என் காதல் பயணம்.. சாக்லேட் பாய் மேடி சொல்லும் காலம் தோறும் கசக்காத காதல் சீக்ரட்!

என் காதல் பயணம்.. சாக்லேட் பாய் மேடி சொல்லும் காலம் தோறும் கசக்காத காதல் சீக்ரட்!

மேடி ... அலைபாயுதேவில் குளிர்கண்ணாடி அணிந்து என்றென்றும் புன்னகை மூலம் நம் மனதை இன்றும் அள்ளிக் கொண்டு செல்பவர் மேடி (maddy) என்று நாம் அனைவரும் செல்லமாக அழைக்கும் நடிகர் மாதவன்.

முதல் முதலில் மேடி நடித்த ஃபேர் அண்ட் லவ்லி விளம்பரம் முதலே நான் அவருக்கு ரசிகை. ஆனால் சிலகாலம் சரியான கதை தேர்வில்லாமல் மேடியின் படங்கள் தோல்வியுற்றன. கூடவே வித்யாசமான சிகை அலங்காரம் வேறு நமது இன்னசென்ட் மேடியை டெர்ரர் பாய் லுக்கில் வைத்திருக்கவே நான் கொஞ்சம் அப்பீட் ஆனேன்.

அதன் பின்னர் வெளியான இறுதி சுற்று மேடியின் திரை உலக வாழ்க்கைக்கே இரண்டாவது சுற்றாக அமைந்தது. அந்த திரைப்படத்தின் வெற்றியால் மேடியை மீண்டும் திரையில் அடிக்கடி காணும் வாய்ப்பை பெற்றோம்.

அப்படியே அம்மா எமி ஜாக்சனை உரித்து வைத்திருக்கும் மகன் ஆண்ட்ரியாஸ் ! வைரல் புகைப்படம்!

Youtube

மாதவன் நடிப்பில் வெளியான விக்ரம் வேதா திரைப்படமும் அனைவராலும் பாராட்டப்படவே மாதவன் ரசிகர்கள் மீண்டும் கிளம்பியிருக்கிறார்கள். இதில் அனைவர் மனதையும் ஒரே நேரத்தில் கொள்ளை கொண்ட அலைபாயுதே நாயகன் மாதவனுக்கு திரைத்துறைக்கு வருவதற்கு முன்னதாகவே திருமணம் ஆகிவிட்டது என்பது தான் பெண் ரசிகர்களுக்கான சோக செய்தி.

அலைபாயுதே படமும் அவரது திருமணமும் கிட்டத்தட்ட ஒரே ஆண்டில் நடைபெற்றது. 1999ம் ஆண்டு மாதவனுக்கு அவரது காதலி சரிதாவிற்கும் திருமணம் நடந்தது. 20 ஆண்டு திருமண வாழ்க்கை நிறைவினை ஒட்டி தன்னுடைய வெற்றிகரமான திருமண வாழ்வு குறித்து பேசி இருக்கிறார் மாதவன்.

20 ஆண்டு காலமாக சினிமாவிலும் எந்த சர்ச்சையில் சிக்காதவர் மேடி. ஒருமுறை நடிகை சதாவுடன் இவரது பெயர் பேசப்பட்டது. ஆனால் அதன் தடயம் கூட சில நாட்களில் இல்லாமல் போகும்படி செய்து விட்டார் மேடி.
இப்படி சினிமா வாழ்வில் எந்த சர்ச்சையிலும் சிக்காமல் இருக்க தன்னுடைய குடும்ப வாழ்க்கையே காரணம் என்று கூறி இருக்கிறார் மாதவன்.

நடிகர் ரியோ ராஜ் மனைவி ஸ்ருதிக்கு வளைகாப்பு : இன்ப அதிர்ச்சி கொடுத்த சிவகார்த்திகேயன்!

Youtube

எந்த ஒரு சூழ்நிலையிலும் எனது மனைவி என் மீது வைத்திருக்கும் நம்பிக்கை குறைந்து விட கூடாது என்று நான் நினைக்கிறேன். அதனால் நான் வெளியே செல்லும்போதும் அல்லது படப்பிடிப்புகளில் இருக்கும்போதும் என்னுடைய மொபைல் போனை சரிதாவிடம் கொடுத்து விட்டுத்தான் செல்வேன்.

எனக்கு என்ன தேவை என்பதை பார்த்து பார்த்து செய்பவர் என் மனைவி சரிதா. குடும்ப நிர்வாகம் நிதி நிர்வாகம் விடுமுறை கொண்டாட்டம் என எதுவாக இருந்தாலும் என்னுடைய மனைவி சரியாக திட்டமிடுவார். ஆகவேதான் இந்த 20 வருட திருமண பந்தம் இன்னும் மகிழ்ச்சி குறையாமல் சென்று கொண்டிருக்கிறது என்கிறார் மாதவன்.

அப்பா நடிக்கறதை நிறுத்தணும்னு அம்மா ப்ரே பண்ணுவாங்க..விக்ரம் மகன் த்ருவ் வெளியிட்ட ரகசியம்                                                 

Youtube

இந்த தம்பதிக்கு ஒரு ஆண் மகன் இருக்கிறார். அவர் தற்போது சமீபத்தில் தான் இன்டர்நேஷனல் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கம் வாங்கி கொடுத்தார் என்பதும் அதனை மேடி தன்னுடைய சமூக வலைதள பக்கத்தில் பெருமையுடன் பகிர்ந்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எல்லோரையும் அழகால் வசீகரித்த நம் மேடி மனைவியை நேசிக்கும் விதத்தில் தன்னுடைய நேர்மையின் மூலம் மேலும் நம் மனதில் ஆழமாக இடம்பிடிக்கிறார் என்றுதான் சொல்ல வேண்டும்.                                                                                                      

Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!