமிச்சை தோல் பொடி உங்களுடன் இருந்தால் வெறும் இரண்டு வாரங்களில் மாற்றங்களை காணலாம். தினமும் காலை வெறும் வயிற்றில் வெதுவெதுப்பான நீரில் இந்த எலுமிச்சை பொடியை சேர்த்து குடித்து வந்தால் முகம் உடல் மாற்றம் காணும்.                                                                      

முகத்தில் வயதாவதால் ஏற்படும் கரும்புள்ளிகள் மறையவும் எலுமிச்சை தோல் பொடி பயன்படுகிறது. ரோஸ் வாட்டர், தயிர், ஆரஞ்சு பழச்சாறு ஆகியவற்றை ஒரு ஸ்பூன் அளவுகளில் எடுத்து எலுமிச்சை தோல் பொடியுடன் கலந்து முகத்தில் பூச வேண்டும். 20 நிமிடம் கழித்து கழுவி விடுங்கள். இப்படி இரண்டு வாரங்கள் மூன்று நாட்களுக்கு ஒருமுறை செய்து வந்தால் முகத்தில் உள்ள கரும்புள்ளிகள் மறைவதை காணலாம்.

Pinterest

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது#POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!