கமல் குடும்ப புகைப்படத்தில் இடம்பெற்றது ஏன்? : சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளித்த பூஜா!

கமல் குடும்ப புகைப்படத்தில் இடம்பெற்றது ஏன்? : சர்ச்சைகள் குறித்து விளக்கம் அளித்த பூஜா!

காதல் ரோஜாவே படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் நடிகை பூஜா குமார் . இதனை தொடர்ந்து ஹாலிவுட் படங்களில் நடித்து வந்த பூஜா குமார் நீண்ட இடைவெளிக்குப் பிறகு கமலுடன் விஸ்வரூபம் படத்தில் நடித்தார். 

அதனை தொடர்ந்து உத்தம வில்லன், விஸ்வரூபம் 2 ஆகிய படங்களிலும் கமலுடன் ஜோடியாக நடித்தார்.  இதன் மூலம் காதல் ரோஜாவே படத்திற்கு பிறகு தமிழக மக்களிடம் அதிகம் பேசப்பட்டார். மேலும் பல்வேறு இடங்களில் அடிக்கடி கமலுடன் தென்பட்டார் பூஜாகுமார். 

இருவரும் வெளிநாடு சென்ற போட்டோக்கள் அவ்வப்போது வெளியானது. கடாரம் கொண்டான் இசை வெளியீட்டு விழா நிகழ்ச்சியிலும் கமலுடன் ஒன்றாக கலந்துகொண்டார். இதேபோல் வசனகர்த்தாவும், நடிகருமான கிரேஸி மோகன் மறைவின் இறுதிச்சடங்கிலும் கமலுடன், பூஜா குமாரும் பங்கேற்றார். 

twitter

 

அண்மையில் கமலின் பிறந்தநாளை முன்னிட்டு நடைபெற்ற குடும்ப விழாவிலும் கலந்து கொண்டார் பூஜா குமார். இதனால் பூஜா குமார் (pooja) எப்போது கமலின் குடும்ப உறுப்பினர் ஆனார் என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வந்தனர்.  இதனை தொடர்ந்து கடந்த 8ம் தேதி சென்னையில் புதிதாக திறக்கப்பட்ட கமலின் ராஜ்கமல் அலுவலகத்தில் இயக்குநர் பாலச்சந்தருக்கு சிலை திறக்கப்பட்டது. இதில் நடிகர் ரஜினிகாந்த், கேஎஸ் ரவிகுமார், வைரமுத்து உள்ளிட்ட பல பிரபலங்கள் கலந்துகொண்டனர்.

இதில் நடிகர் கமல்ஹாசனுடன், பூஜாகுமாரும் பங்கேற்றார். அப்போது கமல் மற்றும் ரஜினியுடன் அவர் எடுத்துக்கொண்ட போட்டோக்கள் வைரலானது. அந்த புகைப்படத்தை தனது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்திருந்த பூஜா, நான் மிக அதிர்ஷடசாலி, இந்திய சினிமா இரண்டு லெஜன்டுகளிடம் இருந்து கற்றுகொள்ள வேண்டும் என கமல் மற்றும் ரஜினியுடன் எடுத்த படத்துடன் குறிப்பிட்டிருந்தார். 


இவ்வளவு காலமாக உழைத்து இன்னும் வலுவாக இருப்பது உண்மையிலேயே ஒரு குறிப்பிடத்தக்க சாதனை என்றும் அவர் கூறி இருந்தார். இதேபோல் கமல் பிறந்தநாளை முன்னிட்டு சத்தியம் சினிமாவில் வெளியிடப்பட்ட ஹேராம் படத்தின் சிறப்பு காட்சி தொடர்பான நிகழ்ச்சியிலும் கமலுடன் ஜோடியாக பங்கேற்றார் பூஜா குமார்.

பூஜாகுமாரும், கமலும் இணைந்திருக்கும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. ஏற்கனவே கவுதமியுடன், கமல் சேர்ந்து வாழ்ந்து வந்தார். அவர்கள் இருவரும் சேர்ந்து பாபநாசம் படத்திலும் நடித்தனர்.

twitter

ஆனால் விஸ்வரூபம் 2 படத்தின் போது ஏற்பட்ட மனக்கசப்பால் இருவரும் பிரிந்து விட்டனர். இந்நிலையில் பூஜா குமார் உடன் கமல் ஒன்றாக ஊர் சுற்றுவதாக பல்வேறு விமர்சனங்கள் எழுந்தது. இந்நிலையில் இந்த சர்ச்சைகள் குறித்து செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய பூஜா(pooja) , கடந்த 5 வருடமாக நான் கமலுடன் பணியாற்றி வருகிறேன். 

கமல் மிகச் சிறந்த நடிகர் மட்டுமல்ல, எல்லாவற்றிலும் மற்றவர்களுக்கு ஒரு உதாரணமான மனிதர். அவரை போன்ற ஒரு சிறந்த படைப்பாளி யாரும் இருக்க முடியாது, அவர் ஒரு மேஜிக் மேன். கமலுக்கு இறைவன் நம்பிக்கை இல்லை என்றாலும் அவரிடம் தொழில் பக்தி நிறைந்திருக்கிறது. 

எந்த ஒரு சின்ன விஷயத்தையும் அதிக கவனத்துடன் கையாள்வார். அரசியல், சினிமா, டிவி ஷோ இப்படி ஒரே சமயத்துல பெரிய விஷயங்களில் இறங்கி எல்லாத்துலயும் திறமையுடன் கையாள்வது சாதாரண விஷயம் அல்ல.

twitter

எனக்கு கமல் சாரை பார்க்கும் போது ஆச்சரியமாக உள்ளது. எனக்கு எப்படி பொறுமையாக இருக்க வேண்டும் என்பதை கற்றுக்கொடுத்ததே அவர் தான். எந்த ஒரு விஷயத்திலும் அவரது அணுகுமுறை மிகச் சிறப்பாக இருக்கும் என கூறியுள்ளார். 

மேலும் ராஜ் கமல் நிறுவனம் எனக்கு சென்னையில் இன்னொரு தாய் வீடு போல என தெரிவித்த அவர், சினிமா மேல கமல் சாருக்கு மிகப் பெரிய காதல். எதைப் பத்தியும் பயப்படாம ரிஸ்க் எடுப்பார் என கமல்ஹாசனை புகழ்ந்து தள்ளியிருக்கிறார். 

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!