ஓ! பெண்களிடம் உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?! (இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!)

ஓ! பெண்களிடம்  உள்ள இந்த விஷயம் ஆண்களுக்கு பிடிக்காதா?!  (இப்போதே தெரிந்து கொள்ளுங்கள்!)

எப்போதுமே, பெண்களைப் புரிந்து கொள்வது கடினம் என்று கூறுவதைத்தான் கேள்விப்பட்டிருக்கிறோம். ஆனால், ஆண்களும் மாறுபட்ட கருத்துக்களை அளிப்பதில் ஒன்றும் சளைத்தவர்கள் இல்லை. அதனால், ஆண்கள் பெண்களிடம் என்ன எதிர்பார்க்கிறார்கள் என்றும் பெண்களிடம் உள்ள எந்த விஷயங்களெல்லாம் ஆண்களுக்கு பிடிப்பதில்லை என்றும் தெரிந்து கொண்டால் எளிதில் ஆண்களைக் கையாளலாம் அல்லவா? நிறைய விஷயங்கள் ஆண்களுக்கு (men) மிகவும் பிடிக்கும் என்று நினைத்துகொண்டு பெண்கள் அந்த விஷயத்தை செய்வார்கள். அப்படி எந்தெந்த விஷயங்கள் ஆண்களுக்கு பிடிக்காது என்று பார்க்கலாம்.

1. நீங்கள் மற்றவர்களைப் போல பாசாங்கு செய்வது

பாசாங்கை ரசித்த ஆண்கள் இப்போது இல்லை. முதலில் நீங்கள் (women) மற்றவர்களைப் போல பாசாங்கு செய்வது தெரியாமல் அவர் உங்களை ரசிப்பதாக நினைப்பீங்கள். ஆனால், ஒரு கட்டத்தில் தெரியவரும். அப்போது  உங்கள் உறவு உடையவும் வாய்ப்பு இருக்கிறது.

2. ஆண்களுக்கு புகழ்ச்சி பிடிக்காது

இது தவறான கருத்து. பெண்களைப் போல உடனடியாக புகழ்த்ததும்  புளகாகிதம் அடைவதை வெளிப்படுத்த மாட்டார்கள். அதை நிராகரிப்பது போல பாசாங்கு செய்வார்கள். ஆனால், சின்ன சின்ன புகழ்ச்சி, பாராட்டு ஆண்களுக்கு புது உத்வேகத்தை அளிக்கும். உதாரணத்திற்கு, உங்களுக்கு அவரைப் பார்த்தவுடன் என்ன கவர்ந்தது, இந்த உடையில் அவருடைய கரங்கள் எவ்வளவு வலிமையாக தோன்றுகிறது என்பன போன்ற கருத்துக்களை அவ்வப்போது தெரிவியுங்கள்.

3. மாடல் போன்ற உடல் தோன்ற வேண்டும்

ஆண்களுக்கு அழகான தோற்றமுடைய பெண்களை மிகவும் பிடிக்கும், அவர்களுடன் சுற்ற நினைப்பார்கள், ஆனால் உங்கள் உறவு மேலும் வளர அது ஒரு தடையாகும். அவர்கள் வாழ்க்கைத்துணை அவர்களைவிட அழகாக இருப்பதில் ஆண்களுக்கு அவ்வளவு நாட்டம் இல்லை என்றே சொல்ல வேண்டும். நம்ப முடியவில்லையா? அப்படிதான்புள்ளி விவரங்கள் சொல்கிறது.

4. அதிக தடிமனான உதடுகள்

தற்போதைய ட்ரெண்டில் இருக்கும் தடிமனான உதடுகள் ஆண்களுக்கு பிடிக்கும் என்று நினைக்கிறார்கள் பெண்கள். ஆனால், அவர்கள் இது என்ன வாத்து முகம்போல இருக்கிறதே என்றுதான் முதலில் எண்ணுவார்கள்! இயற்கையான தோற்றமே மிகவும் அழகாக இருக்கும் என்பது நினைவில் இருக்கட்டும்.

5. நீங்கள் செய்த தவறை நியாயப்படுத்துவது

நீங்கள் ஒரு தவறு செய்து விட்டால், ஏன் செய்தீர்கள், எதற்கு செய்தீர்கள் என்று உங்கள் தரப்பை விளக்கி நியாயப்படுத்த முற்படாதீர்கள். அது அவர்களுக்கு ஒரு பெரிய விஷயம் இல்லை. அதைப்பற்றிப் பேசாமல் இருந்துவிட்டாலே அது மறந்து விடும்.

6. பிரச்சனைகளை கேட்க வேண்டும்

பெண்களும், ஆண்களும் வெவ்வேறு விதங்களில் பிரச்சனைகளை கையாளுவார்கள். பெண்களுக்கு ஒரு பிரச்சனையைப் பற்றி பேசினால் போதும். ஆனால் ஆண்கள் பிரச்சனைகளுக்கு உடனடி தீர்வு காண நினைப்பார்கள். எனவே, நீங்கள் உங்கள் பிரச்சனைகளை சொல்ல ஆரம்பிக்கும்போதே, உங்களுக்கு உங்கள் எண்ணங்களை பகிர்ந்துகொள்ளத்தான் அவர் தேவை என்பதையும், தீர்வு வேண்டாம் என்றும் கூறிவிடுங்க.

7. குழந்தை போன்ற குரலில் பேசுவது

ஆண்களுக்கு உங்கள் குரல் குழந்தை போல இருந்தால் மிகவும் பிடிக்கும் என்று நினைப்பீர்கள். மாறாக, அது அவர்களுக்கு எரிச்சல்தான் உண்டாக்கும். நீங்கள் நீங்களாகவே இருங்கள், அவர் அதை விரும்புவார்.

8. ஊமையாக நடித்தல்

பெரும்பாலான பெண்கள் நினைப்பது, பெண்கள் கருத்து தெரிவிப்பதை விட, அமைதியாக சைகை காண்பித்தால் ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும் என்று. ஆனால் உங்கள் உணர்வுகளை வெளிப்படுத்தும் அழகைத்தான் அவர்கள் ரசிக்கிறார்கள். குறித்துக் கொள்ளுங்கள் பெண்களே! 

9. உங்களை கவனிக்க பிடிக்கும்

திரைப்படங்களில்தான் ஆண்களுக்கு பெண்களை கவனித்துக்கொள்ள பிடிக்கும் என்றும், எப்போதும் அவர்களைத் தாங்கிக் கொண்டிருப்பதையும் காண்பிப்பார்கள். உண்மையில், ஆண்களுக்கு ஒருவரை கவனிக்கும் செயல் மிகவும் சோர்வைத் தரும். பெண்கள் அவர்கள் அவர்களாகவே கவனித்துக்கொள்வதைத்தான் ஆண்கள் ரசிப்பார்கள் விரும்புவார்கள்.

10. எப்போதும் கூடவே இருப்பது

பெண்களுக்கு  சில நேரம் வேறு பெண்களுடன்  சிறிது நேரம் செலவிடத் தோன்றும். ஆனால், ஆண்களை  அப்படி விடமாட்டார்கள். உண்மையில் அவர்களுக்கும் அந்த சிறிது நேர பிரிவு தேவைப்படும். அவர்களுடைய ஆண் தோழர்களுடன் கலந்துரையாடுவது  அவர்களுக்கு புத்துணர்வூட்டும்.

11. பெண்மையான விஷயங்கள் பிடிக்காது

உங்கள் இல்லத்தை அலங்கரிப்பது, பிங்க் ஷேட் போன்ற விஷயங்களால் நிரப்புவது, ஆங்காங்கே மலர் செடிகளை வைப்பது போன்ற விஷயங்களை ஆண்கள் பாராட்ட மாட்டார்கள். எனவே அதெல்லாம் அவர்களுக்கு பிடிக்காத விஷயம் என்று நினைத்துவிடக் கூடாது. அவர்கள் அதை வெளிப்படுத்தவில்லை என்றாலும் உங்கள் செயல்களை மனதில் ரசித்துக்கொண்டுதான் இருப்பார்கள்.

12. எதிர்காலத்தைப் பற்றி பேசுவது

அவர்களுடைய உறவு பலமாக இருக்க பெண்கள் அடிக்கடி அவர்களுடைய எதிர்காலத் திட்டங்களைப் பற்றி பேசிக்கொண்டே இருப்பார்கள். ஆண்களுக்கு அது மிகவும் எரிச்சல் ஏற்படுத்தும் விஷயமாகும். அவர்களும் திட்டம் வைத்திருப்பார்கள். ஆனால், அதைப்பற்றி பேசி உரையாட அவர்களுக்கு விருப்பம் இருக்காது.

ஓ! இதெல்லாம் (குணம்) ஆண்களுக்கு பிடிக்காதா என்று ஆச்சர்யமாக இருக்கிறதா? இப்போது புரிந்திருக்குமே! உங்கள் அவர் உங்களிடம் உள்ள மாற்றத்தைப் பார்த்து உங்களை சுற்றி சுற்றி வரப் போகிறார், பாருங்கள்!

 

மேலும் படிக்க - ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பட ஆதாரம்  - Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!