ஆண்களுக்கு இவ்வகை பெண்களைத்தான் மிகவும் பிடிக்குமாம் ! இதை கவனியுங்கள் பெண்களே!

ஆண்களுக்கு இவ்வகை பெண்களைத்தான் மிகவும் பிடிக்குமாம் ! இதை கவனியுங்கள் பெண்களே!

பெண்கள் சிந்திப்பதும், ஆண்கள் சிந்திப்பதும் வேறு வேறு என்றாலும், இருவருமே விரும்பவும், விரும்பப்படவும் ஆசைப்படுகிறார்கள். ஒவ்வொரு ஆணும் ஸ்பெஷல். ஒவ்வொரு ஆணுக்கும் தனி விதமாக (வகை) பெண்களைப் பிடிக்கும். பொதுவாக எப்படிப்பட்ட குணங்களை ஆண்கள் ரசிக்கிறார்கள் என்று பார்க்கலாம்.

1. அம்மாவைப் போன்ற பெண்கள்

இது பெரும்பாலான ஆண்கள் (men) விரும்புவது. அவருடைய அம்மாவைப்போன்றே கவனித்துக் கொள்ள வேண்டும் என்று நினைக்கும் ஆண்கள் அதிகம்.

2. ஆச்சர்யப்பட வைக்கும் பெண்கள்

ஆண்களுக்கு, இப்படிக் கூட விஷயங்களை கையாள முடியுமா என்று ஆச்சர்ய பட வைக்கும்  பெண்களையும் பிடிக்கும்.

3. தன்மீது அக்கறை கொண்ட பெண்

தன்மீது அக்கறை கொண்டு, அழகாக அலங்கரித்துக்கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும். அப்போதுதான் குடும்பத்தையும் அதே அக்கறையோடு பார்த்துக் கொள்ளுவாள் என்று எண்ணுவார்கள்.கடுகடு என்று இல்லாமல் அன்பாகவும், மற்றவர்கள் மீது பொதுவாக அக்கறையாகவும் உள்ள பெண்களையும் (women) ஆண்களுக்கு மிகவும் பிடிக்கும்.

4. புத்திசாலியான பெண்கள்

தங்கள் புத்திசாலித்தனத்தை வெளிப்படுத்தினால் ஆண்களுக்கு பிடிக்காது என்று நிறைய பெண்கள் நினைப்பதுண்டு. ஆண்களுக்கு எதையும் எளிதில் புரிந்துகொண்டு சமயோசிதமாக நடந்துகொள்ளும் பெண்களைத்தான் பிடிக்கும் (like).

5. ஜாலியாக உள்ள பெண்கள்

எப்போதும் துரு துருவென சுற்றித் திரியும், எதையும் எளிதாக எடுத்துக்கொள்ளும் சுபாவம் கொண்ட பெண்களை ஆண்களுக்கு மட்டுமா, அனைவருக்குமே பிடிக்கும்! மேலும் , எப்போதும் ஆண்களிடம் எதிர்காலத்தைப் பற்றி சீரியஸாக பேசிக்கொண்டிருக்காமல் , விளையாட்டுத்தனமாக, தளர்ந்து இருக்கும் பெண்களுடன் நேரத்தை கடக்க ஆண்கள் விரும்புவார்கள்.

6. மர்மமான பெண்கள்

சில ஆண்களுக்கு மர்மான பெண்களின் குணம் பிடிக்கும். அடுத்து  என்ன செய்யப்போகிறாள் என்ற தெளிவில்லாமல் வருவதை புதிதாக எதிர்கொள்ள பிடிக்கும்.

7. விளையாட்டுப் பெண்கள்

ஆண், பெண் என இருபாலரும் விளையாடும் விளையாட்டில் கைதேர்ந்த பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும். சில ஆண்கள் வீடியோ கேம்ஸில் அடிமையாகி இருப்பார்கள். அவர்களை எளிதில் கவரும் பெண்களும் அது போன்ற விளையாட்டில் ஈடுபட்டால், அது அவர்களை இன்னும் ஈர்த்து விடும்!

8. தனித்துவமாக விளங்கும் பெண்கள்

யாரையும் சார்ந்து இல்லாமல், தனக்கென ஒரு இலக்கை கொண்டு, தன் முடிவுகளை தானே எடுக்கும் மனோதைரியம் உள்ள பெண்களை ஆண்கள் ரசிப்பார்கள்.

9. எப்போதும் சிரித்துக்கொண்டே இருக்கும் பெண்கள்

கலகலவென சிரிக்கத் தேவை இல்லை. எப்போதும் மலர்ந்த முகத்துடன் உள்ள பெண்களை ஆண்கள் விரும்புவார்கள். அது பெண்களை மற்றும் கவர்ச்சியாக காண்பிக்காது, ஆண்களுக்கும் தங்களைப் பற்றி ஒரு நல்ல உணர்வைத் தரும்.

10. சமையல் தெரிந்த பெண்கள்

இது ஒரு பழைமை பேச்சு என்று நினைக்காதீர்கள். அக்கறையோடு, ஆண்களுக்கு பிடித்த உணவை ருசியாக சமைக்கத் தெரிந்த பெண்களை ஆண்களுக்கு உண்மையில் பிடிக்கும். இது ஒரு எளிமையான வழி.

11. நீளமான கூந்தல் உள்ள பெண்கள்

இன்றை கால கட்டத்தில் பாப் கட் மற்றும் பல ட்ரெண்டி ஹேர்ஸ்டைல் இருந்தாலும், இளமையாக இருப்பதாக உணர்த்தும் நீண்ட கூந்தல் வைத்திருக்கும் பெண்களை ஆண்களுக்கு பிடிக்கும்.

12. ட்ரெண்டி பேஷன் பெண்கள்

நன்றாக உடை அணிந்து அழகாக தோன்றும் பெண்களையே ஆண்கள் விரும்புகிறார்கள். மிக்ஸ் அண்ட் மேட்ச், வித்யாசமான லூசான உடை அணிவதை தவிர்த்து, உங்கள் உடல் வாகிற்கு அமைப்பாகத் தோன்றும் உடையை அணிந்து அசத்துங்கள்.

13. உண்மையான பெண்கள்

தங்களிடம் எப்போதும் உண்மையைப் பேசும் பெண்களையும், இயற்கையாக நடந்து கொள்ளும் பெண்களையும் ஆண்கள் மிகவும் நேசிப்பார்கள்.

14. தைரியமான பெண்கள்

தன் மனதில் இருப்பதை பேசத் தயங்காத பெண்களை ஆண்கள் நேசிப்பார்கள். அவர்களுக்கு எந்த சிரமும் இல்லாமல் எளிதாக புரிந்துவிடும் பெண்ணாக இருந்தால் சந்தோஷப்படுவார்கள்.

15. அழுவதற்கு தோள் கொடுக்கும் பெண்கள்

ஆண்களுக்கும் உணர்வுகள் சில சமயம் பொங்கி வழியும். அப்போது அவர்களை கிண்டல் செய்யாமல் தோள் கொடுக்கும் பெண்களை ஆண்களுக்கு ரொம்ப பிடிக்கும்.

16. ஒப்பனை செய்யாத பெண்கள்

முகத்திற்கு ஏற்ற சரியான, அளவான மேக்கப் போட்டால் போதும். மிகவும் அதிகமாக ஒப்பனை செய்து, செயற்கை நகங்கள், செயற்கை இமைகள் போன்றவை ஆண்களுக்கு அருவருப்பைத் தரும். இயற்கையான அழகுதான் ஆண்கள் விரும்புவது.

17. நம்பிக்கையான பெண்கள்

புது இடங்களில், புதிய நபர்களிடம் நம்பிக்கையுடன் விளங்கும் பெண்களை, தங்கள் உணர்வுகளை கட்டுக்குள் வைத்திருக்கும் பெண்களை பார்த்து ஆண்கள் மயங்கி விடுவார்கள்.

18. பொறுப்பான பெண்கள்

தன் பொருட்கள் மீதும், தான் செய்யும்  வேலையிலும் கவனமாக, பொறுப்பாக நடந்து கொள்ளும் பெண்களை ஆண்களுக்கு  மிகவும் பிடிக்கும்.

நம்புகிறீர்களோ இல்லையோ பல நேரங்களில், பெண்கள் எந்த சிரமமும் இல்லாமல் ஆண்களை வளைத்துப் போட்டு விடுவார்கள். அது இயற்கை தானே! இருவருக்கும் தெரியாமலேயே நடக்கும் ஒரு விஷயம்! ஆனால், எளிமையாக, உறுதியாக இருக்கும் பெண்களே அனைவரின் முதல் சாய்ஸாக இருப்பார்கள் என்றதை நினைவில் வைத்துக்கொள்ளுங்கள்!

 

மேலும் படிக்க - அற்புதமான ஜோடிகளாக நிகழும் 8 பொருத்தமான ராசி ஜோடிகள் இவைதான்!

மேலும் படிக்க - ஆண்கள் பெண்களில் கவனிக்கும் முதல் விஷயம் இவைதானா?! தெரிந்து கொள்ளுங்கள் !

பட ஆதாரம்  - Youtube

POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு , மராத்தி மற்றும் பெங்காலி!

அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன் பெறுங்கள். விழாக்கால கொண்டாடத்திற்காக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshop ல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!