பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் வெற்றியாளர் என்று அனைவராலும் கணிக்கப்பட்ட தர்ஷன் (tharshan) கடந்த வாரம் திடீரென வெளியேற்றப்பட்டிருக்கிறார். அதற்கு காரணம் அவருக்கு மக்கள் வாக்கு குறைவாகக் கிடைத்ததுதான் என்பது டிவி சார்பாக சொல்லப்பட்ட விஷயமாக இருந்தது.
இந்த விஷயத்தை ஓட்டு போட்ட மக்களே எதிர்பார்க்கவில்லை. அதனால் பல பார்வையாளர்கள் கண்ணீர் சிந்தினர். பிரேமில் மட்டு மல்லாமல் நிஜத்திலும் குணத்திலும் அழகான தர்ஷனை பிக் பாஸ் வீட்டை விட்டு தோல்வியாளராக அனுப்ப மக்களுக்கு மனமில்லை.
மேடை யெங்கும் தர்ஷன் தர்ஷன் என்கிற கூக்குரல் ஒலித்தபடி இருந்தது. இது ஓட்டை அடிப்படையாக கொண்டு செய்யப்பட்ட வெளியேற்றம் அல்ல.. டிவி TRBயை அதிகரித்த லாஸ்லியா கவினுக்கு நன்றி செலுத்த நிர்வாகம் செய்த சதி என்றே மக்கள் இணையத்தில் பேசி வந்தனர்.
ஆனால் உண்மையில் வேறொரு விஷயம் நடந்திருப்பதாக ரசிகர் ஒருவர் ட்வீட் செய்திருக்கிறார். ஜார்ஜ் விஜய் எனப்படும் நபர் ஒரு ட்வீட் செய்திருக்கிறார். செப்டம்பர் 28ம் தேதி மாலை 5.46 மணிக்கு விஜய் டிவி நிர்வாகத்திடம் இருந்து தர்ஷன் வீட்டிற்கு போன் வந்திருக்கிறது.
At 5:46 PM today, @vijaytelevision called #Tharshan's family and informed them he's saved and asked them to bring clothes for Tharshan for finals.
— George Vijay (@VijayIsMyLife) September 28, 2019
Now they completely changed the result and he's evicted.
Who decides the winner? No longer us. But Vijay TV, in the final minute!
தர்ஷன் (tharshan) பைனலுக்கு சென்று விட்டார். உங்கள் மகன் இன்னும் ஒரு வாரம் தங்குவதற்கான உடைகளை அனுப்பி வையுங்கள் என கூறப்பட்டிருக்கிறது. அதற்கடுத்த சில மணி நேரங்களில் தர்ஷனை வெளியேற்றி இருப்பதாகவும் அந்த நபர் கூறியிருக்கிறார்.
அப்போது ஓட்டு போடுதல் என்கிற விஷயம் எதற்கு? யார் உள்ளே இருப்பது யார் வெளியே செல்வது என்பதை TRB தான் நிரூபிக்கிறது என்றால் எங்களை எதற்கு ஓட்டு போட சொல்கிறீர்கள் என தற்போது மக்கள் கேள்வி மேல் கேள்வி கேட்கின்றனர்.
இதற்கு பின்னர் இந்த நிகழ்ச்சி மீதான நம்பகத் தன்மை குறைந்து விட்டதாகவே பல பிரபலங்கள் முதல் சாமான்யர்கள் வரை பேசி வருகின்றனர். எது எப்படியோ கவின் போட்ட திட்டம் பக்காவாக பலித்து விட்டது. தன்னலம் நிறைந்த ஒரு தியாகம் கவினின் சரி செய்ய முடியாத தவறுகளை பூசி மெழுகித்தான் விட்டது.
POPxo இப்போது 6 மொழிகளில் வெளிவருகிறது! ஆங்கிலம், இந்தி, தமிழ், தெலுங்கு, மராத்தி மற்றும் பெங்காலி!
அறிமுகமாகிறது #POPxoEverydayBeauty - POPxo Shopல் 100% கெமிக்கல் இல்லாத பயனுள்ள சருமம், குளியல் மற்றும் உடல், முடி தயாரிப்புகளை வாங்கி பயன்பெறுங்கள். விழாக்கால சலுகையாக முன்கூட்டிய அனைத்து ஆர்டர்களுக்கும் 25% தள்ளுபடி வழங்கப்படுகின்றது. POPxo.com/beautyshopல் உங்களுக்கான அழகு பொருட்களை உடனே தேர்ந்தெடுத்துக் கொள்ளுங்கள்!