வேலைக்கு செல்லும் பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

வேலைக்கு செல்லும் பெண்களின் மன அழுத்தத்தை குறைக்க பின்பற்ற வேண்டிய சிம்பிள் டிப்ஸ்!

மன அழுத்தம் (stress) என்பது வயது வித்தியாசம் இல்லாமல் ஆண் மற்றும் பெண் என இரு பாலினத்திற்கு பொருந்தக்கூடிய ஒரே அளவிலானவை கிடையாது. ஆண்களை விட பெண்களுக்கு அதிக மன அழுத்தம் ஏற்படுகிறது. குறிப்பாக வேலைக்கு செல்லும் பெண்களுக்கு. இன்றைய காலக்கட்டத்தில் வேலை ஒதுக்கப்பட்ட பின் தங்களின் மூத்த பணியாளர்கள் மற்றும் மேலாளர்களை திருப்திப்படுத்தும் முயற்சியில் பலருக்கும் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் நம் இலக்கை அடைய முடியாத நேரத்தில் தான் பெரும்பாலும் மன அழுத்தம் ஏற்படுகிறது. இதனை தவிக்க சில டிப்ஸ்களை பின் பற்றுங்கள்!

pixabay

 • காலையில் வழக்கத்தை விட பதினைந்து நிமிடங்கள் முன்னதாகவே எழுந்து விடவும். இதனால் உங்களது அன்றாட பணிகளை எவ்வித பதற்றமும் இன்றி பொறுமையாக செய்யலாம். 
 • புத்தகம் படிப்பது மனதை சுகமாக்கும். தேவையற்ற மன அழுத்தத்தை குறைக்கும். தினமும் ஏதாவது ஒன்றை வசிக்கும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்ளுங்கள். 
 • எங்கேயாவது செல்ல வேண்டியிருந்தால் அதற்குரிய ஆடைகள், பொருட்களை முன்கூட்டியே எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். என்னென்ன தேவை எனபதை குறித்து வைத்து கொண்டு எடுத்து வைப்பதால் கடைசி நேர பதற்றங்கள் குறையும். 

மழைக்கால நோய்களை தடுப்பது எப்படி : அறிகுறிகள் மற்றும் தடுக்கும் முறைகள்!

 • ஒரு காகிதத்தில் அன்றைய தினம் செய்ய வேண்டிய பணிகளையும், எப்போது செய்யப் போகிறோம் என்பதையும் குறித்து வையுங்கள். இவ்வாறு திட்டமிட்டு கொள்வதால் எளிதில் பணிகளை முடிக்க ஏதுவாக இருக்கும்.
pixabay

 • வேலைகளை தள்ளி வைப்பது மன அழுத்தத்தை அதிகரிக்கும். செய்ய வேண்டியதை தாமதப்படுத்தாமல் செய்யுங்கள். முன்கூட்டியே திட்டமிடுங்கள். எதையும் கடைசி நேரம் வரை காத்திருந்தபின் செய்வதை தவிர்க்க முயலுங்கள். 
 • காபி அதிகம் குடிப்பதை தவிருங்கள். சில மாற்று பழக்கங்களை கைவசம் வைத்திருங்கள்.
 • அலுவலகத்திற்கு செல்லும் போது சற்று முன்கூட்டியே செல்ல பழக்கப்படுங்கள். பத்து நிமிடத்தில் செல்ல முடிந்த இடத்துக்கு இருபது நிமிடத்திற்கு முன்பாகவே புறப்படுங்கள்.
 • சில மாற்று யோசனைகளைக் கைவசம் வைத்திருங்கள். உதாரணமாக பஸ் தாமதமானால் இதைச் செய்வேன்? என்பது போன்றவை.
pixabay

 • தவறாய் போன ஒரு விஷயத்தைக் குறித்து சிந்தித்துக் கொண்டே இருப்பதை விட, சரியாய் நிகழ்ந்த பலவற்றைக் குறித்து அடிக்கடி நினைத்து மகிழுங்கள். தவறு நடந்துவிட்டதே என்று வருந்தாமல் அதனை சரி செய்யவும், மீண்டும் அந்த தவறு நடைபெறாமல் இருக்கவும் திட்டமிடுங்கள். 
 • செல்லும் இடங்கள் புதிய இடங்களாக இருந்தால் வழியை முதலிலேயே தெளிவாகக் கேட்டு வைத்துக் கொள்ளுங்கள். செல்லும் நேரத்தில் புதிய இடங்கள் குறித்து தெரிந்து கொள்ள முயற்சித்தால் நேரம் வீணாகும். இதனால் கடைசி நேர பதற்றம் ஏற்பட வாய்ப்புள்ளது. 

உங்கள் சருமத்திற்கு ஏற்ற சன் ஸ்கிரீன் லோஷனை தேர்ந்தெடுப்பதற்கான முழுமையான வழிகாட்டி !

 • நன்றாக தூங்குங்கள். முடிந்தால் அலாரம் வைத்து தூங்குங்கள். தடையற்ற தூக்கத்துக்கு அது உதவும். 
 • ஒய்வு எடுக்கும் போது சற்று நேரம் கைப்பேசியை அணைத்து விடுங்கள். ஓய்வு எடுங்கள் எந்த தொந்தரவும் இன்றி இருங்கள். அப்போது தான் மனம் இலகுவாகும்.
pixabay

 • உணவு, உடை, உறைவிடம் தவிர்த்த எதுவும் உங்களை மன இறுக்கம் கொள்ளச் செய்யாமல் பார்த்துக் கொள்ளுங்கள். முன்னுரிமை எதற்குக் கொடுக்க வேண்டும் என்பதில் தெளிவாக இருந்தாலே பாதி மன அழுத்தம் (stress) குறைந்து விடும். 
 • தினசரி காலையில் யோகா செய்வது மன அழுத்தத்தை பெருமளவு குறைக்க வழிவகை செய்யும். யோகாசனம், பத்மாசனம் போன்ற பயிற்சி செய்வதால் உடம்பிலுள்ள தசைகள் நன்கு விரிவடைந்து ஒய்வு பெரும். இதனால் மன அழுத்தம் கண்டிப்பாக குறையும். யோகா செய்வதால் உடம்பு விரிவடையும் பொழுது மனமானது சாந்தமாகிறது.
 • மன அழுத்தம் (stress) அடையும் நேரத்தில் முதலில் செய்ய வேண்டியது நல்ல இசையை கேட்டு மகிழ்வதே. இசை நம் மனதுக்கு இதமானதாக இருக்கும். மேலும் நமக்கிருக்கும் துன்பங்களை மறக்கச் செய்யும். எனவே துன்பம் தரும் விஷயங்களால் ஏற்படும் மன அழுத்தத்தை குறைக்க இசை பெரிதும் உதவி புரிகிறது.
pixabay

 • மன அழுத்தத்தை (stress) குறைக்க தோட்டக்கலையில் ஈடுபடலாம். இதன் சிறப்பம்சம் யாதெனில் இயற்கைக்கு மிக அருகில் நாம் செல்வது போன்ற உணர்வை தோட்டக்கலை நமக்கு கொடுக்கும். திறந்த வெளிக்குசென்று செடிகள் நட்டு, அவற்றிற்கு தண்ணீர் ஊற்றி, பூக்கள் மற்றும் கனிகளை நாம் பார்த்தால் மனதுக்குள் மகிழ்ச்சி உண்டாகும். மேலும் மனமும் இயற்கையாகவே அமைதியடையும்.
 • இங்கே கொடுக்கப்பட்டுள்ள டிப்ஸ்களை பின்பற்றி மன அழுத்தத்தை குறைத்து மகிழ்ச்சியாக இருங்கள். அவரவர் விருப்பத்திற்கு ஏற்ப எழுதுவது, பாடுவது, நடனம் ஆடுவது உள்ளிட்ட விஷயங்களில் ஈடுபடலாம்.

குளிர்கால தலைமுடி பராமரிப்பு டிப்ஸ் மற்றும் மூலிகை எண்ணெய் தயாரிக்கும் விதம்!

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!

மகிழ்ச்சியான செய்தி! அழகான வண்ணமயமான பொருள்களை விரும்புகிறவரா? ஒரு சின்ன உற்சாக தேடலை தொடருங்கள்! அழகான மக், மொபைல் கவர்கள், குஷன் வகைகள், லேப்டாப் ஸ்லீவ்கள் இன்னும் அதிகமான சுவாரஸ்யமான பொருட்கள் Popxo shopல் உங்களைக் கவரக் காத்திருக்கின்றன.