கள்ள உறவில் ஆண்கள் மனைவியை விட்டு விடுவதில்லை..பெண்களோ கொலையே செய்கிறார்கள்..கே பாக்யராஜ்

கள்ள உறவில் ஆண்கள் மனைவியை விட்டு விடுவதில்லை..பெண்களோ கொலையே செய்கிறார்கள்..கே பாக்யராஜ்

கருத்துக்களை பதிவு செய் என்னும் திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழாவில் இயக்குனரும் நடிகர் சங்கத்தில் பொறுப்பான இடத்தில இருப்பவரும் பத்திரிகை ஆசிரியரும் ஆன கே. பாக்கியராஜ் (K. Bhagyaraj) பேசிய பேச்சு தமிழகமெங்கும் அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

சென்னை சாலிகிராமத்தில் கருத்துக்களை பதிவு செய் திரைப்படத்திற்கான இசை வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில் இயக்குனர் கே பாக்யராஜ், எஸ் வி சேகர் மற்றும் மீரா மிதுன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். படத்தின் பெயரே கருத்துக்களை பதிவு செய் என்று இருப்பதாலோ என்னவோ இயக்குனர் கே பாக்கியராஜ் துணிந்து தன்னுடைய வித்யாசமான கருத்து ஒன்றை பதிவு செய்திருக்கிறார்.

என் காதல் பயணம்.. சாக்லேட் பாய் மேடி மாதவன் சொல்லும் காலம் தோறும் கசக்காத காதல் சீக்ரட் !

Youtube

கருத்துக்களை பதிவு செய் திரைப்படம் முன்பே எடுக்கப்பட்டிருந்தாலும் அதில் பொள்ளாச்சி பாலியல் வன்முறை சம்பந்தப்பட்ட காட்சிகள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. ஆகவே அதனை பேசுபொருளாக எடுத்து பேச வந்த இயக்குனர் கே பாக்கியராஜ் பெண்கள் மீதான தன்னுடைய ஆத்திரத்தையும் தீர்த்துக் கொண்டிருக்கிறார்.

பொள்ளாச்சி வன்முறை குறித்து பேசும்போது , "டெலிபோன் என்ற ஒன்று வந்தபின்னர் பெண்களிடம் கட்டுப்பாடு இல்லாமல் போய்விட்டது. எங்கு பார்த்தாலும் செல்போனை வைத்துக்கொண்டு கிசுகிசு என்று பேசிக் கொண்டிருக்கிறார்கள். ஆண்கள் தவறு செய்தால் அது போற போக்குல நடந்துடும். பெண்கள் அந்த விசயத்துல தவறு செய்தால் அது மிகப்பெரிய தப்புல கொண்டுபோய் விட்டுவிடும். சொல்லும்போது கஷ்டமாக இருக்கிறது. ஆனாலும் வேற வழியில்லை. சொல்லித்தான் ஆகவேண்டும். ஆண் சின்ன வீடு வைத்துக்கொண்டால் அந்த வீட்டுக்கு சகல வசதிகளும் செய்து கொடுத்துவிடுவான். அதே நேரத்தில் பெரிய வீட்டை தொந்தரவு செய்யமாட்டான்.

பெண்களிடம் அந்த கட்டுப்பாடு இல்லை. அதனால்தான், கள்ளக்காதலால் கணவனை அடித்துக்கொன்ற மனைவி, குழந்தையை அடித்துக்கொன்ற தாய் என்று செய்திகள் வருகின்றன. பெண்கள் இடம் கொடுப்பதால்தான் தவறுகள் நடக்கின்றன.

Youtube

ஆண்களை குறை சொல்லி பிரயோசனமில்லை. பொள்ளாட்சி பாலியல் விவகாரத்திற்கு பெண்கள்தான் காரணம். பொள்ளாட்சி விவகாரத்தில் பெண்களின் பலவீனத்தை பயன்படுத்திக்கொண்டு போய்விட்டான். அவன் செய்தது பெரிய தவறு என்றால், அந்த வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுத்த பெண்கள் செய்ததும் தவறு''என்று தெரிவித்தார்.

இதில் இருந்து இயக்குனர் பாக்கியராஜ் கூற வரும் விஷயம் என்ன என்றால் ஆண்கள் தவறான உறவுகள் வைத்துக் கொள்ளலாம். ஆனால் பெண்கள் வைத்துக் கொள்ளக் கூடாது என்பதுதான். இந்த செய்தியை பார்க்கும்போது ஒன்று கேட்க தோன்றுகிறது.

எவ்வளவு நாளைக்குத்தான் இந்த ஊசி நூல் பழமொழியை பேசிக் கொண்டிருப்பீர்கள் ? இதன் அருவருப்பான அர்த்தங்கள் உங்கள் மன விகாரத்தை எங்களுக்கு தெரிவிக்கின்றன. காதலின் பெயரால் பல பொள்ளாச்சி பெண்கள் ஏமாற்றப்பட்டிருக்கின்றனர். காதலன் போல நடிப்பவன் மீது குற்றமில்லை ஆனால் அவனது நடிப்பை நம்புவது பெண்களின் குற்றம் என்கிறீர்கள்.

நித்யானந்தாவுடன் இருக்கும் புகைப்படம் உண்மையானது இல்லை : பாடகி சின்மயி விளக்கம்!

ஒரு பெண்ணை தவறான நோக்கத்தோடு அணுகும் ஆணை அவள் எவ்வாறு கண்டறிவது ? இப்போதெல்லாம் முகமூடிகளுக்கு மேல் முகமூடிகள் அணிந்து கொண்டு பெண்களை ஏமாற்ற ஒரு படையாகவே கிளம்பியிருக்கின்றனர். ஆரம்பிக்கும் போதே யாரையும் நம்பாதீங்க என்கிற அறிவுரையை அவர்களே வழங்கி விட்டுத்தான் ஆரம்பிக்கவே செய்கிறார்கள்.

பொள்ளாச்சி விஷயத்தை முழுமையாக அறியாமலேயே இயக்குனர் ஒரு முக்கிய பத்திரிகையாளர் கே. பாக்கியராஜ் அதில் பெண்கள்தான் குற்றத்திற்கு காரணம் என்று கூறி இருக்கிறார். பல பெண்கள் அந்த காமுகர்களை அண்ணா என்று அழைத்ததை கே பாக்கியராஜ் ஏன் அறியவே இல்லை?

உடையை கழற்ற சொல்லி திருநாவுக்கரசு தன்னுடைய பெல்டால் ஒரு பள்ளி சிறுமியை அடிப்பதும் அண்ணா அடிக்காதிங்கண்ணா கழட்டிடுறேன் என்று அந்த சிறுமி கதறியதும் ஏன் திரு. கே. பாக்கியராஜ் அவர்களின் காதுகளுக்கு கேட்கவில்லை என்பது தெரியவில்லை.

 

Youtube

எல்லாமே பெண்கள் குற்றம்தான் என்றே வைத்துக் கொள்வோம். ஊசி இடம் கொடுக்காமல்... அதான பாக்கியராஜ் ராஜ் சார்? ஊசி பெண்கள் நூல் ஆண்கள் அப்படித்தானே சார் ? பிறந்து 11 மாத சிசுவிடம்.. மூன்று வயது குழந்தையிடம்.. எட்டு வயது சிறுமியிடம்... எப்படி இந்த கொடுமைகளுக்கும் அதே ஊசி தத்துவம்தான் சொல்வீர்களா பெரியவர்களே ?

இதில் இன்னொரு கொடுமை என்னவென்றால் இந்த நிகழ்ச்சியில்இப்படியான கருத்துக்களைத் துணிந்து பதிவு செய்த இயக்குனர் பாக்கியராஜை விடவும் அதனை அருகில் இருந்த நடிகர்கள் தொகுப்பாளினி தயாரிப்பு தரப்பு இன்னும் அனுபவித்து சிரித்துக் கொண்டிருந்தார்கள். அனேகமாக ஒரு இசையமைப்பாளர் மட்டுமே இறுகிய முகத்தோடு அமர்ந்திருந்ததை பார்க்க முடிந்தது.

இயக்குனர் பாக்கியராஜின் இந்த பேச்சுக்கு நமட்டு சிரிப்புடன் புன்னகைத்துக் கொண்டிருந்த அத்தனை மோசமான வக்கிரமான இதயங்களுக்கு நடுவே பெண்களுக்கு ஆதரவான முகமாக அந்த முகம் இருந்தது மட்டுமே லேசான ஆறுதல்.

இதனை பற்றிய உங்கள் கருத்துக்களை பதிவு செய்யுங்கள்.

அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!