உங்களை புரிந்துகொண்டு மற்றவர்களையும் புரிந்துகொள்ள சில சுவாரசியமான மனோதத்துவ பொன்மொழிகள் !

உங்களை புரிந்துகொண்டு மற்றவர்களையும் புரிந்துகொள்ள சில சுவாரசியமான மனோதத்துவ பொன்மொழிகள் !

எல்லோரும் தங்களைத் தாங்களே புரிந்து கொள்ள முடிந்தால், உலகம் வாழ ஒரு சிறந்த இடமாக இருக்கும் என்பதில் நான் உறுதியாக இருக்கிறேன். புரிதல் ஒரு கலை! ஒருவர் அதைக் கற்றுக் கொள்ள வேண்டும், அதில் சிறந்து விளங்க அதைப் பயிற்சி செய்ய வேண்டும். நீங்கள் எவ்வளவு அதிகமாக உங்களைப் புரிந்துகொள்கிறீர்களோ(understand), எவ்வளவு அதிகமாக மற்றவர்களைப் புரிந்துகொள்கிறீர்களோ, அவ்வளவு சீக்கிரம் பிரச்சினைகள் குறைகின்றன.உளவியல் (psychology) ரீதியாக நம்மையும், நாம் (புதிதாக) பழகும் நபரைப் பற்றித் தெரிந்து கொள்ளவும் இங்கு சில பொன்மொழிகள்(saying).

1. உளவியல் சொல்கிறது, ‘சில சமயங்களில் ஒரு சின்ன இடைவெளி போதும், நீங்கள் ஒருவருக்கு எவ்வளவு முக்கியம் என்பதை உணர்த்த’.

2. மற்றவரும் உங்களை அப்படி நினைக்கும்வரை, அடுத்தவர்களோடு மிகவும் நெருங்கியதாக உணராதீர்கள். ஏன்னெனில், ஒரு புறம் மட்டும் எதிர்பார்ப்புகள் வளர்ந்துகொண்டே இருந்தால் அது உங்களை அழித்துவிடும்.

3. “அன்பு என்பது இன்னொருவருடன் பகிர்ந்துகொள்ளும் அந்த மைக்ரோ நொடியில் உணரும் இதமும், இணைப்பும்தான்”

4. உங்களுக்கு மிக முக்கியமானவர்கள் உங்களை உதாசீனப்படுத்துவது, உங்கள் மனதிற்கு உடலின் வலியை உணர்த்தும்!

5. நீங்கள் ஒருவரோடு மிகவும் நெருக்கமாகி விட்டால், அவர்களுடைய தகவலைப் படிக்கும் போது உங்களுக்குள் அவர்களுடைய குரல் ஒலிக்கும்.

6. நீங்கள் மிகவும் முக்கியம் என்று நினைத்த நபர் இல்லாமல் நீங்கள் மிகவும் சந்தோசமாக இருப்பதுதான் சிறந்த உணர்வு.

7. உங்கள் மீது பைத்தியமாக இருப்பவர் காட்டுவது உண்மையான அன்பு அல்ல. உங்களுடன் பேசாமல் உங்களை இழந்து விடுவேன் என்று பயப்படுபவர் காட்டுவதுதான் உண்மையான அன்பு!

 

8. எல்லாவற்றையும் குறை சொல்லிக்கொண்டும், எதையுமே பாராட்டாத குணமுடையவர் உங்களுடன் இருக்கும் மோசமான நபராகும்.

9. விரைவாக ஒருவருடன் மிக நெருக்கமாவதும் தவறு. ஏன்னெனில், அது உங்களை அவரிடம் விரைவாக எதிர்பார்க்க வைத்து, ஏமாற்றங்களில் கொண்டுபோய் விட்டுவிடும்.

10. அதிகமாக யோசிப்பதே மனச் சோர்விற்கு காரணம். மனம், இல்லாத ஒன்றை நினைத்து பிரச்சனையை கிளப்ப ஆரம்பிக்கும்.

11. மனோதத்துவம் என்ன சொல்கிறதென்றால், ‘மற்றவர்களோடு உங்களை ஒப்பிடும்போதுதான் சந்தோஷமின்மை, சுய பட்சாதாபம், மனச்சோர்வு ஆகியவை தோன்ற அடிப்படை காரணம்’ ஆகும்.

12. வலியை உணர்த்த 80 சதவிகித பெண்கள் அமைதியை பயன்படுத்துகிறார்கள். உங்களை உதாசீனப்படுத்துகிறாள் என்றால், அவள் நிச்சயம் உங்களால் பாதிக்கப் பட்டிருக்கிறாள் என்று அர்த்தம்.

13. சில சமயம் நாம் மீண்டும் அவர்மீது உறுதியாக உணர்வை வளர்க்கக்கூடாது என்பதற்காகவே அவரை உதாசீனப்படுத்துவோம். அது அவரை பிடிக்கவில்லை என்று அர்த்தம் இல்லை.

14. சந்தோசமான வாழ்க்கை என்பது ஒவ்வொருவரும் அவருக்கென தனியாக உருவாக்குவது. அதை யாரிடம் இருந்தும் நகல் எடுக்க முடியாது.

 

15. புத்திசாலித்தனமான பெண்கள் தவறான நபருடன் இருப்பதை விட தனிமையில் இருப்பதே மேல் என்று நினைப்பார்கள்!

16. தியானம், சிரிப்பு, உடற்பயிற்சி, அடுத்தவர்க்கு உதவுவது, உங்களுக்கு பிடித்ததை பின் தொடர்வது ஆகிய ஐந்தும் உங்களை சந்தோசமாக வைத்திருக்கும்.

17. பொது வாழ்க்கை, தனிப்பட்ட வாழ்க்கை மற்றும் ரகசிய வாழ்க்கை என்று ஒவ்வொருவருக்கும் மூன்று வாழ்க்கைகள் இருக்கிறது.

18. நீங்கள் பேசுவதை ரசிக்கும் விதமாக அடுத்தவரிடம் பேசுங்கள். நீங்கள் கவனித்து கேட்பது, மற்றவர் உங்களிடம் சொல்ல விரும்பும் விதமாக அமைய வேண்டும்.

19. அதசகோராபோஃபியா(Athazagoraphobia): நீங்கள் மிகவும் உறுதியாக அக்கறை கொண்டவர் உங்களை மறந்து விடுவார் அல்லது உதாசீனப்படுத்துவார் என்ற பயமே ஆகும்.

20. ‘நீங்கள் விழித்தெழ’ முயற்சி எடுக்க ஆரம்பித்தீர்களானால், உங்கள் செயல்களில் உங்கள் மனம் இருக்கும் , திடீரென வாழ்க்கையை புகழ ஆரம்பித்துவிடுவீர்கள்.

21. நீங்கள் விரும்புவதற்கு பயப்படவில்லை, உங்களை விரும்பாமல் போய்விடக் கூடாது என்பதற்காக பயப்படுகிறீர்கள்.

 

22. நாம் வாழ்க்கையை சந்தோஷமாக வாழ ஒரு நாளைக்கு 4 கட்டிப்பிடி வைத்தியம் தேவை; நம்மை பராமரிக்க 8 கட்டிப்பிடி வைத்தியம் தேவை;  வளர்ந்து முன்னேறி செல்ல 124 கட்டிப்பிடி வைத்தியம் தேவை. தயாரா?

23. அனைவரையும் மகிழ்ச்சியாக வைத்திருக்க முயற்சிக்கும் நபர் பெரும்பாலும் தனிமையாக உணருவார் என்று உளவியல் கூறுகிறது.

24. இலகிய மனது இருப்பது பலகீனம் இல்லை. அதைப் பற்றிய கட்டுக்கதைகள்தான் ஆபத்தானது.

25. எளிதில் கிடைப்பது அனைத்தும் நீண்ட காலம் நிலைக்காது. நீண்ட காலம் நிலைப்பது அனைத்தும் எளிதில் கிடைக்காது!

26. பேபி என்று அழைப்பது பெண்களின் மூளைக்கு சாதகமான தாக்கத்தை ஏற்படுத்துகிறது. இது உணர்ச்சிபூர்வமான அழுத்தத்தை உடனடியாக வெளியிடுகிறது.

27. சந்தோசமான மனிதர்களுக்கு, நேரம் நிறைந்து, திட்டமிட்டிருக்கும். சோகமான மனிதர்களுக்கு, நேரம் எப்போதும் போதாது . விஷயங்களை தாமதித்துக் கொண்டே இருப்பார்கள் மேலும் திறமையற்று இருப்பார்கள்.

28. தனியாக நேரத்தை செலவிடுவது மிகவும் ஆரோக்கியமானது ஏனெனில் தனியாக இருப்பது எப்படி என்று அறியலாம். மேலும், மற்றவர்களால் வரையறுக்கப்படுவதோ வழிநடத்தப்படுவதோ இருக்காது.

 

மேலும் படிக்க - ஓ! பெண்களிடம் உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?! (இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!)

மேலும் படிக்க - இப்படித்தான் என் வாழ்க்கையை என் இஷ்டம் போல் முழுவதுமாய் மாற்றிக்கொண்டேன் !

பட ஆதாரம்  - Shutterstock 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!