உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர சில குறிப்புகள்!

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர சில குறிப்புகள்!

மகிழ்ச்சி! பலரும் இன்று தங்கள் வாழ்க்கையில் மறந்து வருகின்ற ஒரு அற்புதம்! ஆனால், இது இல்லையென்றால், வாழ்க்கை என்னவாகும்?இதற்கு அவரவர் வாழ்க்கையே விளக்கம் கூறும்!

மகிழ்ச்சி இல்லாத வாழ்க்கையில், ஒன்றன் பின் ஒன்றாக பல இன்னல்கள் வரத் தொடங்கும். எனினும், இன்றைய விரைவாக ஓடிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில், குடும்பதினர்கலோடும், உறவினர்களோடும், நண்பர்களோடும் நேரத்தை செலவிட்டு, மகிழ்ச்சியாக (happiness) இருக்க எங்கு நேரம் உள்ளது, என்பது தான் பலரின் கேள்வியாக உள்ளது. ஆனால், ஒரு அழகான நேரத்தை உருவாக்க உங்களுக்கு நேரம் இல்லாமல் போனால், உங்கள் பொன்னான நேரத்தை மருத்துவமனையில் செலவிட நேர்ந்து விடலாம். அதனால், நீங்கள் உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியோடு வைத்துக் கொள்ள எதாவது முயற்சிகளை எடுக்கத் தான் வேண்டும்.

உங்கள் வாழ்க்கையில் மகிழ்ச்சியை கொண்டு வர, உங்களுக்காக சில எளிய குறிப்புகள்(ways) . முயற்சி செய்து தான் பாருங்களேன்!

1. உங்களை புன்னகைக்க வைப்பவருடன் அதிக நேரம் செலவிடுங்கள்

Pexels

நீங்கள் எத்தனையோ பேரை தினமும் கடந்து கொண்டிருப்பீர்கள். அதில் ஒரு சிலர் உங்களுடன் தொடர்ந்து உங்கள் வாழ்க்கையில் பயணித்துக் கொண்டு வருவார்கள். அது குடும்பத்தினராக இருக்கலாம், உங்கள் நண்பராக இருக்கலாம், உங்கள் பக்கத்து வீட்டுக்காரராக இருக்கலாம், அல்லது உங்களுடன் வேலை பார்க்கும் ஊழியராகவும் இருக்கலாம். அப்படி நீங்கள் தினமும் உங்களுடன் பயணித்துக் கொண்டிருக்கும் பலருள் ஒருவர் நிச்சயம் உங்கள் மனதிற்கு மகிழ்ச்சி தரும் வகையில் ஒரு நல்ல உறவில் இருப்பார். அப்படி யாராவது உங்கள் வாழ்க்கையில் (life) இருந்தால், அவருடன் அதிக நேரத்தை செலவிடுங்கள்.

2. பிறருக்காக போலியான வேடம் போட வேண்டாம்

ஒன்றை நாம் எப்போதும் புரிந்து கொள்ள வேண்டும். இந்த உலகில் நாம் காணும் மற்றும் நம் வாழ்க்கையில் வரும் அனைவரையும் நாம் மகிழ்ச்சிபடுத்தி, அவர்களுக்கு பிடித்த மாதிரி எப்போது இருக்க முடியாது. அப்படி இருக்க வேண்டும் என்றால், நாம் அனைவருடனும் நடிக்கத் தான் வேண்டும். இந்த வேடம் போடும் வேலை நிச்சயம் உங்கள் நிம்மதியை எடுத்து விடும். அதனால், நீங்கள் நீங்களாகவே இருங்கள். யாருக்காகவும் வேடம் போட்டு வாழ வேண்டாம்.

3. நாமே காரணம்

Pexels

தீதும் நன்றும் பிறர் தர வாரா! இந்த கூற்றுக்கு ஏற்றவாறு, இந்த உலகத்தில் எந்த காரணமும் இன்றி எதிர்வினை நடப்பதில்லை. அதனால், உங்களுக்கான மகிழ்ச்சியும், நிம்மதியும் உங்கள் கையிலேயே உள்ளது. படகில் ஓட்டை இருந்தால் மட்டும் தான், நீர் உள்ளே புக முடியும். இதனை கருத்தில் கொண்டு, எந்த ஒரு பிரச்சனையும் அல்லது எந்த ஒரு பிற மனிதரும் உங்கள் வாழ்க்கைக்குள் வந்து உங்கள் பாதிக்கும் வகையில் இடம் கொடுக்காதீர்கள்.

4. உள்ளதை ஏற்றுக் கொள்ளுங்கள்

இந்த உலகத்தில் மனிதர்கள் அனைவரும் நினைப்பது அனைத்தும் நடந்து விடுவதில்லை. அப்படி நடந்தால், தற்போது நாம் பயங்கரமான வாழ்க்கை என்று நினைத்துக் கொண்டிருக்கும் இந்த வாழ்க்கை மிகக் கொடூரமானதாக ஆகி விடலாம். அதனால், நடப்பது அனைத்தும் இந்த பூமியில் ஒரு காரண காரியத்தோடு தான் நடகின்றது என்பதை புரிந்து கொண்டு, நீங்கள் எதிர் பார்த்தது நடக்கவில்லை என்றால், அதனை நினைத்து வருத்தப்படாமல், வருவதை ஏற்றுக் கொண்டு, உள்ளதை புரிந்து கொண்டு உங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக தொடருங்கள்.

5. நல்லதையே நினையுங்கள்

Pexels

உங்கள் நேர்மறை எண்ணங்கள் மட்டுமே உங்களுக்கு நல்ல சக்தியை அதிகரித்து, உங்கள் வாழ்க்கை ஒரு மகிழ்ச்சியான மற்றும் வெற்றி நிறைந்த பாதையை நோக்கி போக வைக்க முடியும். அதனால், ஒரு வேளை உங்களுக்கு தொடர்ந்து தோல்விகளும், ஏமாற்றங்களும் நடந்தாலும், இவை அனைத்தும், நீங்கள் விரைவில் வெற்றிப் பெறுவதற்கே நடக்கின்றது என்று நம்பி, நேர்மறை எண்ணங்களோடு உங்கள் வாழ்க்கையைத் தொடருங்கள். மகிழ்ச்சி நிச்சயம் உண்டாகும்.

6. உங்களுக்கு பிடித்ததை செய்யுங்கள்

இந்த உலகத்தில் ஒருவர் எதை செய்தாலும், அதற்கு ஒரு விமர்சனம் வந்து கொண்டே தான் இருக்கும். ஆனால், அவற்றைப் பற்றியெல்லாம் நீங்கள் கவலைப் படாமல், உங்களுக்கு பிடத்த விடயங்களை செய்யுங்கள். எனினும், நீங்கள் செய்யும் விடயம், பிறருக்கு இடையூறாக இருக்கக் கூடாது. மேலும் நீங்கள் மற்றவர்கள் என்ன கூறுவார்கள் என்று கவலைப் படாமல், நீங்கள் செய்வது சரி என்றால், அதனால் யாருக்கும் எந்த தீங்கும் வராது என்றால், உங்களுக்கு பிடித்ததை செய்வதில் தவறு இல்லை. மேலும் இது உங்களுக்கு மகிழ்ச்சியை நிச்சயம் தரும்.

 

மேலும் படிக்க - வேலைக்கு செல்லும் பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

பட ஆதாரம்  - Instagram

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!